07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 2, 2013

நன்றிச்சரம் - நன்றி...நன்றி...நன்றி!


நலந்தானே நண்பர்களே? ஒரு வாரம் ஓடினதே தெரியல... எனக்கு! அது சரி… ஏன் இப்போ போய் நலம் விசாரிக்கிறேன்னு பார்க்கறீங்களா? என் கூட வலைச்சரத்தில் இத்தனை நாள் செலவழிச்ச பிறகும் நல்லாதான் இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான்! :)

முன்னரே சொன்னபடி நிறைய புதிய பதிவர்களை என்னால் அறிமுகப்படுத்த முடியாததற்கு மன்னிக்கணும். நான் சொன்ன பெரும்பாலான பதிவர்கள் ஏற்கனவே பிரபலமானவங்கதான். சிலரைச் சந்திச்சிருக்கேன், சிலரை இணையம் வழி பழக்கம், சிலர் எனக்குமே புதுசு…

நேரத்தின் மேலதான் பழி போடணும். இதுக்கே அலுவலகத்தில் இங்க கொஞ்சம், அங்க கொஞ்சம்னு நேரம் திருடி (போட்டுக் குடுத்துடாதீங்கப்பா!), இராத்திரி கண்ணு முழிச்சு (இன்னும் தூங்காம என்ன பண்ணிக்கிட்டிருக்க? நாளைக்கு ஆபீஸ் போக வேண்டாமா?), இப்படித்தான் நிறைய எழுதினேன். போன திங்கட்கிழமை எங்களுக்கு விடுமுறையா இருந்தது ரொம்ப உதவியா இருந்தது. அன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் எழுதறதுக்கு செலவழிச்சிருப்பேன். ஆசை இருந்தாலும், நேரமின்மை காரணமாகத்தான் அனைவருடைய பதிவுகளுக்கும் தொடர்ந்து வர முடியறதில்லை. அப்பப்ப வர்றதோட சரி. அதனால தயவு செய்து மன்னிச்சுக்கோங்க!

அதே போல, ஒவ்வொருவரையும் பற்றி, ஒவ்வொருவரின் எழுத்தையும் பற்றி சிந்திக்கிறதுக்கு சாதாரணமா வாய்ப்போ நேரமோ கிடைக்கிறதில்லை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும், என்னையும் நம்பி அதனை ஒப்படைத்த சீனா ஐயா அவர்களுக்கும் மிகவும் நன்றி!

ஒவ்வொரு நாளும் பதிவிட்ட பிறகு தமிழ் மணத்தில் சேர்த்து (பெரும்பாலும் மறந்துடும் எனக்கு), பிறகு சரத்தில் தொடுத்த ஒவ்வொரு பூவிற்கும் வண்டாய்ப் பறந்து சென்று சளைக்காமல் சேதி சொன்ன திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றிகள் பல!

இந்த ஏழு நாட்களும் என்னோடு இருந்து, பொறுமையாக வாசித்து, ஊக்கமூட்டிய அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

நினைவின் விளிம்பில்…’ வலைப்பூவைத் தொடர ஆரம்பித்திருக்கிற புதிய வாசக நண்பர்களுக்கும் மிகவும் நன்றி.

உலகம் சிறியதுன்னு சொல்வாங்க. வலை உலகமும் சிறியதுதான்… நேரம் இருப்பவர்களுக்கு! எப்படியும் எங்கேனும் சந்தித்துக் கொண்டேதான் இருப்போம்... அப்படி மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

வாழ்க வளமுடன்!


அன்புடன்
கவிநயா

19 comments:

  1. வலைச்சரம் தான் நிறைய தளங்களை எனக்கு அறிமுகம் செய்தது வைத்தது... அதற்கு நன்றி என்றும் கடமைப்பட்டுள்ளேன்... நன்றிகள் பல...

    ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. வாழ்த்துகள்.

    ReplyDelete

  3. கரந்தை ஜெயகுமார் சொல்றார்: வாழ்த்துக்கள்.

    கீதா சாம்பசிவம்.சொல்றார்: வாழ்த்துகள்.

    எது ரைட்டு. எது அத்தனை ரைட்டு இல்லை?

    வாழ். அது தான் முக்கியம்.

    உன்னைச் சுற்றியுள்ள மக்கள் மனங்களிலே வாழ்.

    ஏன் எனின் நீயும் நானும்
    ஒரு துகள்.

    கவி நயா வுக்கு ஆசிகள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. நேரமின்மையையும் கடந்து ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி....

    ReplyDelete
  5. ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு நன்றிகள்.
    மீண்டும் சந்திப்போம் கவிநயா.

    ReplyDelete
  6. அருமையாக தொகுத்தளித்தீர்கள். நன்றி கவிநயா.

    ReplyDelete
  7. //கீதா சாம்பசிவம்.சொல்றார்: வாழ்த்துகள்.

    எது ரைட்டு. எது அத்தனை ரைட்டு இல்லை?//


    வாழ்த்துகளிலே "க்"கள் சேர்க்கப்படாது சூரி சார். மயக்கம் வந்துடும். :))))

    வாழ்த்துகள் தான் சரியானது. வாழ்த்து"க்"கள் இலக்கணப்பிழை உள்ள சொல்.

    ReplyDelete
  8. சிறப்பான வாரம். வாழ்த்துகள் கவிநயா.

    ReplyDelete
  9. சிறப்பான வலைச்சரப் பணிகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. இவ்வாரம் பல அறிமுகங்களைத் தந்து சிறப்பித்தீர்கள்.பாராட்டுகள்.

    ReplyDelete
  11. வணக்கம்

    ஒருவார காலமும் சிறப்பாக வலைச்சரப் பணி செய்து இன்றுடன் நிறைவு செய்தமைக்கு எனது நன்றிகள் உதித்தாகட்டும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. நன்றி தனபாலன்! கூடவே வந்ததற்கும் சேர்த்து!

    நன்றி கரந்தை ஜெயக்குமார்!

    நன்றி கீதாம்மா!

    ஆசிகளுக்கும் மிக்க நன்றி, சுப்பு தாத்தா!



    ReplyDelete
  13. நன்றி ஸ்கூல் பையன்!

    நன்றி பார்வதி!

    நன்றி சமுத்ரா! சந்திப்போம்... :)

    நன்றி திரு.கைலாஷி!

    நன்றி Seeni!


    ReplyDelete
  14. நன்றி ராமலக்ஷ்மி!

    நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா!

    நன்றி மாதேவி!

    நன்றி ரூபன்!

    ReplyDelete
  15. சிறப்பான ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் தளத்தின் மூலம் சந்திப்போம்.....

    ReplyDelete
  16. நன்றி வெங்கட்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது