07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 2, 2010

சிறுவர் பூங்கா - வலைச்சரம் நிறைவு நாள்

குழந்தைகளின் உலகம் அது தனி! நாமும் கூட அந்த வயதைத்தாண்டி வந்தவர்கள் தான் என்றாலும் கூட, குழந்தைகளின் உலகில் நாம் திரும்ப நுழைய, நாமும் குழந்தை ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்களின் மழலை ஒரு கவிதை. ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் முதல் உலகம். அதுவும் தாய்மார்களுக்கு சொல்லவே வேண்டாம். குழந்தைகளின் லீலைகளை, அவர்களின் மழலைகளை, தப்பும் தவறுமாய்ப் பாடும் நர்சரி ரைம்ஸ், பிரார்த்தனை சுலோகங்கள் இவற்றை சொல்லிச்சொல்லி மாய்ந்து போவார்கள்.

வலையுலகில் இப்படிக்குழந்தைகளின் லீலைகளைச்சொல்லி நம்மையும் குழந்தைப்பருவத்திற்கு அழைத்துச்செல்லும் அருமையான வலைத்தளங்களைப் படிக்கும் போது நம்மையும் அறியாமல் நம் முகத்தில் புன்னகையும், மனதில் குதூகலத்தையும் பூக்க வைக்கும்.

1.சந்தன முல்லையின் பப்புவின் திருவிளையாடல்கள் -
2. தீபாவின் குட்டீஸ் நேஹாவின் குறும்புகளைப்பகிரும் வலை.
3. அமித்துவின் குறும்புகளும், மழலைப்பிதற்றல்களும் இடம்பெறும் அமித்து
அப்டேட்ஸ் http://amirdhavarshini.blogspot.com/
4.பேரண்ட்ஸ் கிளப் - இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்டுரைகளையும் படித்தாலே போதும். இளம் தாய்மார்கள் முதல்,
வளர் இளம்பருவத்துக்குழந்தைகளின் தாய்மார்கள் வரை வழிகாட்டும் அருமையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உணவுப்பழக்கம் முதல் கல்வி,பழக்கவழக்கங்களை மேம்படுத்துவது, யோகா, தியானம் வரை குழந்தை வளர்ப்புடன் தொடர்புள்ள எல்லாமும் இருக்கிறது. மாண்டிசோரி ஆசிரியர் மற்றும் மருத்துவர்கள் எழுதிய கட்டுரைகளின் மீள்பதிவும் இடம்பெற்றுள்ளது.படித்துப்பயன் பெறும் பல பெற்றோர்களில் நானும் ஒருவர். http://parentsclub08.blogspot.com/

5. அம்மாக்களின் அனுபவங்கள், குழந்தைக்கதைகள் இடம் பெறும் அருமையான வலைப்பூ http://ammakalinpathivukal.blogspot.com/

6. ஒரு ஆணின் பார்வையில் குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் குறும்பு, சேட்டைகளைக்கையாளும் விதத்தை நகைமுகத்துடன் விவரிக்கும் வலைப்பூ http://abiappa.blogspot.com/

நன்றி!
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

5 comments:

 1. அருமையான சிறுவர் பூங்கா அறிமுகம், சில வலைகள் தெரிந்திருந்தாலும், சில புது அறிமுகன்ங்கள்.

  நன்றி

  ReplyDelete
 2. குழந்தைபருவம், நினைக்கும்போதே மிக இனிமையான
  நினைவுகளை கொண்டுவரும் பருவம்!!!

  ReplyDelete
 3. அன்பின் சாந்தி

  சிறுவர் பூங்கா அருமை

  நல்வாழ்த்துகள் சாந்தி
  நட்புடன் சீனா

  ReplyDelete
 4. கலகலப்பான சிறுவர் பூங்கா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது