07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 12, 2014

இது எங்க ஏரியா - சுட்டீஸ்!வலைச்சரம் – 2 – மலர் – 6


தலைப்பை பார்த்ததுமே உங்க எல்லாருக்கும் புரிந்திருக்கும்.... குழந்தைகள் என்றாலே அவர்களின் மழலைவிஷமம்அழுகைவிளையாட்டுகள் என்று பல விஷயங்கள் உள்ளன. அவர்களை நல்லபடியாக வழிநடத்துவது நமது கடமை. குழந்தைகளை பற்றி பதிவுகளை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். அவர்களுக்கான கதைகள்தமிழ்ப் பாடல்கள்அவர்களுக்கான பெயர்கள்விளையாட்டுகள் என்று இப்படிப் பலவிஷயங்கள் இருக்கே! வாங்க போய் பார்க்கலாம்.

கைப்புள்ள என்ற தளத்தில் மோகன்ராஜ் என்பவர் தன் சிறுவயதில் தன் அம்மா தனக்காக பாடிய கிராமியப் பாடல்களை இங்கு பதிந்திருக்கிறார். சென்று பாருங்களேன்!

பெண்மை.காம் என்ற தளத்தில் குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் பகிரப்பட்டுள்ளன.

ரேடியோஸ்பதி வலைப்பூவில் சமீபத்தில் குழந்தைகளுக்கான 50 திரையிசைப் பாடல்கள்  பகிரப்பட்டுள்ளன. அவற்றின் காணொளியின் சுட்டிகளுடன். நானே தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

நீ பிறந்த நாளிது
நீ பிறந்த நாளிது
அப்பா தருவார் பூப்பூச் சட்டை
அம்மா தருவாள் கிண்கிண் கொலுசு
தாத்தா தருவார் டிண்டிண் கடியாரம்
நானே தருவேன் ஆயிரம் முத்தம்.

பாரதி பயிலகம் வலைப்பூ என்ற தளத்தில் தான் இந்தப் பாடல் உள்ளது. குழந்தைகள் தமிழ்ப் பாடல்கள் பாட வேண்டியதன் அவசியத்தையும் பாடல்களையும் இங்கு பகிர்ந்துள்ளனர்!

ஆதித்தன் வலைக்குடில் என்ற வலைப்பூவை போய்ப் பாருங்களேன். குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு ஏற்ற தமிழ்ப் பெயர்கள் கொட்டி கிடக்கின்றன இங்கே.

அம்மா அப்பா என்ற தளத்தில் ஞானசேகரன் அவர்கள் தன் அம்மா தனக்கு பாடிய தாலாட்டை சிறப்பாக இங்கு பகிர்ந்திருக்கிறார்.

கணிப்பொறி மென்பொருள் வல்லுனராக ஹரியானாவில் பணிபுரியும் பாபு நடேசன் என்பவர் தமிழ் அறிவுக் கதைகள் என்ற தளத்தில் குழந்தைகளுக்கான நீதிக் கதைகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்! பாருங்களேன்.

எழுத்தாளர் எஸ்.ரா எனும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு கதை என்ற பகிர்வை பொறுமையாக படித்துப் பாருங்களேன்.

பத்து பன்னிரெண்டு அம்மாக்கள் உறுப்பினர்களாக இருக்கும் அம்மாக்களின் பகிர்வுகள் என்ற தளத்தில் ஆத்திச்சூடி கதைகள்குழந்தைகள் பார்க்கத் தகுந்த திரைப்படங்கள் ஆகியவற்றை வாசித்துப் பாருங்களேன்.


இது சுட்டீஸ் ஏரியா என்ற தளத்தில் குழந்தைகளுக்கான பொது அறிவு செய்திகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

சிறுகதைகள் என்ற தளத்தில் விக்ரமாதித்தன் கதைகள்தெனாலிராமன் கதைகள்பீர்பால் கதைகள் எனப் பலவும் காணப்படுகின்றன.

பூந்தளிர் நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் ஒன்று. முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானவை. இதில் ஒரு நிமிட விளையாட்டுகளை பாருங்களேன். இப்பூவில் கணித விளையாட்டுகளும் உண்டு.

என்ன நண்பர்களே! இன்றைய பகிர்வை ரசித்தீர்களா! நேரம் கிடைக்கும் போது எல்லோர் தளங்களுக்கும் சென்று கருத்திடுங்கள்... 

இன்றோடு என் வலைச்சரப் பணி நிறைவடைகிறது. என்னால் முடிந்த அளவு பயனுள்ள பகிர்வுகளாக  தந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.. இந்த வாரம் முழுக்க தொடர்ந்து ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...அன்றாடம் எல்லா தளங்களுக்கும் சென்று தகவல் தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், ரூபன் அவர்களுக்கும் என் நன்றிகள்.. எல்லோரும் தொடர்ந்து என்னுடைய வலைத்தளமான கோவை2தில்லிக்கும் வருகை தந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...

இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயாவுக்கும், என் மேல் நம்பிக்கை வைத்து பரிந்துரைத்த வை.கோ சாருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்...

சென்றமுறை வலைச்சர வாய்ப்பு கிடைத்த போது நான் தில்லியில் இருந்தேன்.. அப்போது என் உடல்நிலையும் சரியில்லாததால் என் கணவர் எனக்கும் பெரிதும் உதவி புரிந்தார்... ஆனால் இம்முறை நான் திருவரங்கத்தில் ....அவர்கள் தில்லியில்... கிடைத்த 10 நாட்களில் தலைப்புகளை தேர்ந்தெடுத்து, தளங்களைத் தேடி தயார் செய்தேன்.. நானே முழுதும் தயார் செய்தேன் என்ற திருப்தி எனக்கு கிடைத்துள்ளது...:))  நன்றி...

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...


இது தில்லியில் இருந்த போது கடுங்குளிரில் பொங்கலுக்காக எங்கள் வீட்டு வாசல்படியில் போட்டது...

நட்புடன்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்...
36 comments:

 1. ஆதித்தன் வலைக்குடில் மற்றும் சிறுகதைகள் தளமும் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்....

   Delete
 2. அருமையான தளங்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
  சில படிக்காத தளங்கள் உள்ளன, அவற்றை சென்று படிக்கிறேன்.
  உங்கள் கோலம் நன்றாக இருக்கிறது.
  உங்கள் பணி சிறப்பாக இருந்தது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 3. ஆதி,

  குட்டீஸுகளுக்கான‌ பதிவுகள் என்றாலே ஒரு மகிழ்ச்சிதான். நேரம் கிடைக்கும்போது சென்று வருகிறேன். ஒரு வாரத்தை வெற்றிகரமாக முடித்திட்ட தங்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாந்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...

   Delete
 4. பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. சார்.. நான் நண்பர் அல்ல.. தோழி... :) என் கணவரைப் பற்றி சொல்லியிருக்கிறேன் பார்த்தீர்களா...:)))

   வாழ்த்துக்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்..

   Delete
 5. சில தளங்கள் நான் புகாதவை
  அறிமுகத்திற்கு மிக்க நன்றி
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...

   Delete
 6. அருமையான தள்ங்களின்
  அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 7. அருமையான தளங்களை அறிமுகம் செய்து - சிறப்பாக பணியினை நிறைவு செய்யும் தங்களுக்கு பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்!..

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்...

   Delete
 8. இந்த முழுவாரத்தையும் அழகாக சிரத்தையாக வித்யாசமாக சிறப்பாகச் செய்து முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  //நானே முழுதும் தயார் செய்தேன் என்ற திருப்தி எனக்கு கிடைத்துள்ளது...:)) //

  அந்த ஓர் ஆத்ம திருப்திக்கு ஈடு இணை ஏது? ;)))))

  //அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...//

  அதே .... அதே ! ;) ......... சபாபதே !!!!

  டெல்லிக்குளிரில் போட்ட கோலத்துடன் முடித்துள்ளது எங்கள் மனதுக்கு குளுமை அளிப்பதாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 9. குட்டீஸ் பதிவுகள் பார்த்ததில்லை. இதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல பதிவுகள்.
  நன்றாக வேரு கோணத்தில் செய்திருக்கிறாய்.அசத்தல்தான். அன்புடன்

  ReplyDelete
 10. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

  ReplyDelete
 11. வணக்கம்
  அம்மா

  வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  தங்களின் வலைச்சரப் பொறுப்பினை மிகச்சரியாக செய்து பல புதிய தளங்களை அறிமுகம் செய்துவைத்துள்ளிர்கள் முதலில் வாழ்த்துக்கள்...சிறப்பாக பணியை நிறைவு செய்து விடைபெறும் நாள் அல்லவா... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..

   Delete
 12. மிக்க நன்றி வெங்கட், வலைச்சரத் தொகுப்பில் பல நல்ல இடுகைகளோடு என் தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க கானா பிரபா..

   Delete
 13. குழந்தைகளுக்குப் பயன்படக்கூடிய அருமையான தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
  இந்த வாரம் எங்கள் கம்ப்யூட்டர் பழுதுகாரணமாக தொடர்ந்து வரயிலவில்லை. தங்கள் சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சார்..

   Delete
 14. நண்பன், தோழன் = இவை ஆண்பால்!
  நண்பி, தோழி = இவை பெண்பால்!
  நண்பர், தோழர் = இவை பொதுப்பால்!
  //கரந்தை ஜெயக்குமார் Sun Jan 12, 06:45:00 AM
  பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே//
  ஐயா அவர்கள் குறிப்பிட்டதில் தவறு எதுவுமில்லை சகோதரி ஆதி வெங்கட் அவர்களே!

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி..

   Delete
 15. சிறந்த பதிவு
  தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவலிங்கம் சார்..

   Delete
 16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்..

   Delete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி
   அழகாக தொகுத்துள்ளீர்கள் பாராட்டுகள்
   என் தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

   Delete
  2. மிக்க நன்றிங்க ஞானசேகரன்...

   Delete
 18. என்னை வலைசரத்தில் அறிமுகபபடுத்தியதர்க்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 19. என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஆதி!

  ReplyDelete
 20. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது