07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 19, 2007

அப்பாவாகப் போகும் ஆண் சிங்கங்காள்

இந்த உலகில் பிறக்கும் உயிர்களுக்கு எல்லாம் பொதுவான ஓர் இலட்சியம் இருக்கிறது.தன் சந்ததிகளை உருவாக்குவதே
அந்த இலட்சியம்.எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை குழந்தை இல்லாமலிருந்து அதன் பிறகே பிறந்தது.

அந்த இரண்டாண்டுகளில் நானும் என் மனைவியும் பட்ட மனவேதனை சொல்லிமாளாது.குழந்தை பிறந்தவுடன் அளவில்லா
மகிழ்ச்சியை அது அள்ளித்தந்தது.முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே அது நீடித்தது.அடுத்த ஒரு வருட காலம் மாபெரும் சோதனைக்
காலமாக அமைந்து விட்டது.குழந்தை பிறந்தது எவ்வளவு மகிழ்ச்சியை தந்ததோ அதைவிட இரண்டு மடங்கு துயரத்தை அனுபவிக்க
ஆரம்பித்து விட்டோம்.

என்ன சோதனையடா சாமி என்று வெறுத்துப் போய் நாட்கள் கடந்து கொண்டிருந்த போது தான் செல்வநாயகி
அவர்களின் இந்தப்பதிவை படித்தேன்.எங்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணம் என்ன என்பதை அந்தப் பதிவின் மூலம்
தான் தெரிந்து கொண்டேன்.

"POST NATAL DEPRESSION" எனப்படும் பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் மனவழுத்தம் தான் அதற்கெல்லாம் காரணம்.அதைப் பற்றிய
தெளிவான விளக்கத்தை இந்தக் கட்டுரை

http://selvanayaki.blogspot.com/2006/08/blog-post_03.html

தருகிறது.
பிரசவத்துக்குப் பின் பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் மாற்றங்களை ஆண்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இந்தக் கட்டுரை எனக்குப் பேருதவி செய்துள்ளது.செல்வநாயகி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

2 comments:

  1. சரியாக எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை ஆனால் குழந்தை பிறப்பதனால் ஆண்களுக்கும் Depression வருகிறதாமாம். இன்னும் நிறைய தகவல்களை உள்ளடக்கிய ஆய்வொன்றின் விவரங்களும் சேர்த்தே படித்தேன். இது just for information sake.

    உண்மையிலேயே del.icio.us ன் தேவையை இப்பத்தான் உணர்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே உபயோகித்து வந்திருக்க வேண்டும் :(.

    ReplyDelete
  2. செல்வநாயகி அக்காவின் பதிவை அப்படியே மனப்பாடம் செய்து வைத்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் உதவும். பதிவின் சுட்டியை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது