07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 10, 2007

வலைச்சரம் வழியாக திரும்பவும் பதிவுலகில்...

வலைச்சரவெடி கொளுத்த என்னைய இந்த வாரத்துக்குக் கூப்டுருக்காங்க. கிராமத்து முக்குல பம்பரம் விட்டுக்கிட்டு இருந்த பயல, சர்வதேச மைதானத்துல கிரிக்கெட் விளையாட விட்டா எப்படி இருக்குமோ, அப்படித்தான் நானும் இப்ப இருக்கேன்.

பதிவு ஆரம்பிச்ச புதுசுல முழு நேரமும் பதிவெழுதி, படிச்சிட்டு இருந்த நான், அப்புறம் வேலைச் சுமையும், இணைய வசதியின்மையும் காரணமாக ஒரு சின்ன வட்டம் போட்டு அத மட்டும் படிச்சிட்டு, அப்பப்ப பதிவும் எழுதிட்டு வந்தேன். இப்ப ஒரு இரண்டு மாத காலமா அதுவும இல்ல. சுத்தமா பதிவு பக்கமே இப்ப வர்றதில்லை. மூன்று மாசத்துக்கு முன்னமே வலைச்சரம் தொடுக்க அழைப்பு வந்ததால, இதையாவது எழுதிடலாம்னு முடிவுப் பண்ணி எழுதிட்டு இருக்கேன்.

ஆரம்ப பதிவ ஒரு அறிமுகப் பதிவா எழுதச் சொன்னதால, இந்தப் பதிவு ஒரு தற்பெருமை பதிவு :)

நான் எப்படி பதிவெழுத ஆரம்பிச்சேன்னு என்னுடைய இருபத்தைந்தாவது பதிவுல சொல்லிருக்கேன்.

நான் எழுதுன பதிவுகளிலேயே எனக்கும் பிடித்த, பதிவு நண்பர்களும் பாராட்டிய சிலப் பதிவுகளின் சுட்டியை இங்க தர்றேன்

ஏ.ஆர். ரகுமானின் இசையில் வெளிவந்த ஒரு சீனப் பாடல் இணையத்தில் கிடைத்த போது, அதற்கு தமிழில் பாடல் எழுதலாம் என்று நினைத்து எழுதிய வரிகள்

அப்போதைய தேன்கூடுப் போட்டிக்காக எழுதிய ஒரு சிறுகதை. நானே மிகவும் ரசித்து எழுதிய கதை.

வ‌.வா. சங்கத்தின் பதிவுகளைப் படித்து சிரித்து மகிழ்ந்து நானும் கைப்புள்ளையை மையமாக வைத்து ஒரு பதிவு எழுதினேன்.

லொல்லு சபா நடையில் ஏதாவது ஒரு படத்தைக் கலாய்க்க வேண்டுமென்று தேடியபோது அப்போதைய சமீபத்தில் பார்த்த வல்லவன் படம் மூளையைக் குடைய அதனை வைத்து எழுதிய பதிவு.

வெயில் படம் பார்த்தத் தாக்கத்தில் சின்ன வயசு விளையாட்டு ஞாபகங்கள் நினைவில ஆட அதையே ஓர் பதிவாகப் போட்டேன்.

கிராம நடையில் ஒரு சோகக் கதையைச் சொல்லலாம் என்று ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தமிழ் பதிவுச் சூழலுக்கு ஏற்றவாறு தலைப்பிட்டு வெளியிட்டக் கதை.

அப்போதைய சிக்காகோப் பயணப் பதிவு.

பதிவுலகில் என்னுடைய முதல் காதல் கவிதை.

கல்லூரி நாட்களில் காப்பக குழந்தைகளோடு கொண்டாடிய புது வருட கொண்டாட்டத்தின் நினைவலைகள்.

ஒரு காதல் கதை.

நகைச்சுவை நடையில் எழுதிய லாஜிக்கில்லாத ஓர் கதை.

அமெரிக்காவில் நடைப்பெற்ற பொங்கல் திருநாள் விழாவிற்கு சென்றபோது விளைந்தப் பதிவு.

எயிட்ஸால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற போது ஏற்பட்ட வலியில் எழுதியக் கவிதை.

கூகுல் ரீடரைப் பற்றிய ஓர் அறிமுகப் பதிவு.

முன்னச் சொன்னச் சீனப் பாடலின் ஒலிவடிவம். மருதத்தின் குரலில்

இந்தியா திரும்பியபோது அமேரிக்க மாப்பிள்ளைகளின் அமர்க்களங்களைப் பற்றிய ஓரு நகைச்சுவைப் பதிவு.

திருநெல்வேலி பக்கம் நடைபெறும் அறுவாச் சண்டையை மையமாக வைத்து எழுதிய கதை.

இன்றைய இளைஞர்கள் (நேற்றைய இளைஞர்களும் இப்படித்தான்) மனதில் எப்போதும் குடியிருக்கும் கவிதை.

சுற்றுலாச் சென்றபோது எடுத்தப் புகைப்படங்கள்.

இதோட என்னுடைய தற்பெருமை பதிவ முடிச்சிக்கிறேன். அடுத்தப் பதிவுல சந்திக்கலாம்.

4 comments:

 1. \\"வலைச்சரம் வழியாக திரும்பவும் பதிவுலகில்..."

  ஆஹா...ஜி.. வாய்யா வா :)

  வாழ்த்துக்கள் செல்லம் :)

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஜி. நீங்க சொன்ன எல்லா பதிவும் நானும் ரசித்த பதிவுகள்தான். :-)

  ReplyDelete
 3. சிக்காகோ சின்னப்பயலே!

  வலைச்சரம்னா அருமையா எழுதறவங்க பதிவு எல்லாம் சரமா தொடுக்கணும். கவனிக்கப்படாத, அதிகம் பாக்க மறந்த பல பதிவுகள மக்கள் பாக்கணும். அத விட்டுபோட்டு நீ எழுதன அம்பது பதிவுக்கும் லிங்க் போட்டு ஒரு பதிவு போட்டுருக்கயே இது நியாயமா? :))))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது