07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 27, 2013

என்னமா எழுதுறாங்கய்யா பதிவு

இன்று  சில பதிவர்கள் பற்றி பார்ப்போம் என்னமா எழுதுறாங்கய்யா இவங்க

பன்னிக்குட்டி ராமசாமி பதிவுலகில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை தல எழுதிய எல்லா பதிவுகளும் ரசிக்கவைப்பவை விஜய் பத்தி ஏதோ சொல்லுறார் இங்கே டாகுத்தர் விஜய்யும் நானும்

பிரபாகரனின் தத்துபித்துவங்கள் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் பிரபாகரன்.தனது அருமையான எழுத்துக்களால் பல வாசகர்களை  கவர்ந்தவர் அந்தமான் பயணக்கட்டுரை எழுதியுள்ளார் படித்துப்பாருங்கள் இங்கே-அந்தமான் பயணம்-தகவல்கள்

சக்கரகட்டி என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர்.குறைந்தளவு பதிவுகளே எழுதியிருந்தாலும் இவரது எழுத்துக்கள் ரசிக்கவைப்பவை என்னைக்கவர்ந்த அடால்ப் ஹிட்லர் என்று ஹிட்லர் பற்றி பலவிடயங்களை தொடராக குறிப்பிடுக்கின்றார் இங்கே-என்னைக் கவர்ந்த அடால்ப் ஹிட்லர்

புலவர் கவிதைகள் என்ற வலைப்பதிவில் எழுதும் மதிப்பிற்குறிய இராமாநுசம் ஜயா இவரது கவிதைகளில் எப்பவும் சமூக அக்கறை இருக்கும் சாக்கடையும் குடிநீரும் கலந்துவருதே என்று கவிதை சொல்கின்றார் இங்கே-சாக்கடையும் குடிநீரும் கலந்துவருதே மனம் சகிக்காத நாற்றமிகத் தொல்லை தருதே

என் ராஜபாட்டை என்ற வலைப்பதிவில் எழுதி வரும் ராஜா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன் என்று கேட்கிறார் இங்கே-எப்படி இந்தியாவைக் காப்பாத்துவேன்

நண்பேன்டா  என்ற வலைப்பதிவில் எழுதிவரும் சிவகுமார். நட்பு நமக்கு கற்பு. பழகிய அனைவரும் இன்றுவரை நிரந்தர நண்பர்களே. 100% ரெகார்ட். ஆசான், எழுத்தாளர்கள் என பலர் எனக்கு சொல்லாத விசயங்களை,காட்டாத உலகத்தை தரமான சினிமா எனக்கு தந்திருக்கிறது. அதனால் அதை நான் என்றும் பிரிவதில்லை.என்று அழகான அறிமுகம் தந்திருக்கின்றார் அவர் தளத்தில் அவர் பற்றி. உதயம் சினிமாவிமர்சனம் எழுதியிருக்கார் இங்கே படித்துப்பாருங்கள் சுவாரஸ்யமாக இருக்குஉதயம் NH4

தமிழ்வாசி பிரகாஸ் புதிய பதிவர்களுக்கு பயன்படும் வகையில் வலைப்பூ தொடங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர் என்று எழுதிவருக்கின்றார் இங்கே-வலைப்பூ தொடங்கி எழுத ஆர்வமா இதோம் வழிகாட்டுதல் தொடர்

நீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வலைப்பதிவில் எழுதி வரும் ரமணி அவர்கள் இவரது பதிவுகள் எப்போது வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருக்கும்
ஒரு கோடிச்சொல்லும் ஒரு சிறு செயலும் என்று ஏதோ சொல்கின்றார் இங்கே-ஒரு கோடிச்சொல்லும் ஒரு சிறு செயலும்

நிறைய பதிவர்களை அறிமுகம் செய்ய நினைத்தாலும் நேரப்பிரச்சனை காரணமாக முடியவில்லை அதைவிட ஏற்கனவே பலரால் அறியப்பட்ட பதிவர்களைத்தான்  அதிகமாக அறிமுகம் செய்துள்ளேன்.இனிவரும் நண்பர்களிடன் ஒரு அன்பான வேண்டுகோள் முடிந்தளவு புதிய பதிவர்களை அதிகளவும் வலைசரத்தில் அறிமுகம் செய்யுங்கள் 

நிறைய பதிவர்கள் பதிவுலகில் எழுதினாலும் எல்லோறும் பிரபலமாவது இல்லை.திறமையாக எழுதியும் பலர் அடையாளம் காணப்படாமலே போய்விடுக்கின்றார்கள்.திறமையான எழுத்துக்கள் அங்கிகாரம் பெறவேண்டும் எம்மால் முடிந்தளவு புதிய பதிவர்களை ஊக்குவிப்போம்.

உங்கள் தளங்களில் ஒவ்வொறு பதிவுகளுக்கு கீழ் நீங்கள் ரசிக்கும் ஒரு புதிய பதிவர் பற்றிய அறிமுகத்தை கொடுங்கள். இதனால் அவர்களுக்கு வாசகர்கள் அதிகரிக்க சந்தர்ப்பம் இருக்கு.திறமைகள் அடையாளம் காணப்படவேண்டும்.

அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.ராஜ்

23 comments:

 1. உங்க யோசனை அருமை ராஜ்! இன்றைய என் பதிவில் நீங்கள் சொன்ன மாதிரி நான் ரசிக்கும் ஒரு புதிய பதிவரைக் குறிப்பிட்டிருக்கேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 2. மெகா பதிவர்களின் அறிமுகங்கள்...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வணக்கம்

  இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் புதிய தளங்கள் அனைத்தும் எனக்கு தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. நல்ல யோசனை.,செயல்படுத்துவோம்

  ReplyDelete
 5. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்து.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 6. நல்லது..

  சிறப்பான அறிமுகங்கள் ராஜ்..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. இன்றைய அறிமுகங்களும் மிக அருமை. உங்களுக்கும் அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!

  நல்ல யோசனை சகோ!
  இனி தொடரும் பதிவுகளில் அப்படியே செய்கிறேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 8. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இந்த ஆம்பாளடியாளின் நல்
  வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரரே சிறப்பான முறையில் உங்கள் பணியைத் தொடர்வதற்கும் கீழ்க் கண்ட சிறந்த நற் கருத்திற்கும் .

  நிறைய பதிவர்கள் பதிவுலகில் எழுதினாலும் எல்லோறும் பிரபலமாவது இல்லை.
  திறமையாக எழுதியும் பலர் அடையாளம் காணப்படாமலே போய்விடுக்கின்றார்கள்.
  திறமையான எழுத்துக்கள் அங்கிகாரம் பெறவேண்டும் எம்மால் முடிந்தளவு புதிய பதிவர்களை ஊக்குவிப்போம்.

  ReplyDelete
 9. தரமான பதிவர்களுடன் என்னையும் அறிமுகபடுதியமைக்கு மிக்க நன்றி ராஜ்
  நீங்கள் கூரிய யோசனை அற்புதம் இனி நானும் என்னை கவர்ந்த பதிவர்களை பின் குறிப்பிடுகின்றேன்

  ReplyDelete

 10. என்னையும் அறிமுகபடுதியமைக்கு மிக்க நன்றி ராஜ்! ஆனால் தாங்கள் சொன்ன ஆலோசனையை, இனி வருபவர்கள் கடைபிடிப்பின் நன்று!

  ReplyDelete
 11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  புதியவர்கள் அறிமுகம் நல்ல ஜோசனை என்றாலும் புதியவர்களும் சகவலைப்பதிவாளர்களுடன் தயக்கம் இன்றி அறிமுகம் ஆனால்தான் புரிந்துகொள்ளமுடியும் என்பது என்நிலை ராஜ்!

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு.....

  தெரிந்த பதிவர்கள்.... தொடரட்டும் தெரியாத பதிவர்களின் அறிமுகங்கள்.

  ReplyDelete
 13. அனைவருக்கும் நன்றி நண்பர்களே

  ReplyDelete
 14. வணக்கம் ராஜ்...
  என்னையும் குறிபிட்டமைக்கு நன்றி....

  ReplyDelete
 15. .இனிவரும் நண்பர்களிடன் ஒரு அன்பான வேண்டுகோள் முடிந்தளவு புதிய பதிவர்களை அதிகளவும் வலைசரத்தில் அறிமுகம் செய்யுங்கள் ///

  இதன் வாயிலாக வலைச்சர குழு ஆசிரியராக நானும் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்...

  புதிய பதிவர்களை தேடி வலைச்சரத்தில் தொகுத்து எழுதுங்கள் நண்பர்களே...
  பழைய, நமக்கு அறிமுகமான பதிவர்களை குறிப்பிடுவதால், புதிவர்களின் வலைப்பூ வெளியில் தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளது...

  முடிந்தவரை இனிவரும் வலைச்சர ஆசிரியர்கள் புதியவர்களை ஊக்குவியுங்கள்...

  ReplyDelete
 16. நன்றி ராஜ். வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 17. வணக்கம்.
  பதிவுலகத்திற்கு நான் புதியவன். எனினும் புலவர் இராமனுசம், திண்டுக்கல் தனபாலன் போன்றோர் பெரு மனதுடன் எனது சில இடுகைகளுக்குப் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். அன்பர் தமிழ்வாசி பிரகாஷ் செய்த உதவி மறக்க முடியாதது. அவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதியிருக்கிறேன். தங்கள் எல்லோரதும் ஊக்கத்தையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றேன்.நன்றி!

  ReplyDelete
 18. ////பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நன்றி ராஜ். வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்!////
  நன்றி தல

  ReplyDelete
 19. ////S. Hameeth said...
  வணக்கம்.
  பதிவுலகத்திற்கு நான் புதியவன். எனினும் புலவர் இராமனுசம், திண்டுக்கல் தனபாலன் போன்றோர் பெரு மனதுடன் எனது சில இடுகைகளுக்குப் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். அன்பர் தமிழ்வாசி பிரகாஷ் செய்த உதவி மறக்க முடியாதது. அவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதியிருக்கிறேன். தங்கள் எல்லோரதும் ஊக்கத்தையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றேன்.நன்றி!////

  நாங்கள் இருகோம் கலக்குங்க பதிவுலகில்

  ReplyDelete
 20. அனைவருக்கும் நன்றி நண்பர்களே

  ReplyDelete
 21. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது