07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 12, 2014

சொல்லேருழவர்கள்

                      


                      வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
               சொல்லேர் உழவர் பகை (திருக்குறள் -872)



என்பார் வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் 


பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் 

பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும்.



சொல்லை ஏராகக் கொண்டு நல்ல சிந்தனைகளை விதைத்து வாசிப்போர் 

மனங்களில் வாழ்வியல் விழுமியங்களை அறுவடைசெய்வோர் பலர் உள்ளனர்.

எனது பார்வையில் சொல்லேர் உழவராகத் தெரிந்த சில வலைப்பதிவர்களை 

இன்று அறிமுகம் செய்யவிருக்கிறேன்.

41. கவியாழி கண்ணதாசன் அவர்களின் எதுகையே? மோனையே? தமிழோடு உறவாடும் கவிதையாக அமைகிறது.


42. அ. பாண்டியன் அவர்களின் கல்வியும்முரணும் என்ற கவிதையில் ஆசிரியர்களை நம்பிக்கை விதைகள் என்று கூறி கல்வியின் முரண்பாடுகளை நயம்பட எடுத்துரைக்கிறார். 


43. சுயம்பு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் இல.விக்னேஷ் அவர்களின் இந்தியப் பெண்களே பெருமைகொள்ளுங்கள் என்ற பதிவு இந்தியாவில் பெண்களின் சுதந்திரத்தை புலப்படுத்துகிறது.


44. இ.ஆரா என்றும் இனியவன் என்ற வலைப்பதிவில் கிங்ராஜ் என்ற பதிவுகளுள் குறுங்கவிதைகள் அவரது கற்பனை ஆற்றலுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.



45. மாதவன் இளங்கோ அவர்களின் ரசிக்கிறேன் ருசிக்கிறேன் என்ற வலைப்பதிவில் இடம்பெற்ற சிராய்ப்பு என்ற குறுங்கதை மனிதர்களைவிட நாம் பொருள்களை அதிகம் நேசிக்கிறோம் என்பதை நறுக்கென்று பகர்கிறது.

46. பூங்குழலி அவர்களின் பூச்சரம் என்ற வலைப்பதிவில் மழை என்ற கவிதை மிகவும் இரசிக்கத்தக்கதாக உள்ளது.



47. தூய தமிழ் பேணும் பணி என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் யாழ் பாவணன் அவர்களின் பதிவுகளுள் உறவுகளே எதை ஊட்டி வளர்க்கிறீர்கள் என்ற கவிதை நமது பண்பாட்டை சீர்தூக்கிப் பார்ப்பதாக அமைகிறது.


48. நண்பர் கில்லர்ஜி அவர்களின் மௌனமொழி என்ற கவிதை மௌனத்தில் ஆழமான பொருளை அழகுபட மொழிபெயர்ப்பு செய்கிறது.


49. சிகரம் பாரதி அவர்களின் அன்னைத் தமிழ் என்ற கவிதை தமிழ்பேசுவோரை பெருமிதம் கொள்ளச் செய்வதுடன் ஆங்கிலம்பேசுவோரையும் சிந்திக்கவைப்பதாக அமைகிறது.



50. என்மனவெளியில் என்ற வலையில் எழுதிவரும் நண்பர் ஸ்ரீநி அவர்களின் பதிவுகளில் புலியின்சீற்றம் என்ற கவிதை நம் சுயநலத்தை சுட்டிக்காட்டுறது.

32 comments:

  1. என்மனவெளியில் என்ற வலையில் எழுதிவரும் நண்பர் ஸ்ரீநி அவர்களின் பதிவுகளில் புலியின்சீற்றம் என்ற கவிதை நம் சுயநலத்தை சுட்டிக்காட்டுறது.///

    புலியின் சீற்றம் என்னும் கவிதை படித்தேன்.
    ஆஹா !!
    என்ன ஒரு ஆதங்கம் அந்தப் புலிக்கு என்று வியந்தேன்.
    வீட்டுக்கு வீடு பாமனேரியன் நாய் வளர்க்கும் மாந்தர்
    பாதுகாப்புக்கு என்னைப்போல் ஒரு
    புலி வளர்க்கக் கூடாதோ !!

    என கேட்பது போல் தோன்றியது.

    வாசற்கதவு யாரோ தட்டும் சத்தம்.
    யார் எனக் கதவு திற்ந்தேன்.

    ஒரு புலி நின்று கொண்டு இருந்தது.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கும் ஆழமான வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் தாத்தா

      Delete
  2. பூங்குழலி எழுதும் பூச்சரத்தின் அண்மைப் பதிவு
    பெண்பாவம் படித்தீர்களா ?

    வலைச்சரம் வழியே அவரது மன வேதனையும் இன்றைய நாட்டு நடப்பும்
    எல்லோருக்கும் தெரியட்டும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மறுமொழிகளுக்கு நன்றிகள் தாத்தா

      Delete
  3. //வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது//

    குறள் விளக்கம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிள் நண்பரே

      Delete
  4. முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு... என்னை(யும்) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்க்கு அதுவும் என்வாழ்க்கை பந்தப்பட்ட, நான் மிகவும் நேசித்து ஆத்மார்த்தமாய் எழுதிய மௌன மொழி என்ற பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றியுரைக்க வார்த்தைகளின்றி மௌனமாய் நிற்கின்றேன், நண்பரே...
    குறிப்பு - எனது பதிவுக்கு வந்து தகவல் தந்தமைக்கு(ம்) நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள்..வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அன்புள்ள முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு, வணக்கம்.

    தங்களுடைய 'சொல்லேருழவர்களில் ஒருவனாக' இந்தச் சிரியோனையும் சேர்த்து என் வலைத்தளத்தைப் பற்றி எழுதி பகிர்ந்துகொண்டதற்கு என் நன்றிச்செண்டு!!! 'சொல்லேருழவர்' என்கிற அழகிய சொல்லை பயன்படுத்தியதற்கு இன்னுமொரு நன்றி!!

    உழவர்கள் அனைவருக்கும், எனக்கு தொடர்ந்து ஊக்கமூட்டி வரும் திரு.கவியாழி கண்ணதாசன் ஐயா அவர்களுக்கும் என் வாழ்த்துகள்!!!

    வாழிய நலம்!

    அன்பன்,
    மாதவன் இளங்கோ

    ReplyDelete
  9. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  10. எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
    தமிழ், தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
    தங்களுடன் ஒத்துழைப்பேன்.
    இன்றும் சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  11. Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  12. அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  13. மிக்க நன்றி குணசீலன் உங்கள் அறிமுகத்திற்கு .என் பெண்பாவம் பதிவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சூரி சிவா -உங்களுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் அம்மா

      Delete
  14. அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  15. வணக்கம்
    ஐயா.

    வலைச்சர அறிமுகங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... எல்லாம் தொடரும் தளங்கள்தான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  16. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வணக்கம்...

    உலகத்தமிழர்கள் சங்கமிக்கும் வலைச்சரத்தில், எனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

    அறிமுகமாகியுள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  18. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள் நண்பரே

      Delete
  19. நன்றி நண்பரே எனது தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு :)

    ReplyDelete
  20. சிறப்பான அறிமுகங்கள் !அறிமுகமான அனைவருக்கும் அறிமுகம் செய்து
    வைத்த தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது