07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 27, 2008

என்ன சமையலோ?

"உடம்பை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!
- திருமூலர்


உலகில் அனைத்து ஜீவராசிகளும் ஆடி ஓடுவது என்னவோ வயிறார உணவுண்ண தான். ஒருவருக்கு என்னத்த குடுத்தாலும் திருப்தியே வராமல் இன்னும் வேணும்! இன்னும் வேணும்! என்று தான் கேட்பர். ஆனால் வயிறு ரொம்பி விட்டால் போதும்! போதும் என் ஏப்பம் விடுவர்.


"பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்"னு சும்மாவா மின்சார பெண் கஜோல் அம்பாள் பாடியிருக்கா? :)நல்ல சங்கீதமும் சமையலும் ஒன்னு. இரண்டுக்கும் உடனே ரிஸல்ட் தெரிந்து விடும்.
ஷன்முகப்ரியா ராகத்தை சட்னி பண்ணிட்டாரே அந்த பாகவதர்னு சபாவிலேயே சொல்லி விடுவர். ஓ! சாம்பார் வைக்க சொன்னா ரசம் வெச்சு இருக்கியே! ஏது புருஷனுக்கு மிச்சம் பிடிக்கறியா?னு எங்க ஊர்களில் முகத்துக்கு நேர்லயே கேட்டு விடுவர்.


வலையுலகில் கதை எழுத, கவிதை எழுத, காமடி எழுதனு ஒரு கூட்டமே உள்ளது. சமையல் குறிப்புகள் வரும் தளங்கள் கொஞ்சம் கம்மின்னாலும் என் கண்ணில் சிலது பட்டது. சமையல் குறிப்புனா ஏதோ கிள்ளு கீரை மாதிரி கேவலமா லுக் விடுபவர்கள் வேளா வேளைக்கு ஒரு பிடி மண்ணையோ இல்லை அரை குயர் காகிததையோவா தின்பார்கள்?


உண்டி குடுத்தோர் உயிர் குடுத்தோர்! இல்லையா?


காலையில் உண்ணும் சிற்றூண்டியாகட்டும், மதியம் சாப்பிடும் மோர்கொழம்பு என்ன, மாலை சாப்பிடும் டிபன் கேசரி என்ன, என்ன என்ன?னு அடுக்கிண்டே போகலாம். எல்லா குறிப்புகளும் கச்சிதமாய், எளிமையாய், முக்ய குறிப்புகளுடன், கண்ணை கவரும் படங்களுடன் ஜெயஷ்ரி அக்கா தரும் பாங்கு இருக்கே! அடடா கண்களுக்கு தேவாமிர்தம்.


என்ன தான் பிட்சாவும் பர்கரும் சாப்பிட்டாலும், கடைசில வீட்ல ஒரு வாய் சாப்பாட்டுக்கு ஈடு ஆகுமா? பாரம்பரியமிக்க செட்டி நாட்டு சமையல், சப்பாத்தி தேசத்துக்கு சொந்தமான கோப்தா, நான் வகைகள், நெல்லை அல்வா (எங்கூரை விட்டு குடுப்போமா?)னு நீங்க எதுக்கு வேணாலும் நம்ம அக்கா தளத்தில் குறிப்புகள் காணலாம்.


பொருவிளங்காய் உருண்டைக்கும் பின் நவீனத்துவத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? இருக்குனு அடிச்சு சொல்றாங்களே அக்கா.
நீங்க சட்டியை அடுப்பில் வைத்து விட்டு கூட ஏதேனும் சந்தேகம் வந்தால் அக்காவின் குறிப்புகளை ஒரு பார்வை பார்த்தால் கை மேல் பலன்.

அப்படியே ரங்கமணிகளுக்கு ஏத்த எளிமையான வகையில் ஏதேனும் சமையல் வகைகள் பத்தி பதிவு போடுங்க அக்கா. உங்களுக்கு புண்யமா போகும். :)

ஆன்மீக செம்மல், பாசுர புயல், அண்ணன் கேஆரேஸ் வேற அவரைக்காய் கூட்டு வைப்பது பத்தி விலாவரியா சொல்லி இருக்கார் பாருங்க.


சைவம், அசைவம் என கலந்து கட்டி அடித்து நம் பாரம்பரிய உணவின் மகிமையை நமக்கு உணர்த்தும் இன்னொரு குழுபதிவு சாப்பிட வாங்க. இதோ வந்துட்டே இருக்கோம் முத்துலட்சுமி அக்கா. (ஜனவரிக்கு அப்புறம் பதிவே காணோமே?)


பிஜி தீவு பிஞ்சு கத்ரிகாயில் எப்படி கார பொடி தூவி கார கத்ரிக்காய் பக்குவமா செய்யலாம்?னு துளசி டீச்சர் பாடம் எடுத்து இருக்காங்க பாருங்க. நான் உங்க ஊருக்கு வந்த செஞ்சு தருவீங்களா டீச்சர்? சும்மா டேஸ்ட் தான் பண்ணுவேன், கத்ரிகாய் பிடிக்காது.


வெங்காய சாம்பார் வைக்கறது இவ்ளோ ஈசியா? ஆமாம்பா ஆமா!னு அடுப்பங்கரையில கமலாக்கா சொல்லி இருக்காங்க பாருங்க. உங்க வீட்டு அட்ரஸ் குடுங்க அக்கா, சில டெக்னிகல் சந்தேகங்களை கிளியர் பண்ணிக்கறேன்.


தக்காளி ரசம், மிளகு ரசம், ஜீரக ரசம், எலுமிச்சை ரசம், பைனாப்பிள் ரசம், இதுல எல்லாத்துக்குமே அடிப்படை தேவை ரச பொடி. ஆனா ரசபொடியே இல்லாம எப்படி ரசம் வைக்கலாம்?னு சுந்தரா சொல்லி இருக்காங்க பாருங்க. அக்கா, இதை முன்னாடியே சொல்ல கூடாதா? எங்க மாமியாரை படுத்தி எடுத்து, போன தடவை ரச பொடி வாங்கி வந்தேன்.

சமையல் குறிப்புகளை ஆங்கிலத்தில் அள்ளி தராங்க ஹரியானாவிலிருந்து ராகா என்பவர். எல்லாம் சப்பாத்தி ஐட்டமா, ஒரே பீட்டரா இருக்கு. சரி விடுங்க, நமக்கு மேட்டர் தானே முக்யம்?


பேச்சிலர்களுக்கு ஸ்பெஷலா நம்ம பொண்வண்டு சமையல் குறிப்புகள் தராங்க பாருங்க.


தூயா அவர்கள் சைவம், அசைவம்னு தனிதனியா கோர்வையா எழுதி இருக்கறத பாருங்க. கூட்டணிக்கு ஆள் தேடறாங்க. சுயேட்சைனாலும் ஓகே தானா தூயா?


இந்த சம்மரை எப்படி சமாளிக்கலாம்னு புதுகை தென்றல் தவழ்ந்து வருகுது பாருங்க.

யப்பா! என்ன இப்பவே கண்ண கட்டுதா? எனக்கும் தான். ஒரு வழியா சமையல் முடிஞ்சது. அடுத்து என்ன? ஆங்! அதே தான்!


நாளைக்கு ரெடியா இருங்க.

41 comments:

 1. அம்பி தங்கமணிக்கு எத்தனை ஒத்தாசையா இருக்கீங்கனு உங்க சமையல் லிஸ்ட் பாத்தாலே தெரியுது.
  மூனு வேளையும் உங்க நளபாகமா?

  ReplyDelete
 2. சரி டீச்சர், எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். நெல்லைகாரவுளுக்கு நல்லா வக்கனையா சாப்டனும். :)

  ReplyDelete
 3. இத்தனை Chef மார் இருக்காங்களா ஏரியாவுல...

  ReplyDelete
 4. நன்றி அம்பி...என்னுடைய பதிவைத் தேர்ந்தெடுத்ததற்கு.

  ஆமா,நீங்களும் நெல்லைக்காரவுக தானா?

  ReplyDelete
 5. என்ன கண்மணி,

  நம்ம 'அம்பீஸ் கஃபே'யில் இதெல்லாம் கேக்கலாமா? :-))))

  ReplyDelete
 6. நன்றிகள். சமையலான்னு கேவலமா பார்க்கம பேசவும் நண்பர்கள் இருக்காங்களேன்னு சந்தோசமா இருக்கு. :)

  ReplyDelete
 7. அம்பி, சூப்பர்

  இவ்வளவு வலைப்பூக்கள் இருக்கா சமையலுக்கு - ம்ம்ம்

  ஜெய்ஸ்ரீ - ரவா கேசரி, இ(தி)ருட்டுக்கடை அல்வா, பொறிவிளங்கா உருண்ட - பி.ந.க (???), அவரக்கா கூட்டு ( கேயாரெஸ் - என்ன இது - இதெல்லாம் தெரியுமா ), துளசியோட பொங்கல், காரக் கத்தரிக்கா, சுந்தராவோட ரச்ச்ச்ம், வெங்காய சாம்பார், பாச்சிலர்ஸ் ஸ்பெசல் - பொண்வண்டு - கடைசியா கோடை வெயிலுக்கு சும்மா சில்லுன்னு குடிக்க புதுகை.


  ம்ம்ம்ம்ம்ம் - படிச்சிட்டு என்ன பண்றது - யார் செஞ்சு தருவா
  - துண்றதுக்கு

  ReplyDelete
 8. அவரக்காக் கூட்டுக்கு 58 பின்னூட்டம் - ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 9. //அவரக்காக் கூட்டுக்கு 58 பின்னூட்டம் - ம்ம்ம்ம்ம்//

  சீனா சார்
  இந்த ம்ம்ம்ம்ம்ம்க்கு என்ன அர்த்தம்?
  சாப்பிட்டுப் போட்டு ம்ம்ம்ம்ம் என்பார்களே அதுவா? :-)

  //ஒரு வழியா சமையல் முடிஞ்சது. அடுத்து என்ன? //

  யோவ் அம்பி, சமையல் முடிஞ்சாப் போதுமா?
  தலைவாழை இலை விரிச்சி, நீ சூடிக் கொடுத்த அத்தனையும்....ச்சே சுட்டி கொடுத்த அத்தனையும் ஒழுங்கா எங்களுக்குப் பரிமாறு!

  இல்லாக்காட்டி முத்து அக்கா கிட்ட சொல்லி, வலைச்சரத்தில் உன்னை சரக்கு மாஸ்டரா போட்டுறச் சொல்லிருவேன்! ஆமா! :-)
  என்னக்கா சொல்றீங்க?

  ReplyDelete
 10. // நெல்லை அல்வா (எங்கூரை விட்டு குடுப்போமா?)//

  அட நம்ம ஊருதானா நீங்க! 41 காமெண்ட் தந்த வா.வரலாறில் அது பிடி படாமப் போச்சே!

  எல்லா நளபாகப் பதிவுகளையும் நல்லாவே (சரமா) தொடுத்திருக்கீங்க!

  ReplyDelete
 11. ராமலக்ஷ்மி,சுந்தரா எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். தீருனெல்வேலிக் குசும்பு அத்தனையும் அம்பி கிட்ட குத்தகை விட்டு இருக்காங்க.:)

  இன்னும் அப்பளம் பத்தித் தான் பதியலை யாரும்.ஹ்ம்ம்.
  அம்பி !! சூப்பரா அழகா யாரையும் விடாம சுட்டி கொடுத்தாச்சு. தம்பி கணேசுகைபாகத்தைச் சொல்லலியே:)
  வெகு நறுவிசு.

  ReplyDelete
 12. ஹை!! அம்பி அண்ணா!!

  தூயா சொன்னதுக்கு ரிப்பீட்டு ..... :)))

  ReplyDelete
 13. //இத்தனை Chef மார் இருக்காங்களா ஏரியாவுல...//

  ஆமா தமிழன், யாராவது ஒருத்தர் அட்ரஸ் குடுத்தா ரொம்ப சவுகரியமா இருக்கும். :))

  ReplyDelete
 14. //ஆமா,நீங்களும் நெல்லைக்காரவுக தானா?
  //

  சுந்தரா யக்கா என்ன இப்புடி கேட்டுபுட்டீக?

  அம்பாசமுத்திரம் பக்கத்துல அப்பளம் புகழ் கல்லிடை குறிச்சி தான் நாங்க. நீங்க எங்க இருகீக? :)

  ReplyDelete
 15. //நம்ம 'அம்பீஸ் கஃபே'யில் இதெல்லாம் கேக்கலாமா? //

  துளசி டீச்சர், இருக்கற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கியாச்சா? :))

  ReplyDelete
 16. //சமையலான்னு கேவலமா பார்க்கம பேசவும் நண்பர்கள் இருக்காங்களேன்னு சந்தோசமா இருக்கு//


  @thooya, சமையல் ஒரு தெய்வீக கலை. எல்லோருக்கும் வந்துவிடாது.

  *ahem, பேச மட்டுமல்ல, சாப்பிடவும் நண்பர்கள் இருக்காங்க தூயா. என்ன சீனா சார், சரி தானே? :p

  ReplyDelete
 17. //இவ்வளவு வலைப்பூக்கள் இருக்கா சமையலுக்கு - ம்ம்ம்
  //

  இன்னும் கூட இருக்கலாம். என் வாசிப்பு இவ்ளோ தான் சார்.

  //படிச்சிட்டு என்ன பண்றது - யார் செஞ்சு தருவா
  - துண்றதுக்கு
  //

  தூயா இருக்காங்க, கவலைபடாதீங்க! :p

  ReplyDelete
 18. //அவரக்காக் கூட்டுக்கு 58 பின்னூட்டம் - ம்ம்ம்ம்ம்

  //

  @seena sir, உங்க கண்ணுலயும் பட்டுடுச்சா? கொஞ்சம் அனியாயம் தான். :p

  ReplyDelete
 19. //இல்லாக்காட்டி முத்து அக்கா கிட்ட சொல்லி, வலைச்சரத்தில் உன்னை சரக்கு மாஸ்டரா போட்டுறச் சொல்லிருவேன்! //

  @krs, என்னது சரக்கு மாஸ்டரா? இங்கயுமா? :p

  ReplyDelete
 20. //அட நம்ம ஊருதானா நீங்க! 41 காமெண்ட் தந்த வா.வரலாறில் அது பிடி படாமப் போச்சே!
  //

  ரா லட்சுமியக்கா, என்ன இப்புடி கேட்டுபுட்டீக? அம்பாசமுத்திரம் பக்கத்துல அப்பளம் புகழ் கல்லிடை குறிச்சி தான் நாங்க. நீங்க எங்க இருக்கீக? :p

  ReplyDelete
 21. //தீருனெல்வேலிக் குசும்பு அத்தனையும் அம்பி கிட்ட குத்தகை விட்டு இருக்காங்க.//

  @valli simhan, ராமலக்ஷ்மி,சுந்தரா எல்லோருக்கும் சொல்லிக்கிறேன்.
  வல்லி மேடமும் திருநெல்வேலி தான். வாக்கப்பட்டது தஞ்சாவூர்காரருக்கு. :p

  //தம்பி கணேசுகைபாகத்தைச் சொல்லலியே//

  அது தான் ஊரறிந்த ரகசியமாச்சே!
  :))

  ReplyDelete
 22. //தூயா சொன்னதுக்கு ரிப்பீட்டு//

  ஹை! பொண்வண்டு தங்கச்சிக்கா, தூயாவுக்கு நான் குடுத்த பதிலே இங்கயும் ரீப்பீட்டு. :p

  ReplyDelete
 23. //ஹை! பொண்வண்டு தங்கச்சிக்கா//

  என்ன கொடுமை அம்பி அண்ணா இது????

  நான் அவள் இல்லை !!!

  :)

  ReplyDelete
 24. நன்றி அம்பி...என்னுடைய பதிவைத் தேர்ந்தெடுத்ததற்கு

  ReplyDelete
 25. மை பா பத்தி ஒரு வார்த்த இல்ல? ஹ்ம்ம் இதெல்லாம் ஒரு சமையல் பதிவாக்கும் போங்கப்பா:):)

  ReplyDelete
 26. பதிவை புக் மார்க் செஞ்சு வெச்சிட்டேன் :)))

  (இப்பயாச்சும் யாராவது சொல்லுங்கப்பா நான் பொருப்பாயிட்டேன்னு))

  ReplyDelete
 27. //ambi said...
  சரி டீச்சர், எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். //

  சமைச்சத சாப்பிட்டுதான் தீர்கனும் பேசி எல்லாம் தீர்த்துட முடியாது.

  ReplyDelete
 28. //நான் அவள் இல்லை !!!
  //

  சரிங்க பொண்வண்டு. நம்பிட்டோம். :p

  ReplyDelete
 29. வருகைக்கு நன்னி புதுகை தென்றல்.
  :)

  ReplyDelete
 30. //மை பா பத்தி ஒரு வார்த்த இல்ல? ஹ்ம்ம் இதெல்லாம் ஒரு சமையல் பதிவாக்கும் போங்கப்பா:):)//

  @shailaja, ஹிஹி, மை.பாவை நீங்க எனக்கு கண்ணுலயே காட்டலையே? :p

  ReplyDelete
 31. //பதிவை புக் மார்க் செஞ்சு வெச்சிட்டேன் //

  @kusumban, இதெல்லாம் செல்லாது, செல்லாது. :p

  சுறுசுறுப்பா ஒரு சமையல் குறிப்பாவது உங்க பதிவுல இன்னும் ஒரு வாரத்துக்குள்ள போட்டா தான் ஒத்துக்குவோம். :))

  ReplyDelete
 32. சிந்தாநதி இந்த வலைச்சரம் ஆரம்பிச்சமாதிரியே ..சாப்பிடவாங்க ஆரம்பிச்சிட்டு என்னை எழுத சொன்னாங்க. ஆனா நான் செய்யற சமையலை எல்லாம் எழுத முடியாது.. கையில் கிடைப்பதை போட்டு செய்வேன்.. அதனால் தொடர்ந்து அங்க எழுதல .. ஆனா அப்பப்ப அம்மா மாமியார் சொல்லிக்குடுக்கறத ( வரும்போது போம்போது) குறீப்பு செய்து வச்சிக்கனும் அங்க்ன்னு நினைப்பது தான்.. :)

  ReplyDelete
 33. //அப்பப்ப அம்மா மாமியார் சொல்லிக்குடுக்கறத ( வரும்போது போம்போது) குறீப்பு செய்து வச்சிக்கனும் அங்க்ன்னு நினைப்பது தான்//

  முத்தக்கா, நீங்க குறிப்பு எடுக்கலைன்னு தெரிஞ்சு உங்க மாமியார் தான் இந்த பதிவுல என்னை எழுத சொன்னாங்க. :p

  ReplyDelete
 34. வல்லியம்மாவும் நம்ம பக்கம்தானா, நல்லது. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ப்ராப்பர் நெல்லை,ஜங்ஷன்,தாமிர பரணிக்கரையில் உள்ள சிந்துபூந்துறை(ஒரு காலத்தில் மரங்களிலிருந்து சிந்திய பூக்களால் நிறைந்திருக்குமாம்,ஆற்றின் படித்துறை).

  ReplyDelete
 35. /
  கண்மணி said...

  அம்பி தங்கமணிக்கு எத்தனை ஒத்தாசையா இருக்கீங்கனு உங்க சமையல் லிஸ்ட் பாத்தாலே தெரியுது.
  மூனு வேளையும் உங்க நளபாகமா?

  /

  ரிப்பீட்டேேஏஏஏஏய்

  ReplyDelete
 36. /
  Thooya said...

  நன்றிகள். சமையலான்னு கேவலமா பார்க்கம பேசவும் நண்பர்கள் இருக்காங்களேன்னு சந்தோசமா இருக்கு. :)
  /

  என்னங்க தூயா இப்பிடி சொல்லிட்டீங்க??

  ReplyDelete
 37. // சரிங்க பொண்வண்டு. நம்பிட்டோம். //

  அவ்வ்வ்வ்வ் !!! அடக்கொடுமையே !! விரைவில் பதிவர் சந்திப்புல கலந்து கொண்டு நிரூபிக்கணும் போல .. :)))

  என்னோட ப்ரொபைல் மெசேஜ் பாருங்கண்ணா !! :)))

  ReplyDelete
 38. /
  ambi said...

  //தூயா சொன்னதுக்கு ரிப்பீட்டு//

  ஹை! பொண்வண்டு தங்கச்சிக்கா,
  /

  என்ன பொண்வண்டு பாம்பே போய் எதும் ஆப்பரேசன் செஞ்சுகிட்டியா சொல்லவே இல்ல!!!!
  :)))))))


  சரி கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா?

  ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா??
  :)))))))))))))))))))

  ReplyDelete
 39. //விரைவில் பதிவர் சந்திப்புல கலந்து கொண்டு நிரூபிக்கணும் போல //

  ஹிஹி, பாருங்க மங்களூர் சிவா ஒரு ரேஞ்சா தான் இருகார். எதுக்கும் நேர்ல வாங்க. இல்லைனா வீக் எண்ட் ஜொள்ளுல உங்க படத்தை ரிலீஸ் பண்ணிடுவார். :p

  ReplyDelete
 40. //சரி கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா?

  ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா??
  //


  :))))

  @M-siva, நல்ல வேளை, இதோட நின்னியே, அடுத்த வரி பாடி இருந்தா பொண்வண்டு கதை கந்தலாயிருக்கும்.

  ReplyDelete
 41. /
  ambi said...

  //சரி கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா?

  ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா??
  //


  :))))

  @M-siva, நல்ல வேளை, இதோட நின்னியே, அடுத்த வரி பாடி இருந்தா பொண்வண்டு கதை கந்தலாயிருக்கும்.
  /

  செம டைமிங்!!!!

  :))))))))))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது