07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 30, 2014

அன்புச் சகோதரி மஞ்சு பாஷினி வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை உயர்திரு பழனி கந்த சாமி ஐயா அவர்களிடம் ஒப்படைக்கிறர்.

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் (30.11.2014 ல்)  முடியும் வாரத்திற்குஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமைத் தங்கை திருமதி மஞ்சு பாஷினி  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 131
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 184
பெற்ற மறுமொழிகள் : 274
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 38
வருகை தந்தவர்கள்      : 1866



அன்புச் சகோதரி மஞ்சு பாஷினியினைப் பாராட்டி நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைப்பதில் பெருமையுடன் கூடிய பெரு மகிழ்ச்சி  அடைகிறேன்.



01.12.2014 முதல் துவங்கும் வாரத்தில் இருந்து ஒரு வார  காலத்திற்கு ( 07.12.2014  ) ஆசிரியப் பொறுப்பு ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  இணக்கம் தெரிவித்த உயர்திரு பழனி கந்த சாமி ஐயா அவர்கள்   நாளை ( 01.12.2014 ) காலை முதல் தான் ஏற்ற பணீயினைச் சிறப்பாகச் செய்யும் வண்ணம் - அறிமுகப் பதிவுகளை வெளியிட்டு தான் ஏற்ற பொறுப்பினை   சரி வர முழு மனதுடன் நிறைவேற்ற  சம்மதித்து இருக்கிறார்.

இவருடைய வாழ்க்கைக் குறிப்பு. :

இவர் 1935 ம் வருடம் கோவைக்கு அருகிலே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் சிறு வயதிலேயே கோவை நகரத்திற்கு குடி பெயர்ந்தவர். இவர் தன்  சிறு வயது  முதல் இன்றுவரை இவருடைய வாசம் கோவை நகரமே.

இவரது  படிப்பு ஒன்றாம் வகுப்பிலிருந்து பி.எச்.டி. வரை கோவையிலேயே முடித்தார்.. விவசாய இலாக்காவில் 1956 ம் வருடம் சேர்ந்து பல பதவிகளில் வேலை பார்த்து 1994 ம் ஆண்டு பணி நிறைவு பெற்றார். பணிக் காலத்தில் ஸ்வீடன், நெதர்லாந்து, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா ஆகிய வெளி நாடுகளுக்குச் சென்று  வந்திருக்கிறார்,

இவருடைய பொழுது போக்குகள், கர்னாடக இசை கேட்டல், புத்தகங்கள் படித்தல், சுற்றுலா செல்தல் ஆகியவை ஆகும். இவருடைய நண்பர் ஒரு பதிவு வைத்திருந்ததைப் பார்த்து இவரும் பதிவுலகில் 2009 ம் ஆண்டு அடிஎடுத்து வைத்தவர்.  இது வரை சுமார் 700 பதிவுகள் பதிந்திருக்கிறார்.

உயர்திரு பழனி கந்த சாமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்று நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத் குமார் 

நல்வாழ்த்துகள் பழனி கந்த சாமி

நட்புடன் சீனா 

19 comments:

  1. அன்பின் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் வருக.. வருக. என்று இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன்!..

    ReplyDelete
  2. இந்த வார ஆசிரியருக்கும் வரும் வார ஆசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கடந்த ஏழு நாட்களாக வலைச்சரம் பொறுப்பேற்று சிறப்பாக செய்த அன்புச் சகோதரி மஞ்சு பாஷினி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். வரப்போகும் ஏழு நாட்களுக்கு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க வந்திருக்கும் அய்யா பழனி கந்தசாமி அவர்களை வரவேற்கிறேன். இவ்ரை இன்னும் ஒருவாரம் சேர்த்து இரண்டு வாரங்கள் பாருங்கள் என்றாலும் பார்ப்பார். அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.
    த.ம.2

    ReplyDelete
  4. உயர்திரு ஐயா பழனி கந்த சாமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்கிறேன்

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
  5. வணக்கம்.
    நல்வாழ்த்துகள்
    சென்ற வாரம் வலைச்சரம் ஆசிரியர்
    மஞ்சுபாஷினி சம்பத் குமார் அவர்களுக்கும்
    இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர்
    திரு ஐயா பழனி கந்த சாமி அவர்களுக்கும்

    செந்தமிழின் சேவையை
    செம்மொழிக்கு
    செயலாற்றிடவே!
    செயல்படுவீர்!
    நன்றி!
    புதுவைவேலு

    ReplyDelete
  6. கந்தசாமி ஐயா அவர்கள் துடிப்பான எழுத்துகளுக்கு சொந்தக் காரர். வரவேற்கிறோம்

    ReplyDelete
  7. #1956 ம் வருடம் சேர்ந்து பல பதவிகளில் வேலை பார்த்து 1964 ம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.#
    கணக்கு உதைக்குதே ,சரி செய்யுங்கள் :)
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. அன்பின் பகவான் ஜீ - இக்கேள்வியினை திரு பழனி கந்த சாமியிடம் கேளுங்கள்.

      நல்வாழ்த்துகள்
      நட்புடன் சீனா

      Delete
    2. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் சரியான வருடம் குறிப்பிட்டதை அடுத்து திருத்தம் செய்தாயிற்று...

      Delete
  8. சிறப்பாக தொகுத்து ஆசிரியர் பணியை முடித்த சகோதரி மஞ்சுபாஷினி சம்பத் குமார் அவர்களுக்கும், கலக்க போகும் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. நாளை முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் !! இந்த ஒரு வாரமும் என் உடன் பயணித்த அனைவருக்கும், வாய்ப்பு தந்த வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் மனமார்ந்த அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  10. எனது பணிக்காலத்தைப் பற்றிய குறிப்பில் சிறு தவறு ஏற்பட்டுள்ளது. நான் ஓய்வு பெற்ற வருடம் 1994.
    1964ம் வருடத்தில்தான் நான் என் சுதந்திரத்தை இழந்து அடிமை வாழ்வு மேற்கொண்டேன். அதாவது கல்யாணம் ஆகியது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா... ஓய்வு பெற்ற ஆண்டை திருத்திவிட்டேன்...

      Delete
  11. புதிய ஆசிரியர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. WELCOME TO DOCTOR PALANI KANDASWAMY SIR !

    CONGRATS & BEST WISHES.

    ReplyDelete
  13. BEST WISHES TO MRS. MANJU FOR HER SUCCESSFUL COMPLETION OF ONE FULL WEEK

    ReplyDelete
  14. ஐயா வருக வருக பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வலைச்சர ஆசிரியராக பணியேற்க இருப்பது அறிந்து மகிழ்வுடன் வருக வருக என வரவேற்கின்றேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது