07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 21, 2013

என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய பதிவரும் , சில அறிவியல் பதிவுகளும்


    நெட் , மொபைல் போன்றவற்றின் மீது போன தலைமுறையினர் சிலருக்கு பெரிய மரியாதை இல்லை. நேர விரயத்துக்குத்தான் இவை உதவுகின்றன என அவர்கள் நினைக்கிறார்கள்.

    இன்னும் சிலர் இணையம் வருகையால் தமிழ் மெல்ல அழிவதாகவும் நினைக்கிறார்கள்.

   ஆனால் என்னை பொருத்தவரை இணைய வருகை , தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்வேன். கணினி , இணையம், வலைப்பூ , இடுகை , பின்னூட்டம் என சென்ற தலைமுறை கேள்விப்பட்டிராத தமிழ் சொற்கள் வெகு இயல்பாக பயன்பாட்டில் உள்ளன.

 ஆன்மீகம் , நாத்திகம் , அரசியல் , திரைப்படம்  என பல துறைகளிலும் இன்ஃபார்மேட்டிவாக பல விஷயங்கள் கிடைக்கின்றன. நான் வலைப்பூக்கள் உதவியுடன் தான் , கம்ப்யூட்டர் செலக்ட் செய்து வாங்கினேன். அதே போல பல டெக்னிக்கல் விஷ்யங்கள் வலைப்பூக்களிலேயே கிடைக்கின்றன. இதில் சினிமா விமர்சனங்கள் பார்த்து விட்டுதான் , சினிமா பார்க்கலாமா என முடிவு செய்கிறேன்.

அதே போல ஒவ்வொரு துறையிலுமே சிலர் முக்கிய பங்களிப்பாற்றி வருகிறார்கள். ஓய்வு பெற்ற பேராசியர்கள் , அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் சிலரும் பங்களித்து வருகிறார்கள்.   அருமையாக அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி வருகிறார்கள்.

அப்படி சிறந்த பதிவுகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம். கொஞ்சம் இலக்கியம் பற்றி பார்த்து விட்டு அதன் பின் அறிவியல் , தொழில் நுட்ப பதிவுகளை பார்க்க இருக்கிறோம்.

இவர்களில் சிலர் பல ஆண்டுகளாக எழுதி வருபவர்கள். அவர்களையும் இங்கே குறிப்பிட காரணம் , அவர்களது பழைய பதிவுகளை மீண்டும் அனைவரும் மறு வாசிப்பு செய்ய வேண்டும் என்பதுதான்.  பழைய இடுகைகளாக இருந்தாலும் , அந்த காலத்தில் நான் ரசித்தவை,,,பயன்பெற்றவை... இப்போதும் பயன்படும் , அதுபோல எழுத ஊக்கம் கிடைக்கும் என்பதால் பழையவை சிலவற்றை தருகிறேன்.


**************************************************************

  சில ஆண்டுகளுக்கு முன், நான் முதல் முதலில் தற்செயலாக சிலரது பதிவுகளை பார்க்கையில் ஆச்சர்யமடைந்தேன். தமிழில் இணையத்தில் எழுதுவது என்பதே ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன்.

அப்போது உண்மை தமிழன் , கேபிள் சங்கர் , லக்கிலுக் , அதிஷா , டோண்டு ராகவன் , செந்தழல் ரவி , ஓசை செல்லா , நர்சிம் , ஆதி , பரிசல்காரன், குசும்பன் போன்ற பலர் பரபரப்பாக எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது எனக்கு கூகுள் ஐ டீ ஏதும் இல்லை என்பதால் அனானியாக கமெண்ட் இடுவேன். அவர்களில் சிலர் அதை வெளியிட மாட்டார்கள். அப்போது ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டு இருந்ததால் , அனானி பின்னூட்டங்களை வெளியிட தயங்கினார்கள் என தெரிய வந்தது.

எனவேதான் ஒரு ஐ டி உருவாக்க முடிவு செய்தேன்..ஏற்கனவே என்னை பலரும் பிச்சைக்காரனாக ட்ரீட் செய்ததாலும் , உண்மையிலேயே பிச்சைக்காரன் தான் என்பதாலும் இந்த பெயரிலேயே களத்தில் இறங்கினேன்.

அப்போது என்னை கவர்ந்த எழுத்துகளில் ஒன்று நர்சிம் அவர்களின் எழுத்து. குறிப்பாக அவர் கவிதைகளும் , குறுந்தொகை விளக்கங்களும் அருமையாக இருக்கும்.

இதை படித்து பாருங்கள்.

குறுந்தொகை : காதலனின் தோளா அறுக்கும் வாளா?


இன்னொரு அற்புத பாடல்


இந்த நிலையில் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கினார். பலரும் அவரை விமர்சித்தனர். சிலர் ஆதரவளித்தனர்.

நானும் அவர் தவறு செய்ததாக கருதினேன். அவரை விமர்சித்து எழுதலானேன். ஒரு கட்டத்தில் எல்லை மீறி விமர்சித்தேன்.

அதன் பின் யோசித்தபோது , என்னுள் ஏன் இவ்வளவு கோபம் , வன்மம் என திகைத்தேன். இது நல்லதல்லவே என மன சாட்சி சுட்டி காட்டவே அந்த பிரச்சினையில் இருந்து மெல்ல விலகினேன். மறந்தும்போனேன்.


பதிவர்கள் ஆதிமூல கிருஷ்ணனும் , பரிசல்காரனும் ஒரு சிறுகதை போட்டி நடத்தினார்கள். அதில் எனக்கு பரிசு கிடைத்தது, சுய தம்ப்பட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, அந்த சுட்டிகளை இங்கு தர இயலவில்லை.

தொடர்ந்து பல நண்பர்கள் மெயிலிலும் , போனிலும் வாழ்த்து சொன்னார்கள். புதிய எண்ணில் இருந்து ஒரு கால் வந்தது. யாரோ ஒருவர் பேசினார்.. நான் கேட்டிராத குரல்.

வாழ்த்துகள்.. நன்றாக எழுதுகிறீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.

சார்... நீங்க யாரு... குரல் கொஞ்சம் அடையாளம் தெரியல..என தயங்கிவாறு கேட்டேன். யாரவது நெருங்கிய நண்பர் அழைத்து , குரல் தெரியாமல் போய் விட்டதா என்ற குழப்பம்.

எதிர் முனை சிரித்தது.. என்னை உங்களுக்கு பிடிக்காது...ஆனால் உங்களை எனக்கு பிடிக்கும்..அதனால்தான் அழைத்தேன் என்றார் அவர்.

உங்க பேர் ? என்றேன்,

நர்சிம் என்றார் அவர்.

அப்படியே ஆடிப்போய் விட்டேன்.

அவர் எனக்கு எந்த கெடுதியும் செய்ததில்லை. நானாக போய் அவரை புண்படுத்தினேன். நியாயப்படி நான் வருத்தம் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் என்னால் அவருக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை என்ற போதிலும் அவராக இறங்கி வந்து பேசியது மறக்க முடியாத ஒன்று.

அவர் பெருந்தன்மை முன் நான் சிறியவனாகிப் போனேன்.

அதன் பின் பல பேச்சுகள்..சம்பவங்கள்..

அந்த கால கட்டத்தில் வெளிவந்த நந்தலாலா படம் குறித்த ஒரு விவாதம்..

ஒரு சூடான விவாதம்

   அவர் இப்போது எழுதுவதில்லை என்ற போதும் , அவர் எழுத்துகள் பயனுள்ளவை என்பதால் இங்கு பகிர்கிறேன். அந்த காலத்தில் அவர் பயங்கர பாப்புலர். ஆனால் புதிதாக வருபவர்கள் சிலருக்கு ஓர் அறிமுகமாக இருக்க கூடும் என நினைக்கிறேன்..

    *******************************************************

சோவியத் யூனியன் யுகத்தில் அழகு தமிழில் பல நல்ல அறிவியல் புத்தகங்கள் வெளிவந்தன. இன்று சோவியத் யூனியம் இருந்து இருந்தால் இன்றைய அறிவியல் யுகத்தில் கலக்கலாக இருந்திருக்குமே என்ற ஏக்கம் அவ்வப்போது உண்டாகும்.

இந்த ஏக்கத்தை போக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பதிவுகள் அவ்வப்போது வருகின்றன.

இதில் கணினி , சாஃப்ட்ஃபேர் , இணையம் , தகவல் தொழில் நுட்பம் சார்ந்து நிறைய வருகின்றன. பலர் சிறப்பாக செயல்படுகிறார்கள். சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார்கள்.

ஆனால் இயந்திரவியலில் பதிவுகள் குறைவுதான். ஆயினும் சிலர் எழுதி வருவது ஆறுதல்.

பதிவர் செங்கோவி இயந்திரவியலை அழகாக விளக்க கூடியவர். நான் கேட்டுக்கொண்டதற்கினங்க ஒரு முறை ஒரு கட்டுரை எழுதினார்.

அதை தவிர நிறைய எழுதி இருக்கிறார். அதில் மிக சிறந்தது என நான் கருதுவது பைப்பிங் குறித்து அவர் எழுதிய தொடர் கட்டுரைகள்தான், மிக சிறப்பாக இருந்தது. பயன்  தரத்தக்க வகையில் இருந்தது,.

படித்து பாருங்கள்

குழாயியல் - கட்டுரை தொடர்


பொறியியல் துறையின் தாய் என இயந்திரவியலை சொல்லலாம். ஆனால் நடைமுறையில் அதை கரடுமுரடான பிரிவாக நினைக்கிறார்கள். அந்த பிரிவில் பெண்கள் யாரும் சேருவதும் இல்லை. அந்த துறையில் வேலை செய்யவும் விரும்புவதில்லை. அவ்வளவு ஏன்.. எந்த துறையில் வேலை செய்பவர்களைக்கூட அவ்வளவாக விரும்புவதில்லை.

வறட்சியான துறையாக மற்றவர்களால் கேலியாக பார்க்கப்படும் பிரிவு இது.ஆனால் இதை முறையாக விளக்கினால் , எடுத்து கூறினால் இதை விட சுவையான சப்ஜெக்ட் உலகிலேயே கிடையாது.

தமிழ் வாசி பிரகாஷின் இந்த இடுகையை பாருங்கள்..இவர் இயந்திரவியலில் பல தொடர்கள் எழுதி இருக்கிறார்..எழுத இருக்கிறார்..ஆயினினும் கீழ்கண்ட இந்த இடுகை something great..

இனிது.இனிது,,,இயந்திரவியல்

தினமணியில் செய்தி ஆசிரியராக இருந்த ராமதுரை அறிவியலுக்காகவென்றே ஒரு தளம் நடத்தி வருகிறார். அருமையான கட்டுரைகள் தருகிறார்.  தொடர்ந்து வாசிப்பது நல்லது.

எவரெஸ்ட் உச்சியை தொடுவதை சாதனை என்கிறோம். நம்மால்  நெருங்க முடியாத ஓர் இடம் பூமியில் இருக்கிறது..என்ன அது,...? படித்து பாருங்கள்.

மனிதனால் நெருங்க முடியாத இடம்

அருண் நரசிம்மனால் பல ஆண்டுகளாக ஒருவலைத்தளம் நடத்தி வருகிறார். சுவையாக , எளிமையாக , அழகு உதாரணங்களுடன் அறிவியலை சொல்வது இவர் பாணி..

பாம்புக்கு காது உண்டா என்ற ஆராய்ச்சியை படித்து பாருங்கள்

பாம்புக்கு காது கேட்குமா?

முழுக்க முழுக்க அறிவியலுக்காகவென்றே இயங்கும் இன்னொரு தளம்.
அணு சக்தியைப்பற்றிய தொடரை படித்து பாருங்க

அணு சக்தி வரலாறு


இன்னும் நிறைய இருக்கின்றன,... அடுத்தடுத்து பார்க்கலாம்.


அடுத்த பகுதியில் இலக்கியம் கொஞ்சம் பேச இருக்கிறோம்.

இதில் நர்சிம் பற்றி பார்த்தோம். அடுத்த பகுதியில் லக்கி லுக் யுவாவுடனான ஓர் அனுபவம். பதிவராக இருந்தபோது பாசமாக பழகிய அவர், பத்திரிக்கையாளர் ஆனதும் எப்படி மாறினார்... அதனால் என் வாழ்வில் ஏற்பட்ட ஒரு திருப்பு முனையை பார்க்கபோகிறோம்.

மேலும் இலக்கியம் சார்ந்த பதிவர்கள் , பதிவுகள் பார்த்து விட்டு , ஆங்காங்கு சில பல்சுவை பதிவர்களையும் பார்க்க இருக்கிறோம்..

( பயணங்கள் முடிவதில்லை ) 

27 comments:

  1. பதிவு(வர்) அனுபவம் அருமை.

    பசியால் வாடுபவர்களை விட சிறிய பாராட்டிற்கும் நன்றிக்கும் ஏங்குபவர்கள் அதிகம் என்பது ஞாபகம் வந்தது...

    அனைத்தும் நல்ல தளங்கள்... வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்

    ReplyDelete
  3. நர்சிம் அவர்களுடன் தொலைபேசி உரையாடல் அருமை...

    //என்னை பலரும் பிச்சைக்காரனாக ட்ரீட் செய்ததாலும் , உண்மையிலேயே பிச்சைக்காரன் தான் என்பதாலும் இந்த பெயரிலேயே களத்தில் இறங்கினேன்.//

    ஹிஹி...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நர்சிம் அவர்கள் எழுத்தில் மட்டுமல்ல..பேச்சிலும் கில்லாடி.. நன்றி ஸ்கூல் பையன்

    ReplyDelete
  6. உங்க இன்னொரு பக்கத்தை வலைச்சரம் முலம் அறிய கொண்டேன்..

    ReplyDelete
  7. இனிய வணக்கம் நண்பரே...
    பதிவர்கள், கேபிள் சங்கர் மற்றும் பரிசல்காரன் அவர்கள் மட்டுமே
    பரிச்சயம். மற்றவர்கள் பதிவுகளை சென்று பார்க்கிறேன்...
    உங்கள் வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. தரமான பதிவுகள் குறித்த ‘தரம்’ உள்ள பதிவு இது.

    தொடர்க.

    ReplyDelete
  9. பாம்புக்குக் காது கேட்குமா ?
    மனிதனால் நெருங்க முடியாத இடம்.

    இவ்விரண்டு பதிவுகளுக்கும் சென்று படித்தேன்.
    அறிவியல் என்று தலைப்பு இட்டு, அதில் றி என்னும் எழுத்தை அடைப்பில் இட்டு,
    அதை அவியல் எனவும் குறிப்பிட்டு, நகைச்சுவை மட்டுமல்ல, அது மெய்யாகவும்
    அறிவு என்பது ஒரு அவியலே, அதில் நுண்ணியது எது, நுழையவேண்டியது எது
    நாம் நுகரவேண்டியது எது என்பதையும் அவரது வலை தெளிவாகச் சொல்கிறது.

    நிற்க.
    என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டாள் என் வீட்டுக்கிழவி.
    பாம்புக்குச் செவி உண்டா என்பது பற்றி படித்துக்கொண்டு இருக்கிறேன்.என்றேன்.

    வூட்டு பம்பிலே தண்ணி வல்லே, அத பாருங்க அப்படின்னு கதறிகிட்டு இருக்கேன்.
    அத காதுலே போட்டுக்காம, பாம்புக்கு காது உண்டான்னு படிக்கிறீகளே !!

    நாகராஜா !! ஓடி வாடா இங்கே என‌
    ஊர் கேட்க உறக்கச்சொன்னாள்.

    நாகராஜன் வந்தான்.
    பம்பில் இருந்து.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha.blogspot.in


    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்கள்....படிக்கிறேன்...

    ReplyDelete
  11. நல்வரவு பிச்சைக்காரரே!

    அருமையான நடை! ரசித்தேன்.

    ReplyDelete
  12. வலைப்பூவுக்கு நான் புதியவன். பழைய பதிவர்களையும் அவர்களின் சிறந்த பதிவுகளையும் படிக்க வேண்டுமென்ற என்னைப் போன்ற புதியவர்களின் தாகத்திற்கு தங்களின் இந்தப் பதிவு ஓரளவேனும் நீர் வார்க்கும் என்று நம்புகிறேன். நன்றி, 'அம்பானி' அவர்களே...! தொடரட்டும் தங்கள் அரும் பணி..!

    ReplyDelete
  13. திரு நரசிம் அவர்களுடன் ஆன உங்கள் அனுபவம் எங்களுக்கும் அதிர்ச்சி தான். எப்படி அவரால் அப்படி இருக்க முடிந்தது?
    இன்னும் உங்கள் அனுபவங்களையும், பதிவர்களையும் அறிந்து கொள்ள ஆவல்.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. அருமையான பதிவர்கள்! சிறப்பாக அறிமுகம் செய்து பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. வணக்கம்

    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. நன்றி ரூபன்

    ReplyDelete
  17. சிலநேரத்தில் இந்த பதிவுலகில் வரும் சண்டை நம்மையும் கீழ் இறக்கிவிடுகின்றது மூத்தவர் நர்சிம் பகிர்வு சிந்திக்கத்தூண்டுகின்றது.தொடரட்டும் பணி .

    ReplyDelete
  18. ஆம் தனிமரம்... தேவையற்ற சண்டைகளால் நேரம்தான் விரயம்

    ReplyDelete
  19. வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன்

    ReplyDelete
  20. நீங்க சிவராமன் தானே?

    ReplyDelete
  21. சின்ன சின்ன சச்சரவுகள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தலாம்

    ReplyDelete
  22. நல்ல அறிமுகங்கள்! வித்தியாசமான தளங்கள்!

    ReplyDelete
  23. நன்றி... நண்பரே...
    என் தளத்தையும் குறிப்பிட்டமைக்கு...

    ReplyDelete
  24. // அப்போது உண்மை தமிழன் , கேபிள் சங்கர் , லக்கிலுக் , அதிஷா , டோண்டு ராகவன் , செந்தழல் ரவி , ஓசை செல்லா , நர்சிம் , ஆதி , பரிசல்காரன், குசும்பன் போன்ற பலர் பரபரப்பாக எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

    //

    நானும் அப்ப எழுதிகிட்டு இருந்தேன்னு நினைக்கிறேன் :)

    ReplyDelete
  25. // நீங்க சிவராமன் தானே?

    //

    ஜோதிஜி, அது பைத்தியக்காரன் என்ற பெயரில் எழுதிய சிவராமன், இவர் வேறு.

    ReplyDelete
  26. அப்துல்லா சார்... நீங்களெல்லாம் முதல் தலைமுறை பிளாக்கர்களில் ஒருவர்

    ReplyDelete
  27. அப்துல்லா சார்... நீங்களெல்லாம் முதல் தலைமுறை பிளாக்கர்களில் ஒருவர்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது