07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 12, 2008

நானும் என் பதிவுகளும் ............

அன்புள்ள சகபதிவர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

முதற்கண் என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்த வலைச்சர நிர்வாகத்தின் பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும் மற்றும் சிந்தாநதி, சகோதரிகள் முத்துலட்சுமி, பொன்ஸ் ஆகிய அனைவருக்கும், என மனங்கனிந்த வாழ்த்துகளுடன் கூடிய நன்றி.

என்னுடைய அச்சமே என் இறை நம்பிக்கையை வலுவாக்கியது. இடைவிடாத முயற்சியும் செயல்திறனுமே தவம் என்பதை வள்ளுவத்தால் அறிந்தேன். ஒவ்வொரு செயலிலும் எனக்கு நினைவிற்கு வருவது வள்ளுவமே. அதை வழிபாடாகவே கொண்டேனென்றால் அது மிகை யாகாது. நம்மை வழிப்படுத்துவதும், நமக்கு வழி காட்டுவதும் தானே வழிபாடு. அதனால் தான் வள்ளுவத்திற்கு என் உரை நடையில் கருத்துகளை எழுதத் தொடங்கினேன். பாயிரவியல் முடித்திருக்கிறேன். அதில் இறைப்பண்புகளை பெயரைச் சுட்டாமலே சொன்ன வள்ளுவரின் தன்மையில் நான் மயங்கி இருக்கின்றேன். இதோ அதன் சுட்டிகள்.

பாயிரவியல்:
1.
2.
3.
4.
இல்லறவியல் :
5.
6.
7.
8.
9.

வலைப்பூ நண்பர்களே

வள்ளுவத்தைப் படியுங்கள். கருத்துக் கூறுங்கள். தொடர்வது உங்கள் கருத்துகளைப் பொறுத்தே!

இத்தகைய எண்ணங்களினால் என் மனத்தில் பறந்தது தான் "எண்ணச்சிறகுகள்" . அதன் விளைவே "பட்டறிவும் பாடமும்" என்ற என் முதல் பதிவு. இவற்றில் எண்ணச்சிறகு பதிவில் உள்ளவற்றை பலரும் படித்திருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு முறை படித்துத் தான் பாருங்களேன்.

பார்வையில் படுவதைக் கூறுங்கள். நான் பார்த்துப் பறக்கின்றேன் பதிவில்.
நன்றி

செல்வி ஷங்கர்
--------------------

18 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. புதுசா இருக்கே. படிச்சுட்டு சொல்றேன்.

  ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வலையில் பதிவது ஒரு சரித்திரம்.... பல ஆண்டுகள் இருக்கப் போவது... எனவே உங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.. தேடல் மூலம் வருபவர்கள் நிச்சயமாக அதன் மூலம் பயனடைவர்....

  ReplyDelete
 4. வாழ்த்துகள் செல்வி அம்மா! :-))))))

  செல்வி அம்மா (மறுபடியும் டீச்சர்) ஆசிரியர் ஆயாச்சா!.

  பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு!

  :)))))))

  ReplyDelete
 5. இந்த வார ஆசிரியர் திருமதி சீனா-வா வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 6. தங்களின்,

  காரிகை நடந்தாள்:
  http://ennassiraku.blogspot.com/2008/03/blog-post_27.html

  ஈரத்தோடு இணைந்திடுவோம்:
  http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_09.html

  இரண்டடியில் இன்பம்:
  http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_09.html

  என்னோட ஃபேவரிட்!

  வள்ளுவமும் மற்ற கவிதைகளும் அப்புறமா :)))

  //தமிழ் பிரியன் said...
  தேடல் மூலம் வருபவர்கள் நிச்சயமாக அதன் மூலம் பயனடைவர்....//

  வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

  ReplyDelete
 7. ஈரத்தோடு இணைந்திடுவோம்:
  http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_04.html

  சுட்டி தப்பாக் கொடுத்துட்டேன் :(

  ReplyDelete
 8. இரண்டட்டியில் இன்பம்:
  http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_09.html

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் செல்வி அக்கா:)

  ReplyDelete
 10. உலக சமாச்சாரங்கள் அனைத்தையும் 'சுருக்'ன்னு ஒன்னேமுக்கால் அடியில் கொடுத்த வள்ளுவரைப் போற்றுவோம், போற்றுவோம்.

  ஆசிரியர் ஆசிரியராக(வே) வந்தது மகிழ்ச்சியே:-)))

  வேணுமுன்னுதான் இந்த ஒண்ணு ஒன்னு போட்டுருக்கேன்.

  எது சரின்னு சொல்லுங்க டீச்சர்.

  ReplyDelete
 11. திகழ் மிளிர், புதுகைத் தென்றல், தமிழ் பிரியன், புது வண்டு, சிவா, ரசிகன், துளசி, பாரதி - அனவரின் வருகைக்கும் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி

  ReplyDelete
 12. துளசி,

  டீச்சர் என்றால் இணையத்தில் அது துளசி மட்டும் தான்

  ஒன்னே ஒன்னு தான் இருக்க முடியும் - இணையத்தில் டீச்சரா

  அந்த ஒண்ணு இருக்க முடியாது

  சரியா டீச்சர்

  ReplyDelete
 13. வாழ்த்துகள் செல்வி ஷங்கர், உங்கள் பதிவுகளைப் படித்து இருக்கின்றேன். இந்த வாரம் இனிய வாரமாய்ப் போகும் என்பதற்கு வேறு சான்று தேவை இல்லை.

  ReplyDelete
 14. செல்வி மேடம்,

  உங்கள் கவிதைகள் சிலவும், திருக்குறள் உரை சிலவும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

  இந்த வாரம் சிறந்த பதிவுகளாய்த் தொகுத்து வழங்கிட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. கீதா,

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் - பார்க்கலாம்

  ReplyDelete
 16. சதங்கா,

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 17. //பார்வையில் படுவதைக் கூறுங்கள்.//

  நிச்சயமாக.. :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது