07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 27, 2007

பாலபாரதி சொன்னது போல....!!!

அன்பர்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடவேண்டுகிறேன். வலைச்சரத்தில் எனக்கு ஒரு பொறுப்பான கடைமையைக் கொடுத்தும் அதை சரிவர செய்ய முடியவில்லையே என்கிற கவலையில் இடப்படுகின்ற பதிவு இது.

என்ன செய்ய முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.

நான் வழக்கமாக ஒரு இணைய உலாவி மையத்தில் எனது இணையம் சார், மற்றம் தட்டச்சிடும் பணிகளை மேற்கொள்வது வழக்கம். பலர் அலுவலக கணிணிகளை தங்களது சொந்த கணிணியாக பயன்படுத்துவது போல நான் அங்கிருக்கும் கணிணியை பயன்படுத்துவதுண்டு. ஆனால் திடீரென்று அந்த மையத்தின் உரிமையாளரது தயார் மதுரையில் இறந்து விடவே. அவர் கடையை ப+ட்டி விட்டு மதுரைக்கு போய்விட்டார்(போகத்தானே வேண்டும்) ஆகவே இந்த வலைச்சர வாரத்துக்கான எனது முன்தயாரிப்புக்கள் அனைத்தும் ப+ட்டப்பட்ட நிலையில் வெளிவரமுடியாமல் சாவியற்றுத் துடிக்கின்றன. இந்த வாரத்தை அமர்க்களப்படுத்தும் திட்டங்கள் இருந்தும் அதையெல்லாம் செய்யமுடியாமல் விதியின் சதி என்னை தடுத்து விட்டது…

இனி விதியின் சதியை மீறி…

இந்த வார வலைச்சரத்தின் முதலாவது தொகுப்பு இது.


01.
இது புல்வெளி. ஈழத்தின் மிக முக்கியமான கவிஞராக கருதப்படுபவரால் நடத்தப்படுகின்ற வலைப்பூ இது. தமிழகத்தினால் ஆலவட்டம் போடப்பட்டு ஆராதிக்கப்பட்டு வருகின்ற ஈழத்துக் கவிஞர்களில் இவர் அடங்கவில்லை என்றாலும் ஈழத்தில் அடுத்த தலைமுறைக் கவிஞர்களின் வளர்ச்சியில் பெருமளவு ஆதிக்கத்தையம், அவர்களது வளர்ச்சிக்கான ஊக்கத்தையும் விளங்குகின்ற மூத்த கவிஞர் இவர். அவர்தான் கருணாகரன் இரண்டு கவிதைத் தொகுதிகள் தொகுதிகள் ஏற்கனவே வந்திருக்கின்றன.

இப்போதும் தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகின்ற. இவர் உலகம் முழவதிலும் இருந்து வெளிவரும் தமிழ் நாளேடுகள் சஞ்சிகைகளிலும் அரசியற்பத்திகளும் விமர்சனக்கட்டுரைகளும் எழுதி வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கேயும் இட்டு வைத்துள்ளார்.

02.
அடுத்தது பஹீமா ஜகான் கவிதைகள். ஈழத்தில் புதிய தலைமுறை பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர். ஒரு ஆசியயையாக இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் ஆசிரியப்பணியில் மூழ்கிக் கிடப்பதனால் வலைப்பூக்களில் அதிக நேரம் செலவிடுவதில். மிகவிரைவில் தமிழகத்தில் இருந்து பனிக்குடம் வெளியீடாக இவரது தொகுதி ஒன்று வெளிவரஇருக்கிறது. கவிதையால் உங்களை திணற அடிக்க இந்த வலைப்பூ தயார் உள்ளே போங்கள் பஹீமா ஜகான் கவிதைகளின் நனைய.


03.
இது காற்று. புல்வெளிக்குப்போய்ட்டு காத்து வாங்கலன்னா எப்புடி.நேற்றைய காற்று என்கிற வானொலி நிகழ்ச்சி மூலம் இலங்கையில் பிரபலமான வானொலியாளர். அதைவிடவும் மிக நல்ல கவிஞர். அவர்தான் இலங்கையில் நன்கு அறியப்பட்ட கவிஞர் மற்றும் வானொலியாளர் யு.எல் மப்றூக். அதைவிட பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக பத்திகள் எழுதிவருகிறார். இவரது கவிதைகளும் உங்களை ஆச்சரியப்படுத்தும். நிச்சயம்.


இன்னும் கொஞ்சம் வலைப்பூக்களின் தொகுப்பு இருந்தது. ஆனால் எல்லாம் இப்போது கைவசம் இல்லை. அதைவிட இவர்களுடைய எழுத்துக்களில் இருந்து சிலதை இங்கே இடவும் எண்ணியிருந்தேன். பாமினி அல்லாத தமிங்கிலீசில் தட்டச்சிடும் சிரமம் என்னை வருத்துகிறது.மன்னிக்கவும் நண்பர்களே.


இனி தலைப்புக்கு காரணம்.

நான் வலைச்சரத்தின் முதல் போட்ட பதிவிற்கு பாலபாரதி பின்னூட்டம் போட்டிருந்த பா.க.ச தலைவர் இப்படி சொல்லியிருந்தார்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
அடப்பாவீ... ஒனக்கு ஒரு பொருப்பான வேலையைக் கொடுத்தா... அங்கன போயும் சங்கத்தை திறப்பேன்னா.. என்ன அர்த்தம்...?!


கடைசியா சங்கத்தை திறந்தது தான் மிச்சம் ஒழுங்கா ஒரு பதிவு போட முடியல. அந்த வருத்தத்தில தான் இப்படி ஒரு தலைப்பு வைச்சேன். (நல்லா குழப்புறீங்களே எண்டு நினைக்கிறியளோ…)

யக்கா பொன்ஸ் அவர்களிடம் ஒரு கேள்வி யக்கா நான் எப்ப அமானுஷ்ய கதைகள் எழுதினேன்!!!!!!!

1 comment:

  1. வைரமுத்து மாதிரியில்லாம எல்லாருக்கும் முன்னால கேக்கிறன் :-)))

    உங்களுக்கே இந்தச்சாட்டு கொஞ்சம் சின்னப்பிள்ளைத் தனமாயில்ல....ஒன்றில் நீங்கள் எழுதவேண்டிய எல்லாத்தையும் ஒரு ஈமெயில்ல போட்டு சேவ் பண்ணியிருக்கலாம் அல்லது ஒரு USB வாங்கி வைச்சிருக்கலாம்...அன்றைக்கு சயந்நதனண்ணா இப்ப நீங்கள் இப்படி பண்றது நல்லாயில்ல சொல்லிட்டன் :-)) பட் USB வாங்கினாலும் ஈமெயில்லயும் சேவ் பண்ணி வைக்கிறதுதான் நல்லம்..3 ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த என்ர நிறைய முக்கியமான கோப்புகளோட என்ர ஐபோட் துலைஞ்சிட்டுது ்-((

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது