07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 9, 2014

இது... இமாவின் உலகம்

வலைச்சர வாசகர்களுக்கு இமாவின் அன்பான வணக்கங்கள். _()_

என் உலகம்... அழகான குட்டி உலகம்.  குடும்பம், வீடு, பாடசாலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம், 'இது இமாவின் உலகம்'.... இன்று இங்கு வந்திருகிறேன். சந்தர்ப்பம் கொடுத்த வலைச்சரத்தினர்க்கு என் நன்றிகள்.

சுருண்டது போல் வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும், நிலை இல்லாதவை. தினம் ஒரு ரசனை.

முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆவல்தான் இமாவின் உலகிற்கு அடிக்கல். எழுத ஆரம்பித்துவிட்டு... வலைப்பூ அமைப்பை, குழந்தையொன்று 'லெகோ செட்' வைத்து விளையாடுவது போல பிரித்துப் பிரித்து அடுக்கினேன். ஒரு நாள் பாதி வேலையோடு ஏதோவொரு தடங்கல். அப்படியே விட்டுவிட்டேன். பிறகு இதற்கென நேரம் ஒதுக்க இயலவேயில்லை. நாயும் கல்லும் போல நான் தட்டிச் சேமித்துள்ள என் இடுகைகளும் எங்கோ சேமிப்பிலுள்ள நானெடுத்த புகைபடங்களும். ஒன்றைக் கண்டால் மற்றது கண்ணில் படாது. :-) அப்படியே இடுகைகளும் குறைந்து போயிற்று. எப்பொதாவது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

இமாவின் உலகில் எனக்கு அதிகம் பிடித்தவை... என் ஆரம்பகால இடுகைகள். ரசித்துப் பதிவிட்டவை அவை. பெரிதாக ஏதாவது விடயம் இருக்கும் என்று நினைத்து வந்தால் ஏமாறுவீர்கள்.

உங்களுக்கும் தெரிந்திருக்கும்... உயிர்ச்சத்து சீ உடம்புக்கு நல்லது என்று. அது பழங்களில் கிடைக்கும். பழங்களை வாயால் மட்டும் சாப்பிடாமல் கண்ணாலும் சாப்பிடவேண்டும். விருந்தினர் வந்தால்தால் மேசை அலங்காரமா! உங்களுக்காகவும் ஒருமுறை அலங்கரிக்கலாம். :-) அலங்கரித்துத்தான் பாருங்களேன்.

ஒருவேளை... திராட்சைப் பழம் கிடைக்காவிட்டால்!!
கிடைக்காத பழம் புளிக்காதா!
இந்தப் படமும் புளித்தது எனக்கு, பப்பியும் திராட்சைக் குலையும் வரும் முன்னால்.  எழுத்து... சிதம்பரசக்கரத்தைப் பார்த்தது போல இருக்கிறதா!! சுஜாதா அவர்களின் 'என் இனிய இயந்திரா' படித்தவர்களுக்கு இந்த மொழி புரியும்.
இமா இப்படித்தான். யாருக்கும் புரியாத விதமாக எழுதி குழப்பி வைப்பேன். :-)

வேறு என்ன சொல்லலாம்!!!
ம்!!! நான் தினம் தினம் ரசிக்கும் வலி ஒன்று இருக்கிறது வீட்டில். இங்கே... என் வலி, அது தனி... வலி.

போதும் உலகம் சுற்றியது. படிப்பவர்கள் மேல் என் ரசனையை!! திணிக்க விரும்பவில்லை. நீங்களே நேரம் கிடைக்கும் பொழுது பிடித்ததைப் படித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இங்குள்ளதை மட்டும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

இப்போது... என் பேனாவுக்கு மை தீர்ந்து விட்டது. :-) கிளம்புகிறேன் என் தாயாரைப் பார்க்க. நீங்களும் விரும்பினால் வரலாம்.

மீண்டும் நாளைய இடுகையில் சந்திப்போம்.
இன்றைய நாள் அனைவர்க்கும் இனியதாக அமையட்டும்.

_()_

51 comments:

 1. வருக.. வருக.. இனிய பதிவுகளைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
  அன்பின் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே.

   Delete
 2. தங்களின் வலைத் தளத்தில் சில பக்கங்களைப் படித்தேன்.. அடடா..
  மிகவும் கவர்ந்தது - பப்பியும் திராட்சைக் குலையும்!..
  மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை செல்வராஜு. :-) அது ரசித்துச் செய்த வேலை. இன்னொரு வீட்டில் 100% இதே போல மேசை காணக் கிடைக்காது இல்லையா!
   கண்ணாடிதான் மெதுவாகக் கீறல் விழ ஆரம்பிக்கிறது. :(

   Delete
 3. வருக இமா.உங்களை பற்றிய அறிமுகம் சிறப்பு. தொடர்ந்துஅசத்துங்க.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குக் தெரியாத எதைச் சொல்லப் போகிறேன் ப்ரியா. :-) வருகைக்கும் ஊக்கம் கொடுப்பதற்கும் என் அன்பு நன்றிகள்.

   Delete
 4. அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள். . .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி விக்னேஷ்.

   Delete
 5. சிறந்த அறிமுகம்

  visit http://ypvn.0hna.com/

  ReplyDelete
 6. தங்களின் பதிவுகளை சென்று பார்க்கிறேன்.
  அறிமுகம் அருமை

  ReplyDelete
  Replies
  1. நேரம் கிடைக்கும் போது மறக்காமல் பாருங்கள் சொக்கன். நன்றி.

   Delete
 7. சுய அறிமுகம் அருமை இமா !! வாழ்த்துக்கள் ..தொடருங்கள்

  ReplyDelete
 8. வணக்கம்
  அம்மா

  தாங்கள் இந்தவாரம் வலைச்சர ஆசிரியராக கடமை புரிவதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. சிறப்பான வலைச்சர பணிக்கு
  இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி அக்கா. என்னால் ஆன வரை முயற்சிப்பேன். :-)

   Delete
 10. வாவ்..இமா டீச்சர் இப்ப வலைச்சர ஆசிரியரா..ஜாமாய்ங்க இமா.சிறப்பாக வலைசர ஆசிரியர் பணியை செய்ய இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. :-) வாழ்த்துக்கு என் அன்பு நன்றி ஸாதிகா.

   Delete
 11. அன்பின் இமா - சுய அறிமுகம் அருமை - தாங்கள் சுட்டிக் காட்டி இருக்கும் பதிவுகளைச் சென்று பார்த்து படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இடுகிறேன். 09.06.2014 முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று சுய அறிமுகம் செய்து தங்களீன் சிறப்பான பதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் - வாக்கும் முதலாவதாக அளீத்துள்ளேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அனைத்து உதவிகளுக்கும் நன்றி ஐயா.
   உடனுக்குடன் பதிலிடுவதுதான் இயலாமலிருக்கிறது. இருந்தாலும் பணியை ரசிக்கிறேன்.

   Delete

 12. வணக்கம்!!

  தமிழ்மணம் 2

  சிரித்திடச் செய்யும்! சிறப்புகளை நெய்யும்!
  விரித்துள பூவழகை விஞ்சும்! - பரிவுடன்
  வட்டாரப் பேச்சொலிரும்! வல்ல இமாப்பதிவைத்
  தட்டாமல் பார்ப்பேன் தழைத்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! ஜில்..லென்றிருக்கிறது. :-)
   சந்தோஷம் ஐயா.

   Delete
 13. அய்ய்ய்யய்ய்ய்யி அத்தை ..................

  இமா ரீச்சர் இப்போ உண்மையாவே வலை ரீச்சர் ஆகி இருக்காங்க ./......................ரீச்சர் உங்கள் அறிமுகம் ஜூப்பர் ...தொடருங்கள் .....நாளை இருந்து கரீகட்ட்டா அட்டனன்ஸ் போடுவேன் ../..........


  ReplyDelete
  Replies
  1. //நாளை இருந்து கரீகட்ட்டா அட்டனன்ஸ்// போடணும். ம். :-)
   நன்றி குட்டிப்பெண்ணே!

   Delete
 14. இமா அவர்களே வருக வருக...

  தொடர்ந்து அசத்துங்க...

  நல்வாழ்த்துக்கள்!


  தமிழ்மணம் 3.

  ReplyDelete
  Replies
  1. _()_ நிஜாமுதீன்.
   வாழ்த்துக்கு நன்றி. :-)

   Delete
 15. வருக, வருக. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. சுய அறிமுகம் நன்று...

  மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. //மேலும் அசத்த// இமாவின் உலகத்தை மெதுவாகவாவது சுழலவைக்கத்தான் வேண்டும் தனபாலன். பார்க்கலாம்.
   வாழ்த்துக்கு என் அன்பு நன்றிகள்.

   Delete
 17. டீச்சருக்கு வாழ்த்துக்கள் வலைச்சரபணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. :-) அக்காளைக் காணோமே நேசன்!!
   மிக்க நன்றி.

   Delete
 18. வணக்கம்சொந்தமே பாராட்டுக்கள் உங்களுக்காய்

  ReplyDelete
  Replies
  1. _()_ அதிசயா. மிக்க நன்றி. :-)

   Delete
 19. ஐ இமா க்கா வா , சூப்பர் கலக்குங்கோ ஓ , பாசசாலை ஆசிரியர் இப்ப வலைசர ஆசிரியர்....
  வாழ்த்துக்கள் இமா அக்கா

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி ஜலீ. :-)

   Delete
 20. சுய அறிமுகம் நன்று..... தொடரட்டும் அறிமுகங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி வெங்கட்.

   Delete
 21. அருமை. தொடருங்கள். என் தளம்:http://newsigaram.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாரதி. தொடருகிறேன்... உங்கள் வலைப்பூவை.

   Delete
 22. நல்வாழ்த்துக்கள் இமா.தொடர்ந்து அசத்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆசியாவுக்கு என் அன்பு நன்றிகள்.

   Delete
 23. இந்த வார ஆசிரியர் இமாவா ! இந்த அதிசயமெல்லாம் எப்போ நடந்துச்சு ! உங்கள் பாணியிலேயான சுய‌ அறிமுகம் நன்று.

  பிஸியோ பிஸி. இன்னும் இரண்டுமூன்று நாட்களில் நீங்கள் எழுதியுள்ள பதிவுகளையெல்லாம் ஒன்று விடாமல் படித்துவிடுகிறேன்.

  அசல் ஆசிரியரின் கூடுதலான தற்காலிக ஆசிரியப் பணியும் சிறக்க (இந்நேரம் சிறப்படைந்திருக்கும்) வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
  Replies
  1. //இந்த அதிசயமெல்லாம் எப்போ நடந்துச்சு !// எனக்கே தெரியல சித்ரா! ;))
   //ஒன்று விடாமல் படித்துவிடுகிறேன்.// ம்.. வாங்க, வாங்க.
   நன்றி சித்ரா.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது