07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 26, 2013

நான் வியக்கும் பதிவர்கள்

பதிவுலகில் நான் பார்த்து வியந்த சில பதிவர்கள் பற்றிய அறிமுகத்தை இன்று பார்போம் 
பதிவுலகில் ஒரு காலத்தில் ”மன்மதலீலைகள்” என்ற தொடர் எத்தனையோ வாசகர்களை கட்டிப்போட்டு இருந்தது இதற்கு நிகரான சுவாரஸ்யம் குன்றாத ஒரு தொடரையும் இதுவரை நான் வாசித்தது இல்லை.அருமை அண்ணன் செங்கோவி அவர்கள் எழுதிய தொடர்தான் அது. நீங்களும் படித்துப்பாருங்கள் மன்மத லீலைகள்(என் கிழிந்த டயரியில் இருந்து)

தனிமரம் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் அருமை அண்ணன் திரு நேசன் அவர்கள் ஹிட்ஸ் என்ற மாயையை தாண்டி எழுதிக்கொண்டு இருப்பவர்.இவரது தொடர்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் ”விழியில் வழி தந்தவனே என்று” மனதை வருடும் ஒரு தொடரை படித்துப்பாருங்கள்  இங்கே-விழியில் வலி தந்தவனே

மின்னல் வரிகள் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் அருமை அண்ணன் கணேஸ் அவர்கள் பலதரப்பட்டவிடயங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.அண்மையில் வெளியான திருமதி தமிழ் படத்துக்கு மிகவும் சுவாரஸ்யமாக விமர்சனம் எழுதியுள்ளார் இங்கே-திருமதி தமிழ்-சுடச்சுட விமர்சனம்

தமிழ் ஆதி என்ற வலைப்பதிவில் எழுதிவரும் மாத்தியோசி மணி எதையும் மாத்தியோசிக்கனும் என்று சொல்வார்.இவர் மாத்தியோசித்த ஒரு பதிவை பாருங்கள் இங்கே-முதல் காதல்,முதல் முத்தம்-மறக்கலாம் வாங்க

வீடுதிரும்பல் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் மோகன்குமார் பலவிடயங்களை அலசி எழுதுவார்.உணவகம் அறிமுகம் என்று ஒவ்வொறு ஊரிலும் சிறந்த பல உணவகங்களை அறிமுகம் செய்கின்றார் நீங்களும் படித்துப்பாருங்கள்-உணவகம் அறிமுகம்-புதுவை தலப்பாகட்டி பிரியாணி

திடங்கொண்டு போராடு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் சீனு திருநவேலி அல்வா என்று ஏதோ சொல்கின்றார் இங்கே-திருநவேலி அல்வா

தூரிகையின் தூரல் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் மதுமதி 
ஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகின்றார்களா என்று இங்கே கேட்கிறார் ஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகின்றார்களா?

இன்னும் பல பதிவர்கள் பற்றிய அறிமுகத்தோடு சந்திப்போம்
அன்புடன் 
உங்கள் நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

17 comments:

 1. மிக்க நன்றி ராஜ், உங்கள் வலைச்சர வாரத்தில் திடங்கொண்டு போராடும் நீங்கள் எனக்கும் ஒரு அறிமுகம் கொடுத்ததற்கு மிக்க நன்றி... இன்று அறிமுகம் செய்தவர்களில் பலரும் தொடர்ந்து நான் தொடர்பவர்கள்...

  உங்கள் வலைச்சர வாரம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ////சீனு said...
  மிக்க நன்றி ராஜ், உங்கள் வலைச்சர வாரத்தில் திடங்கொண்டு போராடும் நீங்கள் எனக்கும் ஒரு அறிமுகம் கொடுத்ததற்கு மிக்க நன்றி... இன்று அறிமுகம் செய்தவர்களில் பலரும் தொடர்ந்து நான் தொடர்பவர்கள்...

  உங்கள் வலைச்சர வாரம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 3. வியக்க வைக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அனைவருமே அறிந்தவர்கள்... தொடருங்கள். நன்றி.

  ReplyDelete
 5. அறியாத ரெண்டு பதிவர்களை அறிந்துகொண்டேன் . நன்றிங்க ராஜ் ..!

  ReplyDelete
 6. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 7. அருமை சகோதரரே...
  நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 8. வணக்கம்

  இன்று அறிமுகமான அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகள

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. அனைவருக்கும் நன்றி நண்பர்களே

  ReplyDelete
 10. சிறப்பான பதிவர்கள் அறிமுகம்...
  அனைவரும் எழுத்து சித்தர்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. உங்களை மட்டுமல்ல பலரையும் வியக்க வைத்த பதிவர்கள் இவர்கள்

  ReplyDelete
 12. தனிமரம் நானே இவர்களைப்பார்த்து வியக்கும் போது என்னையும் அன்பில் வியந்து அறிமுகப்படுத்திய உன் அன்புக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 13. ஹிட்சு மாயை எல்லாம் என் உணர்வை சீண்ட முடியாது விரும்பியதை பகிர்கின்றேன் தனிமரத்தில் பிடித்தவர்கள் படிக்கட்டும் வசதியான போது என்பதே என் தாழ்மையான கருத்து ராச்!நன்றி மீண்டும் மீண்டும் உன் அன்புக்கு.

  ReplyDelete
 14. உங்களின் மனதிலும் இங்கே அறிமுகத்திலும் எனக்கு இடம் தந்தமை மிக மகிழ்வான விஷயம் ராஜ்! அதிலும் நீங்கள் வியக்கும் பதிவர்களில் ஒருவராக குறிப்பிட்டிருப்பது பொறுப்புணர்வை கூட்டுகிறது. மிக மிக நன்றி நண்பா! ஹிட்ஸைக் குறி வைத்து நானும் எழுதுவதில்லை. என்றாலும் அது தானாகவே கிடைக்கும் போது மகிழாமலுமில்லை!

  ReplyDelete
 15. அனைவருக்கும் நன்றி நண்பர்களே

  ReplyDelete
 16. சிறந்த பதிவர்கள் இவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் இங்கே .
  மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது