07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 14, 2013

தனிமரம் சொல்லும் நன்றிச் செதுக்கல்...!!!!!!


பதிவுலகம் என்ற பூஞ்சோலையில் பல இலக்கியவாதிகள் ,கவிமேதைகள் வீற்றிருந்து  ,இணைய வீதி எங்கும் வலைச்சர ஆசியராக பலர் வலம் வந்த சபையில்!

 தனிமரம் என்னையும் வலைச்சர ஆசிரியராக மேடை ஏற்றி
தரணி எங்கும் பெயர் பெற  இந்த சபைக்கு அழைத்துவந்த தமிழ்வாசி நண்பனுக்கு மீண்டும் நன்றியும். வாழ்த்துக்களையும் சொல்லிக்கொண்டு !


இந்த வார வலைச்சரம் ஆசிரியர் பணியை இனிதே செயல் ஆற்றிய சந்தோஸத்துடன் விடைபெறுகின்றேன்,


. இந்த பதிவுலகில் இருக்கும் பல முத்துக்களில் என் கண்ணில் விழுந்த சில முத்துக்களை மட்டும் குறுகிய நேரச்சிக்கலிலும்  என்னால் பகிரப்பட்ட சகல பதிவுலக உறவுகளுக்கும் ,மீண்டும் நன்றிகள் பதிவுலகம் எங்கும் பல ஜாம்பாவாங்கள் பவனி வருகின்றார்கள் .அவர்கள் பலர் எனக்கு அறிமுகம் கிடைக்காமல் இருக்கும் ,என்றாலும்  பலரை இனி ஒரு நேரத்தில்!மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் வாசகனாக எனக்கும் இருக்கு!

என்னை உங்களிடம் நேசன் என்ற பெயரின் பின் தனிமரம் என்ற வலைப்பதிவாளர் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த உந்து சக்தியாக என் கூடவரும் உயிர் போன்ற ஐபோனுக்கு நன்றி இது விழியில் வலி தந்தாலும் உருகும் காதலி எனக்கு இத்தனை வலையுலக உறவுகளை முகம் தெரியாமல் 5 கண்டத்திலும் என் பெயரை தனிமரம் என்று விழிக்க வைத்த மங்கையல்லவா:))) !

ஒவ்வொரு பதிவாளர்கள் பதிவாளினியும் வேண்டுவது நிறைகுறைகளை சுட்டிக்காட்டி ஊக்கிவிக்க வேண்டி வரும் பின்னூட்டத்தை ,அதை சிறப்பாக எனக்கு செய்யும் மதிப்புக்கும், அன்புக்கும் ,பண்புக்கும் உரிய யோகா ஐயா ,மற்றும் தனபாலன் சார் இருவருக்கும் என் மனம் கனிந்த பாதம் பணிந்த நன்றிகள்.

 தங்கள் பணிகளுக்கு இடையிலும் இந்த வலையாசையில் வந்து போகும் தனிமரத்தை ஊக்கிவித்து பின்னூட்டம் இட்டு வாழ்த்துக்கள் தந்தவலை உறவுகளுக்கு என் நன்றிகள் பலகோடி .


வழிப்போக்கன் எனக்கும் வழியில் பல யாசகம் தனிப்பட்ட முறையின் வாழ்வில் அதனால் சில பின்னூட்டத்துக்கு முறையான பதில் கொடுக்க முடியாத நிலையை எண்ணி ஆழ்ந்த மனவருத்துடன் என்னை ஊக்கிவித்த உறவுகளுக்கு ஆனந்த நன்றியுணர்வை சொல்லி விடைபெறுகின்றேன் .

இந்தவாரம் பூராகவும் என் பிழையையும் பொறுத்து எழுத்துப்பிழையும் பொறுத்த என் மனைவிக்கு .இந்த தனிமரம் பதிவாளர் நன்றியைக்கூறிக்கொண்டு  .

என் இனிய வலைப்பதிவாளர் உறவுகளுக்கு தித்திக்கும் இனிய விஜய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்  கூறிக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.


..என் தளத்தில் மீண்டும் சந்திக்கும் வரை நட்புடன் உங்களிடம் இருந்து விடை பெறும் வழிப்போக்கன் தனிமரம் தியாகராஜா சிவநேசன் .
.
மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துப்பாடலை ரசித்த வண்ணம் நீங்கள் வரலாம் தனிமரம் வலைக்கு .


சந்திப்போம்!

9 comments:

 1. அருமை நேசன்...

  நிறைவான பணி

  தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

  ReplyDelete
 2. அன்புள்ள ஐயா, வணக்கம்.

  வலைச்சர ஆசிரியராகப்பொறுப்பேற்று தங்கள் பணியினை அழகாக நிறைவாக முடித்துள்ளதற்கு என் பாராட்டுக்கள்.

  http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_1170.html என்ற இந்தப்பதிவினில் என் தளத்தைப்பற்றியும் அறிமுகம் செய்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 3. எடுத்துக்‌ கொண்ட பணியை அனைவரும ரசிக்கும் வண்ணம் சிறப்புறச் செய்தீர்கள் நேசன்! உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. சிறப்பான வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள் நேசன்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள் பல... நன்றிகளும் பல...

  கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நேசன்...
  சிறப்பாக ஆசிரியர் பணியைச் செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!!!

  உங்களுக்கும் அனைத்து வலச்சர உறவுகளுக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 7. நீங்கள் கோர்த்த முத்துகள் அதனையும் நன்முத்துகள் சில ஒளிவீசும் முத்துகள்
  தனிமரம் என்று பெயரிட்டு பெரிய நட்பு சோலையை வைத்திருக்கும் உங்கள் சீரிய பணிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 8. இனிய விஜய வருட வாழ்த்துக்களுடன் வணக்கம்,நேசன்!!!அடிக்கடி என்னைப் பெரிய மனிதனாக்கிக் கொண்டாடும் உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள்,பல!!!ஏதோ என்னால் இயன்றது நன்றி சொல்வது மட்டுமே!எழுத்து எல்லோருக்கும் வந்து விடாது.இற்றைவரை பல்சுவைக் கதம்பம் அளித்து தமிழின் மேன்மையை வலையுலகு கொண்டாடும் தருணத்தில் தமிழனாய்ப் பிறந்ததில் நாம் பேருவகை கொள்தல் தப்பன்று.தொடரட்டும் உங்கள் மேன்மைப் பணி!வாழ்த்துக்கள் மீண்டும் உங்களுக்கும் ஊக்கமளித்து உற்சாகப்படுத்தும் உங்கள் அன்னைக்கும் துணைவிக்கும்.நன்றி,வாழ்க வளமுடன்!!!!

  ReplyDelete
 9. நன்றிகள் வலை உறவுகளுக்கு!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது