07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 3, 2007

நுனிப்புல்லின் ருசி அறிய ஓர் அழைப்பு...

மு. கு : இது வலைச்சரத்தின் நூறாவது பதிவு.


வணக்கம்.

அறிமுகம் ஏதும் இல்லாமல் சட்டென நுழைகிறேன். சட்டென மேடைக்குள் தள்ளப்பட்ட, வசனத்தின் தொடக்கம் மறந்த குழந்தையின் உணர்வுடன் எழுதத் தொடங்குகிறேன். நான் சித்தார்த். அங்கிங்கெனாதபடி என்ற ஒரு வலைப்பதிவை வைத்திருக்கிறேன் (எப்போதாவது அதில் எழுதவும் செய்கிறேன்). இவ்வாரம் வலைசரத்தை நான் தொகுக்கப்போகிறேன். அழைத்த பொன்ஸுக்கு நன்றி.

முதலில் வலைப்பதிவு எனும் கருத்தாக்கத்தைக் குறித்த எனது கருத்துக்கள் என
தொடங்கி, வெப் 2.0, பரவலாகும் ஜனநாயகம், புதிய ஊடகத்தின் பெருவெடிப்பின்
விளிம்பு என்றெல்லாம் ஜல்லி அடிக்கலாம் என்று தான் பார்தேன். ஆனால் சில
காலம் கழித்து இதை படிக்கையில் எனக்கே மண்டையில் போட்டுக்கொல்ல வேண்டும் போல இருக்கும். இதில் உங்களை வேறு ஏன்....

தமிழ் இணையத்தை பொருத்தவரை எனது தளம் இலக்கியம் மற்றும் திரைப்படம் தான்.அதுவும் கூட பெரிய அளவிலான வாசிப்பெல்லாம் இல்லை. எனக்கென சில சுட்டிகள்.அதில் வரும் புதிய இடுகைகள். எப்போதாவது திரட்டிகளில் மேய்வது... ஏன் சொல்கிறேன் என்றால், இந்த வாரம் பெரியதாக என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்பதற்காகத் தான்.

முதல் இடுகையாக எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவுகள்.

ஒன்று சன்னாசியில் "கரிசல்". நீண்ட நாட்களாக நான் தொடர்ந்து வாசித்து
வரும் வலைப்பதிவு. சிலரிடம் உங்களுக்கு தோன்றும் ஈர்ப்பிற்கு காரணமேதும்
சொல்ல இயலாது. அது போன்ற ஈர்ப்பு தான் எனக்கு சன்னாசியின் பதிவுகளைப்
படிக்கையில். கூர்மையான நகைச்சுவை உணர்வு உண்டு. இவரது பெரும்பாலான பதிவுகள் இலக்கியம் மற்றும் திரைப்படங்களை சுற்றியே உள்ளது. பல வேற்று மொழி கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். சில கவிதைகளை எழுதியும் உள்ளார். இவற்றையும், இவரது கட்டுரைகள் சிலவற்றையும் பிரம்மராஜன் கவிதையைப் படிப்பதைப் போல படித்துவிட்டு கொஞ்ச நேரம் மண்டையை சொறிந்து விட்டு சென்று விடுவேன்.சு.ரா மொழியில் சொன்னால், ஆர்வமான (பெரும்பாலும்) புரியாத எழுத்து.

சில இடுகைகளுக்கான சுட்டிகள் :

கொற்றவை நாவலைக் குறித்து சன்னாசி எழுதியது. (கொற்றவையை விட கடின
மொழியில் அதற்கு ஒரு கட்டுடைப்பு)
http://dystocia.weblogs.us/archives/228

பியர் குடிக்கப்போய் எடுத்து வந்த புகைப்படங்கள்

http://dystocia.weblogs.us/archives/237

பெர்ஃபியூம் திரைப்படத்தை குறித்த பதிவு.

http://dystocia.weblogs.us/archives/241


மற்றொரு இடுகை பாம்பாட்டிசித்தனின் "நடைவழிக் குறிப்புகள்"

பாம்பாட்டி சித்தன் எனது நண்பர். கவிஞர் (முதல் தொகுப்பு அடுத்த மாதம்
வரலாம்). இப்பதிவின் கட்டுரைகள் எனக்கு மிகவும் அருகில் இருப்பவை. இவை என் கண் முன்னால் உருவானவை. மிகுந்த உழைப்பை வேண்டி நின்றவை. சில இடுகைகள்...

புதுக்கவிதையின் வரலாறு குறித்த கட்டுரைத் தொடர்.

http://thaaragai.wordpress.com/2006/10/25/puthukkavidai_3/


ழாக் பிரவரின் கவிதைகள் குறித்த பதிவு:

http://thaaragai.wordpress.com/2006/10/27/prevert/


உப்பு - திரைப்பட விமர்சனம்

http://thaaragai.wordpress.com/2006/04/21/uppu-review-6/

3 comments:

  1. வாய்யா சித்தார்த் வா! வா!!

    சன்னாசி அட்டகாசமான பதிவர் இல்ல! ஒரு ஒற்றுமை தெரியுமா என் வாரத்தில் முதலில் அவரை பற்றித்தான் எழுதினேன் அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்ல.மனுசன் எங்க இருக்கார்?என்ன ஏது ன்னு ஒண்ணும் தெரியல தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க மக்கா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தலைவா!

    நிலவைச் சுமந்த நடுக்கம் இன்னும் குறையலியா? :-)

    அய்யனார்,
    நாம யாரையாச்சும் விரும்பிப் படிச்சா அவங்க மட்டும் காணாமப் போயிருவாங்க! நம்ம ராசி அப்படி :)

    ReplyDelete
  3. ஆமாம் அய்யனார். சன்னாசிய பத்தி ஒன்னும் தெரியாது. தெரிஞ்சி என்ன ஆகப்போகுதுன்னு நானும் தனிப்பட்ட விவரம் எதையும் கேட்டுக்கல...

    நன்றி முபாரக். அதெல்லாம் இப்போதைக்கு அடங்கற மாதிரி இல்ல :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது