07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 25, 2014

வியாழன் – வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் நான்காம் நாள் அறிவுச் சுரங்கம்

தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

எல்லா அன்பர்களுக்கும் தில்லைஅகத்தின் இனிய காலை வணக்கம்! என்ன அன்பர்களே நேற்று தமிழ்ச் சோலையில் சுற்றி இளைப்பாறினீர்களா!?  இன்றும் தமிழ் சோலையின் ஒரு பகுதியாகிய அறிவுச் சுரங்கம் பற்றிய பதிவும், அறிமுகங்களும்.

அறிவு என்பது ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து, இறக்கும் வரை கற்று, தனது அறிவைப் பெருக்கிக் கொள்வதே. பிறந்தவுடன் இருப்பது இயற்கை அறிவு. அதன் பின்னர் நாம் வளரும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும், வயதிற்கேற்ப, நாம் பெறும் அனுபவத்திலிருந்தும் (பட்டறிவு), கற்கும் கல்வியிலிருந்தும் –ஏட்டறிவும், எழுத்தறிவும்- ஐம்புலன் மூலம் உணர்தலிலிருந்தும் (உணர்வறிவு), ஆழ்மனதில் உறைவதிலிருந்தும், நுண்ணறிவிலிருந்தும், மெய்யறிவிலிருந்தும், தொழில்சார்ந்த  அறிவிலிருந்தும், துறைச்சார்ந்த அறிவிலிருந்தும், பொது அறிவிலிருந்தும் நாம் பெறுவதுவே. 

மணற் கேணி தோண்டத் தோண்டத்தான் பெருகும், இல்லையென்றால் மூடிக்கொள்ளும். கிணறுகளும், குளங்களும் அவ்வப்பொழுது தோண்டப்பட்டு, தூறப்பட்டால்தான் நீர் நிலைகளாக, பயனளிக்கும் வகையில் இருக்கும். அது போலவே, நாமும் நம் அறிவை வாசித்தல், கேட்டல், ஆராய்தல் மூலம் தோண்டிப் பெருக்கித், தூறெடுக்கவில்லை என்றால், அறிவுப் பெட்டகம் சுருங்கி, சிந்திக்கும் திறனையும் இழந்து, மழுங்கிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மையே! மட்டுமல்ல, நாம் பெற்ற அறிவை, அது ஏட்டறிவாக இருந்தாலும் சரி, அனுபவ அறிவாக இருந்தாலும் சரி, இல்லை ஆராய்ந்து பெற்ற நுண்ணறிவாக இருந்தாலும் சரி அதை நாம் மற்றவர்களுடன் பகிரப் பகிரத்தான் பெருகும். இவ்வுலகில் எல்லோருமே அறிவானவர்கள்தான்.  நாம் நமது அறிவை எந்த முறையில் பெருக்கி, கையாண்டு, ஆளுமைப் படுத்துகின்றோம் என்பதில்தான் வேறுபாடு.

சுருக்கமாக, அறிவு என்பது கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. பார்க்கப் போனால் எல்லா பதிவர்களுமே இவற்றில் அடக்கம்தான்.  இங்கு இடுகை பெரிதாகுமே என்பதால் இலக்கியங்கள், புத்தகங்கள் எழுதுதல், அறிமுகங்கள், போன்றவையாகவும், அனுபவங்கள் மூலம் பெறும் அறிவு என்பதாகவும் பிரித்து அறிமுகங்கள் தொடர்கின்றன. அறிவுக் சுரங்கம் என்பதால் அறிவுக் கருவூலங்களின் அணிவகுப்பு, நூலகங்கள் உட்பட.

இன்று வியாழன். கோள்களில் மிகப் பெரியது வியாழன். ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு, (இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு) வியாழன் என்பதற்குச் சொல்லும் அர்த்தங்கள், குரு, ஆசான், அரசன் என்று.  குரு என்றால் பெரியவன் என்ற அர்த்தமும் உண்டு.  எனவேதான் இன்று மேற் சொன்ன அறிமுக அணிவகுப்பு. உங்கள் எல்லோருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

ஜோதிஜி திருப்பூர்

ஜோதிஜி மிகவும் பிரபலமான, அறிவுமிகுந்த, எல்லோருடைய மதிப்பிற்கும் உரிய  பதிவர்.  இவர் தற்பொது தனது தொழில்சார்ந்த, அனுபவக் கட்டுரைத் தொடராக எழுதி வருகின்றார். தொழில் சாராத அனுபவக் கட்டுரைகளும் உண்டு.  போனால் நிறைய தெரிந்து கொள்ளலாம். புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.  அருமையான புத்தகங்கள்.  டாலர் நகரம், ஈழம்-வந்தார்கள் வென்றார்கள், தமிழர் தேசம் - மின் நூல்
அருமையான தகவல்கள் நிறைந்த சுட்டி இதோ.   தஞ்சை பெரிய கோயில் பற்றிய முதல் சுட்டி, 2 வது. கன்னித் தமிழ் இனி கணினித் தமிழ் என்ற அருமையான ஒரு பதிவு, 3வது அடுத்த தலைமுறைத் தமிழ் என்பதற்கு ஒரு சுட்டி


கரந்தை ஜெயகுமார்

இந்த நல்ல ஆசிரியரின் உழைப்பை என்னவென்று சொல்லுவது?  எத்தனை எத்தனை மாமனிதர்களைப் பற்றிய, நாம் கேட்டிராத மனிதர்கள் பற்றிய அரிய தகவல்களைத் தந்துள்ளார் அழகிய நடையில். தமிழ் விக்கி என்று சொல்லலாம் இவரது தளத்தை. இதோ புதிய ஒரு சுட்டி

மற்றுமொரு சுட்டி
நூற்றாண்டுத் தனிமை

திண்டுக்கல் தனபாலன் செல்லமாக டிடி

வலைச் சித்தரைத் தெரியாதவர் யாரும் உண்டோ?  இவருக்கு அறிமுகம் தேவையே இல்லை!  டெக்னிகல் விஷயம் வேண்டுமா டிடி ய கூப்பிடுங்கப்பா.....திருக்குறள் வேண்டுமா....டிடி தளத்த பாருங்கப்பா....அதுக்கு ஏற்றத் திரைப்படப் பாடல் வேண்டுமா...டிடி ...பல நல்ல தலைப்புகளுக்கு இவரது பதிவுகளை ஆராயலாம்! திருக்குறள் சொல்லியே எல்லா பதிவுகளையும் அழகாக உரைத்த இவரைச் சொல்லாமல் செல்ல முடியுமா...இவருக்கு நாங்கள் சுட்டி தரவில்லை.  தளத்திற்குச் சென்றாலே போதும்.  ஹைடெக் தளம்!  இருந்தாலும் ஒரு சுட்டி எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள்  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

மது எஸ்

நாம் எல்லோரும் அறிந்த மிகச் சிறந்த ஒரு பதிவர். அருமையான பல பதிவுகள்.  தற்போது தமிழக சுதந்திர போராட்ட வீர்ர்கள் பற்றிய பதிவுகள்.  இவரது தளத்தில் தொழில் நுட்பம் குறித்தும் அறியலாம்

ஜிஎம்பி

Gmb writes வலைத்தளம்.  மெய்யறிவு.  கீதைப் பதிவுகள் தொடராக எழுதி வருகின்றார். சாக்ரடிஸ் மேற்கோள் சொல்லி கேள்வி கேட்டு, lateral thinking  லேட்டரல் திங்கிங்க் உடையவர். சிறந்த அறிவாளி, கவிதை புனைபவர், நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு.  பன்முகத் திறமை படைத்தவர்.


என் கேள்விக்கு என்னபதில் அப்பதிவிற்குச் சுட்டி இதோ.

முனைவர் ரா குணசீலன்
வேர்களைத்தேடி. வலைத்தளம். அதற்கு ஏற்றார் போல் பல அரிய தகவல்களைத் தருகின்றார்.  இதோ ஒரு சுட்டி தைப்பாவைக் காப்பு


திருக்குறளைப் பற்றிய ஒரு அழகான இடுகை

இராயச் செல்லப்பா

செல்லப்பா தமிழ் டயரி வலைத்தளம்.  இவர் கவிஞரும் கூட. புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.

ரம்பையும் நாச்சியாரும்" - சா.கந்தசாமி இந்தப் புத்தகத்திற்கானச் சுட்டி

தாகூரின் கையெழுத்தில் கீதாஞ்சலி’ – ஓர் அபூர்வ வெளியீடு

சொக்கன் சுப்பிரமணியன்

பன்முகத் திறமை கொண்ட பதிவர். அவர் வலைத்தளம் சென்றால் அறியலாம்.  அவரது ஒரு ஆய்வுக்கட்டுரைக்கான சுட்டி இதோ.


கடல் கடந்து இருந்தாலும், இவர் தமிழை வளர்க்கும் பணி பாராட்டிற்குரியது. சைவ சித்தாந்தச் செல்வர் சொக்கலிங்க ஐயா பற்றிய அருமையான தொடர் சுட்டி இதோ.  இது மட்டுமல்ல நாடகங்கள், தன் திரைப்பட அனுபவங்கள் என்று நிறைய உள்ளன வலைத்தளத்தில்


அருள் செல்வப் பேரரசன்

கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட "The Mahabharata" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு... முழு மஹாபாரதமும் தமிழில்... இணையத்தில்.... தயாரிப்பில் சுட்டி  ஒலி வடிவமாகவும், பிடிஎஃப் கோப்புகளாகவும்.  அருமையான, மகத்தான சாதனை எனலாம்.  விவாதங்களையும் தந்துள்ளார்.

ராஜபாட்டை-ராஜா

என் ராஜபாட்டை வலைத்தளம். சிரிப்பதற்கும் எப்போதாவது சிந்திப்பதற்கும் என்று இவர் சொன்னாலும், ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க என்றெல்லாம் தகவல் தருவதால் சிந்திக்க என்று சொல்வதை எடுத்துக் கொண்டு இங்கே சுட்டிகள்
இந்தியா முழுவதும் இலவசமாக பேச ஒரு ANDROID APPLICATION

அல்சர் பற்றிய தகவல்.

இந்தியா முழுவதும் இலவசமாய் பேச் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்

புதுவை வேலு/யாதவன்

அருமையான இன்று ஒரு தகவல்(தமிழ் தண்டட்டி) பற்றிய சுட்டி இதோ

பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)

திருத்தம் பொன்.சரவணன் வலைத்தளம்.

அல்குல் என்றால் என்ன அர்த்தம் என்பதற்கான ஆய்வுக் கட்டுரை. தமிழ் இலக்கியங்களிலும் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்துள்ளார்.  நல்ல ஒரு தமிழ் சுரங்கம்

ஞானசேகரன்

அம்மா அப்பா வலைத்தளம்

ஏன்? எதற்கு? எப்படி? என்று அழகான விளக்கம் கொடுக்கின்றார்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ?  இன்னும் நிறைய இருக்கின்றன. சுட்டி இதோ

வல்லினம்
கலை இலக்கிய இதழ்
தியானா

பூந்தளிர் வலைத்தளம்.  குழந்தைகளுக்கான பல தகவல்கள் உள்ளன.  இவரைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.  இவர் சில மாதங்களுக்கு முன் வலைச்சர ஆசிரியராக தொகுத்தார்


மழலைப்பிரியன்

அறிவமுது என்று குழந்தைகளுக்கு பல இங்கு உள்ளது


அண்ணா

Insights வலைத்தளம்

இவரது வலைத்தளமே மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது.  அழகாகவும் இருக்கின்றது!  தகவல்களும் நிறைய! ஒரு சுட்டி இதோ
தமிழர்கால அறிவியல்

பாபு நடேசன்

தமிழ் அறிவுக் கதைகள் வலைத்தளம்.  நெய்வேலிக்கார்ர். நண்பர் வெங்கட்ஜிக்குத் தெரிந்திருக்கலாம்.

உதாரணத்திற்கு ஒரு சுட்டி உச்சியைத் தொட செவிடாய் இரு!!!

இணைய நூலகங்கள் அறிவுச் சுரங்கம் தானே!

வாசகர் கூடம்

நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதால் இதற்குத் தனியாகச் சுட்டி தேவை இல்லை. வலைத்தளத்திற்குள் சென்றாலே கிடைத்துவிடும்! இவ்வலைத்தளத்தை நூலக அறிமுகம் எனலாம்

தமிழ் இணைய நூலகம்

குழந்தைகளுக்கானது.  அருமையாக உள்ளது. இவ்விணையத்தில் தமிழ் நூல்களும், தமிழ்க்கற்கைநெறிப் பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இது ஆசிரியர்களுக்கு

தமிழ் இணையக் கல்விக் கழகம்

கழகம்தான்.  சந்தேகமே இல்லை

அருமையான இணைய நூலகம்.  கொட்டிக் கிடக்கின்றன அறிவை வளர்க்க.
இலக்கிய நூல்களும், இலக்கண நூல்களும் கொட்டிக் கிடக்கின்றன. சிறுவர் இலக்கியங்களில் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் நூல்களும், டாக்டர் பூவண்ணன் அவர்களின் கதைகளும், காளித்தம்பியின் கதை படிக்க இந்தச் சுட்டி

நாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞர்களின் நூல்கள் தொகுப்பில் இங்கு வல்லிக் கண்ணன் அவர்களின் நூல்களை இந்தச் சுட்டியில் காணலாம்

சென்னை நூலகம்

எண்ணற்ற நூல்கள் உள்ளன

கல்கியின் ஜமீந்தார் மகன் சுட்டி இதோ

தமிழ் இணைய நூலகம்
முனைவர் ஐயா. பொள்ளாச்சி நேசன்

இலக்கணம் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.  பல புத்தகங்கள், தமிழ் சான்றோர் பற்றியும் 

கல்விமணி

ஆசிரியர்களுக்கான தகவல் களஞ்சியம்

வாசிப்புத் திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு, பள்ளிக் கல்வித் துறை திடீர் அறிவிப்பு - சுட்டி
 
விண்வெளி அறியியல் உண்மைகள்.  சுட்டி

Snippy.. 
இதுவே சுட்டிதான் தமிழ் நாவல்ஸ் என்பதில்
தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.

 
இங்கு இலங்கை நூலகம் முதல் சென்னை நூலகம் வரையிலான வலைத் தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


எளிய தமிழில் அதி நவீன மருத்துவ அறிவியல் கட்டுரைகளை உருவாக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த தளம் துணை நிற்கும்

சிம்மன்
CYBERSIMMAN\'S BLOG

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
தகவல் தொழில் நுட்பம் அறிய


தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம்

இன்னும் பல கொட்டிக் கிடக்கின்றன.  சில, நாளை தொடரும்.  மற்றவை, பிறிதொரு சமயத்தில். மீண்டும் நாளை சந்திப்போம்!

அன்பர்கள் எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்!

60 comments:

  1. நன்றி... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இரு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஹப்பா! உங்களுக்குத் தெரியாம 2 தளங்கள் கொடுத்துட்டோமே! ஹாஹாஹ..

      Delete
  3. மிக்க நன்றி டிடி! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்!

    ReplyDelete
  4. வாசிப்பனுபவத்துக்கு தீனி போடும் அருமையான தளங்கள் .. பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  5. மிக்க நன்றி சகோதரி! பாராட்டுகளுக்கு! தங்கள் பின்னூட்மே அழகாக இருக்கின்றது! ஒற்றை வரியில் பளிச்! நாங்களும் கற்றுக் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  6. தங்களின் கடும் உழைப்பு - இன்றைய தொகுப்பினில் தெரிகின்றது.
    மனமார்ந்த பாராட்டுகள்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! தங்கள் பாராட்டுகளுக்கு!

      Delete
  7. முதலில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    நண்பர் டிடி அறியாத தளங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுடைய வலைச்சரப்பணி பாராட்டுக்குரியது தான்.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சொக்கன் சார்! நீங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கின்றீர்கள் என்பதால், இங்கு கொடுக்கப்பட்ட நூலகங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர நிறைய நல்ல தகவல்களையும், கதைகளையும் நிரப்பி வைத்துள்ளன. தங்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்! மிக்க நன்றி தங்களது வாழ்த்துக்களுக்கு!

      Delete
    2. மிக்க நன்றி. கண்டிப்பாக இங்குள்ள நூலகங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர உதவியாக இருக்கும். ஒரு சில தளங்களை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மற்ற தளங்களையும் பயன்படுத்துகிறோம். அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தமிழ் கற்பிப்பதற்கு இவ்வளவு தளங்கள் இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      Delete
    3. மிக்க நன்றி சொக்கன் நண்பரே! ஆம் நண்பரே! நிறைய இருக்கின்றன. குழந்தைகளுக்கு சித்திரக் கதைகள், விடுகதைகள், புதிர்கள் என்று...நிறைய! வலைத்தளத்தைப் பலரும் குறை கூறி திட்டுவது வழக்கம்! ஆனால் அதை முறையாகப் பயன் படுத்தினால் நாம் நிறைய கற்று பயனடையலாம்! எல்லாமே அப்படித்தானே!

      மிக்க நன்றி நண்பரே!

      Delete
  8. அப்பப்பா...எவ்வளவு தளங்கள்..எல்லாம் சென்று வாசிக்க வேண்டும். அயராத உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!

      Delete
  9. வலைச்சரம் எத்தனையோ வளைத்தளங்களை அறிமுகம் செய்து பிளாகர் வழிகாட்டியாக இருக்கிறது.

    இங்கு சென்றால் இவைகள் எல்லாம் இருக்கிறது,அவ்வழி சென்றால் அவைகள் இருக்கின்றன. புது வழிகள் எல்லாம் சொல்ல வாருங்கள். விருந்துகளின் வகைகளை பரப்பிக் காட்டி யார் யார்ருக்கு என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என சேவை ஆற்றுகிறார்கள்.

    இச்சிறியவள் எனக்கு 5வர் அளித்துமகிழ்ந்த விருதினை தங்களுடன் பகிர ஆசைப் படுகிறேன்.(தகுதியில்லை)

    மிட்டாய் கொடுத்து மகிழும் குழந்தை போல.... நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோதரி! ஆஹா இரண்டாவதா?!!!!! தங்கள் அன்பின் பரிசு அது! மற்றபடி ஏற்கனவே பகிரப்பட்டதுதான்! அன்பிற்கு தகுதி என்ற வார்த்தை அவசியமில்லை சகோதரி! விருதுகள் என்பது மிகவும் உயர்வான ஒன்று அது மலிவாக்கப்படக் கூடாது என்பது எங்கள் தனிப்பட்ட எண்ணம் என்றாலும், எங்கள் அன்பு சகோதரியின் மனம் நோகக் கூடாது அல்லவா! எனவே நீங்கள் தரும் அன்பு மிட்டாயைப் பெற்றுக் கொள்கின்றோம்!

      Delete
  10. பயனுள்ள தளங்கள். பாராட்டுகள் உங்களுக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! என்னடா நம்ம நண்பரைக் காணவில்லையே என்று நினைத்தோம்! சரி அப்படியே நாளையும் வந்து விடுங்கள்! (இப்போது நவராத்திரி நடந்து கொண்டு இருக்கிறது...கொலுவுக்கு அழைப்பது போல....ஹாஹஹ ஆனா சுண்டல் எல்லாம் இங்கு இல்லை....)

      மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு!

      Delete
  11. அட! ஒரே நாளில் இத்தனை தளங்கள்! அத்தனையும் சிறப்பான தளங்கள்! வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்! தங்கள் வாழ்த்திற்கு!

      Delete
  12. இன்றைய அறிமுகங்கள் நண்பர்கள் கரந்தை ஜெயக்குமார், சொக்கன் சுப்பிரமணியன், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி கில்லர் ஜி!!!!

      Delete
  13. இன்றைய பதிவினை கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சி ! எனது நண்பரும் வலைதளத்துக்கு புதியவருமான புதுவை வேலுவின் குழலின்னிசை வலைப்பூ அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். அவருடன் சேர்த்து இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே! நாளையும் வாருங்கள் நண்பரே! மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கு!

      Delete
  14. தலையே சுத்துது!!! அடேயப்பா எவ்ளோ பெரிய பட்டியல் !! எல்லாரும் பெரிய பெரிய ஆளுங்க:)) (மதுவையும் சேர்த்து) இந்த பகிர்வுக்கு நன்றி சகாஸ்!!! உங்கள் கடின உழைப்பு தெரிகிறது!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் பாராட்டிற்கு! இந்த அணிவகுப்பு நாளையும் வேறு ஒரு பகுதியாக நடக்கும்!

      Delete
  15. பதிவர்களை அறிமுகம் செய்வதில் உங்களுக்கு ஈடாக யாரும் இல்லை சகோதரரே!..
    அசத்துகிறீர்கள்!.. அனைவருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! அப்படியெல்லாம் இல்லை சகோதரி! வலைச்சரத்தில் பலர் மிக அழகாக பல நல்ல அறிமுகங்கள் செய்திருக்கின்றனர். உதாரணமாகச் சொல்வதென்றால் பூந்தளிர் சகோதரி! தியானா! வித்தியாசமான தளங்கள் கொடுத்திருந்தார்! மிக்க நன்றி சகோதரி தங்கள் பாராட்டு எங்களை மிகவும் ஊக்கப்படுத்துகின்றது!

      Delete
  16. பயனுள்ள பல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் நண்பரே. எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!

      Delete
  17. ஒவ்வொரு நாளும் இந்தப் பணியை செய்து முடிக்கும் பொழுது கிட்டத் தட்ட விடிந்து விடும் அப்புறம் அறிவிக்கும் பணியையும் செய்ய... அப்பப்ப்பா பெரிய பணி இது...
    நீங்கள் கலக்குறீங்க ... வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே! ஆனால் எல்லோருக்கும் இதேதானே இந்தப் பொறுப்பில் இருக்கும் போது! அவர்கல் எல்லோரும் ரொம்பவே கலக்கினார்கள் ! நீங்களும், சகோதரி மைதிலியும் தான்.....மிக நன்றாகச் செய்தீர்களே! நீங்கள் செய்த போது நாங்கள் வலைத்தளத்திற்குப் புதிது...எங்களுக்கு அப்பொது புரியவில்லை. பின்னர் சகோதரி மைதிலி செய்யும் சமயம் எங்களுக்கு வலை பழகி இருந்ததால் கொஞ்சம் புரிந்தது. இப்போது எங்கள் அனுபவம் நன்றாகவே புரிய வைத்தது!! நல்ல பயனுள்ல அனுபவம் என்போம்! அனுபவங்கள் நல்ல பாடங்கள் கற்பிப்பதால் கடினமாகத்தானே இருக்கும்! நாளை உங்களுக்குத் தெரியும்!!!!

      மிக்க நன்றி மது!

      Delete
  18. வணக்கம்

    எல்லாம் சிறப்பானஅறிமுகங்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    பதிவுகளை தேடி சிறப்பாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன் தம்பி! உங்களைக் காணவில்லையே என்று நினைத்திருந்தோம்! வந்துவிட்டீர்கள்! ரூபனும், டிடியும் இல்லாத வலையா? இப்போது அதில் கில்லர்ஜியும் சேர்ந்துள்ளார்!!!!

      மிக்க நன்றி ரூபன் தம்பி!

      Delete
    2. நண்பரே, என்னை தூக்கி விடுறீங்களா ? இல்லை தூ.....க்கி விடுறீங்களா ? நீங்கதான் பிஸியா இருக்கீங்க... நம்ம வூட்டான்டே காணோம், நான் சும்மா சுத்திக்கிட்டு இருக்கேன் வலையைத்தான்.

      Delete
    3. ஹாஹாஹா....கில்லர் ஜி பெருமையாகச் சொன்னது! உங்க வூட்டாண்ட வரோம் கில்லர் ஜி! இங்கயே வேலை...அதுவும் நல்ல பட்டறிவைத் தரும் வேலை!! மிகவும் ரசித்துச் செய்கின்றோம்! பட்டறிவு என்பது கடினமாகத்தான் இருக்கும்! மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் போல.....வரோம் கில்லர் ஜி! வடுக நாதனைப் பார்த்த நினைவு....அதற்கப்புறம்தான் வரல...ஒரு வேளை எங்கள் அந்த விசிட் பதிவாகலையோ...ப்ளாகர் ரெக்கார்ட ஒளிச்சு வைச்சுருச்சோ?

      Delete
  19. வணக்கம் சகோதரா !

    வியந்து நிற்கின்றேன் தங்களின் சிறப்பான தேடலைக் கண்டு !
    ஆஹா அருமை !அருமை !அனைத்துப் பதிவர்களும் சிறந்த
    படைப்பாளிகள் !அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .
    தொடரட்டும் தங்கள் பணி மென்மேலும் சிறப்பாக .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்! எங்களுக்கு முன் வலைச்சரப் பணியைச் செய்தவர்களைக் கண்டு நாங்கள் பிரமித்திருக்கின்றோம்!

      Delete
  20. என் தளத்திற்கு வலைச் சரம் மூலம் சில வருகைகள் கண்டு இங்குவந்தால் நீங்கள் அறிமுகப்படுத்தியது தெரிகிறது நன்றி துளசிதரன், கீதா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      Delete
  21. உயர்திரு மரியாதைக்குரிய துளசிதரன் தில்லைகாத்து அவர்களின் பண்பை பார்த்து மேசிலிர்கிறேன்.
    ஒரு வாசகராக, பார்வையாளராக குழலின் இன்னிசை மூலம் உள்ளே வந்து, தகுதியை அறிந்து, புதுவை வேலு அவர்களின் படைப்புக்கு மேலும் சிறப்பு செய்த உங்களின் பாராட்டுக்கு முதல் வணக்கம்.
    ஒரு எழுத்தாளனுக்கு விமா்சனங்களும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் மட்டுமே முனைப்புடன் ஊக்குவிக்கும்.
    110 நாட்களில் உங்கள் ஆசியுடன் குழந்தை குழலின் இன்னிசை பலர் பார்வையில் சந்தோஷத்தை பகிர சிறப்பு செய்ததற்கு மிகவும் நன்றி.
    குழல் இன்னிசையின் பன்முக படைப்புக்களை எதிர்பார்த்து மேலும் வளர மனதார வாழ்த்துவோம்.
    புதிய படைப்புகளை நோக்கி முன்னேற, குழல் ஊதுவோம் கொண்டாடுவோம்.
    நன்றி ஐயா திரு துளசிதரன் தில்லைகாத்து அவர்கள்

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! ஐயா!

      நல்ல படைப்புகள், விடயங்கள் எதுவாக இருந்தாலும் அதைப் பலரும் அறியத்தானே வேண்டும்! அதைத்தான் நாங்கள் செய்தோம் ஐயா! நாங்கள் பார்த்ததை, வாசித்ததை, உணர்ந்ததை நம் அன்பர்கள் எல்லோரும் அறிய உரைத்தோம்! அவ்வளவே! நாங்கள் இன்னும் பல புதிய வலைத்தளங்களை அறிந்து எல்லோருக்கும் தெரிய வைக்கலாமே என்றும் விழைவதால் தான்! நாங்கள் இந்த வலை உலகிற்குள் வந்து ஒரு வருடம் 4 மாதங்களே ஆகின்றது ஐயா! நாங்கள் எங்களுக்கு அறிமுகமான தளங்களுடன், புதிய தளங்கள் கண்டாலும் அறிமுகம் செய்யும் முயற்சியில் தான் இருக்கின்றோம்! இன்னும் பல தளங்கள் உள்ளன!

      நிச்சயமாக குழலின் இன்னிசை இன்னும் நன்றாக இன்னிசைக்கும்! நாம் எல்லொரும் வாழ்த்துவோம் ஐயா!

      வாழ்த்துக்கள்! தங்களையும் தொடர்கின்றோம்!

      மிக்க நன்றி ஐயா!

      ஐயா
      துளசிதரன் தில்லைஅகத்து தில்லைகாத்து அல்ல

      Delete
    2. ஐயா வணக்கம்,
      எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.

      sattia vingadassamy

      Delete
    3. அதனால் பரவாயில்லை ஐயா! உங்களுக்கு எங்கள் பெயரைச் சொன்னோம் அவ்வளவே! இதெற்கெல்லாம் மன்னிப்பு எதற்கய்யா?!

      Delete















  22. நன்றி இசை








    கல்லிலே கலைவண்ணம் காணு மன்பர்

    சொல்லிலே இன்பத்தை ஏந்தி நிற்பார்

    வில்லேந்தும் இராமனுக் குகந்த மாலை

    துளசியை நாமமாக சூடி நிற்பார்




    வலைச் சரத்தில் குழலின்னிசை இசைத்தீரே!

    இசைகேட்டால் பூவுலகம் பூத்துக் குலுங்கும்

    திசையெட்டும் தீந் தமிழ் படைப்பை நானளிப்பேன்

    மிசைமிகு வாழ்த்தொளியை வழங்குவீரே!


    -புதுவை வேலு/யாதவன் நம்பி.


















    /












    திரு.தில்லைக் காத்து துளசிதரன் அவர்களுக்கும்,இந்த இனிய செய்தியை வலைதளம் மூலம் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த நண்பர் சாமானியன் அவர்களுக்கும் வள்ளுவம் கூறும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.











    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்


    வானகமும் ஆற்ற லரிது.


    -திருவள்ளுவர்










    வணக்கத்திற்குரிய வலை தள நண்பர்கள் மற்றும் படித்து இன்புறும் அனைத்து அன்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி மாலையைச் சூட்டி எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


    புதுவை வேலு

    ReplyDelete

  23. நன்றி இசை








    கல்லிலே கலைவண்ணம் காணு மன்பர்

    சொல்லிலே இன்பத்தை ஏந்தி நிற்பார்

    வில்லேந்தும் இராமனுக் குகந்த மாலை

    துளசியை நாமமாக சூடி நிற்பார்




    வலைச் சரத்தில் குழலின்னிசை இசைத்தீரே!

    இசைகேட்டால் பூவுலகம் பூத்துக் குலுங்கும்

    திசையெட்டும் தீந் தமிழ் படைப்பை நானளிப்பேன்

    மிசைமிகு வாழ்த்தொளியை வழங்குவீரே!


    -புதுவை வேலு/யாதவன் நம்பி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! தாங்களின் அழகிய கவிதை வடிவில் வந்த கருத்திற்கு! நல்ல படைப்புகள் இவ்வுலகு அறிய வேண்டும்! புதிய வலைத்தளங்கள் கண்டால் அதை எல்லோருக்கும் அறியப்படுத்துதல் வேண்டும் தானே! அதைத்தான் செய்தோம் ஐயா! தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      நாங்கள் இருவர் எங்கள் தளத்தில் எழுதுகின்றோம்..துளசிதரன் தில்லைஅகத்து (தில்லை காத்து அல்ல ஐயா), கீதா.

      மிக்க நன்றி ஐயா!

      Delete
    2. வலைச்சரத்தில் திங்களன்று நாங்கள் இட்ட இடுகையாகிய எங்கல் அறிமுகம் கண்டால் எங்களைப் பற்றி அறியலாம் ஐயா!

      மிக்க நன்றி!

      Delete
  24. Nice Introductions..! Few are new to me.. Thanks for indroducing!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆவி! அப்பவே போட்ட கமென்ட் எங்க போச்சுனு தெரில...இங்க ப்ளாகர்னு பூதம் இருக்கு போல.....

      Delete
  25. ஹப்பா புதுசா கொஞ்சம் சொல்லிருக்கோமா! இப்பதான் கொஞ்சம் ஆசுவாசம்!

    மிக்க நன்றி ஆவி!

    ReplyDelete
  26. முதல் மூவரும் வலையுலகின் பிரம்மாக்கள்... விரும்பிப் படிக்கும் பதிவர்கள்...

    மற்றவர்களில் சிலர் நான் தொடரும் நல்ல பதிவர்கள்... பலர் புதியவர்கள்...

    இத்தனை பேரை அறிமுகம் செய்ததில் உங்கள் உழைப்புத் தெரியுதம்மா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! முதல் மூவரும் பிரம்மாக்கள்! தெரியுதம்மா....மட்டும் இல்ல நண்பரே!

      நாங்கள் இருவர் எங்கள் தளத்தில் எழுதுகின்றோம். துளசிதரன் தில்லைஅகத்து, கீதா.

      Delete
  27. மரியாதைக்குரிய துளசிதரன் தில்லைஅகத்து அவர்களுக்கு மறுபடியும் நன்றி. திரு சாமானியன் அவர்களின் கட்டுரையின் எதார்த்த நடைக்கு மகுடம் சூத்தியதாகவே நம்புகிறேன். அருமையான வலை தேர்வுகளுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! ஐயா! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      Delete
  28. என்னையும்அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே
    தாமத வருகைக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கல் வருகைக்கும், கருத்திற்கும்! மன்னிப்பு எல்லாம் எதற்கு நண்பரே!

      Delete
  29. இந்த நெய்வேலி வேறு இடம்.

    இதே பெயரில் திருச்சியில் கூட ஒரு கிராமம் இருக்கிறது. எங்கள் ஊர் நெய்வேலி கடலூர் மாவட்டம் பன்ரூட்டிக்கு அருகே!

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. நிறையப் பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி! ஆனால், http://ramanichandrannovels.blogspot.com போன்ற சட்டப் புறம்பான தளங்களை அறிமுகப்படுத்துவது தேவைதானா?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது