07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 11, 2014

சுவை புதிது!


மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபாடுசெய்யமுடியும்.
சிந்திப்போர் 
செயல்படுவோர்
சிந்தித்துச் செயல்படுவோர்!

அறிவுடையோர்
ஆற்றலுடையோர்
அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்!

சிரிக்காதவர்
சிரிப்பவர்
சிரிக்கவைப்பவர்!

பேசாதவர்
பேசுபவர்
பேசவைப்பவர்!

மாறாதவர்
மாறுபவர்
மாற்றுபவர்!

கருவிகளை நம்புவோர்
கடவுளை நம்புவோர்
தன்னை நம்புவோர்!

வாழ்க்கையைத் தொலைத்தவர்
வாழ்க்கையைத் தேடுபவர்
வாழப் பிறந்தவர்!

காலத்தின் பின்னால் ஓடுபவர்
காலத்தின் முன்னல் ஓடுபவர்
காலத்துடன் செல்பவர்!

வாய்ப்பில்லை என வாடுவோர்
வாய்ப்புகளைத் தேடுவோர்
வாய்ப்புகளை உருவாக்குவோர்!


வரலாறு பேசுவோர்
வரலாறு படிப்போர்
வரலாறு படைப்போர்!

துடிப்போர்
எடுப்போர்
கொடுப்போர்!

பிறரைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்!

தவறு செய்வோர்
தண்டனை தருவோர்
தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்!

அறிவுரை கேட்போர்
அறிவுரை சொல்வோர்
அதன் படி வாழ்வோர்!

என்பதே அவ்வகைப்பாடு. வலைப்பதிவுகளில் எழுதுவோரையும் மூன்று வகையாகப் பாகுபாடு செய்வதுண்டு.

தன் புலமையைக் காட்ட எழுதுவோர்!
தன் மனநிறைவுக்காக எழுதுவோர்!
வாசிப்போர் மனநிறைவுக்காக எழுதுவோர்!

இவர்களுள் இன்று மூன்றாவது வகை வலைப்பதிவர்களையே காண இருக்கிறோம்.



31. தமிழாசிரியர் அன்பு நண்பர் நா.முத்துநிலவன் அவர்களின் வளரும் கவிதை என்ற வலைப்பதில் தமிழின் சிறப்புகளையும், சமூக அவலங்களையும் நயம்பட உரைத்துவருகிறார். அவர் எழுதிய படைப்புகளுள் “என் மாணவன்தந்த நல்லாசிரியர் விருது“ என்ற பதிவு மனதை நெகிழச்செய்வதாக அமைகிறது.


32. கணித ஆசிரியராகப் பணியாற்றிவரும் அன்பு நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தம் வலையில் பல வரலாற்று சாதனையார்களைப் பற்றி அழகுபட எழுதிவருகிறார். அவரது பதிவில் கணிதமேதை தொடர் நான் வியந்து படித்த தொடராகும்.


33. அன்புத் தோழி கீத மஞ்சரி அவர்களின் தமிழ்விடுதூது என்ற பதிவு தமிழ் இலக்கியத்தின் வளத்தை யாவரும் உணரும் வண்ணம் உரைத்துச் செல்கிறது.


34. ஆங்கிலத்துறை ஆசிரியரான அன்பு நண்பர் துளசிதரன் அவர்கள் தில்லைக்காடு கிரானிக்ல்ஸ் என்ற வலைப்பதிவை நடத்தி வருகிறார். இதில் சமகால செய்திகளுடன் தம் அனுபத்தையும் பதிவு செய்துவருகிறார். இவரது பதிவில் நக்கீரா!...உமக்குப் பெண்களின் கூந்தலின் ரகசியம் பற்றித் தெரியவில்லையே! என்ற பதிவு இலக்கியத்தை அறிவியலோடு ஒப்பிட்டு மொழிகிறது.



35.  கதை மற்றும் கவிதைகளை சுவைபட எழுதிவரும் அருணா செல்வம் அவர்களது படைப்பில் குழந்தையின் சிரிப்பு என்ற கவிதை வாசிக்கும் நம்மையும் சிரிக்கவைப்பதாக அமைகிறது.


36. அன்புத்தோழி எம்.கீதா அவர்களின் தென்றல் என்ற வலைப்பதிவில் இடம்பெற்ற சொல் என்ற குறுங்கவிதை படித்தவுடன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்கிறது.


37. அன்பு நண்பர் தளிர் சுரேஸ் அவர்களின் பதிவுகளுள் என் மனதைப் பெரிதும் கவர்ந்தது அவரது ஹைகூ கவிதைகளாகும்.


38.  அன்புத்தோழி உஷா அன்பரசு அவர்களின் ஒத்த ரூபா என்ற சிறுகதை நமக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை நினைவுபடுத்துவதாக அமைகிறது.


39. அன்பு நண்பர் ரூபன் அவர்களின் சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே என்ற கவிதை நாமெல்லாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோமா என்று நம்மை சிந்திக்கவைப்பதாக உள்ளது.


40. நான் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பதிவுகளுள் எங்கள் பளாக் என்னும் பதிவு குறிப்பிடத்தக்கது. இதில் பாசிட்டீவ்செய்திகள் வாசிப்போர் மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்து வருகிறது.




38 comments:

  1. 'மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபாடுசெய்யமுடியும்' என எழுதியுள்ளவை அனைத்தையும் நன்கு ரஸிக்க முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அன்பரே.

      Delete
  2. உஷா அன்பரசின் ஒத்த ரூபாயை சொடுக்கினால் தளிர் சுரேஷ் அவர்களின் தளத்திற்கு செல்கிறது. தயவு செய்து சரி செய்யவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிட்டேன் நண்பரே தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

      Delete
  3. இன்றும் - நல்ல பல கருத்துக்களுடன் கூடிய தளங்களின் தொகுப்பு!..

    மன நிறைவு தரும் பதிவு!..

    ReplyDelete
  4. அறிவு , ஆற்றல், (அல்லது செய் திறன்) இவற்றுடன் சேர்ந்து மனமீந்த நோக்கும் ( right attitude )மூன்றும் ஒருங்கு இணையும்போதே

    இம்மூன்றும் சம நிலையில் கொண்ட மனிதரால் சமூகம் நல்வழிப் படுத்தப்படுகிறது.

    இந்த நிலையை பால்ஸ் சின்றோம் என்றும் ஆங்கிலத்தில் சொல்வர்.

    இது ஒரு முக்கோணம். மூன்று பக்கங்களையும் அறிவு, ஆற்றல், சீர் நோக்கு எனக்கொண்டது மட்டுமல்ல, பக்கங்களும் சமம் என இருப்பின் மட்டுமே, அவரால் சமூகத்திற்கு நன்மை கிடைக்கப்பெறும்.

    எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் இது போன்ற பலர் நம்மிடையே வாழ்வது மட்டுமன்றி, எப்படி வாழ வேண்டும் எனவும் சொல்லாது சொல்லி வழி காட்டியாக நிற்கின்றனர். என்பதை சுட்டி காட்டுகின்றனர்.

    இவர்கள்,
    வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
    என்றால்
    மிகையாமோ ?

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com








    ReplyDelete
    Replies
    1. அழகாகச் சொன்னீர்கள்.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் தாத்தா.

      Delete
  5. மனிதர்கள் மூன்று வகைகள் மற்றும் தங்களின் அறிமுகங்கள்...சிறப்பு நன்றி

    ReplyDelete
  6. மிக அருமையான தொகுப்பு

    ReplyDelete
  7. சிறப்பான பதிவர்களுடன் எனக்கும் மீண்டும் ஒருமுறை வலைச்சரத்தில் இடம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      Delete
  8. மாறாதவர், மாறுபவர், மாற்றுபவர் - இந்த வரிகள் சிந்தனையைத் தூண்டின.

    தன்னைப் பற்றிப் பேச வைப்பவரை அதுவும் நல்ல வகையாகப் பேச வைப்பவரைப் பாராட்டலாம்!

    'எங்களை'யும் சரத்தில் தொடுத்தமைக்கு மிக்க நன்றி. எங்களுடன் தொடுக்கப் பட்டிருப்பவர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    'எங்களை'ப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் சுப்புத் தாத்தாவுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      Delete





  9. என்ன ஒரு அருமையான சிந்தனை.
    உங்கள் பதிவு படித்த பின்பும் மறக்காமல்
    மனதிலேயே நிற்கிறது.இதை வள்ர் இளம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தால் அவர்கள் எதிர்காலம் மிகவும் நன்றாக இருக்கும்.நிச்சயம் என் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      Delete
  10. வித்தியாசமான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாசிப்போர் மனநிறைவுக்காக எழுதுவோர் வரிசையில் எனக்குமொரு இடமளித்து சிறப்பித்தமைக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவளானேன். தமிழின் இனிமையை, இலக்கியத்தின் இன்சுவையை பாமரரும் அறிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிமையாக்கித் தரும் தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை பெரும்பேறாக எண்ணுகிறேன். மிக்க நன்றி தங்களுக்கு. இன்றைய அறிமுகத் தளங்கள் அனைத்தும் நான் தொடர்ந்து வாசிக்கும் விருப்ப தளங்களே.. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அம்மா

      Delete
  12. வணக்கம்
    ஐயா.
    இன்றை வலைச்சர அறிமுகம் வித்தியாசமான சிந்தனை உணர்வுவோடு ஒளிர்வதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      Delete
  13. வாசிப்போர் மனநிறைவுக்காக எழுதவோர் வரிசையில் எனக்கு ஓர் இடத்தை அளித்துள்ளது, நீங்கள் எவ்வளவு ஊர்ந்து கவனிக்கிறீர்கள் என்பது புரிகிறது.
    உண்மையில் என் பதிவுகளின் நோக்கம் இதுவாகத் தான் உள்ளது. நன்றி முனைவர் ஐயா.

    மற்ற அனைத்து அறிமுகங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அம்மா.

      Delete
  14. என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே
    என்றும் வேண்டும் இந்த அன்பு
    தம 5

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      Delete
  15. வணக்கம்...

    தாங்கள் மனிதர்களை வகைபடுத்திய விதம் படித்ததும் நெஞ்சில் நிற்க்கிறது... அருமை... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  16. என்ன விட்டுடீங்களே தல. பரவாயில்ல. வாங்க fb ல பேசிக்கலாம்.

    ReplyDelete
  17. தங்கள் தேடலுக்கு என் மகிழ்வான வணக்கம்.
    தங்கள் அன்பிற்கு என் நெகிழ்வான நன்றி நண்பர் குணசீலன்
    வேறென்ன சொல்ல? தங்கள் பணிகள் தொடர வேண்டுகிறேன்.
    மதுரைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு விழாவில் தங்களைச் சந்திக்க ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே. சந்திப்போம் நண்பரே.

      Delete
  18. சிறந்த பதிவுகளின் அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  19. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.

    நண்பரே! எங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை! அவ்வளவு பெரிய படைப்பாளிகளும் அல்லர் நாங்கள்!

    மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  20. மனிதரில் மூன்று வகை என சொல்லி. ... அதிலும் அழகாய்
    வரிசை படுத்தி சொல்லிவிட்டீர்கள். நான் எந்த வகை என
    ஒவ்வொரு முறையும் யோசிக்க வைத்தது.

    மேலும் நல்ல தமிழ் வலைத்தலங்களையும் எங்களுக்கு அறிமுகம்
    செய்துள்ளீர்கள்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அங்கயர்கன்னி அரசன்

      Delete
  21. அனைவரும் சிறப்பான பகிவர்கள்...
    அறிமுகமாகியிருக்கும் அனைவரும் வலைப்பூ உலகில் நன்கு அறிமுகமானவர்கள்...
    அவர்களுக்கும் சிறப்பாய் தொகுத்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. .பாகுபாடு செய்த விதம் மிக மிக அருமை
    நான் விரும்பித் தொடரும் பதிவர்களை
    தொடர்ந்து அறிமுகம் செய்வது மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. நல்ல அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. வணக்கம் சார் ,,,மிக்க நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது