07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 29, 2014

பதிவுலகில் என்னைக் கைப்பிடித்துக் கூட்டிச்சென்றவர்கள்..திவுலகில் நான் மிகச்சிறியவன். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பதிவெழுத ஆரம்பித்தேன். அதாவது பதிவுலகில் தவழ ஆரம்பித்தேன். அதற்கு முன்பு வாசிப்பனுபவம் நிறைய இருந்தாலும், எழுதுவதற்கு வெறும் வாசகனாக இருந்தால் போதாது என்பதை உணர ஆரம்பித்த தருணம் அது.

பள்ளிப்பருவத்தில் நிறைய கதைகள் படிப்பேன். இலக்கியம் சார்த்த புதினங்கள் கூட படித்திருக்கிறேன். தெருவில், சாலையில் பொட்டலம் மடித்த பேப்பர் கிடந்தாலும் அதை அங்கேயே எடுத்து ஆர்வமாக படிக்கும் அளவுக்கு வாசிப்பு வெறி.

ஆனால் வீட்டில், நீ பெரிய டாக்டராவோணும், எஞ்சினியராவோணும் என்று கிராமச் சூழலில் வளர்ந்த என்னை படி.. படி.. என்று என் பெற்றோர் டார்ச்சர் கொடுத்ததால், வாசிப்புப் பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பித்தேன். அடுத்த பத்து ஆண்டுகளில் வெறும் குமுதம், விகடனோடு என் வாசிப்புப் பரப்பு சுருங்கிப்போனது.

வலைப்பூ எழுத ஆரம்பித்த பொழுதான் தமிழ் இலக்கிய சூழலிருந்து நான் எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறேன் என்பதை உணர முடிந்தது. திரும்பவும் எனக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த கூகுள் ஆண்டவருக்கு நன்றி..

எந்த எழுத்தாளர்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. சுஜாதாவின் தீவிர வாசகன். சாரு, ஜெ.மோ .எஸ்.ரா நாவல்களையும் படிப்பேன். ஜெ.மோ வின் எழுத்து இலக்கியத்தின் உச்சம். எஸ்.ரா வாழ்வியல் நடைமுறைகளைப் பற்றி அழகாக எழுதக் கூடியவர். சாரு எதார்த்தத்தை எழுதுவார். அவர் தீர்க்கத்தரிசி .

இலக்கியவாதிகளின் சண்டையை தூரத்திலிருந்து பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ரா வை அவன் இவன் என்று திட்டித்தீர்த்த சாரு, சமீபத்திய புத்தகத் திருவிழாவில் சிரித்துப் பேசிக்கொண்டிருக் -கிறார். அதனால், அவர்களின் எழுத்தை மட்டும் ரசிப்போம்.

போகட்டும்...

ன்னதான் வாசிப்பனுபவம் இருந்தாலும் எழுத்து என்று வரும்போது ஆரம்பத்தில் தடுமாறத்தான் செய்தது. ஐந்து ஆறு வார்த்தைகளுக்கு மேல் ஒரு வாக்கியத்தைக் கோர்க்கக் கஷ்டப்படுவேன். என் ஆரம்பகாலப் பதிவு அப்படித்தான் இருக்கும். நிறைய பதிவுகளை நீக்கிவிட்டேன்.

இப்படி மனம்போன போக்கில் கிறுக்கிக் கொண்டிருந்த நான், ஓரளவு எழுத ஆரம்பித்தது லக்கிலுக் யுவா வின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தப் பின்புதான். என்னவொரு மொழிநடை அவருக்கு..! நீண்ட நெடிய ஊடக அனுபவங்கள் இருந்தாலும் வசப்படுத்தும் எழுத்துநடை அமைவது ஓர் வரமல்லவா..? ஒரு சாம்பிள். ரீங்காரம் ஒரு விசயமும் இல்லாமல் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதமுடியுமா என்று நான் ஆச்சர்யப்பட்ட பதிவு.

மாசி படத்தின் சினிமா விமர்சனம் எழுதியிருப்பார். அதில் கடைசியாக இப்படிக் குறிப்பிட்டிருந்தார். // விளங்காத பயல்களை பெற்ற அப்பாக்கள் சொல்வார்களே “இந்த தறுதலை பொறப்பான்னு தெரிஞ்சிருந்தா, அன்னிக்கு நைட் ஷோ போயிருக்கலாம்”. அப்படிக்கூட போகமுடியாத படமிது :-( //  . ஒரு படம் மொக்கை என்றால் இப்படியெல்லாம் விமர்சனம் எழுதமுடியுமா என்று ஆச்சர்யப்பட்ட பதிவு.  நான் விமர்சனம் எழுதுவதற்கு உந்துதல் யுவா தான். பதிவுலகில் ஒரு ஆசானாக அவரை நினைக்கிறேன்.

 ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

அடுத்தது செங்கொவி. இவர் எனது இன்னொரு ஆசான்.. இவரது " நானா யோசிச்சேன்.." நான் சிலாகித்து படிக்கும் பதிவுகளில் ஒன்று. மிக எளிமையான வார்த்தைகளைப் போட்டு கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கில்மா கலந்து எழுதுவார். இதைத் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம். தற்கொலைக் குறுங்கதைகளே சக்கைப்போடு போடும்போது 'நானா யோசிச்சேன்' நிச்சயமாக பட்டையக் கிளப்பும். நான் கூட இதே மாதிரி சும்மா அடிச்சு விடுவோம்   என்று எழுத முயற்சித்தேன். ஆனால் இன்னும் நான் வளரனும் போல.

தமிழ்ஸ்ஸ்.காமில்..  தமிழில் ஒரு உலக சினிமா! –இதுவும் புத்தகமாக வெளிவரவேண்டிய படைப்பு.

ஒரு காலத்தில் தமிழ்மணத்தில் சென்னியாருக்கு கடும் போட்டி கொடுத்தவர். சினிமா, இலக்கியம், அரசியல் எல்லாம் விரல்நுனி. சமீபத்தில் இவரது மன்மத லீலைகள் மின்புத்தகமாக வெளியாகி தரவிறக்கத்தில் சாதனைப் படைத்தது. சென்ற வாரம் ஓர் நாள் நள்ளிரவில் படிக்க ஆரம்பித்தேன். ஏன்டா படிக்க ஆரம்பித்தோம் என்றாகிவிட்டது. மொத்தமாக மூன்று மணிநேரம் விழுங்கி விட்டது. அவ்வளவு சுவாரஸ்யம். படித்து முடித்துவிட்டுத்தான் படுத்தேன். இவரது பதிவுகளை தனியாகக் குறிப்பிட்டு எதுவும் சொல்லமுடியாது. அத்தனையும் படித்து ரசிக்க வேண்டிய பதிவுகளே..இருந்தாலும் ஒரு சில பதிவுகளைக் குறிப்பிடுகிறேன்.

முந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)

 தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?

சின்னத்தம்பி(18+) விமர்சனம் எழுதியிருப்பார். அதைத் தற்போது காணோம்.

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

நகைச்சுவைப் பதிவுகள் எழுத வேண்டுமென்றால் முதலில் நாம் ஜாலியான மூடுக்கு வரவேண்டும்.  நிறைய நேரங்களில் ஜாலியானப் பதிவுகள் எழுதும்போது மூட்அவுட் ஆகிவிட்டேன் என்றால் உடனே மாத்தியோசி மணி அவர்களின் வலைப்பூவிற்கு செல்வேன். எப்படித்தான் இவ்வளவு நகைச்சுவையாக எழுதுகிறார் என்று தெரியவில்லை. நான் பொறாமைப்படும் பதிவர். எல்லாமே நகைச்சுவைப் பதிவுகள் தான். சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

மன்னிக்கவும் அவர் வலைப்பூவில் ஏதோ பிரச்சனைபோல... திறக்க முடியவில்லை.

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

பிலாசபி பிரபாகரன். பதிவுலகில் என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பதிவர். நிறைய பதிவுகள் ரசித்திருக்கிறேன். அதில் நெகிழவைத்த பதிவு இது.
  
மீண்டும் லியோ...!

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

திடங்கொண்டு போராடு சீனு மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர். ஆரம்பக் கட்டத்தில் வெறும் சிறுகதைகள் மட்டுமே எழுதுவார். அனைத்தும் வார இதழ்களில் பிரசுரமாகும் அளவுக்கு நேர்த்தியானது. தற்போது ஏனோ எழுதுவதில்லை. அதில் சில ...

திருவிழாக்களும் தீபிகாக்களும்...

ஸ்ரீராமனும் சீனுவும் நித்தியானந்தாவும் ... 


  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

தமிழ்வாசி பிரகாஷ் எழுதிய எதார்த்தமான பதிவு..பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?. குமுதம் ரிப்போர்ட்டரில்  பிரசுரமானதாக நினைவு. 

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

சகோ. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி மலேசியாவிலிருந்து எழுதும் பதிவர் . நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இவரது தளம் "கடல் நுரைகளும் என் கவிதையும் ...". மலேசிய தமிழ் அச்சு ஊடகங்களில் அவ்வப்போது எழுதுவார். சொல்ல வந்த விஷயத்தை மிகத் தெளிவாக, அழகான மொழி நடையில் சொல்வது இவரது பலம். மற்றவர்கள் தொடத்தயங்கும் விசயத்தைத் துணிச்சலாக எழுதக்கூடியவர். நல்ல எழுத்துநடை. இலக்கிய நெடி தூக்கலாக இருக்கும்.ஆனால் ஏனோ எந்தத் திரட்டியிலேயும் இணைப்பதில்லை. அவரது சில பதிவுகள்..

மாதவிடாய்....

 எனக்கு ஒரு கண் என்றால்....!!!?

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

 மாணவன் சிம்பு .. இவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். டெர்ரர் கும்மி குழுவைச்சேர்ந்தவர். ஏற்கனவே வலைச்சர ஆசிரியராக இருந்தவர். சிங்கையில் உள்ள வானொலியில் (ஒலி 96.8) 'வானம் வசப்படும்' என்ற நிகழ்ச்சி முன்பு ஒலிப்பரப்பாகும். ஒவ்வொரு நாளும் அன்று பிறந்த உலக சாதனையாளர்களைப் பற்றி ஐந்து நிமிடத்திற்கு பேசுவார்கள். அதைச் சொல்பவரின் வாய்ஸ் மாடுலேஷன், பின்னணி இசை, சுவாரஸ்யமான விசயங்கள் எல்லாம் சேர்ந்து கேட்பதற்கு அற்புதமாக இருக்கும். அதைத்தொகுத்து மேலும் சில தகவல்களைச் சேர்த்து தன் எழுத்து நடையில் அற்புதமாக எழுதிவருகிறார் சிம்பு. மின்புத்தகமாகவும் வந்திருக்கிறது. தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

டி.என்.முரளிதரன் ஆரம்பத்தில் கவிதை எழுதுவதில்தான் இவர் கில்லாடி என நினைத்தேன்.. ஆனால் அறிவியல் சம்மந்தமான விசயங்களையும் தக்க உதாரணங்களோடு நிரூபிப்பதில் பலே கில்லாடி என்பதை நிறைய பதிவுகள் எழுதி நிரூபித்திருக்கிறார்.

அதில் முக்கியமானது- இன்று (செப் 22) ஒரு அதிசய நாள்  

கடந்த வருடம் பிளாக்கரில் blogspot.com / blogspot.in பிரச்சனை வந்தபோது என் வலைப்பூ .com லிருந்து .sg யாக மாறிவிட்டது. அதனால் தமிழ்மணத் திரட்டியில் இணைக்க முடியவில்லை.அப்போது அதற்கான தீர்வை பதிவாக இவர் வெளியிட்டிருந்தார். சமீபத்தில் என் நண்பர் ஒருவருக்கு இந்தப் பிரச்சனை வந்த போது இந்தப் பதிவைத்தான் அவருக்கு அனுப்பி வைத்தேன்.முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்?   

 ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

பேஸ்புக்கில் அவளதிகாரம் என்ற தலைப்பில் கவிதையாக எழுதி கலக்குவார் வசந்த் கந்தசாமி. சிங்கப்பூர் வாசி. தனியாக வலைத்தளமும் தொடங்கியிருக்கிறார். எனக்கு கவிதை என்றாலே அலர்ஜி. ஆனால், ஏனோ இந்தக் கவிதை என்னை அவ்வளவு பாடுபடுத்திவிட்டது. ஒவ்வொரு வரியையும் அனுபவித்து ரசித்து செதுக்கியிருப்பார்.

முதல் ஸ்பரிசம் அது!

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

 

இன்னும் தொடரும்...

உங்கள் பின்னூட்ட  ஆதரவுக்கு மீண்டும் நன்றி...
 
அன்புடன்...

 மணிமாறன்.

47 comments:

 1. அன்பின் மணிமாறன்..
  அறிமுகம் செய்யப்பட்ட தளங்கள் சிறப்பு!..
  அறிமுக தளங்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. முதல் கருத்துக்கு மிக்க நன்றி சார்..

   Delete
 2. //அடுத்தது செங்கொவி. இவர் எனது இன்னொரு ஆசான்.. //

  பாஸ்..இது ஓவர்..அடியேன் சாமானியன்!

  ReplyDelete
  Replies
  1. பாஸ்.. இது உண்மைதான். உங்கள் பதிவுகளைப் படித்தப் பிறகு நிறைய மாற்றிக்கொண்டேன்..

   Delete
 3. //ஒரு காலத்தில் தமிழ்மணத்தில் சென்னியாருக்கு கடும் போட்டி கொடுத்தவர். // அது தற்செயலாக இருக்கலாம்..அப்புறம் என் வழி வேற, தமிழ்மணம் ரேங்க் வழி வேறன்னு தெரிஞ்சதால விலகிட்டேன்..உங்களுக்கே தெரியும்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் . அது என்ன பிரச்சனையென்று தெரியும். ஆனால் தமிழ்மணத்தில் இருந்தவரை நீங்கள் அங்கு' கிங் 'ஆக இருந்தீர்கள் என்பதும் தெரியும்.

   Delete
 4. //இவரது பதிவுகளை தனியாகக் குறிப்பிட்டு எதுவும் சொல்லமுடியாது. அத்தனையும் படித்து ரசிக்க வேண்டிய பதிவுகளே..//

  உங்களை மாதிரி எழுதத் தெரிஞ்சவங்களே பாராட்டியதில் சந்தோசம்ணே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்..இது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் உண்மைதானே...

   Delete
 5. //நான் கூட இதே மாதிரி சும்மா அடிச்சு விடுவோம் என்று எழுத முயற்சித்தேன். //

  அதை படிக்கும்போது எனக்கும் தோன்றும், நம்ம ஸ்டைல்லயே இருக்கேன்னு. ஆனாலும் கேட்டா, தப்பா நினைச்சிடுவீங்களோன்னு கேட்கலை.

  ReplyDelete
  Replies
  1. ஹி..ஹீ.. ஆனால் நானா யோசிச்சேன் அளவுக்கு அது வரவில்லை.

   Delete
  2. எனக்கு வித்தியாசம் தெரியவில்லை..இன்னும் சொல்லப்போனால், நான் எழுத நினைக்கும் விசயத்தை முந்திக்கொண்டே நீங்கள் எழுதியதால், நான் எழுத முடியாமல் போனதும் உண்டு!

   Delete
  3. அப்படியெல்லாம் கிடையாது தல... என் ஒரு பதிவு போல மற்றொரு பதிவு சுவாரஸ்யம் இருக்காது. எல்லா பதிவுகளையும் சுவாரஸ்யமாக எழுத உங்களால்தான் முடியும்

   Delete
 6. அருமையான வலைப்பதிவர்களை
  அறிமுகம் செய்ததில் இருந்தே தங்கள்
  வாசிப்பின் வீச்சைப் புரிந்து கொள்ளமுடிகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா..

   Delete
 7. அறிமுகமான பலரும் மூத்தவர்கள் சிறப்பானவர்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனிமரம்

   Delete
 8. என் போன்ற சின்னவர்களுக்கும் ஆசானாக இருந்து வழிகாட்டுவது ஐயா செங்கோவி. அவருக்கு நிகர் அவரே தான் !

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் .நன்றி

   Delete
 9. செங்கோவியின் தளத்தில் கும்மிய காலங்கள் வசந்தகாலம் .எப்போது அவரின் பதிவு வரும் என்றும் முதலில் பின்னூட்டம் இடுவதுக்கும் கூடிய நண்பர்கள் பலர் !

  ReplyDelete
  Replies
  1. அந்தக் காலங்களை நான் மிஸ் பண்ணி விட்டேன்...

   Delete
 10. அனைத்தும் அருமையான தளங்கள்...

  வசந்த் தங்கசாமி அவர்களின் அவளதிகாரம் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. எனது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி மணிமாறன். குறிப்பிட்ட அனைத்து வலைப் பக்கங்களும் சிறப்பானவை . தகவல் தெரிவித்த துரைசெல்வராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாஸ்

   Delete
 12. பிரபல பதிவர்களின் சில பதிவுகளை விமர்சனத்தோடு குறிப்பிட்ட விதம் சுவையோ சுவை!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்

   Delete
 13. Replies
  1. மிக்க நன்றி சகோ.

   Delete
 14. ஆனால் ஏனோ எந்தத் திரட்டியிலேயும் இணைப்பதில்லை. // எப்படி இணைந்து கொள்வது என்பது தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. சகோ... இந்த லிங்கில் சென்று பாருங்கள். http://www.vandhemadharam.com/2012/02/url.html

   Delete
 15. முக்காலும் தெரிந்த பதிவர்கள்தான், சிலரை இனிதான் போயி பார்க்கனும், யாவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மனோ..

   Delete
 16. வணக்கம்ணே,
  மாணவன் வலைத்தளத்தை உங்கள் மூலம் அறிமுகபடுத்தியதற்கு நன்றிண்ணே.. தொகுத்தளித்த மற்ற பதிவுகளும் சிறப்பானவை தொடர்ந்து கலக்குங்க..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சிம்பு ...

   Delete
 17. //மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்.// அவ்வ்வ்வ்வ்வ்வ் இது உண்மைதானா ! :-)

  //வார இதழ்களில் பிரசுரமாகும் அளவுக்கு நேர்த்தியானது.// இதுவே ஒரு வார இதழில் பிரசுரமானதற்கு இணையான மகிழ்ச்சி தருகிறது சார்...

  //தற்போது ஏனோ எழுதுவதில்லை. // எழுதுகிறேன் ஆனால் குறைந்த அளவிலேயே எழுதுகிறேன், சிறுகதைக்கான வாசகர்கள் இணையவெளியில் மிக குறைவு அல்லது ஆரம்ப கால எழுத்தாளனுக்கு மிக குறைவு

  என்னையும் என் பதிவுகளையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. சீனு ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய கதைகள் எல்லாம் செம...

   //வார இதழ்களில் பிரசுரமாகும் அளவுக்கு நேர்த்தியானது.//

   இதை ஏற்கனவே உங்கள் வலைப்பூவில் தெரிவித்திருக்கிறேன்

   Delete
 18. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மேடம்...

   Delete
 19. அறிமுகமான நண்பர்கள் சிலர் இருப்பது குறித்து மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள் அழகான தங்கள் அறிமுகத்தில் அறிமுகப்பதிவர்கள் மகிழ்ந்து போவார்கள்..

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக...உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மேடம்...

   Delete
 20. சிலர் நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் எழுதுபவர்கள் சிலர் தெரியாதவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்

   Delete
 21. அருமையான பதிவர்கள்! சிறப்பான தள அறிமுகம்! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

  ReplyDelete
 22. ஆம்... அந்தப் பதிவு குமுதம் ரிப்போர்ட்டரில் வந்தது... குறிப்பிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி...


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தமிழ்வாசி பிரகாஷ்..

   Delete
 23. மிக்க நன்றிங்க. சந்தோசமா இருக்கு. வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது