07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 15, 2015

ஸ்கூல் பையன் மீண்டும் வலைச்சரத்தில்

அனைவருக்கும் வணக்கம். இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டேன் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஏற்கனவே வலையுலகில் நிறைய நண்பர்கள் இருந்தாலும் வலைச்சரம் வாயிலாக இன்னும் பலரையும் காண்பதில் / காணப்போவதில் மிக்க மகிழ்ச்சி.

முதல் நாள் சொந்தப் பதிவுகளை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்பதால் கடந்த வலைச்சரப் பணிக்குப் பின் எழுதிய சில பதிவுகளை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


நம்மில் பலர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்கிறோம்.  தொப்பையைக் குறைக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கொழுப்பைக் குறைக்க, உடல் உறுதி பெற என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.  ஆனால் நாம் இப்படி மாங்கு மாங்கென்று நடக்கிறோமே, நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?  நாம் நடந்ததற்கு ஒரு அளவு சொல்ல முடியுமா?  முடியும் என்கிறது இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷன்.



சென்னையிலேயே மிகப்பெரிய ஹோட்டல் இதுதான். ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இது கிண்டி ஸ்பிக் வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது.  இனி வரும் காலங்களில் சோழா ஹோட்டலுக்கு எதிரே ஸ்பிக் பில்டிங் அமைந்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் ஒருநாள் மதியம் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றிய பதிவு.


ஒரு அனுபவப் பகிர்வு. இப்போதும் கூட தினம் பத்து பேராவது  படித்துவிடுகிறார்கள். பல்பு வாங்கிய பதிவு என்று கூட சொல்லலாம். படித்துப் பாருங்கள்.


மின்னணு சாதனங்கள் மனிதனை ஆக்கிரமித்திருக்கும் இந்த காலகட்டத்தில் இதனை எதிர்த்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். படியுங்கள். கடைசியில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.



தாத்தா பற்றிய பதிவும் ஆச்சி பற்றிய பதிவும் அதிக வரவேற்பைப் பெற்றன.

என் தாத்தாவை எனக்கு எப்போதிலிருந்து பரிச்சயம் என்று தெரியாது. ஆனால் அம்மா சொல்லுவார், நான் பிறந்ததும் முதல்முறையாக என் தாத்தாவின் கையில் தான் கொடுக்கப்பட்டேன் என்று. என்னைக் கையில் வாங்கியதும், "பேரப்புள்ள" என்று மகிழ்ந்து கொஞ்சியவர். அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தான் முதல் பேரக்குழந்தை என்பது கூட காரணமாக இருக்கலாம்.


அந்த சனிக்கிழமை இரவு ஒன்பது முப்பது மணிக்கு அம்மாவிடமிருந்து போன். "கோமதி ஆச்சி போய்ட்டாங்க சரவணா" அம்மாவின் கண்களில் கண்ணீர் உகுத்திருப்பது குரலில் தெரிந்தது. "என்னம்மா ஆச்சு?" மீதி விவரங்களைக் கேட்டுக்கொண்டேன்.




சும்மா ஹோட்டல், சினிமா, அனுபவம் என்று எழுதிக் கொண்டிருந்த எனக்கு சிறுகதைகள் எழுதும் ஆசை வந்திருக்கிறது. சிற்சில கதை எழுதியிருக்கிறேன். சிலவற்றுக்குப் பாராட்டும் சிலவற்றுக்குத் திட்டும் வாங்கியிருக்கிறேன்.

பாராட்டு பெற்ற சிறுகதைகள்

அவள் பெயர் நான்சி. அவளுடன் வாக்கிங் வருபவர் அப்படித்தான் அழைப்பார். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் அவருடைய குரலைக் கேட்கமுடியும். நான்சி எங்காவது நின்றுவிட்டால் "நான்சி கமான்" என்பார். சாலையில் கிடக்கும் தேவையில்லாத வஸ்துக்களை அவள் முகர்ந்தால், "நான்சி டோன்ட்" என்பார். அவளும் அவருடைய சொல்பேச்சைத் தட்டமாட்டாள். அவர்கள் வீடு இருக்கும் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டித்தான் நான் வசிக்கிறேன். என் இருப்பிடத்தைக் கடந்துசென்று தெருமுனையிலிருக்கும் கடையில் அவர் தினமும் தேநீர் குடிப்பார். நான்சிக்கு பிஸ்கட்.


நான் இப்போது மீனாட்சியைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். தேடி என்றால் காணவில்லை என்று பொருள் கொள்ளவேண்டாம். அவள் இங்கேயே தான் இருக்கிறாள். எனக்காகவே காத்திருக்கிறாள். கொஞ்சமல்ல, பதினேழு வருடங்களாய்.


கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள்.


திட்டு வாங்கிய சிறுகதைகள்

அலுவலகம் முடிந்து வெளியே வந்தபோது மணி பத்தைக் கடந்திருந்தது. நான் எப்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும் என்று திட்டமிடுகிறேனோ அப்போதெல்லாம் ஏதாவது முக்கியமான வேலையில் மாட்டிக்கொள்கிறேன்.


இந்தக்கதையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரம் நான் இறந்துபோயிருப்பேன். காரணம் - விரக்தி. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன விரக்தி என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.


இயக்குநர் கேபிள் சங்கருடைய தொட்டால் தொடரும் திரைப்படம் வெளியாகவிருந்த சமயத்தில் அவர் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, "தொட்டால் தொடரும்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் ஒரு நல்ல கருத்துள்ள குறும்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதையொட்டி என் மனதில் தோன்றிய ஐடியா ஒன்றை நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க,அவருக்கும் இது பிடித்துப் போனது. அவ்வகையில் நான் எடுத்த குறும்படம் - தொட்டால் தொடரும்.



சுய அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். நாளை முதல் பதிவர் அறிமுகம் தொடங்குகிறேன். நான் எழுதிய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் அந்தந்தப் பதிவிலோ அல்லது இங்கேயே பின்னூட்டத்திலோ சொல்லுங்கள்.

நன்றி...



31 comments:

  1. என்னது...? கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் வரும்வெள்ளியன்று தான் வெளியாகப் போகிறதா..? அப்போ இதுக்கு முந்தி வெளியானது ட்ரெய்லர் தானோ..? அவ்வ்வ்வ்வ்வ்.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பதிவிலிருந்து இரண்டு வரிகளை சுட்டிக் காட்டியிருந்தேன், இப்போது சரி செய்து விட்டேன்.. நன்றி வாத்தியாரே...

      Delete
  2. சிறப்பான சுய அறிமுகம். தொடரவிருக்கும் மற்ற நல்லறிமுகங்களுக்காக ஆவலுடன காத்திருப்பு. வலைச்சர ஆசிரியர் ஸ்கூல் பையருக்கு அழுத்தமான கைகுலுக்கலுடன் மகிழ்வான வரவேற்பும் நல்வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள். இவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றை படித்திருக்கிறேன்.விட்டுப் போனவற்றையும் படித்து விடுகிறேன்.நல்ல பதிவுகளின் அறிமுகங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  4. இந்த வாரம் கலக்க வாழ்த்துகள் சகோ. உங்கள் தள பதிவுகளையும் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  5. வலைச்சரப் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள். சுய அறிமுகம் சுருக்கமாக, நன்றாக உள்ளது. தங்களது தளத்தினைப் படித்துவருபவர்களில் நானும் ஒருவன். தங்களது பணி சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  6. அருமையான சுய அறிமுகம். இங்கே குறிப்பிட்டிருக்கும் பல பதிவுகளை முன்னரே படித்திருக்கிறேன்.

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பு - இந்த வாரத்திற்கு! பாராட்டுகள் சரவணன்.

    ReplyDelete
  7. நல்ல சுய அறிமுகம்.......தங்கள் பதிவுகளை வாசித்துள்ளோம்.......அறிமுகங்களைக் காண ஆவலுடன் தொடர்கின்றோம் சரவணன்....

    வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    ReplyDelete
  8. தங்களுக்கு நல்வரவு..

    மேலும் சிறந்தோங்கிட அன்பின் நல்வாழ்த்துகள்!.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  9. Noom Cardio Trainer - தரவிறக்கம் செய்து கொண்டேன்..

    பயனுள்ள இணைப்பினை வழங்கியதற்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  10. உங்கள் தளத்தில் சில பதிவுகள் வாசித்திருக்கிறேன். வாழ்த்துகள், கலக்குங்க சரவணன்.

    ReplyDelete
  11. வலைச்சர பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் ....! சுய அறிமுகம் நன்று ! தொடர்கிறேன் ...!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete

  13. வலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறை பொறுப்பேற்றிருக்கும் தங்களை வரவேற்று, தாங்கள் மேற்கொண்ட பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ஸ்கூல் இன்னும் திறக்கலையா? வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். உங்களின் சில பதிவுகளை உங்கள் தளத்திலேயே வாசித்திருக்கிறேன். விடுபட்டவற்றை நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் நண்பரே! சுய அறிமுகப் பதிவுகள் பெரும்பாலானவற்றைப் படித்து இருக்கிறேன்! சிறப்பான அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. ஸ்கூல் பையனா ? இங்கே தானே இருக்கிறார் ?
    என்று அந்தப் பள்ளியில் விசாரித்தேன்.
    ஸ்கூல் பையனா ?
    அப்படி ஒருவரும் இங்கே இல்லை.
    இல்லை சார். ஸ்கூல் பையன் இங்கு தான் இருப்பதாக சொன்னார் என்று அழுத்திச் சொன்னேன்.
    "யோவ். பெரிசு. ஒரு ஸ்கூல் லே ஸ்கூல் டீச்சர் அப்படின்னு இருப்பாங்க, ஸ்கூல் ஹெட் மாஸ்டர் அப்படின்னு இருப்பாங்க."
    இல்லீங்க...என்று நான் துவங்குவதற்குள்
    ஓஹோ..நீங்க அந்த கார்த்திக் சரவணன் அவங்களைச் சொல்கிறீர்களா ?
    தாத்தாவுக்கு கார்த்திக் என்று ஒரு பையன் இருக்கிறார்.
    தாத்தாவின் தங்கச்சிக்கு சரவணன் என்று ஒரு பையன் இருக்கிறார்.
    கார்த்திக் சரவணன் என்று ஒருவரும் இல்லயே என்று குழம்பிய நிலையில் இருக்கையில்,
    அவரே, நீங்கள் சொல்வது
    கார்த்திக் சரவணனா?அவராகத்தான் இருக்கவேண்டும்.
    அவர் இப்போது ஸ்கூல் பையன் இல்லை.
    ஸ்கூல் ஆசிரியர், பின்னே ஸ்கூல் பிரின்சிபால் எல்லாம் ஆகி, இப்ப
    வைஸ் சான்செலர் ஆக இருக்கிறார். என்றார்.
    எந்த யூனிவர்சிடி லே என்றேன்.
    வலைச்சரம் பல்கலைக் கழகம் அதுலே...போய் விசாரிச்சு பாருங்க.
    என்றார்.
    அதான் வந்தேன்.
    வாசல் திறந்தே இருக்கிறது.
    வருக வருக எனச் சொல்கிறது.

    சார் !! சார் !
    உள்ளே வரலாமா ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
    Replies

    1. உத்தம வில்லன் பட விமர்சனமாக இருக்குமென அங்கு போய் பார்த்தேன்.
      அப்போது தான் பார்த்தேன்.
      நீங்கள் சொன்ன இடத்தில் தான் நானும் நின்று கொண்டு இருக்கிறேன்.

      மழை நின்றுவிட்டது.
      ரோடில் அவ்வளவு வெள்ளம் இல்லை.

      இருந்தாலும் போகும் வழியில் அந்தக் குழி எங்கு இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.

      நீங்க எழுதியது கதை தானே...இல்ல..உண்மையாவே நடந்ததா ???

      சுப்பு தாத்தா.

      Delete
  19. வாங்க சரவணன்.வாழ்த்துகள் கலக்கலான வாரத்தை எதிர்நோக்கி...

    ReplyDelete
  20. கலக்க வாருங்கள் நண்பரே...

    ReplyDelete
  21. இனிய வாழ்த்துக்கள்!அருமையான சுய அறிமுகம் ..பதிவுகளில் சிலவற்றை படிச்சிருக்கேன் மீதி எல்லா லின்க்சையும் படிக்கணும்

    ReplyDelete
  22. வா தம்பி வா! வலைச்சரத்தில் பதிவர்களை தா தம்பி தா

    ReplyDelete
  23. இனி அமர்க்களம் தான்... வாழ்த்துகள் ஸ்.பை...

    ReplyDelete
  24. சென்ற முறை ஸ்கூல் பையனாக கலக்கினீர்கள் .இம்முறை கார்த்திக் சரவணனாக கலக்க வாழ்த்துகள் :)
    அன்று ,நான் பொருத்தமாய் போட்ட கமெண்ட்கூட நினைவுக்கு வருகிறது !

    ReplyDelete
  25. தொட்டால் தொடரும் பார்த்து ரசித்தேன் ஸ்.பை சில கதைகள் வாசிக்கவில்லை நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன். தொடர்ந்தும் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  26. இரண்டாம் முறையாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. பால கணேஷ் அவர்கள் கடந்த பதிவர் மாநாடு நடந்து முடிந்த பின்னே இருந்து சற்று கோபமாக இருக்கிறார் . அவருடைய கோபம் இன்னும் தணியவில்லை என நினைக்கிறேன்.

    நானும் உங்களைப் போல் தான் அவரிடம் நேரில் சொல்லவில்லை என்றாலும் அவர் பதிவில் அவரிடம்

    உங்கள் கருணைப் பார்வையை தொடருங்கள் என்று கேட்காமல் இல்லை.

    போதாக்குறைக்கு,அவர் இன்னும் ஒரு பதிவு எழுதுகையில், மயிலை கற்பக விநாயகருக்கு 1008 தேங்காய்கள் உடைத்து, , 1008 கொழக்கட்டைகள் நைவேத்யம் செய்வதாக மனமுருக வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    (வேண்டுதல் சிலவு அவர் சிஷ்யர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. )
    www.subbuthathacomments.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  28. இனிய வாழ்த்துக்கள்! தங்களிற்கும் எல்லோருக்கும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது