07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 26, 2013

சொல்ல மறந்த பதிவர்கள் - மறைத்த உண்மைகள்

சேர்ந்திருந்த காலங்களை விட
உனை பிரிந்து இருக்கும்போதுதான்
உன்னை அதிகம் நினைக்கிறேன் , அதிகம் உணர்கிறேன்
பிரிதல் தெய்வீகமானது,

   


நதி கடலில் கலப்பது நதியின் மரணமல்ல , அது நதியின் நிறைவு நிலை. பிரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, எப்போது பிரிவு என்பதுதான் கேள்வியே தவிர பிரிவு வேண்டுமா வேண்டாமா என்பது பொருட்டு இல்லை.


அந்த வகையில் இன்றுடன் வலைச்சர ஆசிரியர் என்ற பொறுப்பில் இருந்து விடைபெற்று செல்வது மகிழ்ச்சியை தருகிறது. இந்த நாட்களில் நான் பகிர்ந்து கொண்டவற்றை விட கற்று கொண்டது அதிகம்., பல நல்லியதங்களுடன் உரையாட கிடைத்த வாய்ப்பை பெரும் பேறாக கருதுகிறேன்.

  இத்தனைபேருடன் உரையாடும் வாய்ப்பு தொழில் நுட்பத்தால் சாத்தியமாகி இருக்கிறது, தொழில் நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் வலைச்சர நிர்வாகிகளால் சாத்தியமாகி இருக்கிறது.

     உலகம் கெட்டு விட்டதாக நினைக்கிறோம். ஆனால் நல்ல விஷயங்களை பட்டியலிட்டு பார்க்கும்போதுதான் , நம்மை சுற்றி எத்தனை நல்ல விஷ்யங்கள் இருக்கின்றன என்பதே புலப்பட ஆரம்பிக்கிறது.

         நான் பல பதிவுகளை பகிர்ந்து கொண்டு இருந்தாலும் இசை, கவிதை , சமையல், விளையாட்டு போன்ற பல துறைகளை தொட இந்த ஒரு வார காலம் போதுமானதாக இல்லை என்பது வலை உலகம் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்.

அதே நேரம் , இந்த துறைகளை வலைச்சரத்தில் ஏற்கனவே பலர் அழகாக அருமையாக சொல்லி இருக்கிறார்கள்,.. நான் சொன்னாலும் கிட்டத்தட்ட அவர்கள் சொன்னதையே சொல்வேன் என்பதால் நான் சொல்லாததில் வருத்தம் இல்லை.

ஆனால் கேபிள் சங்கர், ஆதி , கே ஆர் பி செந்தில் , மணி ஜீ ,உண்மை தமிழன் போன்ற சிலரைப்பற்றி சொல்ல  நேரம் இல்லாததில் வருத்தம்தான்.

நர்சிமுடன் நான் தேவையே இல்லாமல் மோதிய போது ஓர் அன்னை போல / அல்லது மூத்த சகோதரி போல என் தவறை சுட்டிக்காட்டி இனிய சூழலை உருவாக்கிய பதிவர் , நான் யாரென்றே தெரியாத நிலையில் , ஆயிரக்கணக்கான ரூபாய் விலையுள்ள புத்தகங்களை படிக்க இரவல் கொடுத்த பதிவர், அவ்வப்போது தட்டி கொடுத்தும் , பெரும்பாலும் தலையில் குட்டியும் , நான் எல்லை மீறி எழுதாமல் நடக்க உதவியாக இருக்கும் தோழிகள் , சகோதரிகள் அல்லது அன்னைமார்கள் , நேரில் சந்த்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்த சகோதரர்கள் , நண்பர்கள் என பல பேரை இந்த ஒரு வார காலத்தில் சொல்லி முடிக்கவில்லை என நினைக்கையில் ,  நம்மை சுற்றி இத்தனை நல்லவர்களா என்ற ஆச்சர்யம் ஏற்படுகிறது.

 நடு நிலையை காக்கும் பொருட்டு இவர்கள் பதிவுகளை தவிர்த்து விட்டு , பெரும்பாலும் எனக்கு பழக்கம் இல்லாத , ஆனால் திறமைசாலிகளான வலைப்பதிவர்களைத்தான் அதிகம் பகிர்ந்துள்ளேன்.

பதிவர்களைப்பற்றி சொன்னதை குறைத்து மேலும் பதிவுகளை சொல்லி இருக்கலாமே என சிலர் நினைக்கலாம்.

வலை பதிவுகள் எனும் மலர்களை வைத்து சரம் ஒன்று தொடுப்பதுதான் ஆரம்பத்தில் என் எண்ணமாக இருந்தது.

பூக்களை இணைக்கும் நரம்புகள் வெளியே தெரியாது. ஆனால் அவை இன்றி மாலை இல்லை.

அதேபோல நம் அனைவருக்கும் தெரிந்த பதிவுகளை படைத்த சில பதிவர்களின் நல்லிதயம்தான் இந்த மலர்கள் மாலையாகி மணம் வீச காரணம். ஆகவே கொஞ்சமாவது அவர்களைப்பற்றியும் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

சொல்ல வேண்டிய பதிவுகள் நிறைய இருக்கின்றன.

 இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை எல்லாம் பேசலாம். அதே போல நான் செய்த சில விளையாட்டுத்தனமான தவறுகளையும் சொல்ல நினைத்தேன்.. ஒரு வாரம் என்ற என் நேரம் முடிந்து விட்டது,,,


இனிது எது என அவ்வையாரை கேட்டார்கள்.

அமைதியாக தனித்து இருப்பது இனிது,,, இறையை அல்லது எல்லாவற்றத்துக்கும் ஆதியான இயற்கையுடன்இயைந்து இருப்பது அதை விட நல்லது,,, நல்லவர்களோடு சேர்ந்து இருத்தல் அதை விட இனிது..

ஆனால் இவை எல்லாவற்றையும் விட இனிது என்ன தெரியுமா.. அறிவுள்ளோர்களை  கனவிலும் , நனவிலும் நினைப்பதுதான்

என்றார் அவர்..

 இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே



அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக அறிவிற்சிறந்த பதிவர்களையும் , அவரது பதிவுகளையும் நினைத்து பார்த்தது எனக்கு இனிமையான அனுபவம்.. அதே போல பின்னூட்டங்கள் மூலம் உரையாடியதும் இனிமையான அனுபவமாக இருந்தது.. பல புதிய நட்புகள் கிடைத்தன, அவர்களைப்பற்றி அடுத்த வாய்ப்பில் சொல்வேன் என நினைக்கிறேன்.

ஒரு வாரம் இவ்வளவு சீக்கிரம் ஓடி விட்டதே என்ற ஏக்கத்துடன் விடை பெறுகிறேன். ஒரு வழியாக இந்த ஒரு வாரம் முடிந்து தொலைத்தது என நீங்கள் நினைக்க கூடும். ஆனாலும் அது என் மகிழ்ச்சியை குறைக்கப் போவதில்லை

எனக்கு முன் வலைச்சர ஆசிரியர்களாக இருந்தவர்களின் அறிமுகங்கள் எனக்கு மிகவும் பயன்பட்டு இருக்கின்றன, அவற்றை அவ்வப்போது சர்ச் செய்து படிப்பேன், அந்த அளவுக்கு ஓர் ஆவணமாக திகழ்கின்றன.. அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்..

இனி வர இருக்கும் வலைச்சர ஆசிரியர்களுக்கு என் நல்வாழுத்துகள்..

இப்போதைக்கு முதல் இன்னிங்ஸ் முடிகிறது..

இன்னொரு முறை என்றாவது சந்திப்போம்...

என்றென்றும் அன்புடன்,
பிச்சைக்காரன்
     

9 comments:

  1. முதல் இன்னிங்ஸ் சிறிது நெகிழ்ச்சியுடனேயே முடித்துள்ளீர்கள்... பல அறியாத தளங்களை அறிமுகம் செய்து வைத்தீர்கள்... நன்றிகள் பல...

    சந்திப்போம்... சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்பின் பிச்சைக்காரன் - அருமையாக வலைச்சர ஆசிரியரப் பொறுப்பினை நிறைவேற்றி இருக்கிறீர்கள். இன்னுமொரு இன்னிங்க்ஸ் அடித்து ஆட தாங்கள் விரும்புவதாகத் தெரிகிறது. மூன்று மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதம் தொடர்பு கொள்ளவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. அன்பின் பிச்சைக்காரன் - லேபிள் போட மறந்து விட்டீர்கள் போலும் - லேபிள் இடுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. லேபிள் இட்டு விட்டேன் அய்யா... மோதிர கையால் குட்டு வாங்காமல் விடைபெறுவது ஒரு குறையாக இருந்தது,,,அந்த குறையும் நீங்கி விட்டது :) நன்றி..ஹி ஹி

    ReplyDelete
  5. நன்றி தனபாலன்.. உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்

    ReplyDelete
  6. அன்பின் பிச்சைக் காரன்...(புதுமையான வலைப்பெயர்)

    ஒரு வார ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.

    தங்கள் பதிவுகளை ஓய்வு நேரத்தில் படித்துவிட்டு
    கருத்து சொல்வேன் என்று நினைக்கிறேன்.
    நன்றி

    எனது வலைப்பூவுக்கும் வாருங்கள்..

    ;என் மனம் கரைபுரண்டு செல்ல...

    ReplyDelete
  7. வணக்கம்
    பிச்சைக்கரன்(அண்ணா)

    ஒருவார காலமும் பல சிரமங்களுக்கு மத்தியில் வலைச்சரப் பொறுப்பினை சிறப்பாக நடாத்தியமைக்கு எனது மனசார நன்றியை கூறுகிறேன் வாழ்த்துக்கள்
    புதிதாக வலைச்சரப் பொறுப்பினை எடுக்கவிருக்கும் ஆசிரியர் அவர்களை அன்புடன்வரவேற்கிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அருமையான வாரமாக இருந்தது பிச்சைக்காரரே!

    ரசித்து மகிழ்ந்தோம்.

    நன்றிகள்.

    ReplyDelete
  9. தொடர்ந்து கருத்துரை இடமுடியாவிட்டாளும் வலைச்சரம் உங்கள் பார்வையில் ஒரு சிறப்பான பணி வாழ்த்துக்கள் பிச்சைக்காரன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது