07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 20, 2008

பின்னுவது கவிதை !

இதுவரை வந்த அநேக வலைச்சர ஆசிரியர்களும், கவிதை பற்றி குறிப்பிடாமல் சென்றதில்லை. கவிதைகள் இல்லாமல் ஒரு உலகை சிந்தித்தும் பார்க்க இயலவில்லை. அதனால் முதலில் கவிதை பின்னுவோம்.

அசத்தும் சில வரிகளில் நம்மைக் திளைக்க வைக்க வருகிறார்கள் (இளம்) கவிஞர்கள் சிலர்.சில மாதங்கள் முன்பு, மகேஷ் எனும் இவ்விளம் கவிஞரின் வலைப்பூ சுட்டி அனுப்பி, வாசிக்குமாறு கூறியிருந்தார் நண்பர் நாகு. "சுருக்கல்" எனும் தலைப்பில் 'மகேஷ்' எழுதியிருக்கும் முப்பதைத் தொடும் கவிதைகள் அனைத்தும் அருமை. உதாரணத்திற்கு :


அடுத்து, அம்மாவின் கரிசனம் என்று


என ஆரம்பித்து, அடுத்த சில வரிகளிலேயே அற்புதமாய் முடித்திருக்கிறார், இப்படி


இவரது சுருக்கல்களைப் படித்து சில சுட்டிகள் இங்கு தரலாம் என்று பார்த்தால், எல்லாமே சுருக், சுருக் ரகம் தான்.
எனக் கலக்குகிறார் கவிஞர் "ப்ரியன்". கவிதைகள் பல இயற்றிய இவரின் வலைப்பூவில், 'காதல்' லேபிள் எண்ணிக்கைகள் 133 !!!! பல கவிதைகளில், அசாத்திய வீச்சு பொதிந்திருக்கிறது இவரின் வரிகளில். உதாரணத்திற்கு :


ஒரு கதாநாயகனாய் நம்மை உணரச் செய்யும் இவ்வரிகள் என்பது உண்மை. இவரின் மற்ற கவிதைகளையும் பொருமையாக வாசித்து அனுபவியுங்கள்.
என வியக்க வைக்கும் கவிஞர் / எழுத்தாளர் பாஷா அவர்கள்.


நிறைய பெண்கள் இம்மனவோட்டத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணுகிறேன் (தமிழ் சினிமா பார்க்கும் எஃபெக்டா எனத் தெரியவில்லை !). ஒரு எதார்த்தத்தை இவ்வரிகளில் கொண்டுவந்தது வியக்க வைக்கிறது.
எனக் கழுதையையும் மதித்துக் கவி பாடி, மேலும் பல கவிதைகள் இயற்றி வ(ள)ரும் கவிஞர் அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்கள்.
என அசத்தல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் 'திகழ்மிளிர்'
என்று காதலை வித்தியாசமாகச் சொல்லும் கவிஞர் 'இனியவள் புனிதா'
என்று படிக்கும்போது சற்று ஒரு நொடி சிந்திக்க வைத்தது கவிஞர் இலக்குவணின் வரிகள். அனுபவச் சிந்தனை. இவரது பல கவிதைகள் அர்த்தம் புரிய உட்கார்ந்து யோசிக்கணும். மாடன் ஆர்ட் போல என்று சொல்லலாம்.அழகே ஆயினும் ஒரு தூரத்தில் இருக்கும் வரை தான் அழகு என்று எழுதியிருக்கிறார் மின்னல், இவரது 'எல்லை' எனும் இரு வரிக் கவிதையில்.
இப்பதிவைப் படிக்கும் தாங்கள் கவிஞராய் இருந்து, "நம்ம பதிவு வரலையே என்று நினைத்தால்", ஒன்று நீங்கள் நன்கு அறியப்பட்டவராக‌ இருக்கலாம். இரண்டாவது, தவறு எனதாக இருக்கலாம். உங்களின் பதிவை கவனிக்கத் தவறியிருக்கலாம். அதற்காக உங்களின் படைப்புத் திறன் ஒரு விதத்திலும் குறைச்சலில்லை.

நேரம் இருப்பின் இவர்கள் அனைவரின் மற்ற கவிதைகளையும் வாசித்து மகிழுங்கள்.

இயன்றவரை வாசித்து உங்கள் கருத்துக்களை கவிஞர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நான்அடுத்த பதிவ பத்தி யோசிக்கறேன் .....

15 comments:

 1. சதங்கா

  அருமை அருமை - வலைச்சர ஆசிரியராகப் புதுமை படைக்கிறீர்கள் .
  வலைச்சர விதிமுறைகளின் படி, அதிகம் அறியப்படாத, புதுப் பதிவர்களை அறிமுகம் செய்தது பாராட்டத்தாகது. அனைத்துமே அருமையான பதிவுகள். குறும்பாக்கள் அனைத்துமே அருமை. நச்சென்று பதிகிறது. வெளிச்சத்திற்கு வராத இப்பதிவுகளை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 2. அருமையான கவிதைகளை தொகுப்பா குடுத்தமைக்கு மிக்க நன்னி. :)

  ReplyDelete
 3. நன்றி சீனா ஐயா. எல்லாம் உங்களின் ஊக்கம் தான் காரணம்.

  ReplyDelete
 4. 'உற்சாக டானிக்' பின்னூட்டங்களுக்கு சொந்தக்காரர், ஜீவாவுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. அம்பி, படிச்சிட்டு இப்படி சொல்லும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. தொடர்ந்து வாசியுங்கள்.

  ReplyDelete
 6. நன்றி
  சதங்கா

  ReplyDelete
 7. /"காதலித்துப் பார்
  கையெழுத்து அழகாகும்
  என்றான் ஒரு கவிஞன்...
  நானும் காதலித்தேன்...
  தலையெழுத்தே
  மாறிப் போனது!!!"/

  /நீந்த தெரியாமல்
  கிணற்றை
  ரசிப்பது தவறென்று
  ஒவ்வொரு முறை கால் தவறி
  உள்விழும் பொழுதும்
  நினைத்துக் கொள்கிறேன்/

  /"எவ்வளவு ஏற்றினாலும்
  சுமக்கிறேன்
  நல்ல பெயர் மட்டும்
  கிடைத்ததே இல்லை
  சுமந்து கொண்டேஇருக்கிறேன்
  என்னைப் பிடிக்காதவர்களின்
  அழுக்குகளையும் தான்."/

  அத்தனையும்
  அழகான வரிகள்

  படிக்காத பல
  கவிதைகளை
  அறிந்து கொள்ளமுடிந்ததது

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. சதங்கா,

  நல்ல முயற்சி

  அருமையான கவிதைகள்

  அப்படியே நம் உள்ளத்தை வெளிக்காட்டுகின்றன

  புதுமையாய் இருந்தது அமைப்பு

  வாழ்த்துகள் - நன்றி

  ReplyDelete
 9. மிக்க நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete
 10. உள்ளத்தை வெளிக்காட்டும் கவிதைகள் வாசித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி செல்வி மேடம்.

  ReplyDelete
 11. அட!என் வலைப்பூவும் உஙககள் பட்டியலில்!

  நன்றி!!

  ReplyDelete
 12. ப்ரியன், உங்கள் கவிதை வரிகளில் ரசனை கொண்டு சேர்த்திருக்கிறேன். உங்கள் சந்தோசம் குறித்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 13. மிக நன்றிங்க சதங்கா.

  திகழ்மிளிர் நன்றி.

  ReplyDelete
 14. கவிதை அல்லது அழகு!
  நன்றி சதங்கா!!

  அன்புடன்,
  அத்திவெட்டி ஜோதிபாரதி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது