07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 29, 2014

வணங்கி வரவேற்கின்றாள் அனைவரையும் வேலுநாச்சியார்..தென்றலின் இனிமையுடன்....இயல்பூவாய்



                                                           வலைப்பூக்கள் கோர்க்க
                                                           வளமான மனதுடன்
                                                          அன்புடனே அழைத்திட்ட
                                                          அன்பின் சீனா அய்யா
                                                           தமிழ்வாசி பிரகாஷ்
                                                          ஆகியோருக்கும், எனது
                                                         வலையில் வீழுமனைவருக்கும்
                                                         மகிழ்வான வணக்கம்

வாங்க வாங்க....!

கரம் சேர்த்து வலைச்சரம் கோர்க்க அழைக்கின்றேன்.முதல் முறை என்பதால் உள்ளூறும் நடுக்கத்தை மறைத்து தென்றலென வீசுகின்றேன்..அனைவரின் மனதையும் இதமானவலைப்பூக்களின் நறுமணங்களால்  நிறைக்கவே விரும்புகின்றேன்...

எனது வலைத்தளம் பற்றி

 வலைத்தளம் பற்றி நான் சிறிதே அறிந்த நிலையில் பூத்த பூ இது....www.velunatchiyar.blogspot.com-thendral  

தென் தமிழ்நாட்டில் தோன்றிய புயல்,சிவகங்கைச்சீமையின் ராணி வீரமங்கை வேலுநாச்சியார் சுதந்திரத்திற்காக போராடிய பெருமையை அறிந்த கணத்தில் அவருக்கு பெருமை சேர்க்க ஏதேனும் செய்யனுமே என்ற எண்ணத்தில் அவர் பெயரையே எனது வலைப்பூவிற்கு சூடி மகிழ்ந்தேன்.

                                                  தமிழ் தானும் வளர்ந்து மற்றவர்களையும் முன்னேற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் அருள்முருகன் மற்றும் அய்யா முத்துநிலவன் ஆகியோரின் தொலைநோக்கு சிந்தனையால் தமிழை இணையத்தில் வளர்க்கும் நோக்கத்தில் எங்களுக்கு அளிக்கப்பட்ட கணினிப்பயிற்சியே எனதுவலைப்பூ வளர  நீரூற்றியது.....

திண்டுக்கல் தனபாலன் சாரும் கரந்தை ஜெயக்குமார் சகோதரும் அளித்த பயிற்சி இன்னும் நீங்காமல் மனதில்...தொடர்ந்து அவர்கள் அளிக்கும் ஊக்கமே என் வலைப்பூ சோலையாக மாறி , வலைச்சரப்பணிக்கு என்னை அழைக்க காரணமானது.

இதுவரை 300பதிவுகள் பதிந்துள்ளீர்கள் வாழ்த்துகள் என சீனா அய்யா கூறியபின் தான் அப்படியான்னு கவனித்தேன்....மலைப்பாகத்தான் இருந்தது முதலில்...இந்த பதிவுக்காக அனைத்துப் பதிவுகளையும் மீண்டும் பார்க்கும் போது நினைவலைகள் வலைப்பூவின் வாசத்தை உணர்த்தியது... 

என் எழுத்துகள் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு நன்மையை விளைவிக்க கூடியதாக,சமூக அக்கறை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற  எண்ண அலைகளில் தோன்றியது கவிதையாக ,கட்டுரையாக ,அனுபவமாக என பல்வேறு தலைப்புகளில் தென்றல் மணம் பரப்புகின்றது....பள்ளி ஆசிரியராக பணி புரிவதால் என் உலகம் குழந்தைகளைச் சுற்றியே உள்ளது.எனது படைப்புகளில் அவர்களே பெரும்பாலும் ஆக்கிரமிக்கின்றனர்...

இனி தென்றலின் வாசம் நுகர்வோம்


*கவிதைகளே என் உணர்வுகளுக்கு வடிகாலாய் அமைகின்றது.மனதில் உணர்ந்தவைகளே கவிதைகளாக பூத்துள்ளன.  மனவலியில் பிறந்த கவிதை இது...என்னை யார் என எல்லோருக்கும் அடையாளப்படுத்திய கவிதை.... எல்லோராலும் மிகவும் பார்க்கப்பட்ட ,பேசப்பட்ட கவிதை....இன்றைய பெண்களின் நிலையாக மீளா வலியை உணர்த்தும் கவிதை..

* எல்லோரையும் ஊக்கப்படுத்தி வழிநடத்தும் கவிஞர் ,எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர்,5.10.14இல் மூன்று புத்தகங்களை வெளியிடுபவரும் ,அன்பு சகோதரருமான முத்து நிலவன்அய்யாவின் அணிந்துரையாய் எனது”விழிதூவிய நூல்”கவிதை நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் கட்டுரை இது

*என்னை பார்க்கும் போதெல்லாம் அக்கா இந்த கவிதைய மறக்கவே முடியலக்கா என்று கூறும் அன்புசகோதரி.இவரைப்போல நகைச்சுவையாக எழுதி மனம் கவர வைக்க முடியுமா...என என்னை கவலைப்பட வைத்த திறமைச்சாலி.இவரிடம் கற்றுக்கொண்டே வலைச்சரத்தில் பயணிக்கின்றேன். ..சமூக நோக்குள்ள ஆசிரியர் ...மாணவர்களுக்கு கிடைப்பதரிது இக்காலத்தில் ஆனால் இவரும் இவரது துணைவரும் சிறந்த ஆசிரியர்களே ....யாரன்று ஊகிக்க முடிந்ததா...நீங்கள் நினைப்பது சரிதான் சகோதரி மைதிலி&சகோதரர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் தான் இந்த உற்சாகத்திற்கு சொந்தக்காரர்கள்...ஆஹா சகோதரிய  பற்றிஎழுதும் போதே வார்த்தைகள் வரிசைக்கட்டி நிற்கின்றதே...நன்றி மைதிலி...

*எங்க புதுக்கோட்டை தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒன்று...தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகம்  உள்ளது.மேலும் புதுக்கோட்டை கி.மு.5000 நூற்றாண்டுக்கு முந்தைய காலத் தொன்மை வாய்ந்தது என எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் உலகறியச்செய்யப்பட்டது..பள்ளிக்குழந்தைகளுடன் ஜாலியா ஒருநாள்....பாக்குறீங்களா நீங்களும்...


*நாட்டிற்காய் உழைப்போர் அருகி வரும் நிலையில்...நாட்டைக்காக்க தன்னை இழந்த வீரன் மேஜர் முகுந்த் வரதராஜனின் மகள் இவள் ...


*ஒரே சமூகச்சிந்தனையாவே போகுதேன்னு ஒரு மலைப்பயணத்திற்கு உங்களை அழைத்துசெல்ல முடிவெடுத்தேன் போலாமா

*ஒரு தேவதை போல என் வகுப்பில் இருந்தாள்.அவளைப்பற்றி இப்படி ஒரு கதை எழுத நேரிடும் என நினைக்கவேயில்லை.... படிக்கிறீங்களா....அனீஸ்

*என் பாட்டியிடம் பேசும் போதெல்லாம் என் தாத்தாவைப் பற்றி அதிகம் கேட்பதுண்டு ...எத்தனை முறைக் கேட்டாலும் சொல்வதற்கு அலுக்காத நாங்களும் கேட்பதற்கு அலுக்காத ஒன்று...சுதந்திரம் பற்றி பேசும் போதெல்லாம் உடல் சிலிர்க்கும்....என் சமூக அக்கறையின் வித்து இங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும் ....

*அன்பை நோக்கிய உலகம் இன்று இதை மட்டுமே நோக்குவதால் உலகே அழிவின் பாதையில்....

*இப்போது பெண்களைச் சிதைப்பதற்கு புது வழி ஒன்று கிடைத்திருக்கின்றது..நினைக்கவே அஞ்சும் செயல்களை எளிதாய் செய்துவிடுகின்றார்கள்.இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைதான்.அதன் வலி உணராதவர்கள்...உணர.

* தமிழின் பெருமையை உணர்ந்தவர்கள் இவ்விலக்கியங்களின் பெருமையையும் அறிந்திருப்பார்கள்.தமிழாசிரியர் மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்கள் படிக்க வேண்டிய நூல்களின் தொகுப்பு.வலைச்சரத்தில் வந்த பதிவு இது

*கடிதங்கள் கையெழுத்து மட்டுமல்ல முகமும் காட்டும் கண்ணாடி....மகளிடம் இருந்து கடிதத்தை எதிர்நோக்கும்  தாய் இவள்

*எத்தனையோ இயந்திரங்களை கண்டு பிடித்து விட்டோம்.செவ்வாயில் நிலை நிறுத்தி விட்டோம் மங்கள்யான்..ஆனால் இவர்கள் மாறாமல் இன்றும்

*ஒரு அம்மாவிடம் உங்களுக்கு மிகவும் சிரமமான வேலை எதுவென கேட்டால்.....கூறும் பதிலாய்

*முன்பெல்லாம் திருமண விழாக்களுக்கு செல்வதென்றாலே ஒரே ஆட்டம் தான்....எப்படா வரும்னு காத்திருந்து ஐந்து நாள் விழாக்கள் போல சுற்றங்கள் புடை சூழ நிகழ்ந்த விழாக்கள் சிறுவயது  நினைவலைகளில்...பாவம் இந்தப்பாட்டி

*அட..வெட்கம் பெண்களுக்கு மட்டும் சொந்தமா


*ஆஹா நிறைய பதிவுகள் நான் நான்னு எட்டிப்பாக்குதுக .என் வலையில் வீழ்ந்த உங்களுக்கு நன் முத்துக்களே கொடுத்துள்ளேன் என நம்புகின்றேன்....

             அப்பாடா ஒரு வழியா முதல் நாள் முடிஞ்சிடுச்சு....ம்னு ஒத்துக்கொண்ட நாள் முதல் நல்லா செய்யனுமேன்னு ஒரே கவலை...முடிச்சிட்டோம்ல..இனி உங்க கவல படிக்கிறதெல்லாம்...இன்னும் ஒரு வாரத்துக்கு விடமாட்டோம்ல...நாளைக்கு பாக்கலாமா...!


 




41 comments:

  1. வணக்கம்
    சிறப்பான அறிமுகத்துடன் தங்களின் பதிவுகளைஅறிமுகம் செய்துள்ளீர்கள் இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்....மனதில் சற்று பதட்டத்துடன் தான் உங்களின் ஊக்கத்திற்கு நன்றி

      Delete
  2. வாழ்த்துக்கள்
    அருமை சகோதரி பணி சிறக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ...மிக்க நன்றி...வருகைக்கு...

      Delete
  3. வணக்கம் ஆசிரியரே... தங்களின் அருமையான பகிர்வுகளோடு சுய அறிமுகம் நன்று... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்..மிக்க நன்றி..

      Delete
  4. Replies
    1. அடடே... ரொம்ப மகிழ்ச்சி சகோதரீ. உங்கள் மகள் “வேலுநாச்சியாருக்கு“ நானும் தாய் மாமனாக இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.
      மிகப்பெரும்பாலும் படித்தவைதான் என்றாலும்.. உங்களின் சுருக்க விளக்கம் படிக்கத் தூண்ட இப்போது மீண்டும் படித்தேன்..
      நம்ம கண்முன் தவழ்து நடைபழகிய குழந்தை..கிடுகிடுன்னு வளர்ந்து, ஆளாகி, திருமணக்கோலத்தில் நிற்கும்போது நமக்கு ஒரு திகைப்பும் மலைப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுமே.. அப்படி ஓர் உணர்வு எனக்கேற்பட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முதல்நாள் படைப்புகள் வழியே சுயஅறிமுகம் கலக்கிவிட்டீர்கள்... வாழ்த்துகள்.. (மலைப்பயணக் கவிதையைத் தேடினால், மீண்டும் -அதற்குமுந்திய- மேஜர்மகள் கவிதையே வருகிறது..அதற்கடுத்த சுட்டியிலும் அவ்வாறே.. இரண்டையும் கவனித்துச் சரிசெய்ய வேண்டுகிறேன்..)

      Delete
    2. ஆஹா வணக்கம் சார்...மைதிலிக்கு தான் நன்றி சொல்லனும் பொறுமையா என் சந்தேகத்தை எல்லாம் நீக்கியமைக்கு....
      உங்கள் வாழ்த்துகள் என்னை வலைப்பூ மேலும் சிறக்க துணை செய்யும்...என்ன ஒண்ணு நகைச்சுவைக்கு மருந்துக்கூட வர மாட்டேங்குது பார்ப்போம்.தவறை சுட்டியமைக்கு நன்றி திருத்திவிட்டேன் சார்...

      Delete
  5. வாழ்த்துக்கள் சகோதரி,,/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ...

      Delete
  6. வாருங்கள் சகோதரியாரே! என்ன அருமையான கவித்துவ அறிமுகம்! மிகவும் ரசித்தோம்! வாழ்த்துக்கள்! கலக்குங்கள் இந்த வாரத்தை! தொடர்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ..மிக்க நன்றி

      Delete
  7. வலைச்சரத்தில் தங்கள் பணி சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்.

      Delete
  8. வணக்கம் தோழி கீதா!

    வலைச்சர வாரம் சிறப்பிக்க வந்தீர்களோ!.. அருமை!..
    உளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

    தென்றலாய் வீசிநம் சிந்தைகவர் தோழிகீதா!
    கொன்றலாய் உன்கவிதை கொட்டுதே! - நன்றாக
    எங்களுளம் நீநிறைந்தாய்! இங்கும்நின் சேவையோங்க
    மங்கலமாய்ப் பொங்கும் வலை!

    சுய அறிமுகம் மிகச் சிறப்பு!
    வீரப் பரம்பரை! மனம் வீசுகிறது உங்கள் எழுத்துக்களிலும் பணியிலும்!
    தலை வணங்குகிறேன்! உள்ளம் நிறைந்தீர்கள்!
    சிறப்பு வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி..மிக்க நன்றிம்மா

      Delete
  9. அக்கா,
    என்ன இது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்:( நான் ஒன்னும் பெருசா செய்திடல அக்கா! உங்க பதிவுகள் ஊடாக நம்ம பட்டாளத்தையே அறிமுகம் செய்திருக்கும் பாங்கு உங்கள் நட்பு மனதிற்கொரு மலர்க்ரீடம்:) அட! அக்காவை வாழ்த்த வந்தா வார்த்தை அருவியா கொட்டுதே! தென்றல் வீசும் இடமும் அருவியும் அருகருகே இருப்பது இயல்பு தானே! தொடர்ந்து வீசட்டும் இந்த தமிழ்த் தென்றல் !!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா கொஞ்சம் உன் திறமைகள் காற்றில் தவழ்ந்து எனையும் சேர்ந்ததம்மா...நன்றிடா

      Delete
  10. வலைச்சரத்தில் தங்களின் ஆரம்பம் அருமை சகோதரி...வாழ்த்துக்கள்.





















    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மிக்க நன்றி சகோ...

      Delete

  11. சகோதரி அவர்களே! வருக! வணக்கம்! வாழ்த்துக்கள்!
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ...மனம்நிறைந்த நன்றி...

      Delete
  12. பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ...மிக்க நன்றி வருகைக்கும் அன்பிற்கும்...

      Delete
  13. அறிமுகம் சிறப்பு! வலைச்சர பயணம் இனிதே சிறக்கட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்...மனம்நிறைந்த நன்றி..

      Delete
  14. இந்த வாரத்தை சிறப்பான முறையில் நடத்துவீர்கள் என்பதற்க்கு இன்றைய அறிமுகமே சாட்சி வாழ்த்துக்கள் சகோதரி.
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. அய்யோ சகோ இதுக்கே முழி பிதுங்கிடுச்சு...பார்ப்போம்...நன்றி...

      Delete
  15. வணக்கம் சகோதரி...
    சிறப்பாக வலைச்சர வாரமாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ...மனம் நிறைந்த நன்றி...

      Delete
  16. தங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  17. சிறப்பான வலைச்சரப்பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்ரிம்மா

      Delete
  18. அருமையான அறிமுகம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அழகிய முறையில் சுய அறிமுகம்!
    பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  20. நல்ல அறிமுகம். தங்கள் பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார் வருகைக்கு நன்றி.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது