07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 30, 2013

ப்ளேட்பீடியா - 2 - காமிக்ஸ் எனும் காண்வழி ஊடகம்!

காமிக்ஸ் புத்தகங்கள் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல - மிக எளிமையான இந்த விஷயம், பெரும்பான்மையோருக்கு சற்றும் புரிபடுவதில்லை. விளக்கினாலும் புரிந்து கொள்ள விரும்புவதில்லை. இருந்தாலும் விளக்குகிறேன்! 'பாடப் புத்தகம்' என்ற வார்த்தை ஒன்றுதான்! ஆனால், ஒன்றாம் வகுப்பில் படித்த பாடத்தையா பத்தாம் வகுப்பிலும் படிக்கிறீர்கள்? +2 வில் படித்ததையா கல்லூரியிலும் படிக்கிறீர்கள்? டிவியில் எப்படி சானல் மாற்றி உங்களுக்கு பிடித்த சானலைப் பார்க்கிறீர்களோ, அதே போல காமிக்ஸ் என்ற ஊடகத்தின் வாயிலாக வெளிவரும் பல்வேறு இதழ்களில் உங்கள் வயதிற்கேற்றதை தேர்ந்தெடுத்துப் படித்துக் கொள்ளலாம்! சித்திரக்கதை என்றாலே கேவலமாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை! காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கான பொம்மைப்பட புத்தகம் என்பது மிகவும் தவறான எண்ணம்!

இந்த மாதிரி அட்டை, காமிக்ஸ் ரசிகர் சண்முகம் அவர்களின் கைவண்ணம்! காமிக்ஸ் மீதான காதலால் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளில் பல வாசகர்கள் இறங்குவதுண்டு!

டிவி, சினிமா போன்ற காண்வழி (காட்சி வழி!) ஊடகங்களைப் போல், காமிக்ஸ் (சித்திரக்கதை) என்பதும் ஒரு காண்வழி ஊடகம்தான்! வெறும் எழுத்தில் உள்ள கதைகளைப் படிப்பதை விட, அதனுடன் சித்திரங்களும் கைகோர்க்கும் போது அது மிகவும் சுவையானதொரு வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. எழுத்தில் பக்கம் பக்கமாய் விவரிக்க வேண்டிய பல சங்கதிகளை, ஒரே ஒரு சித்திரம் எளிதாய் பேசி விடும்! நான் பலரை கவனித்திருக்கிறேன், காமிக்ஸ் புத்தகத்தை கையில் எடுத்தால் பரபரவென்று படித்து கீழே வைத்து விடுவார்கள். அப்படிச் செய்வது ஒரு முழுமையான வாசிப்பு அனுபவத்தை ஒருபோதும் தருவதில்லை. எழுத்தில் உள்ளவற்றைத் படிப்பதோடு நில்லாமல், சித்திரங்களையும் உன்னித்துப் பார்த்து, ரசித்து கதையை புரிந்து கொள்வதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

காமிக்ஸ் வாசிப்பவர்கள் என்ற மிகச் சிறிய வட்டத்தினுள்ளே, காமிக்ஸ் பதிவர்கள் என்ற மிக மிகச் சிறிய வட்டம் இருக்கிறது! வலைப்பதிவர்களில் அறுதிச் சிறுபான்மையினரும் அநேகமாக காமிக்ஸ் பதிவர்கள்தான்! அவர்களில் சிலரை வலைச்சரம் மூலமாக 'காமிக்ஸ் வாசமில்லா வாசகர்களுக்கு' அறிமுகப்படுத்தி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!

1. திரு.S.விஜயன் - http://lion-muthucomics.blogspot.com :
விஜயன் - சிறு வயதில் இருந்தே மனதில் பதிந்த பெயர்! லயன் / முத்து காமிக்ஸின் ஆசிரியர்! வலைப்பூ துவக்கிய 15 மாதங்களில் 4 லட்சம் ஹிட்ஸ், 400 பின்தொடர்வாளர்கள், வெறித்தனமான வாசகர்கள், ஒவ்வொரு பதிவிற்கும் 200, 300-ஐத் தாண்டும் பின்னூட்டங்கள் என ரகளையான புள்ளிவிவரங்களைக் கொண்டது விஜயன் அவர்களின் தமிழ் காமிக்ஸ் வலைப்பூ! இதில் விசேஷம் என்னவென்றால் இவருடைய வலைப்பூ தமிழ்மணம் உள்ளிட்ட எந்த ஒரு திரட்டியிலும் திரட்டபடுவதில்லை என்பதே! தமிழ் வலையுலகின் பிரபல பதிவர்களையும் பொறாமைக் கொள்ளச் செய்யும் வகையில் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி பெற்று கொண்டிருக்கும் வலைப்பூ இவருடையது!

'இரும்புக்கை மாயாவி புகழ்' முத்து காமிக்ஸின் நிறுவனர் திரு.சௌந்தரபாண்டியன் அவர்களை தமிழ் காமிக்ஸ் உலகின் பிதா என்று அழைக்கலாம் என்றால் அவர் புதல்வர் திரு.S.விஜயன் அவர்களை தமிழ் காமிக்ஸ் உலகின் பிதாமகன் என்று தாராளமாக அழைக்கலாம்! அமெரிக்க / பிரிட்டிஷ் காமிக்ஸ் கதாபாத்திரங்களோடு நில்லாது, புகழ்பெற்ற பல ஃபிரான்கோ / பெல்ஜியன் வகை காமிக்ஸ் இதழ்களை தமிழில் அறிமுகம் செய்த பெருமை இவரைச் சாரும்! XIII, டெக்ஸ் வில்லர், பேட்மேன், ப்ளூபெர்ரி, லக்கி லூக், லார்கோ வின்ச் போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற பல நாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார்!

திரு.S.விஜயன் அவர்களின் வலைப்பூவில் இருந்து ஒரு பதிவு உங்கள் பார்வைக்கு!

அசுரர்களின் தேசத்தில்..!:
பிரான்கோ - பெல்ஜியப் படைப்பாளிகளையும் சரி ; அவர்கள் வழங்கிடும் படைப்புகளை நேசமாய் ரசிக்கும் வாசகர்களையும் சரி - ஒற்றை வார்த்தையில் வர்ணிப்பதென்றால்  - "அசுரர்கள்" என்று சொல்லிடலாம்! நம் மாமூலான தேடலை மாத்திரமே மையப்படுத்திக் கொண்டிராமல்; அந்த பட்டை பூட்டிய குதிரைப் பார்வைக்கு சின்னதாய் ஒரு விடுப்புக் கொடுத்து விட்டு நம் பார்வையை அகலச் செலுத்தும் போது தான் - அந்த காமிக்ஸ் அசுரர்கள் உருவாக்கியுள்ள புதையல்களின் முழுத் தாக்கம் லேசாகப் புலனாகிறது ! எத்தனை எத்தனை கதைக் களங்கள் ; எத்தனை எத்தனை ஸ்டைல்கள் ; கற்பனைகளின் எல்லைகள் இத்தனை அசாத்தியமானவைகளா என்று வாய் பிளக்கச் செய்யும் ஒரு display!

2. முத்து விசிறி - http://muthufanblog.blogspot.com :
தமிழ் காமிக்ஸை இணைய உலகில் அறிமுகப் படுத்தியவர்களில் முதன்மையானவர். 2005-இல் இவர் தமிழ் காமிக்ஸ் குறித்த வலைப்பூ ஒன்றை துவக்கியதைத் தொடர்ந்து, எண்ணற்ற மற்ற காமிக்ஸ் ஆர்வலர்களும் இவர் வழி இணைந்தனர்!

இரும்புக்கை நார்மன்!!!:

''ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Breaking Point உண்டு'' - கமல்ஹாசன் டு நாசர் படம் : குருதிப் புனல். இந்தக் கதையில் உள்ள வசனங்களை கவனிக்கவும். பிற்காலத்தில் கமல்ஹாசன் இந்த வசனத்தை தனது குருதிப் புனல் படத்தில் உபயோகித்திருப்பார்.

3. ரஃபிக் ராஜா - http://www.comicology.in/ & http://www.ranicomics.com/
முத்து விசிறி வலைப்பூ துவக்கிய அதே காலகட்டத்தில் - தமிழ் காமிக்ஸை, தமிழ் பேசும் வாசகர்களைத் தாண்டி எடுத்துச் சென்றதில் மிக முக்கியமானவர் ரஃபிக்! அவருடைய ஆங்கில வலைப்பூவை அறிமுகப்படுத்துவதை வலைச்சர விதிமுறைகள் அனுமதிக்காது என்பதால் அவரின் தமிழ் வலைப்பூவில் இருந்து ஒரு பதிவு - பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்! :)

ராணி காமிக்ஸ் - அழகியை தேடி - 01 ஜுலை 1984:

ராணி காமிக்ஸின் முதல் இதழான இதில் அப்பட்டமான நிர்வாண காட்சிகள் ஏராளம். அழகிய மங்கைகள் நேரம் கிடைக்கும் போது எல்லாம், ஆண்கள் சட்டை கழற்றுவதை போல மார்பு கச்சையை கழட்டி விட்டு நடமாடுவதை, தமிழக ரசிகர்கள் எவ்வகையில் ஒப்புக்கொள்வார்கள் என்று அறியாமல், ஓவியங்களை ஒரிஜினல் காட்சிகளுடனே திரு.ராமஜெயம் வெளியிட்டு இருந்தார். ஒரிஜினல் சித்திரங்களை சேதபடுத்த கூடாது என்ற எண்ணம் இந்திய அளவில் காமிக்ஸ் பதிப்பகத்தினரினிடம் ஒன்றும் புதியது இல்லை எண்றாலும், தமிழில் இப்படி பிரசுரவமாவது முதல் முறை என்பதால் திரு.ராமஜெயம் பல தரப்புகளில் குட்டு வாங்கி இருக்க கூடும். அதன் பிரதிபலிப்பு இதற்கு அடுத்து வந்த இதழ்களில் நடந்த சென்ஸார் மூலம் நாம் அறியலாம். ஆனாலும், பெற்றோர்கள் இந்த புத்தகத்தை எப்படி ஒதுக்கி இருந்தாலும், இளம் சிறார்களிடம் ராணி காமிக்ஸை பெரிய அளவில் பிரபலப்படுத்த ஒரு காரணியாக, இந்த முதல் இதழ் மாறி இருக்கலாம், என்று இப்போது நாம் நினைவு கூறலாம்.

4. கிங் விஸ்வா - http://tamilcomicsulagam.blogspot.com :
மற்றுமொரு சீனியர் காமிக்ஸ் பதிவர். தமிழ் காமிக்ஸ் பற்றிய எண்ணற்ற தகவல்களைத் திரட்டி பதிவுகளாக இட்டு வருகிறார் விஸ்வா!


தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லியாகிய திரு.வாண்டுமாமா!:
வாண்டுமாமா (எ) திரு வி.கிருஷ்ணமூர்த்தி தமிழில் பல புனைப்பெயர்களில் எழுதி இருக்கிறார். கௌசிகன் என்ற பெயரே மிகவும் அறியப்படும் மற்றுமொரு பெயராக இருந்தாலும், இந்த மூன்று பெயர்களைத் தவிர (வாண்டுமாமா, கௌசிகன், வி.கிருஷ்ணமூர்த்தி) குறைந்தபட்சம் வேறு ஐந்து பெயர்களிலாவது எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சிறப்பான காரணம் உண்டு. சிறுவர்களுக்கான சித்திரக்கதைகளும், கதைகளும் எழுதும்போது வாண்டுமாமா என்ற பெயரிலும், இளைஞர்களுக்காக எழுதும்போது கௌசிகன் என்ற பெயரிலும் எழுதுவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். உதாரணமாக மூன்று மந்திரவாதிகள், சிலையை தேடி போன்ற சித்திரக்கதைகளை எழுதும்போது வாண்டுமாமா என்ற பெயரிலும், டையல் ஒன் நாட் நாட், அறிவின் விலை ஒரு கோடி போன்ற சித்திரக்கதைகளை எழுதும்போது கௌசிகன் என்ற பெயரிலுமே எழுதி இருப்பார். இன்று வரையிலும்கூட இதனை அறியாதவர்கள் பலர்!

5. கனவுகளின் காதலன் - http://www.kanuvukalinkathalan.blogspot.com:
அழகு ததும்பும் தமிழ் எழுத்துக்கு சொந்தக்காரர். பிரெஞ்சு / இத்தாலிய மொழிகளில் வெளிவரும் காமிக்ஸ் கதைகளை தனது பதிவுகளின் மூலம் அறிமுகப்படுத்தி வருகிறார்.

வதனமோ சந்த்ரபிம்பமோ - 6:

அமெரிக்க பூர்வகுடிகள் மீதான ஒடுக்குமுறையின் வீர்யம் குறித்து வரலாறு தன் பக்கங்களில் இனவழிப்புக்கள் குறித்த பழகிப்போன கையாலாகா உணர்வுடன் வீற்றிருக்கிறது. ஒரு மண்ணின் பூர்வீகர்களை ஆக்கிரமிப்பாளர்கள் தம் வளத்திற்காக ஒடுக்கிய பெருமேற்கின் பேரவலம் அது. நிலத்திற்காகவும், கனிமங்களிற்காகவும், பல்வணிகங்களிற்காகவும் தாம் புது வாழ்வை ஆரம்பிப்பதற்காக வந்திறங்கிய நிலத்தின் குழந்தைகளை எந்தவிதக் மனக்கிலேசமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தார்கள். பூர்வகுடிகளின் உணவுத்தேவைக்கான எருதுகள் கொன்று குவிக்கப்பட்டன. அவர்கள் வாழ்நிலங்களிலிருந்து வன்முறையாலும், மதிப்பளிக்கப்படாத நேர்மையற்ற ஒப்பந்தங்களாலும் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம், வாழ்வியல் முறை போன்றன ஆக்கிரமிப்பாளர்களின் வன்மைநிறை நடவடிக்கைகளால் அழிவுறவோ அல்லது  மாற்றம் கொண்டு காலநகர்வுடன் மறைந்து போவதற்கான ஆரம்ப அசைவுகளை முன்னெடுக்கவோ செய்தன. தாம் உதித்த மண்ணிலேயே வந்தேறிகளால் வரையறுக்கப்பட்ட குறுகிய குடியிருப்பு வலயங்களில் அவர்கள் மனிதப் பிறவிகளிற்கு விதிக்கப்படாத ஈன வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

6. சௌந்தர் - http://tamilcomics-soundarss.blogspot.com :
புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில், திரைமணம் விமர்சனங்களால் களைகட்டும் அல்லவா? சில பதிவர்கள் கடமையாக ஆபிஸுக்கு கட் அடித்து திரைப்பட விமர்சனம் எழுதுவார்கள் அல்லவா! அதைப் போல ஒவ்வொரு (தமிழ்) காமிக்ஸ் இதழ் வெளியாகும் போதும் சௌந்தர் கடமை தவறாமல் முதல் நாளன்றே சுடச்சுட விமர்சனப் பதிவிடுவார்!

தோற்கடிக்கப்பட்ட டைகர்!:
டைகர் கதையை நம் வாசகர்கள் அனைவரும் பல முறை மீண்டும் மீண்டும் படித்திருப்பார்கள். ஒவ்வொரு வசனமும் மனதில் தங்கிப் போனவை. புதிய வெளியீட்டில் எந்தெந்த இடங்களில் வசனங்கள் மாற்றப் பட்டுள்ளது, எந்தெந்த இடங்களில் பழைய வசனங்கள் சிறு மாறுதல்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை முந்தைய வெளியீட்டைப் பார்க்காமலேயே டைகர் விசிறிகளால் எளிதாகக் கண்டறிய முடியும்

பின்குறிப்பு: இவ்வாரம் முழுவதும் அலுவல் ரீதியான பயணம் மேற்கொண்டிருப்பதால் வலைச்சரத்தில் அதிக கவனம் செலுத்த இயலவில்லை. பதிவில் சற்றே ஜீவன் குறைந்திருப்பின் நண்பர்கள் மன்னிக்கவும்!

21 comments:

 1. ஜீவன் குறையவில்லை நண்பரே...

  புதுமையான அறிமுகங்கள்
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 2. 'பாடபுத்தகம்' வழியாக காமிக்ஸுக்கும் அருமையான விளக்கம் கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள் கார்த்திக்! இதைவிட அழகாக விளக்கம் சொல்வது இயலாத காரியம்!

  தமிழில் தற்போது முழுவண்ணத்தில் வந்துகொண்டிருக்கும் லயன்/முத்து காமிக்ஸின் கதைத்தேர்வாகட்டும், மொழிபெயர்ப்புத் தரமாகட்டும், புத்தத் தாள் மற்றும் அச்சுத் தரமாகட்டும்- நிச்சயம் சர்வதேச தரத்திற்கு ஒப்பானது!

  அந்த மாய உலகில் சஞ்சரிக்கும் பாக்கியம் பெற்ற தமிழ்கூறும் நல்லுலகின் ஒரு சிறு எண்ணிக்கையிலான வாசகர்களுள் நானும் ஒருவன் என்பதில் நிச்சயம் பெருமையடைகிறேன்!

  ReplyDelete
 3. காமிக்ஸ் தளங்களின் தொகுப்பு அருமை... பல தளங்கள் புதியவை... அறிமுகத்திற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது... நன்றி...

  ReplyDelete
 5. // அந்த மாய உலகில் சஞ்சரிக்கும் பாக்கியம் பெற்ற தமிழ்கூறும் நல்லுலகின் ஒரு சிறு எண்ணிக்கையிலான வாசகர்களுள் நானும் ஒருவன் என்பதில் நிச்சயம் பெருமையடைகிறேன்! //

  நன்றி விஜய். என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் ...

  ReplyDelete
 6. காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வை, பல வாசகர்களுக்கும் எடுத்து செல்லும் உங்கள் முயற்சி, பாராட்டுக்குரியது கார்த்தி.

  பிய்த்து உதறுங்கள் :)

  ReplyDelete
 7. Karthik,

  Excellent way to create awareness about Tamil Comics to one and all.

  ReplyDelete
 8. Well done Karthik, ungal eluthin vaseekarathirku intha pathivum oru satchi :-)

  ReplyDelete
 9. Thodarnthu kalakka en vazthukkal

  ReplyDelete
 10. தமிழ் சித்திரகதைகளை, மேலும் பல நண்பர்கள் அறியும் வகையில் உங்கள் எழுத்துகள் உள்ளது. பல நண்பர்களின் நினைவலைகளை இந்த பதிவு மீட்டுளுக்கும் என்பது உண்மை. காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு மட்டுமில்லை, பெரியவர்கூட படிக்கலாம். உங்களுடைய அடுத்த பதிவில் சினிமாவுக்கும் காமிக்ஸ்க்கும் உள்ள தொடர்பை எழுதலாமே?

  ReplyDelete
 11. சிறுவயதில் வாசித்த அனுபவம.இப்போதும் கூட எப்போதாவது காமிக்ஸ் புத்தகம் கையில் கிடைத்தால் வாசிப்பதுண்டு.ஆனால் காமிக்ஸ் பற்றிய வலைத்தளங்களை பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.நல்ல அறிமுகம் சகோ

  ReplyDelete
 12. காமிக்ஸ் வலைப்பூக்கள் பற்றி அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி கார்த்திக்

  ReplyDelete
 13. இதுவரை அறிந்திராத தளங்கள்.... நன்றி நண்பரே....

  ReplyDelete
 14. அருமையான அறிமுகங்கள்.
  காமிக்ஸ் பற்றிய தவறான பார்வைக்கு உங்களது விளக்கம் மிக அழகாக உள்ளது.
  இதனை படிக்கும் பலரும் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டால் மிக மகிழ்ச்சி அடைவேன்.
  தொடருங்கள் உங்கள் நற் சேவையை.

  ReplyDelete
 15. மிக்க நன்றி நண்பர்களே! :)

  ReplyDelete
 16. காமிக்ஸ் பற்றி இவ்வளவு இருக்கிறதா இப்போதுதான் அறிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 17. காமிக்ஸ் பற்றி இவ்வளவு இருக்கிறதா இப்போதுதான் அறிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 18. காமிக்ஸ் பற்றி இவ்வளவு இருக்கிறதா இப்போதுதான் அறிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 19. //அதே போல காமிக்ஸ் என்ற ஊடகத்தின் வாயிலாக வெளிவரும் பல்வேறு இதழ்களில் உங்கள் வயதிற்கேற்றதை தேர்ந்தெடுத்துப் படித்துக் கொள்ளலாம்! சித்திரக்கதை என்றாலே கேவலமாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை! காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கான பொம்மைப்பட புத்தகம் என்பது மிகவும் தவறான எண்ணம்!//

  இந்த பதிவில் வழக்கமான கார்த்திக் நடையை காணமுடியவில்லை...?? : (
  ஏதோ 2 டாம் கிளாஸ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடத்தை படித்த உணர்வு...

  come on கார்த்திக்...

  ReplyDelete
 20. @விஸ்கி-சுஸ்கி:
  //ஏதோ 2 டாம் கிளாஸ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடத்தை படித்த உணர்வு...//
  கரெக்டு விஸ்கி! :) :) :) எழுதும் போதே எனக்கும் லைட்டாக அப்படித்தான் தோன்றியது! :) இருந்தாலும் இந்தப் பதிவு காமிக்ஸ் பரிச்சயம் இல்லாதவர்களுக்காக எழுதப்பட்டது என்பதால் அந்தத் தொனியை தவிர்க்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது சரி செய்கிறேன்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது