07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 1, 2013

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே 

நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற பூமகள் தான் ஏற்ற பொறுப்பினை சரிவர முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மிகுந்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்  : 7
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 35
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 77
பெற்ற மறுமொழிகள் : 91

பூமகளை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் கிரேஸ் பிரதிபா.

இவர் தேன் மதுரத் தமிழ் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். மதுரையில் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை முடித்து மதுரைக்காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து வளாகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பெங்களூரு சென்றவர். பின்னர் திருமணம், குழந்தை என்று ஓடிய வாழ்க்கையில் குழந்தைக்காகத் தற்காலிக பணி ஓய்வு எடுத்தவர். அது ஏழு வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது!! அவ்வப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிறுக்கும் கிறுக்கல்களை கணவரின் உந்துதலின் பேரில் ஒரு வலைப்பதிவில் சேகரிக்க ஆரம்பித்தார்.  பின்னர் தமிழுக்குத் தனியாக எழுத வேண்டும் என்ற ஆசையில் "தேன்மதுரத்தமிழ்" உருவானது. மதுரம் மதுரை, இரண்டையும் குறிப்பது தான் இடையில் உள்ள 'மதுர'. தமிழ்ப் பெயராக மின்னஞ்சலுக்கு 'கொடிமல்லிகை' தேர்வு செய்தார்.. பள்ளிப்பருவத்தில் இருந்தே தமிழ் மீது தனி அன்பும் ஈடுபாடும் கொண்டவர். சங்க இலக்கியங்கள் படிப்பதும் இவருக்குப்  பிடிக்கும்.அது வளர்ந்து மரமாகி சில நல்ல உள்ளங்களின் ஊக்கத்தில் இப்பொழுது கனி கொடுக்கிறது.  இக்கனிகள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறவர். 
குழந்தைகளுக்குத் தமிழ் நூல்களைக் கற்றுக் கொடுப்பதும் என்றாவது ஒரு நாள் புத்தகம் வெளியிட வேண்டும் என்பதும் இவரது விருப்பம். தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கிறார்.

கிரேஸ் பிரதீபாவினை வருக வருக ! கடமையைச் செவ்வனே செய்க ! என வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன். 

நல் வாழ்த்துகள் பூமகள்

நல் வாழ்த்துகள் கிரேஸ் பிரதீபா

நட்புடன் சீனா 

10 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் கிரேஸ் :)

  ReplyDelete
 3. நன்றி திரு.சீனி!
  நன்றி ஸ்ரீனி!

  ReplyDelete
 4. நன்றி ஸ்கூல் பையன் அவர்களே!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் க்ரேஸ் பிரதிபா.

  ReplyDelete
 6. வலைச்சர ஆசிரிய பொறுபேற்பமைக்கு வாழ்த்துக்கள் கிரேஸ்!

  ReplyDelete
 7. இனிய வாழ்த்துகள் கிரேஸ் சகோதரி.. :)

  ReplyDelete
 8. நன்றி பூந்தளிர்!
  நன்றி இளமதி!
  நன்றி பூமகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது