07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 9, 2010

மிக்சரும், ரூ.3.2 லட்சம் பரிசும்!! பின்னே விடைபெறுதலும் - வலைச்சரம் 7

நேத்து "தேண் மிளகாய்" இனிப்பா இருந்துச்சா!!
இன்று மீண்டும் எல்லா தளங்களிலும் பயணிப்போமே.

நம்ம சாத்தூர் மாக்கான் ஒரு கதை சொல்றாங்க, வாங்க
கேட்டு பார்ப்போம்.

நம்ம அமைதிச்சாரல் கேக்குறாங்க எது சுதந்திரம்???.. அப்படின்னு.

துணிக்கடையில், உடுப்புகள் தெரிவு செஞ்ச பிறகு, நமக்கு அந்த
அளவு சரியா இருக்குமான்னு சந்தேகம் வரும் பட்சத்தில் அங்கேயே
இருக்குற ஒரு அறையில போட்டு பாக்கலாம்னு நினைப்போம்.
அப்போ பெண்கள் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும்ன்னு நம்ம
LK சொல்றாங்க, அது ஏன்னு தெரிஞ்சுக்க படியுங்களேன்
இதை.

உலகின் கடைசி மனிதனோட நிலைமையை நம்ம
பிரசன்னா, கொத்து பரோட்டா போட்டிருக்கார். (புது மலர் 1)

ஒரு சிலர், பஸ்ல டிக்கெட் எடுக்காம எப்படியெல்லாம்
லொள்ளு பண்றாங்கன்னு நம்ம நிஜாம் சொல்றாங்க.
அதை கொஞ்சம் கேளுங்களேன்.

நம்ம அஹமது இர்ஷாத், தான் ஒரு மறத்தமிழர்ன்னு நிரூபிச்ச
கதையை கொஞ்சம் கேளுங்க. (புதுமலர் 2 )
************************************************************

இந்த ஏழு நாட்களும் பொறுமையாக படித்த உங்களுக்கு
ரூ.3.2 லட்சம் பரிசு காத்திருக்கு!!
ஹி......ஹி......உண்மையான காரணம்:நீங்க கவிதை எழுதுவதில் திறமைசாலியா உங்களுக்கே இந்த பரிசு!!
மேலதிக விவரங்களுக்கு
இங்கே செல்லுங்கள். கண்ணில் பட்ட இந்த தகவலை அளிப்பது மட்டுமே பரோட்டாவின் நோக்கம்.
***************************************************************

அம்மாக்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
***************************************

இந்த நல்ல வாய்ப்பினை கொடுத்த சீனா அய்யாவிற்கும்,
வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

இந்த வாரம் முழுவதும், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்து பொறுப்பேற்க வரும் ஆசிரியர், மிக சிறப்பாக
பணியாற்ற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இங்கே நான் தொடுத்து கொடுத்த இடுகைகள் உங்களுக்கு
பயன்படும் என்ற நம்பிக்கையுடன்
விடை பெறுகிறேன், அனைவருக்கும் மீண்டும் எனது நன்றி!!

24 comments:

 1. அவ்வளவுதானா!

  இந்த ஒரு வாரத்தில் பல பதிவர்களை அறிமுகப் படுத்தியதற்க்கு நன்றி:)))

  எனக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது

  ReplyDelete
 2. அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

  நிர்வாக குழு,

  தகவல் வலைப்பூக்கள்.....

  http://thakaval.info/blogs/common-blogs

  ReplyDelete
 3. ஒரு வார‌ம் ந‌ல்லா ப‌ண்ணியிருந்தீங்க‌ சை.கொ.ப‌. அறிமுக‌ங்க‌ள் அனைத்தும் அச‌த்த‌ல்..

  ReplyDelete
 4. // ஜில்தண்ணி said...
  அவ்வளவுதானா!

  இந்த ஒரு வாரத்தில் பல பதிவர்களை அறிமுகப் படுத்தியதற்க்கு நன்றி:)))

  எனக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது//

  இல்லை ஜில்லு, இது முடியவில்லை,
  மீண்டும் தொடரும் மற்றொரு ஆசிரியர் மூலம்,
  தங்களின் ஆதரவுக்கு நன்றி.


  @thalaivan
  @thakaval

  இரு தளங்களுக்கும் வலைச்சரம் சார்பாக நன்றிகள்.


  //நாடோடி said...
  ஒரு வார‌ம் ந‌ல்லா ப‌ண்ணியிருந்தீங்க‌ சை.கொ.ப‌. அறிமுக‌ங்க‌ள் அனைத்தும் அச‌த்த‌ல்..//

  மகிழ்ச்சி!! நன்றி ஸ்டீபன்.

  ReplyDelete
 5. அறிமுகங்கள் அருமை. அதில் என்னையும் "லிஸ்டில்" சேர்த்ததற்கு மிக்க நன்றி... ஒரு வாரம் போனதே தெரியலயே சைவகொத்துப்பரோட்டா... சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. லிஸ்டில் சேர்த்ததுக்கு நன்றிப்பா. நிஜமாவே இந்தவாரம் கலகலப்பா இருந்திச்சு.

  ReplyDelete
 7. ஒரு வாரம் போனதே தெரியலே
  இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாமே ஆசிரியராக

  ReplyDelete
 8. ஒரு வாரத்தில், எத்தனை அறிமுகங்கள் - புது மலர்கள் - எல்லாம் அருமை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 9. பயனுள்ளதா இருந்த்து பல விசயங்கள் வாழ்த்துக்கள். மற்றும்
  உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. சைவக்கொத்ஸ், தினமும் பின்னூட்டம் இட முடியவில்லையென்றாலும், வித்தியாசமான அறிமுகங்களைத் தவறாமல் படித்தேன். சுவையான வாரத்திற்கு நன்றி.

  ReplyDelete
 11. வெற்றிகரமான பணி.

  ReplyDelete
 12. பல அருமையான அறிமுகங்களுடன் இந்த வாரம் அற்புதமாகப் பணியாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்!

  ReplyDelete
 13. நல்ல அறிமுகங்கள் நண்பரே. அடியேனை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.

  ReplyDelete
 14. // அஹமது இர்ஷாத் said...
  அறிமுகங்கள் அருமை. அதில் என்னையும் "லிஸ்டில்" சேர்த்ததற்கு மிக்க நன்றி... ஒரு வாரம் போனதே தெரியலயே சைவகொத்துப்பரோட்டா... சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்...//

  ரைட்டு.........மகிழ்ச்சியாய் இருக்கு,
  நன்றி இர்ஷாத்.


  //அமைதிச்சாரல் said...
  லிஸ்டில் சேர்த்ததுக்கு நன்றிப்பா. நிஜமாவே இந்தவாரம் கலகலப்பா இருந்திச்சு.//

  அப்படியா!! ஆதரவுக்கும், கருத்துக்கும்
  நன்றி.


  // r.v.saravanan said...
  ஒரு வாரம் போனதே தெரியலே
  இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாமே ஆசிரியராக//

  உங்கள் அன்புக்கு நன்றி சரவணன்,
  புதுப்புது ஆசிரியர்கள் வரும்பொழுது இன்னும் சுவராசியம்
  கூடும், நிறய புது இடுகைகளும் நமக்கு கிடைக்கும்!!, என்பது
  அடியேன் கருத்து.
  நன்றி.


  // Chitra said...
  ஒரு வாரத்தில், எத்தனை அறிமுகங்கள் - புது மலர்கள் - எல்லாம் அருமை. பாராட்டுக்கள்!//

  உங்களின் உற்சாகமான
  கருத்துரைகளுக்கும் நன்றி சித்ரா.


  // ஜெய்லானி said...
  பயனுள்ளதா இருந்த்து பல விசயங்கள் வாழ்த்துக்கள். மற்றும்
  உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்//

  ஆஹா!! மகிழ்ச்சி!! நன்றி ஜெய்லானி.


  // ஹுஸைனம்மா said...
  சைவக்கொத்ஸ், தினமும் பின்னூட்டம் இட முடியவில்லையென்றாலும், வித்தியாசமான அறிமுகங்களைத் தவறாமல் படித்தேன். சுவையான வாரத்திற்கு நன்றி.//

  வாங்க ஹுஸைனம்மா, அப்படியா!!
  மகிழ்ச்சி, நன்றி.


  // தமிழ் உதயம் said...
  வெற்றிகரமான பணி.//

  அப்படியா!! அப்படியென்றால், இது உங்கள்
  அனைவருக்கும் சொந்தம்!! அனைவரும்
  கொடுத்த உற்சாகத்திற்கு நன்றி.


  // சேட்டைக்காரன் said...
  பல அருமையான அறிமுகங்களுடன் இந்த வாரம் அற்புதமாகப் பணியாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்!//

  வாங்க நண்பா!! மகிழ்ச்சி!!
  உங்களுக்கும் எனது நன்றி.

  ReplyDelete
 15. // இராமசாமி கண்ணண் said...
  நல்ல அறிமுகங்கள் நண்பரே. அடியேனை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.//

  வாங்க ராம்!! தங்களின்
  ஊக்கத்திற்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 16. சுவையான அறிமுகங்கள்,
  விறுவிறுப்பாக தாங்கள் வெளிப்படுத்திய நடை,
  என் இடுகையையும் அன்போடு அறிமுகப்படுத்திய தன்மை!
  நன்று, அருமை, நன்றி!

  ReplyDelete
 17. நல்ல பணி சை.கொ.ப....இவ்வளவுதானா கமெண்ட்டுக்கு உங்கள் பதிலை ரசித்தேன்...

  ReplyDelete
 18. // NIZAMUDEEN said...
  சுவையான அறிமுகங்கள்,
  விறுவிறுப்பாக தாங்கள் வெளிப்படுத்திய நடை,
  என் இடுகையையும் அன்போடு அறிமுகப்படுத்திய தன்மை!
  நன்று, அருமை, நன்றி!//

  ஊக்கத்திற்கு நன்றி நண்பரே.


  // ஸ்ரீராம். said...
  நல்ல பணி சை.கொ.ப....இவ்வளவுதானா கமெண்ட்டுக்கு உங்கள் பதிலை ரசித்தேன்...//

  மகிழ்ச்சியாய் இருக்கிறது, நன்றி அண்ணா.

  ReplyDelete
 19. சை கோ பா. செம்யா அசத்திட்டீங்க அறிமுகங்களும் சூப்பர்..

  நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்..
  http://fmalikka.blogspot.com

  ReplyDelete
 20. அன்பின் சைகொப
  எடுத்த செயலை சிறப்பாக நிறைவேற்றியமைக்கு நன்றி

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 21. // அன்புடன் மலிக்கா said...
  சை கோ பா. செம்யா அசத்திட்டீங்க அறிமுகங்களும் சூப்பர்..

  நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்..
  http://fmalikka.blogspot.com//

  நன்றி மலிக்கா, இதோ இப்பவே பாக்குறேன்.


  // cheena (சீனா) said...
  அன்பின் சைகொப
  எடுத்த செயலை சிறப்பாக நிறைவேற்றியமைக்கு நன்றி

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா//

  அன்பின் சீனா அய்யா, இந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு மீண்டும்
  எனது நன்றிகள்.

  ReplyDelete
 22. அட எனக்கு 3.2 லட்சம் கிடைக்குமா.

  அறிமுகங்கள் ரொம்ப அருமை.

  ReplyDelete
 23. சை.கொ.ப, அசத்தலான அறிமுகஙக்ள்

  ReplyDelete
 24. இதை எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை.. என்னுடைய 'உலகின் கடைசி மனிதன்' கதையை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி :)

  அருமையான அறிமுகங்களுக்கு (என்னை தவிர்த்துதான்) வாழ்த்துக்கள் :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது