07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 28, 2010

கவிதை முகமும்., முக நூலும்., புதிய “ழ” வும்

முக நூலில் முதலில் அறிமுகம் ஆகி இருந்தால் வலைத்தளமே ஆரம்பித்து இருக்க மாட்டேன்.. அவ்வளவு உறவுகள் நண்பர்கள்..அங்கும் தமிழில்தான் எழுதுவது என கொடி பிடிப்பவர்கள் அதிகம்..வியூ நோட்ஸ்., ஃபோட்டோ டாகிங், விஷுவல் கிஃப்ட்ஸ்., வாழ்த்து அட்டைகள்., காலை., மாலை., இரவு வணக்கங்கள்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்., மட்டுமல்ல., பொது நல விழைவுகளும் உண்டு..,’ஈழத்து நிகழ்வுக்காய்., எதிர்ப்பைக்காட்ட தன்னுடைய புகைப்படங்கள் இருக்குமிடத்தை முழுமையாக கறுப்பாக்குதல்., விமான விபத்தில் உயிரிழந்தோரின் துக்கத்தில் பங்கெடுக்க புகைப்படங்களுக்குப் பதில் தீபம் வைத்தல் என தங்கையர்கள்., தோழியர்கள் .,நண்பர்கள்.,.........அது ஒரு வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன் அல்ல என நிரூபித்து விட்டார்கள்..

இரண்டு மணி நேரம் முதல் இருபது நாள் வரை லீவ் அப்ளை செய்துவிட்டுப் போகிறவர்களின் சுவற்றில் நூற்றெட்டு மிஸ் யூ மிஸ் யூவைப் பார்க்கலாம்

சென்றவர்கள் வந்த பின் வரும் பாசமலர் காட்சிகளும் அருமை..நாம் சொல்லாமல் சென்று விட்டால். வீட்டில் மணியடிப்பதும்., போஸ்டர் ஒட்டுவதும் அடாடா கண்கொள்ளாக் காட்சி..

ஆனால் அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,, அனைத்துக்கும் பூட்டு உண்டு .. என சொல்பவர் நம் தோழர் செந்தில்..


முகநூலில் இருக்கும் கவிஞர்களை வெளிக்கொணர அமுதா தமிழ் ., பா கிருஷ்ணன்., மஞ்சுபாஷிணி., அறிவழகன் கைவல்யம்., செல்வ குமார்.,நந்தா கந்தசாமி., கவிதா முரளிதரன்..ஆகியோர் உருவாக்கியது கவிதை முகம் ..
இதுவரை நான்கு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது இந்த வாரம் நதியலையில் ஆடும் நிலவு என்ற தலைப்பில் போட்டி் ...முடிவுகள் வர காத்து இருக்கிறோம்....

உமா சக்தியின் கவிதைகள் அப்பப்பா.. ரகம்.. மழை கவிதை அவர் எழுதினால் படிக்கும் நாம் நனைந்து போகிறோம்..

பூசணிக்காய் சாம்பார் சாப்பிட்டு இருப்பீங்க .. ஆனா புளிக்கூட்டு ..??
ராஜி சொல்றாங்க செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க..

உங்க வீட்டில் குட்டிப்பாப்பா இருக்காங்களா,.. அப்ப அமுதாவோட இந்தப் பாட்டெல்லாம் நீங்க அவங்க கூட சேர்ந்து பாடி ஆடலாம்..:))

மௌனத்தின் சொல் என்றும் முத்தங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவை என்றும் சந்திரா சொல்றதைக் கேளுங்க..

ரொம்ப முக்கியமான பொண்ணு இவங்க .. கவிதைகளைப் படித்து ஆனானப்பட்டவங்களே பிரமிச்சு இருக்காங்க... கருவிலேருந்தே கவிதை எழுத ஆரம்பிச்ச என் அன்பு மாயோ இவள்.. இந்த நதியானவளைப் பார்த்து எனக்கு எப்ப ஞானம் சித்திக்கும் என நான் மருண்டது உண்டு..

என் பிரியத்துக்குரிய பிரியாவின் இந்த வைஷாலி கவிதையைப் படிச்சால் உங்களை ஏக்கமும் துயரமும் பீடிக்கக் கூடும்...மருத்துவர் இவங்க..கவிதைகள் சொல்லும் பொருளின் அடர்த்தியும் அதிகம்..

தமயந்தியின் இந்த நிழல் வலையில் ஆமென் படித்தால் அவர் ரொம்ப தைரியமானவர் என சொல்லுவீர்கள் ..

என் நண்பர் கோகுல் சல்வாதி எம் சி ஏ வில் ப்ராஜக்ட் பண்ணதை சுவையா சொல்றார் கேளுங்க.. சல்வாதி கதை சொன்னார்னா. ரொம்ப சுவாரசியமா படிச்சிக்கிட்டே இருக்கலாம்.. அவரோட சங்கீதத்தை விட கதைகளை நான் விரும்புகிறேன்.. சல் சல் சல் வாதி சாரி..:)) ஆனா பாருங்க உங்க கதைகள் எல்லாமே சர்காஸ்டிக்,..அருமை...

மண்குதிரையின் மலைசாமியின் கைகள் அர்த்த ராத்திரியில் நான் யார் எது என தேடவைத்த ஒன்று..

மழையின் காதலர் என் தம்பி பா சரவணன் காடுகளை அழிக்காதீங்கன்னு சொல்றார்

மறக்கப்பட்ட எரிக்கப்பட்ட விஞ்ஞானி புருனோ பத்தி பேராசிரியை மோஹனா சொல்றாங்க..

நட்புக்குள்ளும் இருக்கும் சுயங்கள் கொண்ட முரண்கள் பத்திப் பேசுறாரு என் தம்பி பாலா என்ற பாலகணேசன்

ஒரு பெருங்கவிஞனாதலின் சாத்தியங்கள் பற்றிப் பேசுறார் ஸ்னேகிதன்.. பேசுற இடமும் சரிதான்..

இவங்க ஒரு குறிஞ்சி மலர் போல .. அவ்வளவு அற்புதமானவங்க .. என் அன்பின் சுந்தரா.. தனிக்குடித்த தாம்பத்தியத்தில் கர்ப்பிணி மனைவி கணவனின் பாசத்தையும் பரிவையும் பகிர்றாங்க ... அருமை சுந்தரா,,

சகோதரர் வேடியப்பனோட டிஸ்கவரி புக் பேலஸின் வலைத்தளம் இது.. புத்தகவிரும்பிகளுக்காக..

மிக அருமையா எழுதக்கூடிய சகோதரர் அறிவழகன் கைவல்யத்தோட தளம் இது.. எல்லாம் அருமை..

சகோதரர் பேராசிரியர் மணிவண்ணன் நடத்தும் “ழ” இதழுக்கான மற்றும் செம்மொழி மாநாடு ஒட்டிய கவிதைப் போட்டி இது ,, இந்தப் போட்டிக்கு puthiyazha@gmail.com என்ற மெயிலுக்கு உங்க கவிதைகளை அனுப்புங்க..

டிஸ்கி,,,1 :- சரி அரட்டைக்கு நேரமாச்சு ..... எத்தனை நோட்டிஃபிகேஷனோ.. எத்தனை வீடியோவோ., ஓவியமோ .., சங்கீதமோ ., தகவல்களோ வந்து சேர்ந்து இருக்குமோ.. ஞாயிற்றில் பார்க்கலாம் வரட்டா..:))

டிஸ்கி... 2 :- இதில் முக்கால்வாசி என் அன்புத்தங்கை அமுதாதமிழ் படிப்பது.. ஒரு நாள் முழுவதும் (நானும் பலது படிக்கிறேன்) எனக்காக லிங்க் எடுத்து அனுப்பிய தங்க(கை)க் கரங்களுக்கு நன்றி.. ,,,நன்றி சொல்லாதீங்கன்னு எத்தினிவாட்டி சொல்றதுன்னு வர்றா.. விடு ஜூட்

20 comments:

 1. தேன் அக்கா அசத்திடிங்க பாருங்க... இருங்க கொஞ்ச நேரத்தில் வருகின்றேன். அருமையான ஆரம்பம். வாழ்த்துக்கள். :)))

  ReplyDelete
 2. தேனு.. மக்கள் கவிஞர். சுட்டபழத்த பத்தி சொல்லல :((

  ReplyDelete
 3. முகநூல்-னா FaceBook -ஆ?

  அருமை HoneyMother.

  ReplyDelete
 4. இது மணிவண்ணன் பக்கத்தில் இருந்து உங்களுக்காக காபி பேஸ்ட் பண்ணிப் போட்டு இருக்கேன் மக்களே.. பங்கெடுத்துக்குங்க..

  'புதிய ழ' நடத்தும் இரண்டு கவிதை போட்டிகள்Share. Yesterday at 9:10pm
  செம்மொழி மாநாட்டை முன்னிட்டு புதிய ழ நடத்தும் "தமிழாய் தமிழுக்காய்" என்ற கவிதைப் போட்டியிலும் , புதிய ழ -வும் நீலகிரி மாவட்ட ரோட்டரி சங்கமும் நடத்தும் 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்தது) என்ற கவிதைப் போட்டியிலும் பங்குகொள்ள இருக்கும் கவிதைப் படைப்பாளிகளில் கவனத்திற்கு ,உங்களில் பலரது வேண்டுகோளுக்கு இணங்க கவிதை வந்து சேர்வதற்கான இறுதிநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது .05.06.2010

  ReplyDelete
 5. ம்ம் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 6. கலக்கல் பதிவு ..!!

  ReplyDelete
 7. டிஸ்கவரி புக் பேலஸை அறிமுகப்படுத்திய தேனம்மை அக்காவுக்கு நன்றி. http://discoverytamilbooks.blogspot.com/

  ReplyDelete
 8. அன்பின் தேனு - அருமை அருமை - அறிமுகம் புதுமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 9. தேனக்கா,
  நான் கோகுல் சால்வாதி அல்ல, சால்வாடி :)

  ReplyDelete
 10. நல்ல அறிமுகங்கள்.
  தெரிந்தெடுத்துச் செல்கிறேன்..
  முகிலன் கமெண்ட் ரசனை. முகிலன் சார், தேனம்மை தமிலிஷ்ல சப்மிட் செய்யுமிடத்தில் அப்படிதான் பெயர் இருப்பதாய் நினைவு..!

  ReplyDelete
 11. நன்றி வின்சென்ட்

  ஆமாம் மறந்திட்டேன்..கவிஞர் சுட்ட பழம்

  ReplyDelete
 12. ஆமாம் முகிலன்...

  நன்றி சித்து

  ReplyDelete
 13. நன்றீ நேசன்

  நன்றி ஜெய்

  ReplyDelete
 14. நன்றீ வேடியப்பன்

  நன்றீ சீனா சார்

  ReplyDelete
 15. நன்றீ சால்வாடி

  நன்றி ராம்

  ReplyDelete
 16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

  ReplyDelete
 17. நன்றிகள் தேனம்மை!

  என்னையும் இங்கே அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.
  அமுதா தமிழுக்கும் என் அன்பு.

  ReplyDelete
 18. அருமையான பதிவு. நானும் உங்க கூட கொஞ்ச காலம் நட்புடன் இருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது