07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 18, 2012

முதல் அறிமுகம்

வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும்,  வலைச்சர நண்பர்களுக்கும் வணக்கம். என்ன படிக்கலாம் எனத் தேடி அலையும் வாசகர்களுக்கு இதைப் படித்தால் இனிக்கும் என அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய விடயம். இவ்வாறு அழகுப்பணி ஆற்றிய ஆசிரியரிடையே பணியாற்ற எனக்கும் அழைப்பு அனுப்பிய சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இங்கிருக்கும் பலருக்கும், வலைப் பூவிற்கும்கூட நான் புதியவள். என் முதல் அறிமுகமாய் என்னுடைய இடுகைகளைப் பற்றிச் சொன்னால் காதலையும், தாய்ப்பாசத்தையும் தவிர நான் எழுதியவை மிக மிகக் குறைவே. திரு. வை. கோபால கிருஷ்ணன் ஐயா அவர்கள் பல நேரங்களில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி " உங்களுடைய அனுபவங்கள் பற்றியும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என நிறைய எழுதுங்கள் " எனத் தெரிவிப்பதுண்டு. எனினும் என்னவோ காதலைப் பற்றியே வலம் வருகிறேன்.

என்னுடைய இடுகைகளைப் பற்றிய அறிமுகம் இதோ :

என்னால் எழுதப்பட்ட முதல் கவிதை காதலைப் பற்றியதே.

காதலனுக்கும் காதலிக்குமான உரையாடல் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ஒன்று, இரண்டு என இப்போது மூன்று பகுதிகள் எழுதியிருக்கிறேன்.

அன்பெனும் விருந்து எப்படி இருக்கும் ஆதரவற்றவர்களின் பார்வையில் என்ற ஒரு கற்பனை.

மரத்தோடு நான் கொண்ட காதல் மண்ணியம் பேசுவோம் என்கிற இடுகையில்.

நீதிமன்றங்களின் மூலம் மணங்கள்தான் ரத்தாகிறதே தவிர மனங்கள் ரத்தாவதில்லை என உணர்த்தும் ஒரு இடுகை.

முதுமைக் காதல் முத்தானக் காதல் என நான் உணர்ந்தபோது எழுதிய இடுகை இது.

பழைமை போற்றும் ஒரு ஆண்மகனின் எதிர்பார்ப்பு எப்படி பூர்த்தியாகிறது என எழுதியதுதான் அண்மைய இடுகை.

எனக்குப் பிடித்த சில பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகப்படுத்தும் அடுத்த இடுகையோடு அனைவரையும் சந்திக்கிறேன்.

இந்நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.

33 comments:

  1. அன்புள்ள நுண்மதி,

    வாங்க, வாங்க!

    தங்கள் வருகை நல்வரவாகட்டும்.

    வெற்றியுடன் செயலாற்ற என் அன்பான வாழ்த்துகள்.

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  2. //திரு. வை. கோபால கிருஷ்ணன் ஐயா அவர்கள் பல நேரங்களில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி " உங்களுடைய அனுபவங்கள் பற்றியும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என நிறைய எழுதுங்கள் " எனத் தெரிவிப்பதுண்டு. எனினும் என்னவோ காதலைப் பற்றியே வலம் வருகிறேன்.//

    காதல் என்பது வாழ்க்கையில் மிகவும் இனிமையான தருணங்களே.

    அதைப்பற்றி எப்போதும் சிந்திப்பதோ, எழுதுவதோ, அதைச்சுற்றியே தாங்கள் வலம் வருவதாகச் சொல்லுவதோ, தவறேதும் கிடையாது, கெள்ரி லக்ஷ்மி.

    IN FACT காதல் பற்றிய மிகச்சிறப்பான சிந்தனைகளும் எண்ணங்களும் மட்டுமே நம்மை என்றும் இளமையானவராகவும், புத்துணர்ச்சி கொண்டவராகவும் மிளிரச் செய்யும் என்பதே உண்மை,

    தாங்கள் ஒரு பன்முகத்திறமையுள்ள எழுத்தாளராக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    நான் உங்களுக்குக் கொடுத்த மின்னஞ்சல் பற்றி இங்கு ஞாபகமாகச் சுட்டிக்காட்டியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ராணி.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  3. தமிழ்த்தேடலோடு ஆரம்பம் ஆகியிருக்கும் தோழிக்கு முதலில் வாழ்த்துகளும் வணக்கங்களும், இந்த வார ஆசிரியரை எனக்கு அறிமுகம் தான் எனவே நுண்மதியைத்தொடர்ந்து இனி நீங்கள் தொடரப்போகும் பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம்............

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோ, தொடர்ந்து கலக்குங்கள்.!

    ReplyDelete
  5. என்னவோ கவிதை என்றாலே காதல் வந்து ஒட்டிக்கொள்கிறது . எனக்கும் அப்படியே உங்கள் அறிமுகம் மூலம் நாமும் அறிமுகம் ஆவோம் . வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். அறிமுகத்துக்கு மிக்க நன்றி பல நல்ல பதிவுகளை இனிமேலும் தொடரலாம் என நினைக்கிறேன்...:)

    சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  7. வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  8. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் நுண்மதி.

    ReplyDelete
  9. வாருங்கள் தோழி ..உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  10. வாருங்கள் சகோதரி...
    வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரானதற்கு...
    தொடருங்கள் அறிமுகங்களை...
    தொடர்கிறோம் நாங்கள்...

    ReplyDelete
  11. சகோதரர் சீனாவின் அறிமுகத்தில் நேற்றே இரவே தங்கள் வலையில் முதன் முதலாக மேய்ந்தேன். (நானும் வேட்பிறெஸ் தான். வரும் யூலையுடன் 2 வருடமாகிறது.) இன்று தங்கள் அறிமுகத்தின் மூலம் கருத்திட்டுள்ளேன் சகோதரி.
    தங்கள் பணி சிறக்கட்டும்.
    இறையருள் கிட்டட்டும்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. எனக்கு இப்போது வலைச்சரம் மூலம்தான் நீங்கள் அறிமுகம். உங்கள் எழுத்தை வாசித்தேன். அருமை. என் இதயம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும். தோழி சசிகலா சொன்னது போல அறிமுகங்களின் மூலமே அறிமுகம் ஆவோம். நன்று.

    ReplyDelete
  13. உங்கள் வலைப்பூவை இப்போதுதான் முதல்முறையாகச் சென்று பார்த்தேன். காதல் பொங்குகிறது.முதல் கவிதை, முதுமைக்காதல் அருமை.

    ReplyDelete
  14. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. //அன்புள்ள நுண்மதி,

    வாங்க, வாங்க!

    தங்கள் வருகை நல்வரவாகட்டும்.

    வெற்றியுடன் செயலாற்ற என் அன்பான வாழ்த்துகள்.

    பிரியமுள்ள
    vgk//

    நன்றி சார். உங்களை மாதிரி பெரியவங்க ஆசி இருந்தா தான் வெற்றியோட செயலாற்ற முடியும். எப்போதும் போல நீங்க வாழ்த்தணும் சார்.

    ReplyDelete
  16. இரண்டாவது முறையாக தங்களின் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.

    //தாங்கள் ஒரு பன்முகத்திறமையுள்ள எழுத்தாளராக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம்.//

    அது எனக்குத் தெரியும் சார். நான் எழுதுவதற்கு யார் முதுகெலும்பு என்பதை வலைச்சர நண்பர்களும் அறிய வேண்டாமா?

    ReplyDelete
  17. //தமிழ்த்தேடலோடு ஆரம்பம் ஆகியிருக்கும் தோழிக்கு முதலில் வாழ்த்துகளும் வணக்கங்களும், இந்த வார ஆசிரியரை எனக்கு அறிமுகம் தான் எனவே நுண்மதியைத்தொடர்ந்து இனி நீங்கள் தொடரப்போகும் பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம்............//

    நன்றி தோழி... தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete
  18. \\வரலாற்று சுவடுகள்said...
    வாழ்த்துக்கள் சகோ, தொடர்ந்து கலக்குங்கள்.!\\

    நன்றி சகோ... தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete
  19. \\Sasi Kala said...
    என்னவோ கவிதை என்றாலே காதல் வந்து ஒட்டிக்கொள்கிறது . எனக்கும் அப்படியே உங்கள் அறிமுகம் மூலம் நாமும் அறிமுகம் ஆவோம் . வாழ்த்துக்கள் .\\

    நன்றி தோழி... தங்கள் அறிமுகத்தில் நெகிழ்ந்து போகிறேன்...

    ReplyDelete
  20. \\சிட்டுக்குருவிsaid...
    புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். அறிமுகத்துக்கு மிக்க நன்றி பல நல்ல பதிவுகளை இனிமேலும் தொடரலாம் என நினைக்கிறேன்...:)

    சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்\\

    நன்றி தோழரே... தங்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ய முயல்கிறேன்... தொடருங்கள்...

    ReplyDelete
  21. இராஜராஜேஸ்வரிsaid...
    வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்!!!

    நன்றி தோழி...

    ReplyDelete
  22. \\கீதமஞ்சரிsaid...
    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் நுண்மதி.\\

    நன்றி தோழி...

    ReplyDelete
  23. \\"என் ராஜபாட்டை"- ராஜாsaid...
    வாருங்கள் தோழி ..உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்\\

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  24. \\சே. குமார்said...
    வாருங்கள் சகோதரி...
    வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரானதற்கு...
    தொடருங்கள் அறிமுகங்களை...
    தொடர்கிறோம் நாங்கள்...\\

    நன்றி சகோதரரே...

    ReplyDelete
  25. \\ kovaikkavi said...
    சகோதரர் சீனாவின் அறிமுகத்தில் நேற்றே இரவே தங்கள் வலையில் முதன் முதலாக மேய்ந்தேன். (நானும் வேட்பிறெஸ் தான். வரும் யூலையுடன் 2 வருடமாகிறது.) இன்று தங்கள் அறிமுகத்தின் மூலம் கருத்திட்டுள்ளேன் சகோதரி.
    தங்கள் பணி சிறக்கட்டும்.
    இறையருள் கிட்டட்டும்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.\\

    நன்றிகள் பல தோழி. சற்றே பணிச்சுமை அதிகமாயிருந்ததால், வலைப்பூவிற்குச் செல்ல முடியவில்லை. பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  26. \\திண்டுக்கல் தனபாலன் said...
    நல்வாழ்த்துக்கள் சகோதரி !\\

    நன்றி சகோதரரே...

    ReplyDelete
  27. \\பா.கணேஷ் said...
    எனக்கு இப்போது வலைச்சரம் மூலம்தான் நீங்கள் அறிமுகம். உங்கள் எழுத்தை வாசித்தேன். அருமை. என் இதயம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும். தோழி சசிகலா சொன்னது போல அறிமுகங்களின் மூலமே அறிமுகம் ஆவோம். நன்று.\\

    நன்றி நண்பரே... எனக்கும் தாங்கள் வலைச்சரம் மூலமே அறிமுகம்...

    ReplyDelete
  28. \\கவிதை நாடன் said...
    மிகவும் அருமையானதொரு அறிமுகம் நன்றி \\

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  29. \\விச்சு said...
    உங்கள் வலைப்பூவை இப்போதுதான் முதல்முறையாகச் சென்று பார்த்தேன். காதல் பொங்குகிறது.முதல் கவிதை, முதுமைக்காதல் அருமை.\\

    நன்றி நண்பரே... வலைச்சரத்தின் மூலம் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறீர்கள்... மகிழ்ந்து போகிறேன்...

    ReplyDelete
  30. \\முனைவர்.இரா.குணசீலன் said...
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.\\

    நன்றி ஐயா...

    ReplyDelete
  31. \\Seeni said...
    mmm \\

    வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது