07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 10, 2014

கோலங்கள்.....


வலைச்சரம் – 2 மலர் - 5

மார்கழி மாதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அந்த அதிகாலை பனியும், திருப்பாவை நாயகி ஆண்டாள், திருவீதி உலா வரும்போது சுடச்சுட கிடைத்த பொங்கல் மற்றும் கோலங்கள்!இன்றைய வலைச்சரப் பகிர்வும் மார்கழி மாதத்தின் ஒரு நாளில் என்பதால் கோலங்கள் பற்றிய தளங்களை அறிமுகம் செய்யலாம் என்று நினைத்தேன். 

தென்னிந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கோலங்களால் வீட்டுக்கு மங்களமும், லட்சணமும், அதைப் போடுவதால் நம் கைகளுக்கு பயிற்சியும் கிடைக்கிறது. அரிசி மாவினால் கோலம் போடும்போது அந்த மாவு, எறும்பு போன்ற சிறிய ஜீவன்களுக்கு உணவாகவும் அமைகிறது. புள்ளிக் கோலம், ரங்கோலி, சிக்கு கோலம் என்ற வகைகளுக்கா பஞ்சம். வெளிநாட்டவர்களும் நம்முடைய கோலங்களை பார்த்து வியந்து போகின்றனர்.  வாங்க இன்று கோலங்களைப் பற்றி நம் பதிவர்கள் என்னென்ன எழுதியிருக்காங்க என்று பார்க்கலாமா?

ஆலோசனை என்ற வலைப்பூ வைத்திருக்கும் பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் கோலம் போட வேண்டியதின் அவசியத்தையும், கோலங்களின் வகைகள், பூஜைக்கான கோலங்களும் அதன் பலன்களும் என இளைய தலைமுறைக்கு நல்ல கருத்துக்களை சொல்லி எடுத்துரைத்திருக்கிறார். நீங்களும் சென்று பாருங்களேன் அவரின் கோலங்கள்

மகி அவர்களின் கோலங்கள் கோலங்கள் பதிவைப் பாருங்களேன் - அவங்களுடைய கோலம் தொடர்பான மலரும் நினைவுகளைச் சொல்றாங்க.. ஊருக்கு வரும் போது ஆசை தீர கோலம் போடுவாங்களாம். எழுதியது மட்டுமல்லாது கண்களுக்கு விருந்தாக கோலங்களின் படங்களையும் பகிர்ந்திருக்காங்க!

ஸ்ரவாணி அவர்களின் தமிழ்க் கவிதைகள் தங்கச்சுரங்கம் என்ற தளத்தில் ஸ்ட்ரோக் கோலங்கள் போட்டு கண்களைக் கவர்ந்திருக்கிறார். படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு! அதே போல் மார்கழி கோலங்கள் என்ற பகிர்வையும் பாருங்கள்.  அவர் போட்டிருக்கும் கோலங்களை உங்கள் வீட்டு வாசலில் போட்டு நீங்களும் முயற்சித்து பார்க்கலாமே!


தேனம்மை லக்ஷ்மணன் அவர்களைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர் ஒரு சகலகலாவல்லி. இவருடைய கோலங்கள் தளத்தில் பத்திரிக்கைகளில் வெளியாகும் இவரது கோலங்களை பதிந்து வைத்திருக்கிறார். அந்தந்த பூஜை பண்டிகைகளுக்கேற்ற கோலங்கள் இங்கு உள்ளன.

மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களின் மகிழ்நிறை என்ற தளத்தில் கோலம் பற்றிய அவரது அனுபவங்களை எப்படி பகிர்ந்து உள்ளார் பாருங்களேன்!

பெண்மை என்ற தளத்தில் வாணி முத்துகிருஷ்ணன் அவர்களின் கோலங்கள் கண்களைக் கவர்கின்றன. கண்ணாடியில் பெயிண்ட் செய்தது போல் உள்ளது. செய்து வீட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கவரலாமே!

நீச்சல்காரன் அவர்களின் எதிர்நீச்சல் என்ற தளத்தில் பாரத பண்பாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய கோலங்களை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாருங்களேன்!

விஜிகுமாரி அவர்களின் சின்னு ஆதித்யா என்ற தளத்தில் கோலங்கள் போடுவதன் ரகசியத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வீட்டுக்கு மட்டும் அழகல்ல, நம் கைகளுக்கும் நல்ல பயிற்சியாக அமையும் என்கிறார்.

அம்மாவின் சமையல் என்ற தளத்தில் சமையல் மட்டுமல்ல பல ரங்கோலிகளும் இடம்பெற்றுள்ளன.

என்ன நண்பர்களே, இன்றைய வலைச்சரத்தில் வெளியிட்ட கோலங்களையும், அந்த பதிவர்களின் பதிவுகளையும் ரசித்தீர்களா!

நாளை மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


43 comments:

 1. ஆதி,

  மார்கழி மாதத்திற்கேற்ற இன்றைய கோலங்கள் பதிவும் அருமை. பாராட்டுக்கள். இன்று அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். நேரமிருக்கும்போது எல்லா பதிவுகளுக்கும் சென்று வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...

   Delete
 2. அழகான கோலம் , உங்கள் கைவண்ணம் அருமை.
  இன்று இடம் பெற்ற அனைத்து பகிர்வும் மிக அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  உங்கள் கோலத்தையும், பதிவர்களின் கோலத்தையும் ரசித்தேன்.வாழ்த்துக்கள் ஆதிவெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. அது தில்லி தமிழ்ச் சங்கத்தில் போட்டிருந்த கோலம்...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 3. வணக்கம்
  இன்று கோலங்கலள் பற்றிய பதிவு மிக நன்றாக உள்ளது... வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. எல்லோர் தளங்களுக்கும் சென்று தகவல் தந்ததற்கு நன்றி...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்...

   Delete
 4. அனைத்தும் அருமையான அழகான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எல்லோர் தளங்களுக்கும் சென்று தகவல் தந்ததற்கு நன்றி..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...

   Delete
 5. வணக்கம்

  இன்று அறிமுகம் செய்த தளங்களில் 2 புதிய தளங்கள் அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்.
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்...

   Delete
 6. இந்தக் கோலசுரபி செயலியை மார்கழி மாதத்தில் பலருக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நீச்சல் காரன்...

   Delete
 7. அழகான அற்புதமான பதிவுகள்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...

   Delete
 8. அழகுக்கோலங்களாய் அருமையான தளங்களின் அறிமுக்ங்கள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 9. இனிய, இளைய நண்பர் உதயன் அவர்களும் கோலத்தில் நிபுணர். சமீபகாலமாக அவர் தளம் திறப்பதில்லை. http://udhayam.in// இவரைக் குறித்து என் வலைச்சரப் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். :)))) உங்கள் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! தகவலுக்கு நன்றி மாமி..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

   Delete
 10. என்னுடைய கோலங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆதி வெங்கட் அண்ட் வலைச்சரம் சீனா சார். Chidambaram Kasiviswanathan நன்றி ரூபன் . Dindugal Dindigul Dhanabalan sir

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை மேடம்..

   Delete
 11. வலைச்சர ஆசிரியருக்கும் அறிமுகபடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! நிறைய தளங்கள் புதுசு அவசியம் பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. சென்று பார்த்து கருத்திடுங்கள்..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேனகா...

   Delete
 12. பொங்கல் பண்டிகைக்காக கோலம் தேடனும்ன்னு நினைச்சுக்கிட்டே கம்ப்யூட்டரில் உக்காந்தா கோலம் பற்றிய உங்க பகிர்வு வந்து கைக்கொடுத்து என் வேலையை சுலபமாக்கிட்டுது. பகிர்வுக்கு நன்றி ஆதி!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு இந்த பதிவு பயன்பட்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராஜி...

   Delete
 13. என்னுடைய தள அறிமுகத்திற்கும் ஏனைய அழகான
  கோல வலை அறிமுகங்களுக்கும் என் நன்றிகளும்
  வாழ்த்துக்களும். இதை அன்புடன் வந்து தளத்தில்
  அறிவித்த தலைகள் DD சகோ மற்றும் ரூபன்
  சகோவிற்கு என் வணக்கங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி மேடம்..

   Delete
 14. அழகுக்கோலங்களாய் ஐந்தாம் நாளும் அருமையாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 15. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

  ReplyDelete
 16. அழகுக் கோலங்களை அருமையாக அறிமுகம் செய்த தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்..

   Delete
 17. மார்கழி மாதத்தின் மகத்துவத்தை பறைசாற்றும் தங்களது கோலங்கள் பற்றிய பதிவில் எனது பெயரும் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...
  வலைச்சரம் ஆசிரியர் பொருப்பேற்றமைக்கு எனது வாழ்த்துகளையும் என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
  வாழ்த்துக்கள் தோழி..!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க மைதிலி..

   Delete
 18. kகோலங்களின் கோலம் அழகாயிக்கிரது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

   Delete
 19. அழகாயிருக்கிரது திருத்தி வாசிக்கவும். அன்புடன்

  ReplyDelete
 20. அறிமுகத்துக்கு நன்றிங்க ஆதி! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நிறையத் தளங்கள் எனக்குப் புதியவை, நேரம் அனுமதிக்கையில் நிச்சயம் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மஹி..

   Delete
 21. 'ஆலோசனை' வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.. தங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது!.. எனக்குத் தகவல் தெரிவித்த திரு.ரூபன், திரு.திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பார்வதி மேடம்...

   Delete
 22. அழகழகான கோலங்களை கண்டு ரசித்தேன். மார்கழி மாதத்தில் இத்தனை கோலங்களைக் கண்டு ரசித்தது மனதிற்கு மகிழ்வையும், கண்களுக்கு குளிர்ச்சியையும் கொடுத்தது.
  நன்றி ஆதி!

  ReplyDelete
 23. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது