07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 6, 2013

கடலும் கடல் சார்ந்தும்...


"நள்ளென் றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சா தேனே!"

நெய்தல் திணையில் பதுமனார் பாடிய இப்பாடலுடன் வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!

இப்பாடலின் பொருள்:யாமம் மிகுந்த இருட்டாக இருக்கிறது. மக்களும் பேச்சொழிந்து இனிது உறங்குகின்றனர்.அகன்ற இடத்தையுடைய உலகத்தில்  அனைத்து உயிர்களும் வெறுப்பின்றித் துயில்கின்றன. உறுதியாக நான் மட்டும் உறங்காதவள்.
தலைவியை மணம் செய்து கொள்வதற்காகப் பொருள் ஈட்டச் சென்றத் (இதனை வரைவிடை வைத்து பிரிதல் என்றனர்) தலைவனின் பிரிவு தாங்காத தலைவி பாடியதாக அமைந்துள்ள அருமையான குறுந்தொகைப் பாடல் (எண்.6).

கடலும் கடல் சார்ந்த நிலப் பகுதிகளையும் நெய்தல் என்ற பெயரால் வழங்கினர் நம் முன்னோர்.கடற்கரையில் கடலிலிருந்து மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட நீர்த் தேக்கங்களில் வளரும் நெய்தல் என்ற நீல வண்ண ஆம்பல் மலரால் இப்பெயர் பெற்றது.

நெய்தல் திணைக்கு இரங்கலும் இரங்கல் நிமித்தமும் உரிப்பொருளாகும். பிரிதலின் வருத்தத்தைப் பாடுவதே நெய்தல் திணை. கடற்கரை, கடல், மீன், மீனவர், சுறா, உப்பு, மணல், குருகு, குவளை, ஆம்பல், அலை ஆகியவை நெய்தல் திணையோடுத் தொடர்புடைய சில சொற்களாகும்.

நெய்தல் திணையோடுப்  பொருந்துவதாக நான் எண்ணும் சில வலைத்தளங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

1. கண்ணா கவிதை படிக்க ஆசையா என்று கேட்கும் சேது ஆர் அவர்களின் ஒரு கவிதை கொக்கின் சோகத்தைச் சொல்கிறது.
எப்போது உறவுகளை ஈர்க்கும் என்று இவர் கேட்கும் என் கவிதைகள் உங்களுக்காக! நோபெல் பரிசும் போதுமா தாய்க்கு என்று கேட்கிறார் அம்மா என்ற கவிதையில். தமிழ்ப் பூக்கள்  கவிதை அருமை!

2.  திரு.நடராஜன் அவர்களின் கல்பட்டார் பக்கங்கள் என்ற வலைத்தளத்தில் நாரை பற்றிய அருமையான பதிவு இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் - பூ நாரை, பூ நாரை பற்றி அழகிய தகவல்கள் சொல்கிறது!
என்ன அருமையான படங்கள் மற்றும் தகவல்கள் இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் மீன் கொத்தி என்ற பதிவில்!

3. தலைவனைப் பிரிந்து தலைவி மட்டும்தானா வருந்திப் பாடவேண்டும்..தலைவனும்  வருந்துவான் என்கிறார் திரு.சீனி அவர்கள் வந்து விடு கவிதையில். மீனவ மக்களுக்கு இவர் அர்ப்பணிக்கும் கவிதை, மீனவன்

4. இணையக்குயில் என்ற தளத்தில் திரு.துறை டேனியல் அவர்களின் நக்கல் பிடித்த நாரைகள் அழகாய் ஒரு கருத்து சொல்கின்றது.
"சிறு கூண்டுக்குள் ஒடுங்கியவனே
உன் சிறகுகளில் உள்ளது
சூரியக் குஞ்சுகள் என்பதை நீ அறியமாட்டாய்" அருமை வரிகள் இவரின் நீ அழைக்கப்படுகிறாய் கவிதையிலிருந்து. கண்டிப்பாகப் படியுங்கள் காய்கறி வாங்குவது ஒரு கலை பதிவை.


5. திரு.நாகேந்திர பாரதி அவர்களின் கப்பலோட்டிய காலம் அழகாய் இருக்கிறது. கடலின் வலி , அதற்கு மருந்து எது?

6. திரு.ந.பெரியசாமி மதுவாகினி என்ற தலைப்பில் எழுதிவரும் தளத்தில் உள்ள கடல் பற்றிய எனது கடல்.


7. நான் இங்குக் குறிப்பிட்டுள்ள குறுந்தொகைப் பாடலுக்கு ஒரு படம் இணைப்பதற்காகத் தேடியபொழுது ஒரு படம் பார்த்து, அட, இது பொருந்துமே! என்று நினைத்தேன். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்க, அந்தப் படத்தை வைத்து அதேப் பாடலை  திரு.சித்தார்த் அவர்கள் உறக்கமற்ற காத்திருப்பு என்ற பதிவில் அழகாக விளக்கியுள்ளார் அணிலாடு முன்றில் என்ற தளத்தில்! அருமையான இன்னொரு பதிவு பூத்தலைச் சிறுகோல்.
இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்!

நாளை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

22 comments:

 1. அறியாத இரண்டு தளங்கள்...

  அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. குறிப்பிட்ட பகிர்வில் திரு.சித்தார்த் அவர்கள் அழகாகவே விளக்கியுள்ளார்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. மற்றுமொரு சிறந்த பதிவு. பதுமனாரின் பாடல் கொண்டு தொடங்கிய விதம் அருமை. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள்...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  நீங்கள் அறிமுகம் செய்யும் விதம் அருமை...

  ReplyDelete
 5. நெய்தல் திணை பற்றி மிக அருமையாக விளக்கம் தந்தீர்கள். அருமை. ரசித்தேன்.

  உங்களுக்கும் இன்று அறிமுகமாகும் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. திணைகளோடு அறிமுகங்களை அழகாகச் செய்து வருகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

  ReplyDelete
 8. //நீங்கள் அறிமுகம் செய்யும் விதம் அருமை...//
  மிக்க நன்றி திரு.சே.குமார்! மகிழ்ச்சி!

  ReplyDelete
 9. //நெய்தல் திணை பற்றி மிக அருமையாக விளக்கம் தந்தீர்கள். அருமை. ரசித்தேன்.// மிக்க நன்றி தோழி இளமதி!

  ReplyDelete
 10. //திணைகளோடு அறிமுகங்களை அழகாகச் செய்து வருகிறீர்கள்! வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி middleclassmadhavi அவர்களே!

  ReplyDelete
 11. வணக்கம்

  இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 12. வணக்கம்

  இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. மிகவும் அருமையான விளக்கம், ஆழ்ந்த கருத்துகள்.
  தமிழ் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வளை அமுதமாக காட்சியளிகிறது

  ReplyDelete
 15. ennaiyum arimukam seythamaikku nantri sako..!

  ReplyDelete
 16. நன்றி திரு.வீரராகவன் ரெங்கராஜ்! மகிழ்ச்சி!

  ReplyDelete
 17. எனது வலைப்பதிவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கிரேஸ்

  குறிப்புக்கு நன்றி தனபாலன்

  ReplyDelete
 18. நல்ல அறிமுகங்கள் கிரேஸ்.. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 19. நெய்தல் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. மிக்க நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது