07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 15, 2014

நான் ரசிப்பவை

            

வணக்கம். எனக்குப் பிடித்த வலைத்தளங்களை இன்று உங்களுக்கும் அறிமுகம் செய்யலாம் என்று இருக்கிறேன். இவை ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தவையாக இருந்தால் அத்தளங்களைப் பற்றிய உங்களுடைய கருத்துகளையும் பின்னூட்டங்களில் தெரிவியுங்களேன்.

1.    Warrior: ப்ளாக் உலகுக்கு வந்ததிலிருந்து தேவாவின் இந்தத் தளத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். தளத்தில் எனக்கு மிகவும் பிடித்தவை காதல் மற்றும் ஆன்மீகப் பதிவுகள். பொதுவாக வலைப்பதிவுகள் வெளிவந்தவுடன் நமக்குப் படிக்கும் ஆர்வம் ஏற்படும். ஆனால் இவரது பதிவுகளை ஒதுக்கிவைத்து ஒரு குறிப்பிட்ட நேரம் பார்த்துப் படிக்காமல்விட்ட பதிவுகளையெல்லாம் ஒரே மூச்சில் படிப்பது என் வழக்கம். இவரது ஆன்மீகப் பதிவுகளை அப்புறமாகப் பார்க்கலாம். இப்போது என் மனதைக் கவர்ந்த வேறுசில பதிவுகள் உங்களுக்காக:

இவரதுசுவாசமே காதலாகதொகுப்பைப் படித்துப் பாருங்கள். மென்மையான அழகான காதல் எல்லாக் கதைகளிலும் படிந்திருக்கும்.  

முன் ஜென்மத் தேடல் நீசின்ன கவிதைகளோடு சொல்லப்பட்டிருக்கும் ஒரு அழகான புனைவு.

அன்புள்ள அப்பாவிற்கு பதிவைப் படிப்பதற்குமுன் மனதைக் கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.

இவருடைய சினிமா விமர்சனம்மதயானைக் கூட்டம்கொஞ்சம் வித்யாசமான கோணத்தில் இருக்கும்.

2.    Ganesh: இது ஒரு அறிவியல் புனைவுக் கதைகள்(sci-fi) நிறைந்த வலைத்தளம். சுஜாதாவை விரும்பிப் படிக்கும் இவர் இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்.

கரையாத வார்த்தைகள்கதையில் மறுபிறவி கருத்தை வைத்து ஒரு புனைவைக் கொடுத்துள்ளார்.

நிஜமாகும் நிழல்கள்ஒரு அழகான அறிவியல் புனைவு. சுஜாதாவின் கதைகளில் வரும் கணேஷ், வசந்த், ரூபாவைப் போல இவரது கதைகளில் புனிதா என்றவொரு கதாப்பாத்திரம் வரும். இக்கதை ஓர் உதாரணம்.

இந்தஐன்ஸ்டீன்பற்றிய தொகுப்புகளைப் பாருங்களேன். அவர் சொல்லிய சில விஷயங்களை மிக எளிதாக நமக்குப் புரியவைத்திருக்கிறார்.

3.    ப்ரியா கதிரவன்: நான் இவரோட பரம ரசிகை. இவரோட பதிவுகளைப் படித்தபிறகு இவரை மாதிரியே எழுத வேண்டும் என்ற ஆசை வருவதைப் பார்க்கலாம். அவ்ளோ ஜாலியான எழுத்து.

இவரோடவிசாம்ரூபம்பதிவைப் பாருங்களேன்.  கமல் ரசிகையான இவர் படத்தை விமர்சித்திருக்கும் விதமே தனிதான்.

தன்னோட புகுந்த வீடான நாகர்கோவிலைப் பற்றி ஒரு சின்ன பதிவு, ‘நாலு வரியில் (என்) நாஞ்சில் நாடு’.

நீ தானே என் பொன்வசந்தம்படத்தைப் பற்றிய ஒரு பதிவு இது. படித்துப் பாருங்களேன்!

4.    அணிலாடு முன்றில்: சித்தார்த் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி காயத்ரி சித்தார்த் இருவரும் சேர்ந்து எழுதும்சங்க இலக்கியம்பற்றிய வலைத்தளம் இது. தமிழர் பண்பாட்டையும் நாகரிகத்தையும் பற்றிக் கூறும் சங்கப்பாடல்கள் தமிழர்களின் இலக்கியப் பொக்கிஷம். அந்த அகநானூறு, குறுந்தொகைப் பாடல்களுக்கு எவ்வளவு அழகான கோணங்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் படித்துப் பாருங்களேன்!

பூத்தலைச் சிறுகோல்பதிவில் ஒரு சங்கப்பாடல். மகள் காதலனோடு செல்ல, அவளின் தாய் பாடுவதுபோல் அமைந்தது.

கூடுடையும் தருணம்அகம் பற்றிய மற்றுமொரு பதிவு.

உறக்கமற்ற காத்திருப்பு என்ற தலைப்பில் மூன்று பதிவுகள் இருக்கின்றன. சங்கப்பாடல்களிலிருந்து உதாரணங்கள் எடுத்து ரசனையாக எழுதப்பட்டிருக்கும் பதிவுகள் இவை.

5.    ChocolatePages from Sainthavi: பதிவுலகில் நான் ரசித்துப் படித்த மற்றுமொரு வலைத்தளம் இது. அறிமுகமான முதல்நாளே முக்கால்வாசி பதிவுகளைப் படித்துவிட்டேன். நகைச்சுவை கலந்த மெல்லிய காதல் கதைகள். அவற்றில் சிபி-சைந்தவி கதாப்பாத்திரங்கள். புதிய பதிவு வந்து நாளாகிவிட்டது. இருந்தாலும் இதை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

இந்தப் பதிவில்எல்லாப் பதிவுகளுக்குமான சுட்டிகளும் இருக்கின்றன, பாருங்கள்.

உச்சிமாங்காளிபதிவைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறீர்கள்.

வ்வேவேவேவேவும் அப்படியொரு பதிவு தான். ‘மிஸ்பண்ணிவிடாதீர்கள்!

6.    மாதவிப் பந்தல்: திருப்பாவையிலிருந்து எடுக்கப்பட்ட அழகான தலைப்போடு இயங்கும் வலைத்தளம். பெரிய விஷயங்களைப் பற்றி மிகவும் சாதாரணமாக ஆராய்ச்சியில் இறங்கியமாதிரி எழுதியிருக்கிறார் ஆசிரியர் KRS :-)


நேரம் கிடைக்கும்போது இந்தத் தளத்தின் மற்ற பதிவுகளையும் படித்துப் பாருங்களேன்!

7.    மைத்துளிகள்: தளத்தின் பெயரே ஒரு nostalgic உணர்வை ஏற்படுத்துகிறதல்லவா? அவருக்கே உரிய பாஷையில் ரசிக்கும்படியான பதிவுகளை எழுதுபவர்.

இவருடயசாரல்’, ‘ப்ளாஸ்திரி’, ‘அரக்கிமற்றும்திரைபதிவுகள் நான் மிகவும் ரசித்தவை.

பதிவுகள் எப்போதாவது வந்தாலும் கூட பதிந்ததும் படித்துவிடும் ஆவலைத் தூண்டுவன..

8.    கி.மு பக்கங்கள்: கிருஷ்ணமூர்த்தி என்பவரது வலைத்தளம். இவர் இதுவரை இரண்டு நாவல்கள் வெளியிட்டிருக்கும் ஓர் இலக்கியவாதி. வலைத்தளமும் நடத்திவருகிறார்.

எஸ்.ரா.வின்உறுபசிநாவலைப் பற்றி எழுதியிருக்கும் பதிவைப் படித்துப் பாருங்கள்.

தொலைய நினைப்பவனின் கதைபல பகுதிகளாக எழுதப்பட்டிருக்கிறது. இதில் வாசிப்பின் இன்பத்தை மிகவும் ரசனையாக எழுதியுள்ளார்.

முதல் இலக்கிய பயணம்பதிவில் அவரது வாழ்வில் நடந்த ஒரு மறக்கமுடியாத சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

இவர் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர் (Aeronautical Engineer) என்பது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களே, மீண்டும் நாளை சந்திக்கலாம். முன்னர் குறிப்பிட்டதுபோல் நான் சொல்லியிருக்கும் பதிவுகளை மட்டுமல்லாது இந்தத் தளங்களின் மற்ற பதிவுகளையும் படிக்க உங்களை வேண்டுகிறேன். 

15 comments:

 1. அனைத்தும் தொடரும் தளங்கள்... இரண்டு தளங்கள் தவிர மற்ற தளங்கள் பகிர்வுகளை அவ்வப்போதாவது தொடர்ந்தால் நன்றாக இருக்கும்...!(?)!

  கடைசி தளத்தின் Link : http://www.kimupakkangal.com/

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. சில மரங்கள் வதவத என்று காய்க்கும். ஆனால் ருசி இருக்காது. சில மரங்கள் எப்போதாவது தான் காய்க்கும். ஆனால் அதன் ருசி அட்டகாசமாக இருக்கும். அத்தகைய ப்ளாக்ஸ் தான் இவை. காத்திருக்கத் தான் வேண்டும் :)

   Delete
 2. வணக்கம்
  வலைச்சர அறிமுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. இதில் சொல்லப் பட்டுள்ள எந்த வலைபதிவரையும் இன்றுவரை எனக்குத் தெரியாது. குறிப்பிடப்பட்ட அவர்கள் பதிவுகளும்தான்! இந்த மிகப்பெரிய உலகில் பிறந்து என்னுடைய மிகச்சிறிய உலகில் வாழ்ந்து சாகப்போகிறேன் என்பதை விளக்கியதுக்கு நன்றி சுபத்ரா!

  ***தளத்தின் பெயரே ஒரு nostalgic உணர்வை ஏற்படுத்துகிறதல்லவா?***

  இத்தனை அழகாத் தமிழில் எழுதும் உங்களுக்கு "nostalgic" என்று சொல்லப்படும் ஆங்கில வார்த்தைக்கு தமிழாக்கம் தெரியாதா!! இல்லைனா இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் சொன்னால் மட்டுமேதான் சரியான அர்த்தத்தைக் கொடுக்குமா?

  என்ன காரணம்னு தெரியலை உங்களுக்கு நான் எழுதும் பின்னூட்டம் எல்லாம் "ஒரே மாதிரி"த்தான் வருது. அதென்ன சொல்லுவீங்க? :)))

  ReplyDelete
  Replies
  1. //இந்த மிகப்பெரிய உலகில் பிறந்து என்னுடைய மிகச்சிறிய உலகில் வாழ்ந்து சாகப்போகிறேன் 

   பிரமாதம் வருண்.

   Delete
  2. வருண்,

   இந்தத் தளங்களை எல்லாம் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆம். 'nostalgic' வார்தைக்குச் சரியான தமிழ் பிரயோகம் கிடைக்கவில்லை :( முடிந்தால் தேடிச் சொல்லுங்கள்.

   அது 'வஞ்சப் புகழ்ச்சி' :))

   Delete
 4. அறிமுகங்களைப் படித்ததும் ஆவலும் இத்தனை நாள் தவறவிட்ட வருத்தமும் ஒருங்கே தோன்றின.

  ReplyDelete
  Replies
  1. ஒன்றும் பிரச்சனையில்லை. தமிழில் ஏகப்பட்ட வலைத்தளங்கள் இருக்கின்றன. தேடித் தேடிப் படிக்கலாம். வருத்தப்பட வேண்டாம் :-)

   Delete
 5. அறிமுகங்கள் அத்தனையும் அருமை.

  ReplyDelete
 6. அப்பா ஸாரும் வருணும் சொன்ன அதே உணர்வுதான் எனக்கும்...! நிறைய மிஸ் பண்ணியிருக்கேன் என்பது தெரிகிறது! இனி தவறாமல் படிக்க முயல்கிறேன். நன்றி சுபத்ரா! (கூடவே இத்தனையையும் தேடித் தேடிப் படிக்கிற உங்கள் மேல் ஒரு பிரமிப்பும் எழத்தான் செய்கிறது!)

  ReplyDelete
  Replies
  1. நானும் அதற்குத் தான் முயற்சி செய்கிறேன் கனேஷ் சார். இதுல பிரமிக்கிறதுக்கு ஒன்னுமே இல்ல :-)

   Delete
 7. மிக நல்ல தளங்கள்! நானும் படித்தது இல்லை! படித்து வியந்து போனேன்! பகிர்வுக்கும் அறிமுகம் செய்தமைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது