07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 18, 2013

கிரிக்கெட்டும் ஐபிஎல்லும் ஸ்ரீசாந்தும்

கொளுத்தும் இந்திய வெயிலில் இந்தியர்களுக்கு ஏனோ கிரிக்கெட் மீது தணியாத ஆர்வம். அந்தக் காலத்தில் (அதாகபட்டது இணையம் உருவாகாத காலத்தில்) பாலகுமாரன் நாவலில் கிரிக்கெட் காட்சி வந்தாலோ அல்லது கிரிக்கெட் பற்றிய கருத்துகள் வந்தாலோ ஆர்வத்துடன் அதை புரட்டுவதுண்டு. அப்படியாகபட்ட கிரிக்கெட் ஆர்வத்துடன் உள்ள வலைப்பதிவர்கள் தமிழில் இருக்கவே செய்கிறார்கள்.

அபிலாஷ்
இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்புகள், அரசியல், கருத்து என பல தளங்களில் இயங்கும் அபிலாஷின் வலைப்பதிவு கட்டாயம் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டியது. கிரிக்கெட்டைப் பற்றி 73 பதிவுகள் எழுதியிருக்கிறார் அபிலாஷ். கிரிக்கெட்டை அலசுவதில் மிக்க கருத்து செறிவுடன் இருக்கின்றன இவரது கட்டுரைகள். சுவாரஸ்யமாய் எழுதும் வலைப்பதிவர்களிடம் இல்லாத அளவு ஆய்வுகளை நுணுக்கமாய் முன்வைப்பதாய் இருக்கின்றன இவருடைய எழுத்துகள். கிரிக்கெட் பற்றிய இவரது கட்டுரைகள் உயர்மை இதழிலும் வெளிவந்திருக்கின்றன. இப்போதைய கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை உருவாகுவதற்கு முன்பு மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்ரீசாந்த் பற்றி அவர் எழுதிய பதிவை இப்போது படித்தால் ஸ்ரீசாந்த் பற்றிய அவர் சொன்ன பிம்பம் இன்றும் அப்படியே பொருந்துகிறது.

மோகன்குமார்
அ தொடங்கி ஃ வரை பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் வலைப்பதிவர் மோகன்குமார். கிரிக்கெட் பற்றி தொடர்ந்து வலைப்பதிவிடும் இவர் இந்த முறை ஐ.பி,எல்லுக்கு ஸ்பெசல் முயற்சி எடுத்திருக்கிறார். ஸ்ரீசாந்த் விவகாரம் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் எழுதிய பதிவு சுவாரஸ்யமானது.

K.s.s.rajh
இவரது பெயர் ராஜ்? என்பதில் ஒரு குழப்பம். அதனால் ஆங்கிலத்திலே டைப் செய்து விட்டேன். ஜாலியாக கிரிக்கெட் பற்றி கதைக்கணுமா? இவருடைய கிரிக்கெட் பற்றிய பதிவுகள் 'ஜாலி மட்டுமே' ரகம். கங்குலியின் ரசிகர்.(?!) வரலாற்றை மாற்றிய தாதா என்று கங்குலியைப் பற்றி ஒரு தொடரே எழுதி இருக்கிறார். ஆனால் அதிலும் இவருக்கு தோனி மீது என்ன கோபமோ தெரியவில்லை, கிரிக்கெட் பற்றி எழுதும் போதெல்லாம் எங்காவது தோனியை மறைமுகமாக செம காச்சு காய்ச்சுகிறார்.

மோகன்தாஸ்
சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் பற்றி பேசுவது ஒரு ரகம் என்றால் நம்ம சொந்த வாழ்க்கை கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுவது தனி சுகம். நிறைய ரசிகர்கள் கொண்டிருந்த மோகன்தாஸ் தன் கிரிக்கெட் அனுபவங்களைச் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.

கிரிக்கெட்டைப் பற்றி நிறைய பேர் எழுதுகிறார்கள். அதில் இந்த ஐ.பி.எல் சீசனில் சுறுசுறுப்பாய் இயங்குபவர்கள் சிலர். டினேஷ்சாந்த் குறிப்பிட்டு சொல்லலாம். 'அடியில்லடா இடி' என்று கிறிஸ் கெயில் ஆட்டத்தை சிலாகித்திருக்கிறார்  தன்னுடைய வலைப்பதிவில்.

...மேலும் பேசுவோம்...

2 comments:

  1. மோகன்தாஸ் அவர்களின் தளம் எனக்கு புதியது... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது