07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 8, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  சுப.சம்பந்தம்    - இவரது  வலைத்தளம்   : உண்மையானவன் . ( http://www.unmaiyanavan.blogspot.co.uk ) - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
இவர் எழுதிய பதிவுகள்                         : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள்             : 072
அறிமுகப் படுத்திய பதிவுகள்               : 089
பெற்ற மறுமொழிகள்                            : 256
வருகை தந்தவர்கள்                              : 1880

சுப சம்பந்தம்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

சுப. சம்பந்தத்தினை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   இமா.க்ரிஸ் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 
இவரது  வலைத்தளம் 
     : இது இமாவின் உலகம் ; http://imaasworld.blogspot.co.uk        
ஆசிரியப் பொறுப்பினைப் பெரும் பேறாகக் கருதுபவர்கள் பலர். அப்படிக் கருதி மடல் எழுதுபவர்களும் பலர். ஒவ்வொரு மடலினையும் படித்து மகிழ்ந்து பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆலோசனை கூறி இருக்கிறோம். 
முக்கிய குடும்ப நிகழ்வொன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றிருக்கும், பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.  ஆயினும் இந்நிகழ்வு ஆசிரியப் பொறுப்பில் ஒரு சிறு தடங்கலாகத்தான் இருந்திருக்கும். 

இணையத்தொடர்பு உள்ளிட்ட கணினி தொடர்பான பிரச்னைகள் அத்தனையையும் சமாளித்து பதிவுகள் எழுதுவது சிரமமான செயல் தான். அனைத்தையும் ஈடு கட்டி பதிவுகள் இடத் தயாராய் இருப்பது குறித்து மிக்க நன்றி - மிக்க மகிழ்ச்சி -  பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் 

பாடசாலை மற்றும் வீடு புதுப்பித்தல் வேலைகளுக்கு நடுவினிலே மகளும் மருமகனும் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சியினைத் தந்திருக்கும். இவர்களின் வருகை வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை நல்ல முறையில் நடத்திச் செல்வதில் ஒரு சிறு தடங்கலை ஏற்படுத்தும் என்பதை மறுக்க இயலாது. 

வருகிற ஜூன் 9ம் நாள் முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க தயாராய் இருக்கிறீர்கள் என அறியும் போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணீயன் 
நல்வாழ்த்துகள் இமா.க்ரிஸ்
நட்புடன் சீனா

8 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. கடந்த ஒருவாரமா கொடுத்த பணியை செவ்வனே செய்து விடைபெறும் சகோ.சொக்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
  நாளைமுதல் ஆசியர் பணியை பொறுப்பேற்றிருக்கும் எங்கள் நண்பி,டீச்சர் இமா க்ரிஸ் அவர்களை வருக,வருக என்று வரவேற்கிறேன். வலைச்சர ஆசிரியைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அசத்துங்க இமா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி

   Delete
 3. தினமும் சிறப்பாக தொகுத்த சொக்கன் சுப்ரமணீயன் அவர்களுக்கு பாராட்டுக்கள்....

  இமா.க்ரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி டிடி

   Delete
 4. வலைச்சரப் பணியினை சிறப்பாக நிறைவு செய்த அன்பின் திரு. சொக்கன் சுப்ரமணியன் அவர்களுக்கு பாராட்டுக்கள்....

  இந்த வாரம் வலைச்சர பணியினை ஏற்க வரும் இமா.க்ரிஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா

   Delete
 5. பாராட்டுகள் சொக்கன்..... வாழ்த்துகள் இமா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது