07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 1, 2013

ப்ளேட்பீடியா - 3 - 50-50 அறிமுகங்கள்!

அந்த நான்கு எழுத்து சொல்லைப் பற்றி மீண்டும் இன்று எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால் முதலில் வேறு சில பதிவர்கள் பற்றிய அறிமுகத்தைப் பார்ப்போம்! :)

பங்கு வேட்டையர் (எ) ஜோஷ் மணி - http://sharehunter.wordpress.com :
இவருடைய பதிவுகள் மிக மிக வித்தியாசமானவை! நகைச்சுவை பதிவுகள் என்று மேலோட்டமாக முத்திரை குத்தி விட முடியாது! இவ்வகையான நகைச்சுவை அனைவருக்கும் கைகூடுவதில்லை. உதாரணத்திற்கு கீழே உள்ள பதிவைப் படித்தால் உங்களுக்கே புரியும்! :)

கோயாவியின் ஆப்பிரிக்க சதி:
அமெரிக்க கேப்டன், கோயாவியின் தோளை தட்டிக் கொடுத்து, "நல்லது நண்பரே,இனி விதி உமது கைகளில்தான் இருக்கிறது, ஐந்து நிமிடங்கள் முப்பது நொடிகளே உள்ளது,. நேர முக்கியத்துவத்தை மறந்து விடாதீர்கள்."
- ஈகிள் ஹியுர். நான் கோயாவி பேசறேன்.
- அண்ணே நான் மாணிக்கமுன்னே
- மாணிக்கம், கொப்பன் மகனே, எப்படி இருக்கே

கிரி - www.giriblog.com :
பிரபல பதிவரான கிரிக்கு அறிமுகம் தேவையில்லை - எளிமையான அதே சமயம் சுவாரசியமான இவரின் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை!

தமிழனும் மாணவப் போராட்டங்களும்!:
ஊடகங்கள் அனைவரும் கை விட்ட நிலையில், ஃபேஸ்புக் ஒன்றே மாணவர்களுக்கு உலகில் உள்ள அனைவருக்கும் செய்திகளை கொண்டு சேர்க்கும் ஊடகமாக விளங்குகிறது. இதை வைத்து மாணவர்கள் செய்திகளை உடனுக்குடன் கூறி மாணவர்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள். இதில் ஒரு பின்னடைவு, இணையத்தை பயன்படுத்துபவர்கள் மட்டுமே இந்த செய்திகளைக் காண முடியும் என்பது. தமிழக ஊடகங்கள் கூட தமிழனின் போராட்டத்திற்கு உதவவில்லை எனும் போது மற்றவர்களைக் குறை கூறி என்ன பயன்!

ராம்குமார் - www.sivakasikaran.com :
அவரது ஊரின் தன்மைக்கேற்ப ராம் குமாரின் சமூகப் பதிவுகளும் மிகச் சூடானவைதான்!

நாசமாய்ப்போகும் இந்திய பொருளாதாரம்!:
இப்படி ஒருவர் குடித்துவிட்டு தூங்குவதால், சிறு தொழில் முனைவோருக்கும், விவசாயம் செய்வதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை.. ஆட்கள் கிடைக்காததால் பொருட்களின் உற்பத்தி பாதிக்கிறது..இது பொருளின் விலையை உயர்த்துகிறது. அரசு தன் பணத்தை எல்லாம் இலவசங்களுக்கு தாரை வார்ப்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து பொருளை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். பணப்புழக்கம் குறைவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது.. பண வீக்க அதிகரிப்பால் பொருளின் விலை இன்னும் கூடுகிறது. அரசு அக்கறை இல்லாமல் இலவசத்தை தொடர்கிறது. இலவசத்தை பெற்று குடிமகன் உழைக்காமல் எப்பவும் போல் தூங்கிக்கொண்டிருக்கிறான்.

மூன்று வெவ்வேறு விதமான பதிவர்களை அறிமுகப் படுத்திய கையோடு, சென்ற பதிவில் விட்ட இடத்தில் இருந்து தொடர்வோமா நண்பர்களே?! (ஆங்கில) நான்கு எழுத்தில் திட்ட வேண்டாம்! ;) 50% மற்ற பதிவர்கள், 50% காமிக்ஸ் பதிவர்கள் - டீல் ஓகேவா?! :)

காமிக்ஸ் எனும் காண்வழி ஊடகம்! - பாகம் 2:

மிகவும் மேலோட்டமாகப் பார்த்தால் காமிக்ஸ்களை மூன்று வகையாக பிரிக்கலாம்:

1. குழந்தைகளுக்கான காமிக்ஸ்:
காமிக்ஸ் என்பதே குழந்தைகளுக்கானது என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு இதற்கு தனியே ஒரு விளக்கம் தேவையா என்ன?

பதிவர் அறிமுகம்: கிருஷ்ணா வ. வெ.  - http://www.kittz.info
காமிக்ஸ் பதிவுகள் நீங்கலாக பல்வேறு நாவல்கள் & சிறுவர் இதழ்கள் பற்றியும் பதிவிட்டு வருகிறார் கிருஷ்ணா!

2. பெரியவர்களுக்கான காமிக்ஸ்:
உண்மையில் இந்தக் களம்தான் மிகப் பெரியது, இப்படி ஒன்று இருப்பதே நம்மில் பலருக்கு தெரியாது என்பது எவ்வளவு வேதனையான விஷயம்! படிப்பவர்களின் புத்திசாலித்தனத்தை பகடி செய்யாத கதை அமைப்புடன், பல்வேறு தளங்களில் பயணிக்கும் கதைகளுடன் எண்ணிலடங்கா காமிக்ஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குற்றம், புலனாய்வு, நகைச்சுவை, நட்பு, காதல், காமம், சரித்திரம், யுத்தம், சாகசம், திகில், சயன்ஸ் பிக்ஷன், ஃபாண்டஸி என கட்டுக்கடங்கா கதைகள் நம்மவர்களின் பார்வையில் படாமலேயே மறைந்து கிடைக்கின்றன! மேலைநாட்டுப் படங்களின் மேல் நாம் காட்டும் ஆர்வத்தில் துளி அளவையும், அந்நாடுகளில் இருந்து வெளியாகும் அதே அளவு தரமான காமிக்ஸ்கள் மீது நாம் காட்டுவதில்லை. தெரிந்தால்தானே காட்டுவதற்கு? இந்த விழிப்புணர்ச்சி ஏற்படும் ஒரு நன்னாளில், திரைமணம் "உலக காமிக்ஸ்" விமர்சனப் பதிவுகளால் நிரம்பி வழியத்தான் போகிறது!

உதாரணம்: XIII இரத்தப் படலம் (பொறுமையாக வாசியுங்கள், பதிவின் முதல் பாதி அவருடைய சிறுவயது அனுபவங்களை மட்டுமே கொண்டிருக்கும்!) 

பதிவர் அறிமுகம்: சாய்ராம் - http://sairams.com
சாய்ராமைப் பற்றி தெரியவந்தது மேற்கண்ட XIII காமிக்ஸ் பதிவைப் படித்த போதுதான்! அவருடைய வலைப்பூவின் வடிவமைப்பைப் போலவே மிகத் தெளிவான பதிவுகள் எழுதுகிறார்!

3. அனைத்து வயதினருக்கும் ஏற்ற காமிக்ஸ்:
டிவியில் சானல் மேய்கையில், கார்ட்டூன் நெட்வொர்க்கில் டாம் அண்ட் ஜெர்ரி வந்தால் சற்று நேரம் பார்த்து ரசிப்பதில்லையா? ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களை அனைத்து வயதினரும் கண்டு மகிழ்வதில்லையா? அதே போல அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய காமிக்ஸ்களும் வருவதுண்டு! குழந்தைகளுக்கான காமிக்ஸில் சற்று புத்திசாலித்தனம் சேரும்போதும்; பெரியவர்களுக்கான காமிக்ஸில் இருந்து காமம் & வன்முறை நீங்கும் போதும் "அனைத்து வயதினர்க்கும்" ஏற்ற காமிக்ஸ்கள் பிறக்கின்றன!

உதாரணம்: சிக்பில் & கோ! 

பதிவர் அறிமுகம்: ராஜ் முத்து குமார் - http://www.comicsda.com:
காமிக்ஸ்களை அனுபவித்து படிக்கும் வித்தை தெரிந்த நண்பர்! அவர் ரசித்த கட்டங்கள் நிறைந்த காமிக்ஸ் பதிவுகள் காமிக்ஸ் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம்!
Lieutenant Blueberry
நாளை மீண்டும் சில வித்தியாசமான அறிமுகங்களுடன் சந்திப்போம்! நன்றி நண்பர்களே!

அன்புடன்,
கார்த்திக்

8 comments:

 1. மீண்டும் ஒரு அட்டகாசமான அறிமுகங்கள்..

  ReplyDelete
 2. மூன்று தளங்கள் புதியவை... அறிமுகத்திற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. தமிழ்மணம் (+1) இணைத்தாயிற்று...

  அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. எனது வலைப்பூவை அறிமுகபடுதியதர்க்கு நன்றி கார்த்திக்.

  ReplyDelete
 5. comic introductions are so good

  ReplyDelete
 6. என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிங்க :-)

  ReplyDelete
 7. 'அனைத்து வயதினருக்கும் ஏற்ற காமிக்ஸ் பிறப்பது எப்படி?' என்ற புத்தகம் எழுதிடத் தகுதியானவர் நீங்கள், கார்த்திக்!

  இப்படிப்பட்ட தருணத்திலா பணிச்சுமை கழுத்தை நெறிக்க வேண்டும்? த்சொ! :(

  ReplyDelete
 8. மறுமொழியிட்ட நண்பர்களுக்கு நன்றி!

  @விஜய்:
  //இப்படிப்பட்ட தருணத்திலா பணிச்சுமை கழுத்தை நெறிக்க வேண்டும்? த்சொ! :(//
  ஹ்ம்ம்... தப்பித்தது வலைச்சரம்! :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது