07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 4, 2007

நகைச்சுவைச் சரம்

எப்பவுமே விருந்துன்னா இனிப்புதான் முதல்ல பரிமாறணும்னுவாங்க. அதன்படி அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் சரம் நகைச்சுவைச் சரமா இருக்கட்டுமேன்னு நினைக்கிறேன். அது மட்டுமில்லைங்க, தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதன் முதலில் எனக்கு அறிமுகமான பதிவும் ஒரு நகைச்சுவைப் பதிவரோடதுதான். அது நெல்லை மாவட்டத்துக்காரரான டுபுக்கு அவர்களின் பதிவுதான்.

நான் ஆன்சைட்டில் இருந்தபோது என் நண்பர் திரு. நட்ராஜ் அவர்கள் இந்தப் பதிவை அறிமுகம் செய்து வைத்தார். நிஜமாவே வெளியூரிலிருக்கும் போது தமிழ் கேட்டாலே காதில் தேன் வந்து பாய்வது போல்தான் இருக்கும். அதிலும் படிக்க புத்தகங்கள் கிடைத்தால் பரம சந்தோஷமாகவும் இருக்கும். மிஞ்சிப் போனால் ஆளுக்கு நான்கு புத்தகங்கள் வைத்திருப்போம். அதையே மாத்தி மாத்தி ரொட்டேஷனில் விட்டுப் படித்து படித்து எல்லா வரிகளும் அனேகமாய் மனப்பாடமாகி விட்டிருக்கும். ஏதேனும் ஒரு தமிழ்ப்படத்தை தரவிறக்கம் செய்யும் பணி வெள்ளி மதியமே ஆரம்பித்து விடும். ஆளுக்கொரு பகுதியாக இறக்கிக்கொள்வோம். மொத்தமாய் ஒருவர் வீட்டில் கூடி மடிக்கணிணியை தொலைக்காட்சியோடு இணைத்து அந்த நாளில் படத்துக்கும் முன்னால் தியேட்டரில் போடப்படும் நியூஸ் ரீலை ஒத்த குவாலிட்டியில் தெரியும் தமிழ்ப்படத்தை பார்த்து எங்கள் தமிழார்வத்தைப் போக்கிக் கொள்ளுவோம். இந்நிலையில்தான் நண்பர் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தினார். அப்புறமென்ன, அங்கிருந்து தேசி பண்டிட்லாம் போயி அப்புறம் எப்படியோ தமிழ்மணத்தைக் கண்டுபிடித்து ஜன்ம சாபல்யமடைந்தேன். அது வேறு கதை.

இப்போது நான் சொல்ல வந்தது டுபுக்குவின் நகைச்சுவை எழுத்துக்களைப் பற்றி. இவரது ஜொள்ளித்திரிந்த காலம் என்ற மலரும் நினைவுத் தொடரானாலும் சரி சாதாரணமாய் ஒரு கல்யாணத்துக்குப் போய் வந்த நிகழ்வைப் பற்றிய பதிவானாலும் படிக்கும் போது அதிலிருக்கும் நேட்டிவிட்டி - நம்மால் அட நம்ம கதை போலவேயிருக்கே என்று எண்ணத்தோன்றும். அப்புறம் அப்படியே இதையெல்லாம் கூட இந்த மனுஷனால மட்டும் எப்படி இவ்வளவு நகைச்சுவையோடு எழுத முடியுது என லேசான பொறாமையையும் தரும்.

1. ஜொள்ளித்திரிந்த காலம்
2. இன்ன பிற கொசுவத்தி தொடர்கள்
3. கல்யாணம் - நேரடி ஒலிபரப்பு
4. அப்பாவி அம்பியின் அறிவுப்பசி

அடுத்தது நம்ப வெட்டிப்பயல் பாலாஜி. பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது என்கிற அருமையான கொள்கையோடு பதிவு எழுதி வரும் இவர் வெறும் நகைச்சுவை எழுத்தாளர் மட்டுமில்லை ஒரு ஆம்பிளை ரமணிச்சந்திரன் அப்படின்னும் சொல்லலாம். அந்த அளவு உணர்ச்சிகரமான காதல் கதைகளும் எழுதுவார்.

1. பிட் அடிச்சா தப்பாங்க என்று கேட்கிறார் இந்த அ(ட)ப்பாவி
2. இவரையெல்லாம் கட்டி மேய்க்க இவங்க வார்டன் பட்ட பாடு
3. கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு, விஜய், பேரரசு, S.J. சூர்யா என்று பலரையும் கவுண்டமணியின் பாணியில் காலை வாருகிறார்.

அடுத்தது நம்ம கண்மணி டீச்சர். நானும்,என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா - இதுதான் இவங்களோட குறிக்கோள். இவங்களை வெறுமனே நகைச்சுவைப் பதிவர்ன்ற சின்ன வட்டத்துக்குள்ள் அடைச்சுட முடியாது. குழந்தைகளுக்குன்னு ஒரு தனி வலைப்பதிவு நடத்தறாங்க. பல விழிப்புணர்வு பதிவுகளும் போட்டு கலக்குவாங்க. தன்னோட செல்ல நாய் ச்சுப்பிரமணி, ஆனந்தம் காலனியிலிருக்கும் அம்புஜம் மாமி ஆகியோரின் கொட்டங்களை இவர் வர்ணிக்கும் அழகே தனி.

1. இப்படியும் ஒரு இனிஷியல் பிரச்சனை!
2. மடிசார் மாமியும் பைக்கில் வந்த மர்ம ஆசாமியும்
3. சன் டிவியின் திருவாளர் - திருமதி நிகழ்ச்சியில் பதிவர்கள்

அடுத்தது அபி அப்பா. சூரியனுக்கே டார்ச் லைட்டா(இது கொஞ்சம் ஓவர்தான்) அப்படின்றா மாதிரி போன வாரம்தான் நட்சத்திரமா ஜொலிச்சுட்டு கீழ இறங்கினவருக்கு நான் ஒன்னும் அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. அதுனால எனக்குப் பிடிச்ச சில இடுகைகளோட சுட்டி மட்டும் இங்க தர்ரேன்.

1. அந்த ட்ரஸ்ஸைப் பத்தி மட்டும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அப்படின்னு படையப்பாவில் ஒரு டயலாக் வருமே அதுதான் நினைவுக்கு வருது இவரோட இந்தப் பதிவைப் பார்க்கும்போது.
2. சரி, இந்தப் பதிவு நல்லா இருக்குதான். இல்லைங்கல. அதுக்காக எத்தனை தடவை போடுவீங்க சார்? இன்னொரு தபா போட்டால் அமீரகத்துக்கு ஆட்டோ அனுப்பப் படும். ஜாக்கிரதை.
3. ஆனாலும் இவரோட இலக்கிய ஆர்வம் இருக்கே, படிக்கறவங்களுக்கு அப்படியே புல்லரிக்கும்....


இன்னும் நிறைய எனக்குப் பிடித்த நகைச்சுவைப் பதிவர்கள் உண்டு. எனக்கு தட்டச்ச இருக்கும் சோம்பலால்தான் லிஸ்ட் ரொம்பச் சின்னதா இருக்கு. மத்தவங்களுக்கு எல்லாம் என் இதயத்துல இருக்கற லிஸ்டல இடம் கொடுத்துட்டேன். நம்புங்கப்பா.... நம்பி மன்னிச்சு விட்டுருங்க. நன்றி.

9 comments:

 1. //
  நிஜமாவே வெளியூரிலிருக்கும் போது தமிழ் கேட்டாலே காதில் தேன் வந்து பாய்வது போல்தான் இருக்கும்.
  //
  ஆளுக்கு நான்கு புத்தகங்கள் வைத்திருப்போம். அதையே மாத்தி மாத்தி ரொட்டேஷனில் விட்டுப் படித்து படித்து எல்லா வரிகளும் அனேகமாய் மனப்பாடமாகி விட்டிருக்கும்
  //

  கண்டிப்பா

  இதுக்கு ஆன் சைட்க்கு எல்லாம் போக தேவை இல்லை. மங்களூர்ல இருக்கிறதே எதோ ஆன் சைட்ல இருக்கிற மாதிரிதான் இருக்கு

  //
  நியூஸ் ரீலை ஒத்த குவாலிட்டியில் தெரியும் தமிழ்ப்படத்தை பார்த்து எங்கள் தமிழார்வத்தைப் போக்கிக் கொள்ளுவோம்
  //
  இந்த பிரச்சனை மட்டும் இல்லிங்க DVD எல்லாம் அதுவும் ஃபாரின் ப்ரிண்ட்லாம் கிடைக்குது 3 தமிழ் சேனல் வருது

  //
  தேசி பண்டிட்லாம் போயி அப்புறம் எப்படியோ தமிழ்மணத்தைக் கண்டுபிடித்து ஜன்ம சாபல்யமடைந்தேன்
  //
  அடைஞ்சிகிட்டிருக்கோம்

  ReplyDelete
 2. //இதுக்கு ஆன் சைட்க்கு எல்லாம் போக தேவை இல்லை. மங்களூர்ல இருக்கிறதே எதோ ஆன் சைட்ல இருக்கிற மாதிரிதான் இருக்கு// ஆமாம் சிவா. வெயிலில்தான் நிழலருமை தெரியுமென்பது இதுதான் போல.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்ம்மா! என்னை கூட ஞாபகம் வச்சி சொன்னதுக்கு மிக்க நன்றிப்பா!

  ReplyDelete
 4. தன்யனானேன் தன்யனானேன்...மிக்க நன்றி மேடம். உங்க பாராட்டால அப்பிடியே ஜிவ்வுனு ஏறிடிச்சு இந்த வாரத்த அப்பிடியே ஓட்டிருவேன் :))

  ReplyDelete
 5. சொல்ல மறந்துட்டேனே..நண்பர் நட்ராஜுக்கும் என் நன்றிகளை சொல்லவும். அப்படியே இன்னும் நாலு பேருக்கு சொன்னபிறகு அக்கவுண்டில் கிரெடிட் செய்துவிடுகிறேன் :))

  ReplyDelete
 6. லெஷ்மிக்கா, நான் துவரை 75க்கு மேல் பதிவு போட்டாச்சு! எல்லாம் பாதி உண்மைதமிழன் சைஸ் பதிவுதான், ஆனா ஜூன் மாசம் தம்பி நட்ராஜ் இப்ப பொறப்பானோ எப்ப பொறப்பானோன்னு நான் வயித்துல நெருப்பை கட்டிகிட்டு இருந்த நேரம்,என்னால அப்ப புதுசா பதிவு ஏதும் போட முடியலை அதனால அந்த மாசம் என்னை நீங்க எல்லாம் மறந்துட கூடாதுன்னு அதை மீள் பதிவா ஒரே ஒரு தடவை போட்டேன்! இதுக்கு போய் "எத்தன தடவை"ன்னு சலிச்சுகிட்டா எப்படி:-))

  ReplyDelete
 7. ஆஹா...

  நம்ம குருநாதர் பேருக்கு கீழ நம்ம பேரை போட்டதுக்கு ரொம்ப நன்றியக்கா...

  நானும் உங்களை மாதிரி தலைவர் பதிவுல இருந்து தான் தமிழ்மணத்துக்கு வந்தேன்...

  ReplyDelete
 8. வந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் ஸ்பெஷல் டாங்ஸ்ப்பா....

  ஐய்யா நட்ராசு, இப்படி ஒரு அன்டர்கிரவுண்ட் டீலிங்ஸ் இருப்பது பற்றிச் சொல்லவேயில்லையே? :)

  டுபுக்கு, நானும் உங்க கொ.ப.செ குழுவுல ஐக்கியமாயிடுறேன். அக்கவுண்ட் நம்பர் தனி மெயிலில் வந்துகிட்டேயிருக்கு.

  அபி அப்பா, சலிச்சுக்கல்லாம் இல்லை. சும்மா கலாய்க்கதான் அப்படி மிரட்டினேன். ஆமா, என்ன அக்கான்னுட்டீங்க? நானென்ன, அபி பாப்பாவைவிட ஒரு 4 வயசுதானே பெரியவ. அதுக்குப் போயி இவ்ளோ மருவாதியா? ;)

  வெட்டி, அவர்தான் உங்க குருவா? பரவால்ல, குரு பேரை காப்பாத்தறா மாதிரிதான் நீங்களும் எழுதறீங்க.

  ReplyDelete
 9. // Dubukku said...

  சொல்ல மறந்துட்டேனே..நண்பர் நட்ராஜுக்கும் என் நன்றிகளை சொல்லவும். அப்படியே இன்னும் நாலு பேருக்கு சொன்னபிறகு அக்கவுண்டில் கிரெடிட் செய்துவிடுகிறேன் :))//

  நாலாயிரம் பேருக்கு மேல சொன்ன என் அக்கவுண்டுக்கே இன்னும் பணம் வந்து சேரல... இதுல இன்னும் 4 பேருக்கு சொன்னபிறகு கிரெடிட் செய்யறீங்களா?

  நீங்க பணம் க்ரெடிட் செய்யறதுக்கு பதிலா ஜொள்ளி திரிந்த காலம் மாதிரி இன்னொரு சீரிஸ் எழுதுங்க :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது