07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 13, 2014

சுபத்ரா பேசுறேன்

            

வணக்கம்! இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் மூலமாக உங்களிடம் நான் தான் பேசப் போகிறேன். என்னுடைய வலைத்தளம் ‘சுபத்ரா பேசுறேன்’. ‘பேசு’றதுன்னா இந்தப் பொண்ணுக்கு ரொம்ப இஷ்டமோ என நீங்கள் நினைப்பது புரிகிறது. நான் நிஜத்தில் மிகவும் அமைதியான(?) பெண். அதனால் பேசாத வார்த்தைகளை எல்லாம் என் ப்ளாகில் பதிந்து வருகிறேன் :-)

            முதலில், சீனா அய்யாவுக்கு மிக்க நன்றி! நாம் ரசித்துச் செய்தால் கூட ஒரு ப்ளாகில் தொடர்ந்து எழுதுவதே எவ்வளவு சிரமமாக இருக்கிறது? ஆனால் ‘வலைச்சர’த்தை முறையாக வாராவாரம் ஒருத்தரிடம் ஒப்படைத்து அவரை அறிமுகம் செய்துவைத்து அவர்மூலம் மற்ற பதிவர்களையும் பதிவுலகத்துக்கு அறிமுகப்படுத்துவது ஒன்றும் சாதாரண வேலையல்ல. அவரையும் அவரது உழைப்பையும் அன்பையும் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். இப்போது என்னைப் பற்றிய ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

            2008 வாக்கில் எனக்கு ப்ளாக் அறிமுகமானது. ஆனந்த விகடன் மூலமாக. அப்போது எனக்குத் தெரிந்தது ‘இட்லிவடை’ ப்ளாக் மட்டுமே. அதன் பதிவுகளையும் அவற்றுக்கு வரும் பின்னூட்டங்களையும் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் நாமும் நமக்கென்று தனியாக ஒரு ப்ளாக் தொடங்கினால் என்ன என்று தோன்றியது. 2010 இல் இட்லிவடையை மாதிரியே ஒரு அனானிமஸ் ப்ளாகை உருவாக்கி வெறும் கவிதைகள்(?) மட்டும் எழுதிவந்தேன். அந்தத் தளம் சிலமுறை பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது ‘நிலவே முகம் காட்டு’ என்ற பெயரில் இயங்கி வருகிறது.

            கவிதை மட்டும் எழுதினால் போதுமா? கதை எதிலே எழுதுவது :-) எதிலே மொக்கை போடுவது போன்ற சிக்கல்கள் வந்ததால் ‘சுபத்ரா பேசுறேன்’ உருவானது. முதல் ப்ளாக் உருவானபோதே என்னைப் பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்துவைத்து ‘நானும் ரவுடி தான்’ என்று ஜீப்பில் ஏற்றிவிட்டது நம் வலைச்சரம் தான். அதற்கு அப்புறம்தான் ‘தமிழ்மணம்’, ‘இண்ட்லி’ போன்ற வலைதிரட்டிகளும் எனக்கு அறிமுகம். அப்போது ஒரு ப்ளாக்கர்ஸ் கூட்டமே என்னை உற்சாகப்படுத்தியது. அந்தக் கூட்டத்தில் பலர் இப்போது ‘டெர்ர் கும்மி’யில் இருக்கின்றனர் :-)

            எனக்குப் பிடித்த எனது பதிவுகளைப் பார்ப்போமா? இட்லிவடை ப்ளாகில் வெளிவந்த எனது கட்டுரை இந்தியாவின் ஒரு பகுதி குஜராத்அதுக்குக் கிடைத்த பின்னூட்டங்களும் அதன்பின் என் ப்ளாகுக்குக் கிடைத்த வாடிக்கையாளர்களும் நான் தொடர்ந்து ப்ளாக் எழுத காரணமாக அமைந்தன என்று சொல்லலாம். என்னுடைய மற்ற பதிவுகளைப் படிக்க அங்கேயே ‘சுபத்ரா’ என்று ஒரு லேபிள் இருக்கிறது. படித்துவிட்டு அவசியம் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

            அதுபோக, தற்செயலாக என் ப்ளாகுக்காக நான் எழுதிய ஒரு சிறுகதை ‘டெர்ர்கும்மி’ சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றபோது மிகவும் மகிழ்ந்தேன். நம் எழுத்துக்குக் கிடைக்கும் ஓர் அங்கீகாரத்துக்கு முன் வேறெதுவும் ஈடாகுமா? அந்தக் கதை ‘இங்கே’ இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கதை.

            முகநூலில் ‘சாருநிவேதிதா-விமர்சகர் வட்ட’த்திலிருந்து ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினார்கள். அதற்காக நான் எழுதியதுதான் ‘இந்தக் கதை’. நடுவர்கள் இதற்கு மூன்றாம் தரம் கொடுக்க, ‘லைக்ஸ்’ அதிகமானதால் முதலிடத்துக்கு வந்தது. அதுவும் எனக்குக் கிடைத்த மற்றுமோர் அங்கீகாரம்.

            திடம்கொண்டு போராடு ப்ளாகின் சொந்தக்காரர் சீனுவை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எங்க ஊர்க்காரர் தான். அட்டகாசமான ஒரு போட்டியை நடத்தினார். ‘காதல் கடிதம்’ பரிசுப் போட்டி. போட்டியில் கலந்துகொண்ட கதைகளை வைத்துப் பல படங்களை இயக்கலாம். அவ்வளவு அழகான களங்கள். அந்தப் போட்டியிலும் முதல் பரிசு வென்றதை நினைத்து மிகவும் மகிழ்ந்தேன். அந்தக் கடிதம் இங்கே.

            நிறைய பதிவுகள் எழுதினாலும் மேலுள்ள பதிவுகள் என் ப்ளாக் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை. இவை போக, என் ப்ளாகில் நீங்கள் ‘மிஸ்’ பண்ணவே கூடாத பதிவு என நான் நினைப்பது தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா? என்ற என் பதிவு. அவசியம் அதை எல்லோரும் படிக்க வேண்டுகிறேன். அதனோடு தொடர்புடைய மற்ற பதிவுகள் இங்கே இருக்கின்றன.

            காதல் கவிதைகளுக்கென நிலவே முகம் காட்டு இருப்பதால் மற்ற கவிதைகளை என் ப்ளாகிலேயே எழுதிவருகிறேன். அவை இங்கே இருக்கின்றன. பிடித்திருந்தால், நேரமிருந்தால் என்னுடைய மற்ற பதிவுகளையும் படித்துவிட்டுக் கருத்திடுங்கள் நண்பர்களே!

            பரீட்சை இருந்ததால் வேண்டுமென்றே ப்ளாக் பக்கம் வராமலிருந்தேன். கடைசியாக என் ப்ளாகில் எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவராததால் அந்த ‘டென்ஷன்’ இன்னும் குறையவில்லை :-) இப்போது வலைச்சரம் மூலமாக ஒரு மாறுதல் கிடைத்துள்ளது.


            வரும் நாட்களில் தமிழில் எழுதப்பட்டுவரும் பல வலைத்தளங்களைப் பற்றியும் வலைப்பதிவர்களைப் பற்றியும் பார்க்கலாம். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன். உங்கள் அருமையான நேரத்தை ஒதுக்கி என் பதிவுகளைப் படிப்பதென்பது சும்மாவா

36 comments:

 1. அன்பின் சுபத்ரா - சுய அறிமுகப் பதிவு அருமை- பல்வேறு பதிவுகளீன் சுட்டிகள் - அனைத்தையும் அனைவரும் படிக்க வேண்டும் -எத்தனை பரிசுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. வலைச்சரம் மூலம் உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அருமை.வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நான் உங்கள் வலைத்தளத்தை முன்பே படித்து வருகிறேன். நன்றி!

   Delete
 3. வாருங்கள் சுபத்ரா,

  சுய‌ அறிமுகம் நன்று. உங்கள் பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன். மேலும் நீங்கள் எழுதியுள்ள தேர்வில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சித்ரா சுந்தர்!

   Delete
 4. சுய அறிமுகம் நன்று... ‘டென்ஷன்’ இல்லாமல் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வலைச்சர வருகைக்கும்
  பலமுறை பரிசுகள் போட்டியில் வென்றதற்கும் இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 6. ஆஹா இவ்ளோ பெரிய இலக்கியவாதிய நம்ம பதிப்பகத்தார்கள் இத்தனை நாட்களாக சும்மாவா விட்டுவைத்தார்கள்? சீக்கிரமே ஃபேஸ்புக் மூலமாகவே உங்கள் புத்தகம் விற்றுத்தீர்ந்து நீங்களும் புகழ்பெற்ற எழுத்தாளராக வாழ்த்துக்கள் :P

  ReplyDelete
  Replies
  1. தல நீங்க இருக்கும் போது நான் புத்தகம் வெளியிடலாமா :)))

   Delete
  2. ராம்குமார் கூறியதை வழிமொழிகிறேன்.. ராம்குமாருக்கு நீங்கள் கூறியதை ஆமோதிக்கிறேன் :-)))))

   Delete
  3. இதுக்கு பேர் தான் குரூப்பாக ஓட்டுறதோ? ஆனா இந்த சைடு கேப்புல நைஸா நம்ம சீனு ஒரு புக்க வெளியிட போறாரு.. அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

   Delete
  4. இந்த விஷயத்தை சீனு எங்ககிட்டலாம் சொல்லவே இல்ல பாருங்க?

   Delete
 7. இந்த பணியை சிறப்பாக செய்து முடிக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 8. அன்பின் சீனா அவர்களின் அறிமுகத்தில் தாங்கள் வங்கி ஊழியர் என்று கேள்விப்பட்டேன்! மிக்க மகிழ்ச்சி! நானும் ஒரு முன்னாள் வங்கி ஊழியன்தான். வலைச்சர ஆசிரியை பொறுப்பேற்று வந்தமைக்கு வாழ்த்துக்கள்! தாங்கள் எழுதியுள்ள IAS தேர்விலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் மகிழ்ச்சி! தங்கள் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி! :-)

   Delete
 9. ஐயோ,, கேள்வியின் நாயகனே,

  ReplyDelete
  Replies
  1. அது எனக்கு நானே எழுதிகிட்ட பதிவு..

   Delete
 10. சுய அறிமுகம் சூப்பர் நோ டென்சன் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. சுபத்ரா பேசுறேன் என்று கேள்விபட்டதும் உங்கள் குரலை(தென்காசி குயில் ) கேட்க ஒடோடி வந்த என்னை(செங்கோட்டை சிங்கம் ) ஏமாற்றி வீட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. Wrong Number சீனுவுக்குத் தென்காசி தான். ஆனா எனக்குத் திருநெல்வேலி :)))

   Delete
 12. தங்கள் சுய அறிமுகத்தில் தாங்கள் பல பரிசுகள் வென்ற செய்தி அறிந்து கொண்டேன். வலைச்சர ஆசிரியர் பனியின் மூலமாக பல புதிய வாசகர்களையும் பரிசாகப் பெறுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா.. பில்டப் வேண்டாம்.. எல்லாம் சும்மா :)))

   இவை மூன்றும் வலைத்தளம் தொடங்கியதால் எனக்குக் கிடைத்ததால் பகிர்ந்துள்ளேன். தங்கள் வாழ்த்துகளை எண்ணி மகிழ்ச்சி!

   Delete
 13. ****உங்கள் அருமையான நேரத்தை ஒதுக்கி என் பதிவுகளைப் படிப்பதென்பது சும்மாவா?***

  எங்களுக்காக உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி, விதவிதமாக ஆக்கி விருந்தளிப்பது நீங்கள். ஆர் எஸ் வி பி எல்லாம் செய்யாமல் எந்தவித கம்மிட்மெண்ட்ஸும் இல்லாமல் விருந்தாளியா வந்து உங்க விருந்தை ருசித்து ரசித்துவிட்டுப்போக எங்களுக்கு அத்தனை கஷ்டமா என்ன? :) தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆகா! எதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரியே தெரியுது.. இருக்கட்டும் :-)

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. அச்சச்சோ! இது வெறும் "வஞ்சிப் புகழ்ச்சி" தாங்க (என் தலையில் அடிச்சுச் சொல்றேன்).

   உங்க மேலே தப்பு இல்லை. என்னோட ராசி அப்படி! நான் எப்போவாவது ஏதாவது புகழ்ந்து எழுதினால் எல்லா வஞ்சியரும் இப்படித்தான் புரிஞ்சுக்கிறாங்க! என்ன பண்னுறது? பேசாமல் மனதுக்குள்ளேயே இவர்களை புகழ்ந்துக்க வேண்டியதுதான்..:)

   இங்கே சுபத்ரா மட்டும் பேசட்டும். நம்மல்லாம் வாயைத் திறந்தாலே வம்புலதான்னு முடியும்போல. :)))) (இது நானா என் மனதுக்குள் சொல்லிக்கொள்வது. உங்களுக்கு கேட்டாலும் கேக்காதமாரி இருந்துக்கோங்க! :) )

   Delete
  4. எனக்கு ஏதும் கேட்கல :)

   Delete
 14. சுய அறிமுகம் அருமை.

  பலமுறை பல்வேறு போட்டிகளில் வென்றதற்கு இனிய வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. மூன்று தினங்களாக பெங்களூரு சென்றிருந்ததால் இன்றுதான் உங்களின் பகிர்வுகளைக கண்டேன். வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு சிறப்பானவர்தான் நீங்கள்! தொடர்ந்து வருகிறேன் இவ்வாரம் உங்களுடன்! மகிழ்வான என் வாழ்த்துகள் உங்களுக்கு!

  ReplyDelete
 16. சிறப்பான அறிமுகம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது