07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 10, 2007

புதியவர்களின் அவசர உதவிக்கு...

இன்னும் சில தொகுப்புகள் தான். அதிகம் அறிமுகம் இல்லாவிட்டாலும் இணைப்புச் சுட்டி கண்டிப்பாக உண்டு!

திடீர், திடீரென நண்பர்கள் சிலர் ஏதாவதொரு எழுத்தைச் சொல்லி இதில் ஒரு தமிழ் பெயர் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அந்த நேரத்தில் மலேசியா பாரி அவர்களின் தொகுப்பையோ, திருவெறும்பூர் அரசெழிலன் அவர்களின் தொகுப்பையோ தேடிக் கொண்டிருக்க முடியாது. இணையத்தில் இருந்தால் சொல்லிவிடலாமே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அண்ணன் வரவனையான் தன் பதிவிலும் இதன் முக்கியத்துவத்தைப் பற்றி எழுத, அதேநேரம் நண்பர் ஒருவர் இட்ட பதிவில் சுட்டி கொடுத்திருந்தார். மிகவும் பயனுடைய இந்த சுட்டியை பத்திரப்படுட்திவிட்டேன். சுட்டி கொடுத்தவரை விட்டுவிட்டேன். நான் பெயர் மறந்த தோழருக்கு நன்றி! (அப்புறம் என் பெயரைப் பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு, எங்கப்பாவுக்கு அந்தக் காலத்தில இந்த சுட்டி கிடைக்கலையாம், அதுதான் நான் பிறருக்கு உதவுறேன்)

இணைய வானொலிகளுக்கான இணைப்புச் சுட்டி கொடுத்த பொன்வண்டுக்கு நன்றி!

ஓர்குட்-டைத் தமிழில் மாத்திக்கலாமாம்ல...

தமிழ்நெட் 99: புதியவர்களுக்கு (எனக்கும் சேர்த்துதான்)

எ-கலப்பை நிறுவ முடியாதவர்களுக்கு சயந்தனின் இந்தப் பக்கத்தில் வலது கோடியில் சென்றும் தட்டச்சலாம். எந்த மென்பொருளும் நிறுவ வேண்டியதில்லை.

விதம் விதமான யூனிக்கோடு எழுத்துருக்கள் தரவிறக்க.

3 comments:

 1. பேப்பரைப் பிடுங்கும் வரை பரிட்சை எழுதும் மாணவனைப் போல் கடைசி வரை எழுதிக் கொண்டிருந்தேன். நேரம் முடிந்ததும் பேப்பரைப் பிடுங்கும் வாத்தியாரைப் போல் பிடுங்கிவிட்டார்கள் பொறுப்பாசிரியர்கள் :-(
  சரி... வலைச்சரத்தின் பெயரைச் சொல்லி என் தளத்தில் ஒன்றிரண்டு தொடர்கிறேன். அந்த இணைப்போடு சுட்டியாய் வந்து பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.

  ஹை! இப்ப என்ன பண்ணுவீங்க!

  ReplyDelete
 2. அடுத்தவருக்கு கைமாறும் நேரம் வந்துவிட்டதால் இரவு உங்க பேப்பரைப் பிடுங்கியது நான் தான்.;)

  நீங்க முடித்து விட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன். இப்படி கடைசி நேரம் வரை பரீட்சை எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு பதிவு கிடைத்திருக்குமே..அடடா தவற விட்டுட்டமே ;(

  //வலைச்சரத்தின் பெயரைச் சொல்லி என் தளத்தில் ஒன்றிரண்டு தொடர்கிறேன். அந்த இணைப்போடு சுட்டியாய் வந்து பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.//

  கண்டிப்பா செய்யுங்க...

  ReplyDelete
 3. அடடா, பதிப்பாசிரியரே களத்தில் இறங்கிவிட்டாரா? மகிழ்ச்சி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது