07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 27, 2013

நினைவின் விளிம்பிலிருந்து வலைச்சரத்திற்கு…


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம். நலந்தானே?

“எத்தனை நாள்தான் நினைவின் விளிம்பிலேயே உலாத்திக்கிட்டு இருப்பே? இங்கிட்டுக் கொஞ்சம் வந்து பாரேன்”, அப்படின்னு எனக்கு வலை(ச்சரத்தை) விரிச்சவர், சீனா ஐயா. அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகள்.

“அச்சோ! ஏழு நாளும் எழுதணுமா?!” அப்படின்னு பயம்மாத்தான் இருந்தது. அட, எனக்காக இல்லீங்க, உங்களுக்காகத்தான்! பாவம்ல நீங்க? ஆனா எவ்வளவோ பட்டுத் தெளிஞ்ச நீங்கல்லாம் என்னையும் சகிச்சுக்குவீங்க தானே? :)

கவிநயா, என்னோட புனை பெயர். பெயர் சூட்டு விழாவெல்லாம் இல்லாம, நல்ல நாளெல்லாம் பார்க்காம, நானே ஒரு நாள் வெச்சுக்கிட்டேன். பெயர்க் காரணம் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருந்தா, இங்கே வந்து பாருங்க! அமெரிக்காவில் வாசம். கணினித் துறையில் வேலை. பரத நாட்டியம் ஆடுவேன், சொல்லியும் தர்றேன். எழுதறதில் தனி விருப்பம். வாசிக்க ஆள் இருந்தாலும் இல்லேன்னாலும் ஏதாச்சும் எழுதிக்கிட்டே இருக்கணும் எனக்கு. தமிழ்க் குழுமங்களில் எழுதி, பிறகு இணைய பத்திரிகைகளில் எழுதி, கடைசியா ‘நினைவின் விளிம்பில்…” வந்து செட்டில் ஆயிட்டேன்! இப்போ வல்லமை மின்னிதழின் ஆசிரியர் குழுவுக்கு என்னாலான சிறு சிறு உதவிகள் செய்யறேன். ஆன்மீகத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு.

என்னுடைய எழுத்துப்  பயணம் (குக்கிராம டூர் மாதிரி ரொம்பச் சின்னதுதானுங்க), எழுத்தின் மீதான மயக்கம், இது ரெண்டையும் பற்றிய சுய புராணங்களை என் வலைப்பூவில் பகிர்ந்திருக்கேன்.

கவிதை வடிவம் தான் முதலில் எழுத ஆரம்பிச்சது. பிறகு சிறுகதை, குறுங்கதை, தொடர்கதை, கட்டுரை, மொழிபெயர்ப்புக் கவிதை, இப்படிப் பல வடிவங்கள்லயும் கை வெச்சாச்சு! எனக்கே பிடிச்ச, கொஞ்சம் வித்தியாசமா இருக்கும், அப்படின்னு நினைக்கிற படைப்புகளை இங்கே பகிர்ந்திருக்கேன்… நேரம் கிடைக்கும் போது வாசிச்சுப் பார்த்து, உங்க கருத்துகளைப் பகிர்ந்துக்கிட்டா, நன்றியுடையவளா இருப்பேன்.

கவிதைகள் தான் நிறைய… மற்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம்…

கவிதைகளில் சில -
பாப்பா பாட்டு – ஆனை பாரு! யானை பாரு!!
சோகக் கவிதை – காணவில்லை!
தேசப் பற்றுக் கவிதை – நாளைத் தரணியில் இந்தியர் நாம்…
காதல் கவிதை – ரகசியமாய்…

சிறுகதைகளில் சில -

குறுந்தொடர் (எழுதினதே இவ்ளோதான்!) -

கட்டுரைகளில் சில –

போதும் போதும்னு நீங்க எழுந்து ஓடறதுக்குள்ள நானே நிறுத்திக்கிறேன் :) நாளைக்கு மீண்டும் பார்க்கலாம்!

அன்புடன்
கவிநயா


24 comments:

 1. ரசிக்க வைத்தது சுய அறிமுகம்... பாராட்டுக்கள்...

  தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்...

  தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
 2. இவ்வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்..தொடரட்டும் அறிமுக புதுமுகங்கள்...

  சின்ன வேண்டுகோள் பதிவில் எழுத்துருவை கொஞ்சம் பெரிதாய் வைத்தால் வசதியாய் இருக்கும்..

  ReplyDelete
 3. முதன் முறையாக உங்கள் வலை தளத்திற்கு சென்றேன். ஒவ்வொன்றாக படிக்கிறேன். வலைசர ஆசிரியர் பனி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நல்ல அறிமுகம். உங்கள் வலைத்தளத்தில் எழுதியவற்றை மாலையில் படிக்கிறேன்.....

  சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. இனிய வாழ்த்துகள் கவிநயா..

  ReplyDelete
 6. அருமையான
  அறிமுகப்பகிர்வுகள் ரசிக்க வைத்தன ..வாழ்த்துகள்...

  ReplyDelete
 7. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். :))))

  ReplyDelete
 8. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சிறப்பான பணிக்கு

  ReplyDelete
 10. கவிநயாவின் அபிநயம் வலைச்சரத்தில் காணக் காத்திருக்கிறேன் !

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் தோழி தங்களின் இவ்வார ஆசிரியர் பொறுப்பு நன்முறையாகப் பயணிக்கட்டும் .இன்று அறிமுகமான
  அனைத்துத் தளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 12. அன்பின் கவிநயா - திண்டுக்கல் தன பாலன் இருக்கும் வரை தமிழ் மண இணைப்பு பற்றி கவலைப் பட வேண்டாம். அது மட்டுமல்ல - அறிமுகப் படுத்தப் படும் பதிவர்களுக்கு அறிமுகம் பற்றிய செய்தி உடனுக்குடன் சென்று விடும். வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கத் தயங்குகிறாரே தவிர இவ்விரண்டு செயல்களையும் ஒவ்வொரு வலைச்சரப் பதிவினையும் தவறாமல் படித்து செய்து முடித்து விடுகிறார்.

  நல்லதொரு செயலினை தினமும் செய்யும் நல்ல நண்பர்

  நல்வாழ்த்துகள் தி.த - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. அறிமுகம் செய்து கொண்ட விதமே மிக அழகாய்.. அழுத்தமாய். வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 14. வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கத் தயங்குகிறாரே தவிர இவ்விரண்டு செயல்களையும் ஒவ்வொரு வலைச்சரப் பதிவினையும் தவறாமல் படித்து செய்து முடித்து விடுகிறார்.

  நல்லதொரு செயலினை தினமும் செய்யும் நல்ல நண்பர்

  சலிப்பே இல்லாமல் அவர் செய்யும் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. :)

  ReplyDelete
 15. தொடரட்டும் பணி வாழ்த்துக்களுடன்!

  ReplyDelete
 16. வாழ்த்துகள் கூறிய தனபாலன், ரேவா, முரளிதரன், வெங்கட் நாகராஜ், அமைதிச்சாரல், இராஜராஜேஸ்வரி, கீதாம்மா, கவியாழி கண்ணதாசன், சரளா, பகவான்ஜீ, அம்பாளடியாள், சீனா ஐயா, ரிஷபன், தனிமரம், அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  தனபாலன் அவர்களின் சிறப்பான பணிக்கு சிறப்பு நன்றிகள். நீங்கள்தான் அசத்துகிறீர்கள், தனபாலன். உங்கள் உதவிகளுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 17. வலைச்சர வாரத்துக்கு இனிய வாழ்த்துகள் கவிநயா:)!

  ReplyDelete
 18. வாழ்த்துகள்

  இந்ந வாரம்
  இணைந்திருப்பவருக்கு
  இனிக்கும் வரமாம்

  ReplyDelete
 19. அன்பினிய ரேவா, எழுத்துகளைப் பெரிதாக்கி வாசிப்பதற்குரிய உதவிக் குறிப்பு இங்கே... http://tamilblogging.blogspot.com/2009/06/blog-post.html

  ReplyDelete
 20. நன்றி ராமலக்ஷ்மி, திகழ் :)

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் கவிநயா! கவிதைகளால் கலக்குங்கள்.

  ReplyDelete
 22. நன்றி திரு.கைலாஷி!

  ReplyDelete
 23. அழகிய அறிமுகம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. நன்றி மாதேவி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது