07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 26, 2013

இவ்வாரத்திற்கு கவிநயா ஆசிரியப் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் பிச்சைக்காரன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                :     8
அறிமுகப் படுத்திய பதிவர்கள் :   56
அறிமுகப் படுத்திய பதிவுகள்    :   66
 பெற்ற மறுமொழிகள்                    : 129

பல்வேறு காரணங்களீனால் இவர் பல பதிவர்களை அறிமுகப் படுத்தும் போது பதிவுகளை அறிமுகப் படுத்த இயலாத நிலையில் -அதற்கான காரணத்தையும் விளக்கி உள்ளார்.  

மேலும் பல பகிர வேண்டிய பல்வேறு நற்பதிவுகளையும் அவற்றை எழுதிய பதிவர்களையும்  பகிர இயலாத காரணத்தினையும் விளக்கி உள்ளார். 

பல புதிய நட்புகளை அறிமுகப்படுத்த விரும்பியும் நேரமின்மை காரணமாக அறிமுகப் படுத்த இய்லவில்லை.  

இக்காரணங்களினால், நண்பர் பிச்சைக் காரன் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க இன்னுமொரு வாய்ப்பினை வேண்டுகிறார். இன்னும் மூன்று மாதங்கள் கழித்து செப்டமபரில் மற்றுமொரு வாய்ப்பினை அளிக்க இயலும் எனபதை இங்கு தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  

நண்பர் பிச்சைக்காரனை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் பிச்சைக்காரனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்பின் கவிநயா அன்புடன் இசைந்துள்ளார். இவர் " நினைவின் விளிம்பில் " என்ற தளத்தில் எழுதி வருகிறார். 

எழுதுவதிலும், வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ள கவிநயா, அமெரிக்க நாட்டில் வசிக்கும் ஒரு நாட்டியக் கலைஞர். இளமை விகடன், திண்ணை, திசைகள், போன்ற இணையப் பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார். நினைவின் விளிம்பில் என்ற தளத்தினைத் தவிர,  அம்மன் பாட்டு முதலான குழும வலைப் பூக்களிலும் எழுதுகிறார். தற்போது வல்லமை மின்னிதழின் துணை ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.

அன்பின் கவிநயாவினை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பிச்சைக் காரன் 

நல்வாழ்த்துகள் கவிநயா

நட்புடன் சீனா

5 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. கவிநயாஅவர்களை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை
  அடைகிறோம் ...

  பாராட்டுக்கள்...

  ReplyDelete
 3. கவிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. கவிநயா வாருங்கள் சிறக்கட்டும் வலைச்சரப்பணி!வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நன்றி சீனா ஐயா, இராஜராஜேஸ்வரி அம்மா, தனபாலன், மற்றும் தனிமரம்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது