07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 24, 2007

பொன்ஸின் தும்பிக்கையால் தூக்கிவரப்பட்டு...

நண்பர்களிற்கு வணக்கம் என்னதான் வலைப்பூவில் எழுதிக்கிழித்தாலும் உங்களில் நிறையப்பேருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் வலைப்பதிவுகளை விட வலைப்பதிவர் சந்திப்புக்கள் மூலமாக கொஞ்சப்பேருக்கு அறிமுகமாயிருப்பேன் என்று நினைக்கிறேன்.

நான் படித்த இரண்டாமாண்டு சைவநெறி புத்தகத்தில் முதலாம் பாடமாக ஒரு கதை இருந்தது. யாரோ இரண்டு நாயன்மார்களோடு ( பேர் மறந்து போச்சுங்க) சேர்ந்து கொண்டு ஒளவைப்பாட்டி கைலாயத்திற்கு போகவிரும்பியதாகவும். அதற்காக ஒவைப்பிராட்டி வழக்கமாக தான் பூசை செய்கிற பிள்ளையாருக்கு அவசரஅவசரமாக பூசை செய்துவிட்டு போக வெளிக்கிட்டாராம். உடனே பிள்ளையாருக்கு விளங்கிவிட்டதாம் ஒளவையார் அவசரமாக பூசை செய்கிறார் என்று. (மோதகம் சைசில் வழமையை விட சின்னதாயிருந்ததை வைத்து கண்டு பிடித்திருப்பாரோ) உடனே அவர் ஒளவையிடம் கேட்டிருக்கிறார் பாட்டி ஏன் அவசரப்படுகிறாய் என்று. ஒளவையும் காரணத்தை சொல்லியிருக்கிறார். உடனே பிள்ளையார் இதென்ன பிரமாதம் நீ வழமை போல மோதகத்தை பெரிசாப்பண்ணு சீ பூசையைப் பெரிசாப்பண்ணு நான் உன்னை வேகமாக கொண்டு போய் சேர்க்கிறென் என்று சொல்லி பூசை முடிந்ததும் ஒளவையை தும்பிக்கையால் தூக்கி கைலாயத்தில் வைப்பாராம் என்று அந்த கதை முடியும். ஏ4 அளவைவிட சற்றே பெரிய அளவில் இருக்கும் அந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்தில் இருக்கும் கைலாயத்திற்கு தும்பிக்கையில் ஒளவைப்பாட்டியை அலற அலற இல்லை இல்லை அலேக்காக பிள்ளையார் தூக்கி வைக்கும் காட்சியும் வரைந்திருப்பார்கள்.

நண்பர்களே இந்த கதையை இவ்வளவு வேலை மினக்கெட்டு இங்கே எழுதுவதன் நோக்கம் என்ன. எங்கோயோ தொலைவில் கனவு கண்டு கொண்டு (அதாங்க தூங்கிக்கொண்டு ) இருந்த என்னை தனது தும்பிக்கையால் தூக்கிவந்து வலைச்சரத்தில் வைத்து விட்டார் பொன்ஸ் அக்கா. நேற்றே அவர் வரச்சொல்லியிருந்தும் நான் அதிகமாக தூங்கிவிட்டதால் வரமுடியவில்லை. அதனால் தான் தனது தும்பிக்கையால் ஒரு தட்டு தட்டி இன்று தூக்கி வந்திருக்கிறார்.

என்னைப்பற்றி நானே சொல்வதற்கு வேற எதுவும் இருப்பதாய் நினைக்கவில்லை எதற்கும் இருக்கட்டும் என்று சினேகிதி இங்கே வலைச்சரத்தில் எழுதியதையே மறுபடியும் படித்து பார்க்கு மாறு வேண்டுகிறேன். வரும் நாட்களிலும் எனது பொ.க.ச பதிவுகள் தொடரும் மன்னிக்கவும்(ஹி ஹி ஹி) வலைச்சரப்பதிவுகள் தொடரும். முதல் முறையாக பாமினியில் அல்லாமல் தமிங்கிலீசில் தட்டச்சிடுவதால் எழுத்துப்பிழைகளை பெரிய மனசு பண்ணி மன்னிக்கவும்….

14 comments:

 1. அடடா! அகிலனா!! வாங்க வாழ்த்துக்கள்...

  பொ.க.ச பதிவு வேண்டாம்...பா.க.ச பதிவு வேண்டும்!ண்டும்!டும்!ம்!

  ReplyDelete
 2. //ப்ரியன் said...
  அடடா! அகிலனா!! வாங்க வாழ்த்துக்கள்...

  பொ.க.ச பதிவு வேண்டாம்...பா.க.ச பதிவு வேண்டும்!ண்டும்!டும்!ம்! //

  இந்த பின்னூட்டம் தலயின் சிறப்பு கவனத்திற்கு அனுப்பப்டுகிறது.
  மற்படி பா.க.ச அன்பர்கள் பொ.க.ச என்பதை எழுத்துப்பிழையாக அதான் (பா.க.ச)இப்போதைக்கு கருதிக்கொள்வதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுகிறேன்

  ReplyDelete
 3. ஔவை யின் கதையா நல்லா இருக்கே..

  ReplyDelete
 4. அடப்பாவீ... ஒனக்கு ஒரு பொருப்பான வேலையைக் கொடுத்தா... அங்கன போயும் சங்கத்தை திறப்பேன்னா.. என்ன அர்த்தம்...?!

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ப்ரியன்... இருய்யா...இரு... எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல போகும்.. !?

  ReplyDelete
 5. அகிலன்! உங்கள் வலைச்சரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. //♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
  அடப்பாவீ... ஒனக்கு ஒரு பொருப்பான வேலையைக் கொடுத்தா... அங்கன போயும் சங்கத்தை திறப்பேன்னா.. என்ன அர்த்தம்.....//

  தல நானா எதையுமே ஆரம்பிக்கிறதில்லை பொறுப்பா வேலையை தும்பிக்கையாளை(னை) தொழுது ஆரம்பிக்கலாம்னு பாத்தா பிரியண்ண தான் சங்கத்தை திறந்தது...

  ReplyDelete
 7. வாழ்த்துகள் அகிலன்.

  தலைவர்
  பா.க.ச துபாய் கிளை
  துபாய் குறுக்கு சந்து

  ReplyDelete
 8. தலைப்பு என்னைத் தூக்கிக்கொண்டு வந்திட்டுது :-)) ஒளவைப்பாட்டின்ர கதை மாதரி நம்பி என்றொரு தம்பின்ர கதையும் இருக்கெல்லோ..ஆமா அந்த நாயன்மார் யாரென்று கண்டுபிடிச்சிட்டிங்கிளோ.

  ReplyDelete
 9. அகிலன்!

  முடிவா என்ன சொல்றீங்க. பொன்ஸ் அக்காவ புள்ளையாரு என்கிறீங்களா, ஆனை என்கிறீங்களா? :)

  வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.

  ReplyDelete
 10. சினேகிதி said...
  //ஒளவைப்பாட்டின்ர கதை மாதரி நம்பி என்றொரு தம்பின்ர கதையும் இருக்கெல்லோ..//

  ஓம் சினேகிதி நம்பி என்ற தம்பி சொன்தால் பிள்ளையார் மோதகம் சாப்பிட்டவராம் எண்டு வரும் அந்த கதைதானே சொல்லுறியள்.

  //மலைநாடான் said...
  அகிலன்!

  முடிவா என்ன சொல்றீங்க. பொன்ஸ் அக்காவ புள்ளையாரு என்கிறீங்களா, ஆனை என்கிறீங்களா? :)//

  அண்ணைபிள்ளையாரெண்டாலும் ஆனை எண்டாலும் ஒண்டுதான் இல்லையா...(ஹி ஹி ஹி)

  ReplyDelete
 11. வாங்க அகிலன்...எதிர்பார்க்கிறேன் நிறைய

  ReplyDelete
 12. http://madhavipanthal.blogspot.com/2006/09/blog-post_115878550807097410.html

  மற்றும்

  http://madhavipanthal.blogspot.com/2006/09/blog-post_115886389873412598.html

  ReplyDelete
 13. ரொம் ரொம்ப நன்றி பாலாராஜன்கீதா தங்கள் இணைப்புக்களிற்கு சினேகிதி கண்டு பிடிச்சாச்சு இப்ப....

  ReplyDelete
 14. ஒளவை-யானைக்கதை வாசிச்சன்...இப்ப ஞாபகம் வாற மாதிரியும் இருக்கு இல்லை மாதிரியும் இருக்கு :-))

  அது சரி அதான் பொன்ஸ் தூக்கிக்கொண்டு வந்து விட்டவா எல்லொ ..ஏன் நீங்கள் விட்ட இடத்திலயே நிக்கிறீங்கள்?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது