07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 14, 2013

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

இரவு நேரம். நகரத்தின் பிரதான விளக்குகளின் ஒளி ஆக்கிரமிக்காத கிராமத்து வானம். ஆயிரக்கணக்கில் மினுங்குகின்றன நட்சத்திரங்கள். இப்படியே நேர் பாதையில் பயணித்தால் அந்த நட்சத்திரங்களைத் தொட்டு விட முடியுமென தோன்றுகிறது சில நேரம். நட்சத்திரங்களைத் தொட்டு அப்படியே நேர் பாதையில் இன்னும் தொலைவில் பயணித்தால் எங்கே முடியும்? முடிவு என்பது தான் என்ன? முடிவு என்பதே மாயை தானா? தொடக்கம் என்பதும் மாயையா?

சி. ஜெயபாரதன்
கனடாவில் வசிக்கும் சி. ஜெயபாரதனுக்கு வயது இன்னும் சில ஆண்டுகளில் எண்பதைத் தொட இருக்கிறது. தொடர்ச்சியாக 'நெஞ்சின் அலைகள்' என்கிற தன்னுடைய வலைப்பதிவில் எழுதுகிறார். பெரும்பாலும் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் குறித்தான சமீப கால அறிவியல் கண்டுப்பிடிப்புகளைப் பற்றி தான் விரிவாக எழுதுகிறார். அறிவியல் பற்றிய தமிழ் கவிதையில் தொடங்கி ஆங்கில விஞ்ஞான மேற்கோள்களைக் குறிப்பிட்டு பல படங்களை எடுத்து காட்டி எளிய நடையில் நுட்பமான விஷயங்களை சுவாரஸ்யமாக அலசுகிறார். பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் என்று அவர் எழுதுகிற தொடர் முக்கியமானதாக இருக்கிறது.

என். ராமதுரை

தினமணி நாளிதழில் முன்பு செய்தி ஆசிரியராக இருந்தவர். இப்போது அறிவியல்புரம் என்று வலைப்பதிவு தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் சுவாரஸ்யமான அறிவியல் செய்திகள் கொட்டி கிடக்கின்றன. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது தான் அதிகமான வெயில் என்று சொல்வார்கள். ஆனால் மதியம் இரண்டு மணி தொடங்கி இரண்டரை வரை தான் அந்த நாளின் அதிகமான வெயில் இருப்பதாக சொல்கிறார்.
ராஜா சங்கர்

தமிழில் அறிவியல் தகவல்களைச் சொல்வதற்காகவே வலைப்பதிவு நடத்தி வருகிறார் ராஜா சங்கர். 'குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்' என்று நீண்ட தொடரினை எழுதி கொண்டு இருக்கிறார். இந்த உலகில் உயிர் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான் பற்றி பேசிய டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிய தமிழில் தொடராக எழுதுகிறார்.

...இன்னும் பேசுவோம்...

8 comments:

 1. இன்றைக்கு அறிமுக மூன்று தளங்களும் அறியாத அரிய தகவல்களை அள்ளித்தரும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. அனைவருக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. வணக்கம்

  இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா அவர்களின் வாசகன் நான். அவரது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 5. எனக்கு தெரிந்தவரை அறிவியல் பதிவுகள் அறிமுகப்படுத்தப்படுவது மிகக் குறைவே.தரமான அறிவியல் பக்கங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்களும் நன்றிகளும் ஸ்ரீராம்

  ReplyDelete
 6. இங்கே அறிமுகப்படுத்தியவற்றை வாசித்து மறுமொழி எழுதிய நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், வை.கோபாலகிருஷ்ணன், ரூபன், மாற்றுப்பார்வை, மாதவன் இளங்கோ & டினேஷ் சுந்தர் ஆகியோருக்கு நன்றி!

  ReplyDelete
 7. நன்றி வால்பையன்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது