07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 27, 2007

துக்கடா …

ஒரு நல்ல விடயம் (விதயம்? / விஷயம்?) சொல்லணும். சென்னைப் பட்டறையில் இருந்த போதே மனசுல நினச்ச ஒண்ணு. மொத்தமா ஒரே மாதிரியா வெள்ளை டி.ஷர்ட் .. அதிலே முதுகுப் பக்கம் ‘சங்கம்’ அப்டின்னு பெரிய எழுத்துக்கள் .. முன்னால அவங்க பதிவின் உரல் .. எல்லாம் இந்த வ.வா.சங்கக் காரங்கதான் .. செம அழும்பு. கொஞ்ச நேரம் என்னையும் “ஆட்டைக்கு” சேர்த்துக்கிட்டாங்க. மாடியில் ஒரு ஓரத்தை ஆக்கிரமிப்பு செஞ்சிக்கிட்டு அதுக போட்ட கும்மாளம் … அம்மாடியோவ்! ஒண்ணு சொன்னா ஓவர் பில்டப்புன்னு நினச்சிக்கிடுவீங்க .. ஆனா, நிஜமாகவே முழுசா பொய்க்கலப்பில்லாத உண்மைங்க; என்னன்னா, அவங்க கூட தேமேன்னு நின்னுகிட்டு இருந்தேனா… மக்கள் மாத்தி மாத்தி ஒருத்தர் ஒருத்தரை காலை வாரிக்கிட்டு, சரவெடி மாதிரி ஆளாளுக்கி மாத்தி மாத்தி ஜோக்கு மழையா பொழிஞ்சிக்கிட்டு இருந்தாங்களா. அவங்க கூட நின்ன கொஞ்ச நேரத்திலேயே எனக்குத் தாடை வலிக்க ஆரம்பிச்சிருச்சி. எவ்வளவு நேரம்தான் மனுசன் “ஈன்னு” சிரிச்சிக்கிட்டே இருக்க முடியும், சொல்லுங்க. சிரிச்சிக்கிட்டே இருந்தா தாடை வலி வரும்னு எனக்கே அப்பத்தான் தெரிஞ்சிது.


ஏற்கெனவே ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளாமலேயே சங்கம் அமைச்சி, அதுக்கு ‘சீருடை’ எல்லாம் வச்சி ஒண்ணா சேர்ந்ததும் பயங்கர கலகலப்பா மாறி ‘ஒண்ணு மண்ணா’ இருக்கணும்னா அது ரொம்ப விசேஷம்தாங்க. ரொம்ப நல்லா இருந்திச்சி. அவங்களுக்குள்ள ஒரு நிஜமான உறவு ஏற்பட்டு விட்டதும் நன்றாகவே தெரிந்தது. அதுவும் அவங்க ‘தல’ வந்ததும் ஆளுகளுக்கு கைகால் ஓடலைன்னு நினைக்கிறேன். அம்புட்டு சந்தோஷம் அவங்க மத்தியில.


பதிவுலகம் கண்டெடுத்த ஒரு ஆரோக்கியமான சங்கம் – வருத்தப் படாத வாலிபர் சங்கம். அவர்களது சங்கக் கோட்பாடுகள், அதை அவர்கள் வழி பிறழாது நடத்தி வருவது எல்லாமே மிகவும் பாராட்டுக்குரியது. இதில் மாதாமாதம், 'அட்லஸ் வாலிபர்' என்று ஒரு added attraction வேறு! சங்கமும், சங்க உறுப்பினர்களின் உறவும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.


இவர்களைப் பற்றி சொல்லும்போது பாசக்காரக் குடும்பத்தைப் பற்றி சொல்லாமல் போனால் நன்றாக இருக்காது. இது பதிவுலகத்தில் அண்மையில் ஆரம்பித்த உறவுமுறைக் கூட்டம். ஆனாலும் வளர்ந்து வரும் குடும்பம். (முதலில் என்னை சேர்த்திருந்தார்கள்; இப்போது ஓரங்கட்டி விட்டது மாதிரி தெரிகிறது!) மேலும் வளர வாழ்த்துக்கள்.

இந்தக் குழுக்களைப் பற்றி கூறிவிட்டு பா.க.ச. பற்றி சொல்லாமல் விட்டால் அது எவ்வளவு பெரிய தப்பு. எங்கெல்லாம் தமிழ்ப் பதிவர்கள் உண்டோ அங்கெல்லாம் இந்த சங்கத்தின் கொ.ப.ச. ஆவதற்குத்தான் எத்துணை போட்டி? அந்த போட்டியே இந்த சங்கத்தின் வெற்றிக்கு அடையாளம். (மதுரைக் கிளைக்கு நான் தான் முதல்ல அப்ளிகேஷன் போட்டேன்; அதனால் நாந்தான் அதன் தலைவர்!)


நேற்றைய என் முதல் பதிவில் பதிவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் பற்றிக் கூறியிருந்தேன். எப்படி ஏற்படுகிறது என்றே தெரியாமல் நடக்கும் இந்த நட்புறவுகள் இன்னும் சிறு சிறு குழுக்களாக எண்ணிக்கையில் நிறைய இருப்பது தெரிகிறது. பளிச்சென்று கண்ணில் பட்ட குழுக்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பாகத்தான் இந்த மூன்று குழுக்களைப் பற்றிக் கூறினேன். பதிவருலகம் வளர்ச்சிக்கு இத்தகைய குழுக்கள் தேவையெனவே நினைக்கிறேன்.


சங்கங்கள் பலவாகி, நட்புக்கூட்டங்கள் பெருகி, உறவுகள் கிளைத்து நம் பதிவருலகம் மேலும் செழித்து வளரவேண்டுமென்பதே என் ஆவல்.

12 comments:

  1. நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  2. சங்கத்தை பத்தி பாசமா எழுதனுதுக்கு நன்றி ஐயா... ரொம்ப சந்தோஷமா இருக்கு...

    ReplyDelete
  3. //ஒரு நல்ல விடயம் (விதயம்? / விஷயம்?) சொல்லணும்.//

    ஒன்றைப் பற்றி சொல்வது 'பற்றியம்' என்றும் சொல்லலாம்,

    அதாவது 'ஒரு நல்ல பற்றியம் சொல்லனும்.'

    இது 'பற்றி' வேறு ஏதும் ஐயம் இருக்கிறதா ?

    :))

    ReplyDelete
  4. தருமி ஐயா!

    எங்களுடன் நேரம் செலவழித்தது மட்டும் இல்லாமல் நெஞ்சில் வைத்து ஒரு நல்ல விடயமாக இது பதிவு செய்ததை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி... நன்றி.. நன்றி

    ReplyDelete
  5. //எப்படி ஏற்படுகிறது என்றே தெரியாமல் நடக்கும் இந்த நட்புறவுகள்//

    உண்மை தருமி ஐயா..

    ReplyDelete
  6. //கோவி.கண்ணன் said...

    //ஒரு நல்ல விடயம் (விதயம்? / விஷயம்?) சொல்லணும்.//

    ஒன்றைப் பற்றி சொல்வது 'பற்றியம்' என்றும் சொல்லலாம்,
    //
    சங்கதி என்று சொல்லலாமா?

    ReplyDelete
  7. ஐயா சங்கத்தின் உணர்வுகளை வார்த்தைகளில் அழகாக கோர்த்து பதிவுலகம் காணக் கொடுத்தமைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  8. NanRi Tharumi.
    Always wondered how the Sangams are formed and how they operate:))))


    above Sixtiesnu Sangam Arambikkalaam.

    Neenga Ko.Pa.SE.
    Secratary, Thalaivar ellaam.
    mudhal Thondaraa naan irukken:))
    appuRamaa T.R.C Ellaaraiyum kekkalaam.

    ReplyDelete
  9. வல்லி,
    நல்லா சொன்னீங்க போங்க .. நாம சங்கம் ஆரம்பிச்சா இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச வரை மூணு ஆட்கள்தான் இருக்கோம். அண்ணன் (!) சிவஞானம்ஜி - அவரைத் தலைவரா ஆக்கிறுவோம்; நீங்கதான் கொ.ப.ச.வா இருந்து பெருமை சேர்க்கணும். செயலாளர் ..ம்ம் அடுத்துவரும் ஆளுக்குக் கொடுக்க வச்சிருவோம். எனக்கு பொருளாளர் பதவி போதுமுங்க. (நாளைக்கு சங்கம் பெருசா வளராமலா போயிரும்?!)

    அதுசரி .. யாரு அது ..T.R.SC. ?

    ReplyDelete
  10. தருமி சார்....நல்லாச் சொன்னிங்க....வ.வா.ச வின் பதிவுகளில் உள்ள நகைச்சுவை, மற்றும் யாரையும் புண்படுத்தாத, எழுத்துக்கள் மிகவும் பாராட்டப் படவேண்டியவை.

    ReplyDelete
  11. ஆமா! இதென்ன ஆண்டி மடம் கட்டும் செயலா?, நீங்க பாட்டுக்கு வல்லியம்மாவுடன் சேர்ந்து ஏதோ பிளான் எல்லாம் போடுறீங்க?

    ReplyDelete
  12. அவ்வ்வ்வ்வ்வ்வ் எங்க[நம்ம] பா.ச.குடும்பத்துக்கு ஏன் லிங்க்[உரல்] குடுக்கவில்லை.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது