07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 4, 2010

உடம்பு எப்படி இருக்கு? - வலைச்சரம் 2

வாங்க!!! வாங்க!!! நேத்து என்னோட கதை, கவிதைகளை படிச்சி
"ஒரு மாதிரி" ஆகியிருப்பீங்க, அதனாலென்ன சரி பண்ணிரலாம் :))

சரி........கோபபடாதீங்க பிரசர் ஏறிடும், அப்புறம் சாப்பாட்டுல உப்பை கம்மி பண்ணுங்கன்னு மருத்துவர் சொல்வாங்க,
அது ஏன்னு தெரிஞ்சுக்க பாருங்க இதை.

அப்புறம், நீங்களே சொந்தமா மாத்திரை, மருந்துகளை தேடி
ஓடாதீங்க. மருத்துவருக்கே, உடம்பு சுகமில்லை என்றாலும் அவர்
இன்னோர் மருத்துவரைத்தான் நாடனுமாம், சுய வைத்தியம் பாத்துக்கிட்ட ஒருத்தரின் நிலைமைய இங்கே போய்
படிங்க. இதை சொன்னவங்க Dr.எம்.கே.முருகானந்தம்.
****************************************

என்னாது!!! என் கவிதையை படிச்சதால, ஒருத்தர் மயக்கமாயிட்டாரா!!!
பாவமா இருக்கு, அவருக்கு முதலுதவி செய்வோமா, எப்படி
செய்றதுன்னு தெரியலையா, செல்லுங்கள் இங்கே, விடை கிடைக்கும்.

அளவுக்கு மீறனால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்வாங்க,
அப்படி இருக்கயில பல்லி மிட்டாய் சாப்பிடற மாதிரி panadol
சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா, தெரியாதுன்னா இவர்
சொல்றத கேளுங்க . இந்த தளம்: மருத்துவம் பேசுகிறது!
*************************************

இந்த காலத்து சுட்டிங்க, ரொம்பவே துறுதுறுன்னு இருக்காங்க
ரொம்ப ஸ்டைலா டான்ஸ் வேற ஆடுவாங்க. எதிர்பாராம
அவங்களுக்கு முழங்கையில அடிபட்டா என்ன செய்யனும்ன்னு
இவங்க சொல்லி இருக்காங்க .

அநேகம் பேர் ரொம்ப ஸ்வீட்டானவங்க, அட பேச்சில இல்லங்க,
உடம்பில "சர்க்கரை" வச்சி இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்.
அவங்களுக்கு சுலபமா தொற்று நோய்கள் தாக்கும், இதை எப்படி
தடுக்கலாம்னு இதில் சொல்லி இருக்காங்க. சொன்னவங்க
தேவன்மாயம். தளம்:தமிழ்த்துளி.
*******************************

சுற்றுபுறத்தை எப்பவும் சுத்தமா வச்சிக்கோங்க, உங்க வீட்டு
பூந்தொட்டில தண்ணீர் தேங்கி இருந்தா அதுல கூட கொசு வளரும்
அபாயம் இருக்கு. கொசுவால பரவக்கூடிய நோய்கள்ள ஒண்ணுதான்
"டெங்கு". இது வந்தா நம் உடம்பில ஏற்படக்கூடிய அறிகுறிகளையும்,
இதில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளும் வழிமுறைகளையும் தெரிஞ்சுக்க
இங்கே செல்லுங்களேன்.
தளம்: Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்.
**********************************

இப்போ, இதே மாதிரி மருத்துவ இடுகைகள் வரக்கூடிய சில
புதிய தளங்களை பார்ப்போமே.

புது மலர்1, தளம்:வரசித்தன் பக்கங்கள்
இவங்க ஒரு மருத்துவர், May 2010 - இல் இருந்து எழுத
தொடங்கி இருக்காங்க.

பழைய தமிழ் படங்களில், ஹீரோ (அல்லது) ஹீரோயின்
சட்டுன்னு, எதிரி ரேஞ்சுக்கு பேசிட்டு அப்புறம் தனியா உக்காந்து
அழுவாங்க. கொசுவத்தி சுத்துன அப்புறமா தெரியும் அவங்களுக்கு
"கேன்சர்" இருக்குறதால அப்படி நடந்துகிட்டாங்கன்னு!! (தன் மேல
தன் துணைக்கு வெறுப்பு வரணுமாம்) அந்த கேன்சர் எப்படி
மனித உடம்புல வளருது, அதோட ஆரம்ப அறிகுறிகள்
என்னன்னு ரொம்ப தெளிவா சொல்லியிருக்காங்க , வரசித்தன்
பக்கங்களில்.
***********************************

புது மலர் 2, தளம்:FEEL & HEAL Physio Accu Centre
இவங்களும் மருத்துவர்தான், பிப்ரவரி 2010 - இல் இந்த தளத்தை
தொடங்கி இருக்கிறார்கள்.

"அக்குபஞ்சர்" பற்றி அனைவரும் கேள்வி பட்டிருப்போம். இதைப்பற்றிய
விரிவான தகவல்களோடு இவங்க ஒரு தொடர் எழுதுறாங்க,
அதோட சில டிப்ஸ் கொடுக்குறாங்க, ரொம்பவே சுவராசியமாய்
இருக்கு, இங்கே சென்று படித்து பாருங்களேன்.
************************************************

மேலே குறிப்பிட்ட இடுகைகள் உங்களுக்கு பயனளிக்கும்
என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.
மீண்டும் நாளை, இதிலிருந்து வேறுபட்ட பிரிவிலான (மருத்துவம் அல்லாத) இடுகைகளை பார்ப்போம்.

நன்றி.

33 comments:

 1. மருத்துவ குறிப்பு தரும் பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம், அருமை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 2. போங்க சை.கோ.ப ஒவ்வொரு இணைப்பாக சொடுக்கிப் படிக்க சோம்பலாக இருக்கிறது...

  ReplyDelete
 3. பதிவுலகில் குழந்தையா?
  சும்மா இப்படி பேரவச்சிகிட்டா நாங்க நம்பிடுவோமா.

  அசத்துறீங்க டாக்டர் அறிமுகம் அருமை..

  ReplyDelete
 4. உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன்.(நல்ல விதமா தான்:))

  வாழ்த்துக்கள் சை. கொ. ப

  ReplyDelete
 5. அருமையான அறிமுகங்கள்; மருத்துவகுறிப்புகள் ரொம்ப சூப்பர்.

  ReplyDelete
 6. அசத்துறீங்க சைவம். அறிமுகங்கள் அருமை. தொடர்ந்து கலக்குங்க.

  ReplyDelete
 7. இரண்டாம் நாள் வாழ்த்துகள் நண்பரே.

  மருத்துவ தளங்கள் அறிமுகம் அருமை.

  ReplyDelete
 8. என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக்கிட்டீங்களா! ஓகே!!

  ReplyDelete
 9. குத்தியாச்சு 7/7 !!!

  ReplyDelete
 10. உடம்பு எப்படி இருக்குன்னு மிரட்டுரீங்களே.
  புதுமையான அறிமுகங்கள்.
  தேவையான அறிமுகங்கள்
  வாழ்த்துக்கள் பரோட்டா

  ReplyDelete
 11. கலக்குங்க கொத்து! :))

  ReplyDelete
 12. ம‌ருத்துவ‌ர்க‌ளில் அறிமுக‌ம் அருமை சை.கொ.பா... தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌..

  ReplyDelete
 13. @@@Chitra--//மருத்துவ குறிப்பு தரும் பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம், அருமை. பாராட்டுக்கள்!//

  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  ReplyDelete
 14. ஆரம்பம் அசத்தல்...தொடருங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. // Chitra said...
  மருத்துவ குறிப்பு தரும் பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம், அருமை. பாராட்டுக்கள்!//

  உங்களின் தொடர் ஊக்கத்திற்கு நன்றி சித்ரா.
  // philosophy prabhakaran said...
  போங்க சை.கோ.ப ஒவ்வொரு இணைப்பாக சொடுக்கிப் படிக்க சோம்பலாக இருக்கிறது...//

  நேரம் கிடைக்கும்போது, ஒவொன்றாக
  படித்து பாருங்க பிரபாகர்.
  // அன்புடன் மலிக்கா said...
  பதிவுலகில் குழந்தையா?
  சும்மா இப்படி பேரவச்சிகிட்டா நாங்க நம்பிடுவோமா.

  அசத்துறீங்க டாக்டர் அறிமுகம் அருமை..//

  வாங்க மலிக்கா, இங்கே இருக்குற ஜாம்பவான்கள்
  முன்னால நான் குழந்தைதேன் :))
  // மோகன் குமார் said...
  உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன்.(நல்ல விதமா தான்:))

  வாழ்த்துக்கள் சை. கொ. ப//

  அப்படியா!! மெய்யாலுமா? :))
  நன்றி மோகன் குமார், தொடர்ந்து வாருங்கள்.

  // Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  அருமையான அறிமுகங்கள்; மருத்துவகுறிப்புகள் ரொம்ப சூப்பர்.//

  நன்றி ஸ்டார்ஜன்.

  // அக்பர் said...
  அசத்துறீங்க சைவம். அறிமுகங்கள் அருமை. தொடர்ந்து கலக்குங்க.//

  அப்படியா, மகிழ்ச்சி.

  // இராகவன் நைஜிரியா said...
  இரண்டாம் நாள் வாழ்த்துகள் நண்பரே.

  மருத்துவ தளங்கள் அறிமுகம் அருமை.//

  வாங்க, இராகவன் அண்ணா!!
  நன்றி.

  // தேவன் மாயம் said...
  என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக்கிட்டீங்களா! ஓகே!!

  May 4, 2010 12:41:00 PM GMT+05:30


  தேவன் மாயம் said...
  குத்தியாச்சு 7/7 !!!

  May 4, 2010 12:42:00 PM GMT+05:30//

  வாங்க மருத்துவரே!! நீங்க இல்லாமலா.
  உங்க இடத்துல, ஏதோ "டாட்டு" மேட்டர் ஓடிகிட்டு இருக்கு போல :))
  // padma said...
  உடம்பு எப்படி இருக்குன்னு மிரட்டுரீங்களே.
  புதுமையான அறிமுகங்கள்.
  தேவையான அறிமுகங்கள்
  வாழ்த்துக்கள் பரோட்டா//

  ஹி.......ஹி...........பயப்படாதீங்க, சும்மா :))
  நன்றி பத்மா.
  // 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
  கலக்குங்க கொத்து! :))//

  ரைட்டு, நன்றி ஷங்கர்.

  // நாடோடி said...
  ம‌ருத்துவ‌ர்க‌ளில் அறிமுக‌ம் அருமை சை.கொ.பா... தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌..//

  நன்றி ஸ்டீபன்.

  // LK said...
  payanulla parotta//

  அப்போ வயிறார, சாப்பிட்டு போங்க :))
  மிக்க நன்றி தங்களின் தொடர் வருகைக்கு.
  // ஜெய்லானி said...
  @@@Chitra--//மருத்துவ குறிப்பு தரும் பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம், அருமை. பாராட்டுக்கள்!//

  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்//

  நன்றி ஜெய்லானி.

  ReplyDelete
 16. // சி. கருணாகரசு said...
  ஆரம்பம் அசத்தல்...தொடருங்க வாழ்த்துக்கள்//

  வாங்க நண்பரே!!
  நன்றி.

  ReplyDelete
 17. அறிமுகங்கள் அருமை.

  ReplyDelete
 18. நல்லா கொத்துபுரோட்டா போட்டிருக்கீங்க.

  ReplyDelete
 19. அடடா,சட்டு புட்டுன்னு இவ்வளவு வேகமா புரோட்டாக்களை சுட்டு தள்ளுரீங்க

  பதிவுலகில் இவ்வளவு மருத்துவ தகவல்கள் இருக்குனு எனக்கு இப்பதான் தெரிஞ்ச்சி

  அடுத்தது என்ன?காத்திறுக்கிறேன்

  ReplyDelete
 20. இந்தப் போடு போடுவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? அசத்தறீங்க!!

  ReplyDelete
 21. நல்ல அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 22. நல்ல அறிமுகங்கள். நன்றி நண்பரே.

  ReplyDelete
 23. //நேசமித்ரன் said...
  அறிமுகங்கள் அருமை.//

  உங்களின் தொடர் கருத்துரைகள், உற்சாகம்
  அளிக்கிறது!! நன்றி நேசமித்ரன்.  // அமைதிச்சாரல் said...
  நல்லா கொத்துபுரோட்டா போட்டிருக்கீங்க.//

  அப்படியா!!! அப்போ நல்லா ருசிச்சி சாப்பிடுங்க :))
  // ஜில்தண்ணி said...
  அடடா,சட்டு புட்டுன்னு இவ்வளவு வேகமா புரோட்டாக்களை சுட்டு தள்ளுரீங்க

  பதிவுலகில் இவ்வளவு மருத்துவ தகவல்கள் இருக்குனு எனக்கு இப்பதான் தெரிஞ்ச்சி

  அடுத்தது என்ன?காத்திறுக்கிறேன்//

  வாங்க ஜில்தண்ணி!! நாளைக்கும் சுடச்சுட
  பரோட்டாக்கள் இருக்கு, மறக்காம வாங்க.
  // சேட்டைக்காரன் said...
  இந்தப் போடு போடுவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? அசத்தறீங்க!!//

  நன்றி தலைவா!! தொடர்ந்து வாங்க.  // Mrs.Menagasathia said...
  நல்ல அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்!!//

  மிக்க நன்றி, Menagasathia தொடர்ந்து வாருங்கள்.  // இராமசாமி கண்ணண் said...
  நல்ல அறிமுகங்கள். நன்றி நண்பரே.//

  நன்றி ராம், தொடர் கருத்துக்களுக்கு.

  ReplyDelete
 24. முதல் நாள் பரோட்டாப் பதிவுகள்...இரண்டாம் நாள் மருத்துவப் பதிவுகளா...கலக்குங்க...

  ReplyDelete
 25. inaiku etti paathean. kalakureenga....congrats.

  ReplyDelete
 26. தேவையான அறிமுகங்கள்

  வாழ்த்துக்கள் நண்பா

  விஜய்

  ReplyDelete
 27. ...

  மருத்துவ குறிப்பு தரும் பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம், அருமை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 28. // ஸ்ரீராம். said...
  முதல் நாள் பரோட்டாப் பதிவுகள்...இரண்டாம் நாள் மருத்துவப் பதிவுகளா...கலக்குங்க...//

  நன்றி அண்ணா, தொடர்ந்து வாருங்கள்.  // VISA said...
  inaiku etti paathean. kalakureenga....congrats.//

  வாங்க!!! விசா, ஏன் அங்கேயே நின்னுட்டீங்க,
  தாராளமா உள்ள வாங்க :))
  நன்றி விசா.  // விஜய் said...
  தேவையான அறிமுகங்கள்

  வாழ்த்துக்கள் நண்பா

  விஜய்//

  நன்றி விஜய்.
  // சே.குமார் said...
  ...

  மருத்துவ குறிப்பு தரும் பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம், அருமை. பாராட்டுக்கள்!//

  நன்றி குமார்.

  ReplyDelete
 29. மருத்துவப் பதிவுகள்
  அருமை..
  தொடர்ந்து கலக்குங்க அண்ணாத்தை

  ReplyDelete
 30. // எனது கிறுக்கல்கள் said...
  மருத்துவப் பதிவுகள்
  அருமை..
  தொடர்ந்து கலக்குங்க அண்ணாத்தை//

  டாங்க்ஸ் தங்கச்சி :))
  தொடர்ந்து வாங்க.

  ReplyDelete
 31. நீங்கள் பதிவுகளை அறிமுகம் செய்யும் விதம் நன்றாக இருக்கிறது சைவம்

  ReplyDelete
 32. // r.v.saravanan said...
  நீங்கள் பதிவுகளை அறிமுகம் செய்யும் விதம் நன்றாக இருக்கிறது சைவம்//

  அப்படியா!! மகிழ்ச்சி!! நன்றி சரவணன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது