07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 31, 2007

எனது TOP TWO

என்னென்னமோ சொல்லுவாங்களே ..

திருநெல்வேலிக்கே அல்வாவா ..
தருமிக்கே கேள்வியா ..

அப்டின்றது மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவங்களைப் பத்தியே மறுபடியும் உங்க கிட்ட சொல்ல வர்ரது ரொம்ப சரியான காரியம் இல்லைதான். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடிச்ச ஒன்றை உங்க கிட்ட மறுபடி மறுபடி சொல்றதுக்கு ஒரு ஆசைதான். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவர்கள் பற்றி சொல்லணும்னு ஒரு ஆசை. அவர்களது எண்ணங்கள், எழுத்துக்கள் நிறையவே பிடிச்சிப் போச்சு. அதனாலே அதை மறுபடி மறுபடி சொல்லி வருகிறேன். Repetition is bore அப்டின்றது தெரிந்தாலும் சொல்லிடணும்னு ஆசை.


நம்ம பதிவர்கள் எல்லார் எழுத்தையும் நான் வாசித்ததில்லை; வாசிச்ச சிலரின் பதிவுகளும், எழுத்து நடையும் புரிந்ததில்லை. ஆக, நான் வாசித்து அதில் புரிந்துகொண்ட பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்துக்காரர்களைப் பற்றிய ஒரு குறிப்பு.


இது ஒன்றும் அவர்களை அறிமுகப்படுத்துவதற்காக இல்லை. எனக்குப் பிடித்த இவர்களின் எழுத்தைப் பற்றிச் சொல்ல இந்த ஆசிரிய வாரத்தைப் பயன்படுத்தப் போகிறேன். அவ்வளவே..இவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஊரறிந்த பதிவர்கள். அவர்களுக்கு வெளிச்சம் போட அல்ல இப்பதிவு. மாறாக அவர்களின் மேலுள்ள என் பிரமிப்புக்கு ஒரு வெளியீடு.


முதலாவது பதிவர் இளவஞ்சி. முதலில் வாசித்து நான் “விழுந்த” பதிவு அவரது நண்பர் ஒருவரைப் பற்றிய பதிவு. அவர் சொன்ன அந்த ராஜேஷ் …! என்னன்னு சொல்றது. அதை என் எழுத்தில் ஏதாவது எழுதிக் கொச்சைப் படுத்த விரும்பவில்லை.


அதன் பின் தொடர்ந்து மற்ற பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தபோது ஒன்று புரிந்தது; எந்தப் பதிவுகளை மிகவும் விளையாட்டுத்தனமா நகைச்சுவையோடு ஆரம்பிக்கிறாரோ, நிச்சயம் மனுஷன் கடைசியில அழ வச்சிருவார்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதுமாதிரி பதிவுகள் நிறைய. சமீபத்தில் எழுதிய அவரது புல்லட் பற்றிய பதிவு வாசித்தவர்கள் அனைவரையும் உலுக்கியது பின்னூட்டங்களில் தெரிந்தது.

கூரானைப் பற்றிய அந்தப் பதிவும் இதுபோல் மனசைக் கலங்க வைக்கும் பதிவு. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.


கொஞ்ச நாட்கள் மட்டும் பாலகுமாரனின் கதைகளில் சிறிது மோகம் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. சாதாரண சினிமாப் பாட்டொன்றைப் பற்றிக்கூட எழுதிக் கண்களைக் கலங்க வைத்து விடுகிறாரே என்று நினைத்ததுண்டு. ஆனால் இளவஞ்சியின் பதிவுகளை வாசித்த பிறகு பாலகுமாரனின் எழுத்து மிகச் சாதாரணமாகத் தோன்றுகிறது. மனசக் கலங்கடிக்கிற இளவஞ்சியின் எழுத்தை மிஞ்சும் எழுத்துக்காகக் காத்திருக்கிறேன். இளவஞ்சி தன் மகள் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற அன்று நாடுதாண்டி இருந்து கொண்டு வாழ்த்து சொன்ன பதிவை என் மகள்களுக்கு அனுப்பிய போது நான் பிள்ளைகளை வளர்த்ததில் இப்படி ஒரு அழகான காரியம் செய்ததேயில்லையே என்ற கவலையும், இளவஞ்சியின் எழுத்தின் மேல் பொறாமையும் ஒன்றாய் வந்தன.


இவ்வளவு மனதைத்தொடும் பதிவுகள் தரமுடிந்த கையோடு தனி நகைச்சுவைப் பதிவுகளையும் அழகாக எழுதுகிறார். அதையும் விட மனுஷனுக்குக் கோபம் வந்தாலும் நல்லாவே எழுதுகிறார். நன்கு நினைவிருக்கிறது - அவரது ஒரு கோபப் பதிவுக்கு ‘உங்கள் ரெளத்திரமும் அழ்காக இருக்கிறது’ என்று நான் பின்னூட்டியது.


அவர் இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய எழுதணும்.




உணர்ச்சிகளால் முன்னவர் என்னைக் கவர்ந்தாரென்றால் தன் தமிழ்நடையால் என்னைக் கவர்ந்தவர் செல்வநாயகி.

சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் - தலைப்பின் இந்தக் கவித்துவமே எனக்குப் பிடித்துப் போனது. கவிதையென்றால் காததூரம் ஓடும் கற்புர வாசனை தெரியாத ஜென்மமான எனக்கும் பிடிக்கின்றன இவரது கவிதைகள். அதற்குக் காரணம் எழுத்தின் எளிமையும், நேர்மையும். உள்குத்து என்றெல்லாம் இல்லாமல் முகத்தில் அறையும் உண்மைகளை அவைகள் தாங்கி நிற்பதால் இருக்குமென நினைக்கிறேன்.


இவரது எழுத்தும் மனதில் இருந்து வரும் உண்மையான உணர்வுகளைத் தாங்கி வருவதால்தானோ என்னவோ, அந்தச் சிறுவன் ரமேஷ் என்றும் உள்ளத்தில் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டு இருக்கிறான். அந்தப் பதிவில் சமூகக் கேவலங்களை உள்ளூட்டாக வைத்திருந்ததும் ஒரு தனி அழகு.


இளவஞ்சிக்குச் சொன்னது போல் இவரது ரெளத்திரமும் அழகு. விஜயா பற்றிய அந்தப் பதிவில் வெளிப்படும் ,ரெளத்திரமும் ‘எங்கள் சாமிகள்’ பதிவில் வெளிப்படும் கோபமும் அழகான, ஆழமான கோபங்கள்.


இவரது கோபத் தணல் அணையாது கனன்றுகொண்டே இருக்க என் வாழ்த்துக்கள்.

இன்னும் வருவேன் ...

8 comments:

  1. தருமி,

    வழக்கமான ஓட்டத்தின் இன்றைய இடைவெளியில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிறிது எட்டிப்பார்த்தபோது சரியாக இப்பதிவைக் கண்ணுற்றேன். நீங்கள் மட்டுமின்றி வேறுசில நண்பர்களும் எங்காவது எப்போதாவது இப்படி நானும் அறியாதபோதிலும் என் பெயரைத் தொட்டுப்போகிறீர்கள். உங்களையெல்லாம் பிரமிக்கவைக்குமொரு எழுத்துவலிமையெல்லாம் என்னிடம் இருப்பதாக இப்போதும் நான் நம்பவில்லை:)) ஆனால் நான் வெளிப்படுத்தும் உணர்வுகளும் நீங்கள் உணர்ந்துகொள்ளும் வாழ்வும் ஒன்றேபோல் உள்ளதிலான புரிதல்தான் நம்மைக் கருத்துக்களாலும், எழுத்துக்களாலும் இணைத்துவைக்கிறதெனவே எண்னிக்கொள்கிறேன்.

    அதைவிடவும் முக்கியமாக இங்குள்ள அரசியல்கள் எப்படியானவை என்பதையெல்லாம் நன்கு உள்வாங்கிச் செரித்தபிறகு தோன்றுகிறது. கருத்து வேறுபடுகிறபோது, ஒன்றுபடுகிறபோது, அவர்களின் காரியங்களுக்குத் துணைபோகிறபோது, போகாதபோது எனப் பல முகங்கள் காட்டப்படுவது இயல்பாகிப்போன களங்களிலும் காலங்களிலும் இருவர் ஒன்றேபோல் நட்புப்பாராட்டி நேயம் தொடரமுடிவதுகூட அரிதானதே. அப்படியான நட்பிலும் எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்பது என் மகிழ்வு. பேராசிரியருக்கு என் நன்றி.

    இளவஞ்சியின் எழுத்துக்கு நானும் ரசிகையே. இளவஞ்சிகள், தருமிகள் இவர்களின் இருப்புகள் முற்றிலும் தீர்ந்துபோகாத இடங்களில் செல்வநாயகிகளுக்கும் எழுதும் ஆர்வம் வடிந்துவிடுவதில்லை:))

    ReplyDelete
  2. இரண்டுபேருமே எனக்கும் பிடித்த பதிவர்கள். முன்னவர் இப்போது புகைப்படம் சமையல் பக்கம் அதிகம் கவனமாக இருக்கிறார்.

    ReplyDelete
  3. அருமையான தேர்வு(கள்)

    ReplyDelete
  4. நான் நினைச்சேன்.நீங்க சொல்லிட்டீங்க.

    என்னமா எழுதுறாங்க இவுங்க!!!!


    பொசுங்கல் மனம் லேசா வருதா?

    அருமையா தேர்வுங்க.

    ReplyDelete
  5. //கூரானைப் பற்றிய அந்தப் பதிவும் இதுபோல் மனசைக் கலங்க வைக்கும் பதிவு.//

    இன்றைய (01 செப் 2007) தமிழ்மண முகப்புப் பக்கத்தில் பரண் பகுதியில் தாங்கள் குறிப்பிட்ட இளவஞ்சி அவர்களின் இடுகை மனசுக்கு நேர்மையாய் என்ற தலைப்பில் வந்துள்ளது.
    :-)

    ReplyDelete
  6. ரெண்டு பேருமே பெரிய ஆளுங்க. நீங்க மட்டுமில்ல நாங்களும் அவங்க எழுத்த விரும்பிப் படிக்கிறவங்கதான். நல்லாச் சொல்லீருக்கீங்க.

    ReplyDelete
  7. Dharumi Sir,

    Unga paarattugalum uukkangalum padikkarappa romba Santhosama iruuku!

    Neenga yenmela vachirukkara nambikkaiya ninaicha bayama irukku!

    Nanri :)

    ( Sorry for thangilish )

    ReplyDelete
  8. //பிரமிக்கவைக்குமொரு எழுத்துவலிமையெல்லாம் என்னிடம் இருப்பதாக இப்போதும் நான் நம்பவில்லை.//

    நம்பாட்டி போங்க! :)

    செல்வநாயகிகளுக்கும் எழுதும் ஆர்வம் வடிந்துவிடுவதில்லை//
    நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது