07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 13, 2013

கொஞ்சம் சீரியஸான பெண் வலைப்பதிவர்கள்

Ladies first...!

வார நாளில் ஒரு முக்கியமான நேரம். டிராபிக் ஜாம் அதிகமாகி எங்கெங்கும் வாகனங்கள். பைக்குகள், கார்கள், சைக்கிள்கள், ஆட்டோகள் என மக்கள் ஆங்காங்கே சிக்னல் விளக்கை எரிச்சலோடு பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஏன் இத்தனை ஆண்கள்? பெண்கள் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறார்கள்? முன்பு எப்போதையும் விட பெண்களுக்கான இடம் இன்று விரிவாகி இருக்கிறது. எனினும் அவர்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

குட்டி ரேவதி
எந்தக் காலகட்டத்தையும் விட, தற்பொழுது தான் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான தேவையும் பொருத்தமும் நிறைய இருப்பதாக சொல்கிறார் கவிஞர் குட்டி ரேவதி தன்னுடைய பெண்கள் தினம் பதிவில். இப்போதெல்லாம் பெண்ணியம் பேசும் ஆண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒருபடி மேலே போய் பெண்களுக்கே பெண்ணியம் கற்று தரும் ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை எழுதியிருக்கிறார். இலக்கிய சூழலில் தனக்கான ஓர் இடத்தை உருவாக்கி விட்ட இவருடைய வலைப்பதிவில் கவிதைகளையும் வாசிக்கலாம்.

மு.வி.நந்தினி
சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையான பதிவுகள் மு.வி.நந்தினியுடையது. பருவமழை தப்பியதால் இடம்மாறிய பூநாரைகள் பற்றி ஒரு பதிவில் விவரிக்கிறார். இயற்கையியலாளர் ச.முகமது அலியோடு நேர்காணல் கண்டு, "குயில் குடும்பத்துல மட்டும் 127 வகைகள் இருக்கு. அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை. வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது. 250 வகை இந்திய பாம்புகள் 3 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷம் இருக்கு," போன்ற சுவாரஸ்யமான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

சந்திரா
தன்னுடைய கவிதைகளுக்காகவும் சிறுகதைகளுக்காகவும் அறியப்பட்டவர் எழுத்தாளர் சந்திரா. அவருடைய காற்றில் அலையும் சிறகு வலைப்பதிவில் அவருடைய படைப்புகளை வாசிக்கலாம். வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள் கவிதையில் இயற்கையும் அதனோடு உள்ள கண்ணிற்குப் புலப்படாத உணர்வலைகளையும் எழுதியிருக்கிறார்.

தமிழ்நதி
தன்னுடைய படைப்புகளால் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் தமிழ்நதி. தனிமையில் இருக்கும் பெண்ணொருத்தியின் உணர்வுகளை ஓவியமாய் தீட்டுகிறது அவருடைய விலகல் கவிதை. அடிமைகளின் குடியிருப்பைக் கடந்து செல்லும் சீமாட்டியின் தோரணை எப்படியோ அப்படி தன்னிடம் நடந்து கொள்ளும் உறவை/நட்பைப் பற்றிய இயலாமை கவிதையாய் வடிவு கொண்டிருக்கிறது.

அனார்
இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அனார் 'இதமி' என்று ஒரு வலைப்பதிவு எழுதி வருகிறார். படைப்புகள் மட்டும் அல்லாது அதில் நிகழ்வுகள் பலவற்றையும் பதிவு செய்கிறார். உள்ளே பாடல் போல் மிதக்கின்ற வண்ணத்துப்பூச்சி, வெளியே பிடித்து வைக்க முடியாத கனா என்று வலைப்பதிவின் விவரிப்பே கவித்துவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் வில்லியம் பிளேக் எழுதிய ஒரு விஷ மரம் கவிதையை போல தொடங்குகிறது நாட்டுப்புறப் பாடகி கவிதை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஆன்மாவில் உணர்வதற்குமான வித்தியாசத்தைச் சொல்கிறது ஓவியம் கவிதை.

தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி 'நிழல்வலை' என்கிற பெயரில் வலைப்பதிவிடுகிறார். அதில் குறிப்பட்டு சொல்ல வேண்டியவை அவருடைய சிறுகதைகள். பெரியவர்களின் உலகத்தைக் குழந்தைகள் எப்படி புரிந்து கொள்கிறார்கள்? தன் சித்தப்பாவின் உலகத்தைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு சிறுவனின் உலகம் நூலிழை இறகுகள்.

சீரியஸான பெண் வலைப்பதிவர்கள் என்றால் முழுக்க சீரியஸானவர்கள் என்று அர்த்தமல்ல. மற்றவர்கள் எல்லாம் சீரியஸாய் எழுதுவதில்லை என்றும் பொருளில்லை. ஒரு பாகுபாட்டிற்காக எழுதிய தலைப்பு அது. இங்கே குறிப்பிட்ட வலைப்பதிவர்களைத் தவிர இந்த மாதிரி நிறைய வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். தேடி படிக்க நினைப்பவர்களுக்கு பெரிய உலகமே வசமாகும்.

...மேலும் பேசுவோம்...

13 comments:

 1. அனைத்தும் அதிகம் சென்றிடாத தளங்கள்... சில தளங்கள் புதிது... அறிமுகம் செய்தமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அனைத்துமே எனக்குப் புதிய தளங்கள்.மு.வி.நந்தினி ,இதமி தளங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.தொடருங்கள் நண்பரே

  ReplyDelete
 3. “இதமி“ அறிமுகத்திற்கு நன்றி தனபாலன்.

  அனார்

  ReplyDelete
 4. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. பலரையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள் !!!

  ReplyDelete
 6. இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

  தேடித்தேடி மிகச்சிறந்த அறிமுகங்களை நமக்கு அடையாளம் காட்டியுள்ள ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. வலைச்சர ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்த வலைச்சர்ம் சிறக்கவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. சிறந்த படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. மு.வி. நந்தினி அவர்களின் தளத்தைத் தவிர மற்ற தளங்கள் புதியவை. எல்லோருமே நீங்கள் சொல்லியிருப்பதைப் போல சீரியஸ் எழுத்தாளர்கள்தான்! எல்லோரையும் படித்துப் பார்க்கிறேன்.

  அறிமுகம் ஆன எல்லோருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. “இதமி“ அறிமுகத்திற்கு நன்றி சாய் ராம்.

  அவதானிக்காமல் பெயரை மாற்றி எழுதியமைக்கு மன்னிக்கவும் சாய்.

  நட்புடன்
  அனார்

  ReplyDelete
 11. நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், டினேஷ், அனார், தனிமரம், இக்பால் செல்வன், வை.கோபாலகிருஷ்ணன், வல்லிசிம்ஹன், கவியாழி கண்ணதாசன், ரஞ்சனி நாராயாணன் ஆகியோருக்கு நன்றி!

  ReplyDelete
 12. புதிய வலைப்பதிவுகளுக்கு அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 13. நன்றி எழில்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது