07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 18, 2008

பெண் பதிவர்கள்

வலைப்பூக்களில் வலம் வந்த போது, மனத்தில் வரிசையாய் பதிந்து சென்ற பதிவர்கள் பலர். கண்ணில் படுவதற்கும்-பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பது போல் எண்ணத்திலும் சில பதிவுகள் எட்டிப் பார்த்தன. "பெண்" பதிவர்கள் என்று பொதுவாக இல்லாமல் சிறப்புடன் அமைப்பதற்கு சிந்தனை தூண்டியது. எத்தனை காலங்கள் மாறினும் ஏற்ற இறக்கங்கள் ஏணிப்படியாய் இருப்பினும் பொதுமை என்று கொள்வதற்கு இன்னும் புதுமை பிறக்க வில்லை. அந்தப் புதுமையின் எட்டிப்பார்ப்புத் தான் இந்தப் பெண் பதிவர்கள். பாரதி, பாரதி தாசன் என்பவர்கள் அவ்வையாரையும் கவிஞராய் புலவராய்த் தான் காவியத்தில் கண்டனர். ஆனால் இன்னும் பெண் என்ற அடைமொழி கொடுத்தே பெண்மையைப் போற்றுகின்ற சூழலில் இருக்கின்றோம். வலைச்சரத்தின் பதிவர்கள் அனைவருமே பார்வையில் பதிந்து சிறந்தவர்களே ! அந்தச் சிந்தனையின் பூக்கள் சில இங்கே :பாசமலர் : இவர் மதுரையில் பூத்த மணக்கும் மல்லி. ஆங்கில இலக்கியத்தை ஆழமாய்க் கற்று தமிழிலக்கியத்தின் இனிமையில் மயங்கியவர். ஏறத்தாழ 42 பதிவுகள் ஆறு மாத காலத்தில் தந்துள்ளார். அவற்றில் 13 பதிவுகள் கவிதைகள். எஞ்சியவை கதை கட்டுரை. இவர் வலைச்சர ஆசிரியராக இருந்த போது தந்திருக்கின்ற தலைப்புகளே பூக்களின் புது மாலையாய் உள்ளன. இலக்கியம், தகவல்கள், வளைகுடா, புகைப்படம், ஓவியம், நிகழ்வுகள் என்று முல்லை தொடங்கி ரோஜா வரைக்கும் மலர்களையே மகுடங்களாய் சூட்டி இருக்கிறார். அப்பதிவுகள் படித்துப் பயனுற வேண்டியவை. அவற்றுக்கு ஒவ்வொரு நாளும் இவர் கொடுத்திருக்கக்கூடிய எண்ணத் தலைப்பும் புதுமையாய் உள்ளது.சுவைப்பதற்கு ஒரு கவிதை.நிறைமதி காலம் : இக்கவிதை உணர்த்தும் கருத்து இன்றும் உணரப் பட வேண்டிய ஒன்று. ஆண் பெண் என்று வேறு பாடு காட்டுவது இரு முறை வடிகட்டிய தவறென்று சொல்லும் விதம் சுவையானது.கவிதைகள் தவிர, கல்வி, அரசியல், சிந்தனை, சமுதாயம் என்ற தலைப்புகளில் கட்டுரையும் தந்துள்ளார். இவரது கதைத் தொகுப்பினில் யார்பித்தன் நடைமுறை இயல்பினில் உள்ளது. இரட்டைச் சிறுகதை ஒரே தலைப்பினில் இரு மலராய் மலர்ந்துள்ளது.

-----------------------------------------------------------

கண்மணி : பதினெட்டுத் திங்கள்களாக பதிவுகள் இட்டு வருகின்றார். இவருடைய பதிவுகள் கவிதை, கதை, கட்டுரை, நிகழ்வுகள், செய்திக் குறிப்புகள், படக் காட்சிகள், படக் கதைகள், நகைச்சுவை, நையாண்டி என இவரைப் பன்முகப் படைப்பாளராய் பறை சான்றுகின்றன. பார்த்து மகிழ வேண்டிய பதிவுகள். குறிப்புகள் கொடுத்து விளக்கங்கள் காண்பதை விட அனைத்தும் முழுமையாய் பார்த்தறிய வேண்டிய பகுதி என்பதால் அவருடைய பதிவுகளை அப்படியே படிக்க பரிந்துரைக்கிறேன்.

----------------------------

டெல்பின் விக்டோரியா : இவர் ஒரு பெண் மருத்துவர். இவருடைய பதிவுகளில் பெரும்பான்மை மருத்துவம் பற்றியதாயும், பிற நகைச்சுவை, சிரிப்புகள் கருத்துணர்த்தும் நிகழ்வுகளாயும் உள்ளன. கிட்டத்தட்ட 55 பதிவுகள் இட்டிருக்கிறார். மகளிர்க்கான மருத்துவக் குறிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றைப் படித்து நாம் தெளிவு பெறலாம்.

இம்சை அரசி ( ஜெயந்தி): நவம்பர் 2006ல் இருந்து வலைப்பதிவுகளில் கலக்கி வருகிறார். ஏறத்தாழ 108 பதிவுகள் இட்டிருக்கிறார். கதை, கவிதை, கட்டுரைகளாக அவை மிளிர்கின்றன. இவருடைய அறிமுகம் ஆழமாய் உள்ளது. இவர் தன்னைப் பற்றிப் பேசவில்லை. இவரது பதிவுகள் இவரைப் பற்றி பேசுகின்றன. தனக்குள் கவிதை எழுந்த சூழலை கவிஞர் சுவையாக, சரியாக விளக்கி இருக்கின்றார். சூழ்நிலை, தொடக்க கால நிகழ்வுகள், அதில் தத்துவம், அவற்றால் பெற்ற அனுபவம் - அவற்றினை கதையாகவும் வடித்துள்ளார். கதைகள் சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டுவது சிறப்பாக உள்ளது. ஆறு வலைப்பூக்கள் வைத்திருக்கிறார். அப்துல் கலாமின் பொன்மொழி பிடித்த மொழி என்கிறார்.

இன்று ஒரே நாளில், ஒரு கயிற்றால், நம் பந்தம் அறுந்து விடுமோ ? அவர்கள் வீட்டுப் பெண் என்று சொல்கிறார்களே !! எப்படி அப்பா கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்னே ஒரு இயல்பான சிந்தனை ?

தன்னைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனையை அழகாகத் தருகிறார். அப்பதிவு இதோ !

செல்வி ஷங்கர்
--------------------

8 comments:

 1. நண்பர்களே படியுங்கள் !! நற்கருத்தைச் சொல்லுங்களேன் !!

  ReplyDelete
 2. படிச்சிட்டேன்...

  ReplyDelete
 3. //கண்ணில் படுவதற்கும்-பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பது போல் எண்ணத்திலும் சில பதிவுகள் எட்டிப் பார்த்தன. "பெண்" பதிவர்கள் என்று பொதுவாக இல்லாமல் சிறப்புடன் அமைப்பதற்கு சிந்தனை தூண்டியது//

  Ithu 'nach'.Ingu, pazaiya 'selvi ammaa' yetti-p-paarkiRaar.:)

  vaazththugaL ammaa.

  ReplyDelete
 4. oops!I forgot this P.S.

  P.S.:I don't have tamil font now.Sorry.:(

  ReplyDelete
 5. அருமையான பெண்பதிவர்கள் பற்றிய பதிவு,
  நன்றிமா:))

  ReplyDelete
 6. படித்ததற்கு நன்றி விக்னேஷ்வரன்

  ReplyDelete
 7. புது வண்டே

  பழைய - புதிய எல்லாம் இல்லை
  எப்பொழுதும் ஒரே அம்மா தான்

  நன்றி வண்டே

  ReplyDelete
 8. நன்றி திவ்யா வருகைக்கு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது