07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 22, 2008

மணப்பது சுவை !

பதிவென்றால் கவிதையும், கதையும் தானா ? இந்த எண் சாண் வயிறு பத்தி அக்கறையில்லாதவர் எவரேனும் இருக்கத்தான் முடியுமா !!!

நம்மூர் பழங்கதைகள் மாதிரி இங்க சொல்லும் ஒரு கதை. "ஒரு ஊருல ஒரு பெரிய வெவசாயக் குடும்பம் இருந்துச்சாம். தினம் அவங்க வேலை எல்லாம் முடிச்சிட்டுஆண்கள் முதலில் சாப்பிடுவாங்களாம். தினம், தினம் கோழியும், கறியும், வித விதமா அந்த வீட்டுப் பெண்கள் சமைச்சுப் போட்டிருக்கிறார்களாம். இவங்க சத்தம் போடாம சாப்பிட்டு போய்டுவாங்களாம். ஒரு நாள் சாப்பாட்டுக்கு, வைக்கோல் எடுத்து வந்து வச்சிருக்காங்க. அப்ப தான் அந்த வீட்டு ஆண்களுக்கு தோனுச்சாம், ஆஹா எவ்வளவு நல்லா சமைக்கிறாங்க, ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லையே என்று !".

கவிதை படித்து, கதை படித்து களைத்துப் போயிருப்பீர்கள். நம் பதிவர்களின் சமையல் கட்டுகளுக்குள் நுழைந்து ஒரு கட்டு, கட்டலாம் வாங்க. மணக்கும் சில பதிவுகளையும், பதிவர்களையும் சந்திப்போமா, ஸ்வீட்டுல இருந்து ஆரம்பிப்போம் ...



தூயா சமீபத்தில் நிறைய சமையல் பதிவுகள் பதிந்து வருகிறார்கள். இவங்க பக்கத்து வீட்டுக்காரங்க ரெசிபி என்று தந்திருக்கும் இந்த "டயமன்ட் பர்பி" செய்முறை மிக எளிதாக இருக்கிறது .

டிப்ஆஃப் தி பர்பி : * கலவை கொதிக்கும் போது சற்றே தள்ளி நின்று கிளறுங்க.
* இனிப்பு அதிகம் என்பதல் அளவோடு உண்ணவும்.




சமையல் எனும் கலைக்கூடத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலே, வித்தியாசமான பதார்த்தங்களை செய்முறை விளக்கங்களோடு அருமையாக விவரித்திருக்கிறார் சித்ரா அவர்கள். நிலக்கடலை வேக வைத்து / வறுத்து சாப்பிடுவோம். அல்லது எண்ணையாக்கி பயன்படுத்துவோம். இதில முறுக்கு பண்ணலாம் என்கிறார்.

டிப், இல்ல இல்ல ரெசிப்பி ஆஃப் தி முறுக்கு : நிலகடலையை மிக்ஸியில் பவுடர் செய்து, அதனுடன் அரிசி மாவு, எள், மிளகாய்தூள், உளுந்து பொடி, பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொண்டு, எண்ணெயை காய வைத்து சிறிய முறுக்குகளாக பிழிந்து வெந்தபின் எடுக்கவும். செய்வது எளிது.



கீதா அவர்களின் சமையல் அறைக்குப் போய் பார்த்தால் ஏகப்பட்ட ரெசிப்பிக்கள். நாமெல்லாம் கட்லட் கடையில தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். இவங்க கொடுத்திருக்கிற எளிய முறையில் வீட்டுலயும் செய்து பார்க்கலாமே !

டிப் ஆஃப் தி கட்லட் : *காய்கறிக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி தட்டி(வடைக்கு செய்வது போல் சற்று தடிமனாக) அதனை சோளமாவு கலவையில் புரட்டி பின்னர் பிரட் கிரம்ஸில் புரட்டி தனியாக வைக்கவும்.(மாவு இலகுவாக இருந்தால் புரட்டும்போது உடைந்துகொள்ளும் கவனமாக செய்யவும்)



கமலா அவர்களின் அடுப்பங்கரைப் பக்கம் எட்டிப் பார்த்தால், அருமையான படங்களுடன், தெளிவாக விளக்கியிருக்கிறார். லேட்டஸ்ட்டா பதிந்திருக்கும் "சுண்டைக்காய் பொரிச்ச குழம்பு", படத்தைப் பார்க்கும்போதே பசியைக் கிளறுகிறது !

டிப் ஆஃப் தி குழம்பு : சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.



ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்கள் நிறைய குறிப்புக்கள் தனது சமையல் களத்தில் கொடுத்து வருகிறார். அம்மா சொல்லித் தந்ததெல்லாம் நோட்டில் எழுதி, அதைப் பதிந்து வருவதாகவும் கூறுகிறார். மணக்கும் மோர்க்குழம்பு, எளிதாக அருமையாக விளைக்கியிருக்கிறார்.

டிப் ஆஃப் தி மோர்க்குழம்பு : தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும்.



தமிழில் புகைப்படக் கலை பார்க்கிறோம். உம்ஸ்கொம்ஸ் (umskoms, பேரு சூப்பரா இருக்குல?!) தமிழில் சமையல் கலை பற்றி சொல்லுகிறார். இங்கு இந்த ரெசிப்பி ரொம்ப சிம்பிளா இருந்தது. பாயசம் என்றாலே நம்ம ஊருல ஜவ்வரிசி தான் ஞாபகம் வரும். ஒரு மாறுதலுக்காக பாசிப்பருப்பு பாயசம்.

டிப் ஆஃப் தி பாயசம் : பாயசத்தை இறக்கும் முன், நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்யை மற்றும் துறுவிய தேங்காய் சேர்த்து கலக்கிவிடவும் சூடாக பரிமாறவும்.



இவங்க வலைத்தளத்தில் இன்னும் ஏராளமான ரெசிப்பிக்கள் உள்ளன. அனைத்தையும் வாசிங்க, செஞ்சு பாருங்க.

அடுத்த பதிவில் சந்திப்போம் ...

7 comments:

  1. சதங்கா,

    தலைப்பே புதுமை - அளப்பது கதை, மணப்பது சுவை - ஆகா ஆகா

    அருமையான சமையல் - சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் - யார் சமைப்பது ?

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. என்னங்க சதங்கா இப்படி பண்ணிடீங்க, சாப்பிட்டு முடித்த பின்னும் படித்த பின் பசிக்க வைச்சிட்டீங்க!

    ReplyDelete
  3. சுண்டைக்கா பொரிச்ச குழம்பு, சம்மர் இங்க மறுபடி வரட்டும். சுண்டைக்காய்ல ஜமாய்ச்சுருவோம்

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்ம்ம்....பசிக்குது.

    வாழ்த்துகள்! பதிவு மணமா, சுவையா இருக்குங்க.:)

    / cheena (சீனா) said...
    அருமையான சமையல் - சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் - யார் சமைப்பது ?
    //

    சொல்லேய்! சொல்லேய்! மறுக்கா சொல்லேய்! :D

    ReplyDelete
  5. ஆஹா! பதிவு ரொம்ப ருசிக்குதுங்கோ!

    ReplyDelete
  6. சீனா ஐயா, ஜீவா, சின்ன அம்மிணி, தூயா, நியூபி, கவிநயா,

    தங்களின் வருகைக்கும், வாசித்தலுக்கும், ஊக்கமான மறுமொழிகளுக்கும் மிக்க நன்றி. வேலைப் பழுவின் காரணத்தினால் தனித்தனி பின்னூட்டப் பதில்கள் இடமுடியவில்லை, பொறுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது