07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 13, 2007

வலைச்சரத்தின் நார்!

என்னடா இவன் வலைச்சரத்தின் நார் என தலைப்பு கொடுத்திருக்கானேன்னு யோசிக்கிறிங்க போல. அது ஒண்ணும் இல்லீங்க, எவ்வளவோ முக்கியமான அழகான பூக்களால் தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வலைச்சரத்தில் நானெல்லாம் நாராக கூட இருக்க தகுதியிருக்கான்னு தெரியலெ அதான்.

நுனிப்புல் மேய்பவர்களில் ஒருவனான என்னை வலைச்சரத்திற்கு அழைத்தது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அதிகமாக எதுவும் எழுதாமலிருக்கும் எனது வலைப்பதிவை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ஒற்றை வரி ராசா என்றுக்கூட கிண்டல் அடிக்கின்றனர். ஆனாலும் மதித்து அழைத்ததற்கு நன்றி.

எனது வலைப்பூவில் வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது ஆசையாகவே தான் இன்னும்.

முக்கியமாக முத்தமிழ் மடலாடற் குழுவின் நிர்வாகத்தில் இருப்பதால் பதிவுகள் பக்கம் வர அதிக நேரம் இருப்பதில்லை.
அதிகமாக எழுதவில்லை என்றாலும் சில மொழிப்பெயர்ப்பு முயற்சிகள் செய்துள்ளேன்.
எனது பதிவில் நான் எழுதியுள்ள முன்னிறுத்தல் என்னும் கட்டுரை உங்களுக்கு பயன்படலாம்.

மேலும் சில மொழிப்பெயர்ப்பு கவிதைகளும், நகைச்சுவை கட்டுரைகளும் உள்ளன. நேரம் இருந்தால் பாருங்கள்.

அரசியல், இலக்கியம், வணிகம், விளையாட்டு என பல துறைகளில் ஆர்வம் இருந்தாலும் எல்லாவற்றிலும் மேலோட்டமாகத்தான் சுற்றி வருவதே வாடிக்கையாக போய்விட்டது.

வலைப்பூக்கள் என்னும் தமிழ் பதிவுகள் மற்றும் குழுமங்கள் மூலம் நட்பு வட்டம் விரிவடைந்துள்ளதும் பல புது விசயங்கள் அறிந்துக்கொள்ள முடிவதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

கட்டற்ற சுதந்திரம் இருப்பதனால் தனி மனித இன மத தாக்குதல்கள் அதிகமாக இருப்பது வருத்தத்தை அளித்தாலும் அதையும் தாண்டி பல நல்ல படைப்புகளும் புதிய பல படைப்பாளிகளும் தங்கள் திறமையினால் கவனிக்கத்தக்கவர்களாக வளர்ந்துவருவதை மறுப்பதற்கில்லை.

சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக நடந்த பதிவர் பட்டறை மூலம் அது மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் இது போல பல பட்டறைகள் நடத்தப்படவேண்டும் அதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக தொடர்ந்து உழைத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நன்றிகள்.

இனி நான் தொடர்ந்து படித்தும் ரசித்தும் வரும் ஒரு சில பதிவுகளை பற்றி நாளை.

6 comments:

  1. தோழர் மஞ்சூர் ராசா அவர்கள் சரம் தொடுப்பதை காண ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  2. நார் இல்லன்னா வெறும் உதிரி பூக்களாகவே தான் பூக்கள் கிடக்கும்..
    நீங்க நாருன்னா ரொம்ப பெரியாளுங்க...:)

    ReplyDelete
  3. வாங்கோ வாழ்த்துக்கள் தொடுங்கோ சரத்தையும் மனசையும்.

    ReplyDelete
  4. //நுனிப்புல் மேய்பவர்களில் ஒருவனான //

    அடடா,புல்லரிக்க வெச்சிட்டீங்களே ராசா! நுனிப்புல் மட்டும் படிபீங்களா? நன்றி நன்றி நன்றி :-)))))

    ReplyDelete
  5. அறிமுகம் படுத்திய சிந்தாநதிக்கும் வரவேற்று பின்னூட்டம் இட்டிருக்கும் நண்பர்கள் லக்கி, முத்துலெட்சுமி, அகிலன் மற்றும் உஷாவுக்கும் இனி பின்னூட்டம் இடவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  6. /நீங்க நாருன்னா ரொம்ப பெரியாளுங்க...:) /

    அதான ..கலக்குங்க மஞ்சூர்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது