07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 2, 2007

(கண்ணீர் மல்க) விடை பெறுகிறேன்.

தருமி: ஹலோ ..!

பொன்ஸ்: உங்கள இந்த வாரத்துக்கு ஆசிரியரா இருக்கச் சொன்னேன்; இருந்திட்டீங்க.

தருமி: ஆமாங்க; ரொம்பவே நன்றிங்க.

பொன்ஸ்: அதெல்லாம் இருக்கட்டும்; ஏறக்குறைய உங்க டைம் முடிஞ்சி போச்சே. என்ன இன்னும் இந்தப் பக்கம் சுத்திக்கிட்டு இருக்கீங்க?

தருமி: இல்லீங்க பொன்ஸ். சும்மா அப்படியே ..

பொன்ஸ்: உங்க வேலை இன்னும் முடியலையா .. போதும் போதும் எழுதுனது ...

தருமி: இல்லீங்க .. சும்மா ஒரு நன்றி சொல்லிட்டுப் போலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்.

பொன்ஸ்: யாருக்கு எனக்கா?

தருமி: உங்களுக்கும் தான்; வலைச்சரத்துக்கும்தான். அதோடு ..

பொன்ஸ்: எத்தனை தடவை அய்யா நன்றி சொல்லுவீங்க. எழுதி அறுத்தது பத்தாதுன்னு இது வேறயா? இடத்தைக் காலி பண்ணுங்க... இருக்க இடம் கொடுத்தா அப்டியே ..

தருமி: ஒண்ணும் இல்லீங்க. நம்ம மக்கள்ஸ்க்கு நன்றி சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்.

பொன்ஸ்: அதெல்லாம் தேவையா? மொத்தம் உங்க பதிவுகளுக்கு வந்ததே இதுவரை எண்ணி 36 28 ஆளுக. ஏதோ வந்து பாத்துட்டு போயிருக்காங்க. விடுங்களேன் அவங்களை. கட்டாயம் ஒவ்வொருத்தரா கூப்பிட்டு அவங்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகணுமா?

தருமி: ஆமாங்க ..அதான மரியாதைங்க...

பொன்ஸ்: சரி...சரி .. டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் சொல்லவேண்டியதைச் சொல்லிட்டு மூட்டையைக் கட்டுங்க ... இதுக்குத்தான் இந்த வயசானதுகளை ஆட்டைக்குக் கூப்பிடக்கூடாதுன்றது. சும்மா நொய் .. நொய் அப்டின்னுட்டு..

தருமி: அனைத்துத் தமிழ் கூறு நல்லுலகின் பதிவர் பெருமக்களே!

பொன்ஸ்: (மனசுக்குள்) வந்து இவரு எழுத்தை வாசிச்சது பதிவுகளைப் பார்த்தது மொத்தமே 28 பேர். இதில இவர் எல்லாத்துக்கும் நன்றி கூறணுமாம் .. என்ன பில்டப்போ .. என்ன இதுவோ ..!

தருமி: (தொடர்கிறார்) சில பேர் பெயரை மட்டும் குறிப்பிட்டு எழுதுனதுக்கு மாப்பு கேட்டுக்கிறேன். அதுக்கு ரெண்டு காரணம்: ஒண்ணு - நான் வாசிக்கிறது - வாசிக்கிறது அப்டின்றதை விட 'மேய்றது' - மேலாப்ல தான். அதாவது நுனிப்புல்தான். அதுனால கொஞ்ச ஆளுக பதிவுமட்டும்தான் தெரியும். அதில உள்ள ஆளுகள செலக்ட் பண்ணிச் சொல்லியிருக்கேன்.

ரெண்டு, நமக்கு ரொம்ப வேண்டப் பட்டவங்களையெல்லாம் பத்தி எழுதலை. ஏன்னா அதெல்லாம் நல்லா இருக்காதில்லையா .. நம்ம பேரு வரலைன்னு யாரும் நெனச்சீங்கன்னா அவங்கெல்லாம் இந்த ரெண்டாவது category-ல இருக்கிறதா நினச்சுக்கங்க .. சரியா..

மறுபடியும் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

பொன்ஸ்: ஒருவழியா முடிச்சாச்சா? அது என்ன கண்ணீர் மல்க விடை பெறுகுரீங்க?

தருமி: சும்மா ஒரு பில்டப்புதான். அப்படித்தான எல்லோரும் வழக்கமா சொல்லுவாங்க.

பொண்ஸ்: ஆக ஒண்ணும் ஒரிஜினல் கிடையாது. ம்ம்..ம் ..

தருமி: அப்போ, விடை வாங்கிக்கிறேனுங்க ...


பொன்ஸ்: ம்ம்... ம்ம்.. அப்பாடா !!ஆள விடு, சாமி !

15 comments:

 1. கண்ணீர் மல்குவதற்கு காரணம் 36க்கு மேல் இல்லை என்றா... :)))

  சொல்லியிருந்தீங்கன்னா...பி.ஆர்.ஓ சர்வீஸ் செய்திருப்போமே..

  இந்த வயசிலே...கண் கலங்கினா நல்ல இல்லேன்றேன்...

  ReplyDelete
 2. நல்லா இருந்தது. நீங்க சொன்ன நகைச்சுவை பதிவுகளையும் படித்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. யூ டூ தருமி சார் ?எதுக்குக் கேக்கிறேன்னா 36 மட்டுமே பின்னூட்டமின்னு வருத்த[?!] பட்ட மாதிரி தோனுச்சி.
  ஆனா பின்னூட்டம்னா எங்க இருக்கும் யாரு போடுவாங்கன்னே தெரியாம நானும் வலையில இருந்தப்ப அது இல்லாட்டியும் உன்னை நாங்க கவனிக்கிறோம் னு சொல்லி பொன்ஸ் இதே வலைச்சரத்துலதான் அறிமுகப் படுத்தினாங்க.
  அப்பால நம்ம ராஜாங்கமே ஒரு குடும்பமான கதைதான் உங்களுக்கு தெரியுமே.
  பின்னூட்ட கணக்குக்காக இல்லாமல் பல நூறு பேர் இதை படிச்சிருப்பாங்க.தெரியாத பதிவுகள் பத்தி தெரிஞ்சிருப்பாங்க.அதனால பீல் ஆகாம..............ஆ..ஆ..
  அய்யோ யானை துரத்துது வாங்க ஓடிப் போயிடலாம்...

  ReplyDelete
 4. பொன்ஸ் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்களேன். நானும் கண்ணீர் மல்க விடைபெறுகிறேன்னு சொல்லிடறேன்....


  அப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா.... பெரியவங்கன்னு பின்னே சும்மாவா சொன்னாங்க....

  ReplyDelete
 5. தருமி சார், தலைப்பைப் பார்த்ததும் "பக்" என்று ஆனது. இப்பத்தான் ஜோசப் சார், போறேன்னு டாடா காட்டிட்டார். இப்ப நீங்களான்னு, ஆனா நமக்கெல்லாம் கொஞ்சம் தோல் தடிப்பாச்சே :-)அதுவும் கண்ணீருடன்.. என்ன நடக்குது இங்கே என்று நினைத்துக் கொண்டே வந்தால்...:-)))

  ReplyDelete
 6. தருமி,
  செல்லாது..செல்லாது (நன்றி :பொட்டிக்கடை) ..நானெல்லாம் இப்போ உங்களுக்கு பின்ன்னூட்டம் போடுறதில்ல .ஏன்னா ,உங்க பதிவுகள் பின்னூட்டத்தையும் தாண்டி...

  மாணவன்,
  ஜோ

  ReplyDelete
 7. நீங்க கட்டுன(தொடுத்த......ன்னு சொன்னா இன்னும் மேன்மையா இருக்குமோ?) வலைச்சரத்துலே
  இதுதான் டாப் ஒன்:-)))))

  இப்படிக்கு
  28 இல் 1 :-)

  ReplyDelete
 8. Ithu romba mosam Dharumi Sir.
  ippadiyaa thalaippu vaikkiRathu???????
  kaNdanam therivikkiREn.
  ippothuthaan SIXTIES CLUB aarambikkalaamaanu T.R.C. sir kittak ketten.
  neenga paattuk kiLambaREnu sonnaa enna arththam????

  Thanglishizhla comment poduvathRku mannikkaNum:(((

  ReplyDelete
 9. வாசிக்கிறது அப்டின்றதை விட 'மேய்றது' - மேலாப்ல தான். அதாவது நுனிப்புல்தான்.//

  முதல்ல நுனிப்புல்" க்கு சுத்திப் போடணும். அது என்ன வாரவங்க எல்லாம் நுனிப்புல் நுனிப்புல் ன்னு சொல்லும்போது அப்படியே ஜீவ்ன்னு ஆயிடுது. ஒரு சின்ன ரிக்வெஸ்டுங்க, இனி மேலே "நுனிப்புல்" என்ற வார்த்தையைப் பாவிப்பவர்கள்
  அதை ஹைலைட் செய்து, லிங்க் தந்துவிடணும். காப்பி ரைட் என்னுது.
  இப்படிக்கு, கண்ணீர் மல்க,( இது ஆனந்த கண்ணீர்ங்க)
  உஷா

  ReplyDelete
 10. dear P.R.O.
  இதுக்கெல்லாம் சொல்லிக்கிட்டா இருப்பாங்க ..

  பத்மா,
  கட்டாயம் படிங்க .. மொக்கைப் பதிவுகளின் மவுசு தெரியும்.

  ReplyDelete
 11. கண்மணி,
  //அய்யோ யானை துரத்துது வாங்க ஓடிப் போயிடலாம்... //

  ஹா ..ஹா..

  அப்படியே ஆனையை மஞ்சூர் ராசா பக்கம் "ஏவி' உட்ருவோமா ..?

  ReplyDelete
 12. உஷா,
  //ஜோசப் சார், போறேன்னு டாடா காட்டிட்டார்//
  அப்டியா .. ஏன்? என்ன ஆச்சு? எங்க (நம்ம?) படை குறையுதே. அதுவும் அவர் சுறுசுறுப்பான பதிவர். அவர் ஏன் இப்படி ஒரு முடிவு?

  நுனிப்புல் அப்டின்னு போடும்போதே நினச்சேன். லின்க் கொடுத்திருக்கலாம்..இனிம கொடுத்திட்டா போவுது.

  ReplyDelete
 13. ஜோ,
  //நானெல்லாம் இப்போ உங்களுக்கு பின்ன்னூட்டம் போடுறதில்ல//

  ஆனாலும் ஜோ ரொம்பதான் மோசம். பார்த்தே நிறைய நாளாச்சே. பதிவு பார்த்தும் நாளேச்சு... ஒரே ஆணி புடுங்கல்ஸ் தானா? எந்த நாட்ல இருந்து? குட்டிப் பையன் நல்லா இருக்கானா? அப்பா கூடதானே..?

  ReplyDelete
 14. //....36 க்கு மேல் இல்லை என்றா//

  அடேய்ங்கப்பா! ஒரே வாரத்தில் 36 பின்னூட்டங்களா?ஒவர் ரொம்ப ஒவர்
  நமக்கு ஒரு வருஷ பின்னூட்டங்களே
  36 யை நெருங்கல்லே.....
  கவலை விடுங்க

  ReplyDelete
 15. அது சரி..
  நூறு தடவை..அந்த பச்ச தவளை வந்து வந்து போகும் ஜீ.டாக்ல,

  அதுல அப்படியே பதிவு அட்ரஸ் போட்டீங்கண்னா..
  ஆகா தருமி ஐயா உறுமிருக்கிறார்..அப்படின்னு..கண்டுக்கலாம்..

  தமிழ்மணத்தில இருக்கிற ஜூடல்..வந்த பதிவு எல்லம்..கீழே போயிடும்...

  ஏதோ..ஏகதேசமா சொல்லிட்டேன்..

  தப்பிருந்தா..ஊர்க்காரப் பய, பாசக்கார பய அப்படின்னு..விட்டுடுங்க..ஹி ஹி..


  //*தருமி said...

  dear P.R.O.
  இதுக்கெல்லாம் சொல்லிக்கிட்டா இருப்பாங்க ..

  *//

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது