07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 3, 2007

இந்த வாஆஆ.......ரம் , என் வாஆ.......ரம்.

வணக்கம். இந்த வாரம் என்னை வலைச்சரம் தொடுக்கச் சொல்லியிருக்காங்க பொன்ஸ். சொந்தமா பதிவெழுதணும்னாத்தான் நமக்கு கொஞ்சம் சுணக்கம். ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு எழுத உட்காரும் ஆள் நான். ஆனா இது வெறுமே கைகாட்டும் வேலைதானே, நம்ம கற்பனைக் குதிரைக்கு ஒரு வேலையும் தர வேண்டியிருக்காதுன்ற துணிச்சலில் நல்லா மண்டைய ஆட்டிட்டேன். இப்ப உட்கார்ந்து யோசிக்கையிலதான் தோணுது இதுவும் கஷ்டமான வேலைதான்னு தோணுது(சாப்புடறது, தூங்குறது, புஸ்தகம் படிக்கிறது இது மூன்றையும் தவிர இந்த உலகத்துல எல்லாமே கஷ்டமாத்தானப்பா இருக்கு. :) ) இருந்தாலும் வாக்குக் கொடுத்துட்டதால (நாங்கல்லாம் நாட்டம பரம்பர இல்ல?), முடிந்தவரை எழுதப்பார்க்கிறேன். என்னமோ போங்க. என்னைப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன் அப்படின்னு ஒரு பாண்டியராஜன் படப்பாடல் ஞாபகம் வருது. ஆகையால் தமிழ் கூறும் நல்லுலகாகிய வலையுலகமே, இந்த ஒரு வாரம் மட்டும் பெரிய மனசு பண்ணி என்னோட தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

முதலில் பொன்ஸ்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டேயாகணும். இத்தனைக்கும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே அவங்க மின்னஞ்சல் அனுப்பி உறுதிப்படுத்தியிருந்தாங்க. அதான் இன்னும் நாள் நிறைய இருக்கே, அப்பால பாத்துக்கலாம்னு அலட்சியமா இருந்ததுல மறந்தே போயிட்டேன். அதும் மறந்ததோட மட்டுமில்லாம் 4 நாள் சேந்தாமாதிரி விடுமுறை வேறயா, ஊருக்கு மூட்டை கட்டிட்டேன். அதுக்கப்புறம் எப்படியோ என்னைத் தொடர்பு கொண்டு கண்டிப்பா இந்த வாரம் மக்களை நாந்தான் படுத்துவேன்றதை உறுதிப் படுத்திக்கிட்டாங்க. ரொம்ப டென்ஷனாக்கினதுக்கு மன்னிச்சுக்குங்க பொன்ஸ்.

அப்புறம் வலைச்சர வழிகாட்டியின் படி முதல் இடுகை என்னுடைய பதிவுகளைப் பற்றி இருக்கணுமாம். நான் எழுதிய முக்கியமான பழைய பதிவுகளுக்குச் சுட்டி தரலாமாம். நான் எழுதின எல்லாமே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைதானே, இதுல நான் எதுக்குன்னு தனியா சுட்டி தர? :) அதுனால இதோ என்னோட வலைப்பதிவின் சுட்டி. அனைவரும் படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.

அப்புறம், ஒரு முக்கியமான டிஸ்கி. நான் எழுதின கவிதைகள் தாங்க எனக்குப் பிடிச்ச பதிவுகள்னு சொல்ல முடியும். பாக்கி எல்லாமே, குறிப்பா விவாதங்கள் எல்லாம் காலத்தின் கட்டாயம். :(

சரி, அறிமுக இடுகை இதுக்கு மேல போனா நல்லா இருக்காதுன்னு நினைக்கிறேன். அதுனால இத்தோட நிப்பாட்டிக்கறேன்.
அதிமுக்கியப் பின்குறிப்பு : தலைப்பை கே.டிவியின் கொண்டாட்டம் ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்.

7 comments:

 1. //
  ஆகையால் தமிழ் கூறும் நல்லுலகாகிய வலையுலகமே, இந்த ஒரு வாரம் மட்டும் பெரிய மனசு பண்ணி என்னோட தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
  //
  பொறுத்துக் 'கொல்ல' வேண்டுமா
  பொறுத்துக் கொள்ள வேண்டுமா என்பது பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.

  ReplyDelete
 2. ஆஹா, மாநாட்டில் இது பற்றி ஒன்றும் கேள்விப்படலிய்யே..

  மலர்வனம், வலைச்சரமாயிடுத்தா. வாழ்த்துக்கள்.
  நாங்க இருக்கையில இருந்துகிட்டே கனவு காணறவங்க,. அதனால உங்க எழுத்தையும் கட்டாயம் படித்துப் பயனடைவோம்.

  ReplyDelete
 3. "நான் எழுதின கவிதைகள் தாங்க எனக்குப் பிடிச்ச பதிவுகள்னு சொல்ல முடியும்."

  இப்படி உண்மையை எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. :) வாங்க... வாருங்க.

  ReplyDelete
 4. படிச்ச, படிச்சுட்டு கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

  வல்லி அம்மா, எனக்கு அப்போ இது ஞாபகம் இருந்திருந்தால் நான் ஊருக்குப் போயி சிந்தாநதியையும் பொன்ஸையும் வெறுப்பேத்தி இருப்பேனா என்ன? நிஜம்ம்ம்ம்ம்மா......ஆவே மறந்து போச்சுங்க.

  நதி, நானே சொல்லலேன்னா மட்டும் என்ன படிக்கறவங்களுக்குத் தெரியாதா? அதான் பெருந்தன்மையா நாமளே ஒத்துகிட்டா கவிதைய மட்டுமாவது நல்லா இருக்குன்னு மத்தவங்க ஒத்துகிடுவாங்க இல்ல? அதுக்குத்தான். :)

  மங்களூர் சிவா, ரொம்பத் தெளிவா இருக்கீங்க. :)

  துளசி அம்மா, வரவேற்புக்கு நன்றி.

  ReplyDelete
 5. நன்றி ஆழியூரான்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது